Latest Updates
-
நிலாவில் அணுகுண்டை வெடிக்க வைக்க முயற்சி செய்த அமெரிக்கா - இந்த ஆபத்தான திட்டம் ஏன் நிறுத்தப்பட்டது தெரியுமா? -
மணமணக்கும்.. காராமணி முருங்கைக்காய் குழம்பு - எப்படி செய்றதுன்னு பாத்து செஞ்சு பாருங்க.. -
ஐயங்கார் ஸ்டைல் அவரைக்காய் பொரிச்ச கூட்டு ரெசிபி - ட்ரை பண்ணி பாருங்க - வித்தியாசமா சூப்பரா இருக்கும் -
மறக்க வைத்தே மனிதனை மழுங்கடிக்கும் அல்சைமர் நோய்! காரணம் என்ன? நரம்பியல் நிபுணர் விளக்கம் -
50 ஆண்டுகளாக திருமணமே நடக்காத கிராமம் முதல் இரட்டை குடியுரிமை வரை இந்தியாவின் நம்பமுடியாத வினோத கிராமங்கள் -
கடக ராசியில் குரு-செவ்வாய் கூட்டணி: 12 ராசிகளில் நீச பங்க ராஜயோகம் யாருக்கு? - ஜோதிடர் கணிப்புகள்! -
ராகி ரவா இட்லியும்.. பீர்க்கங்காய் சட்னியும்.. - எப்படி செய்றதுன்னு பாத்து ஒருவாட்டி ட்ரை பண்ணுங்க.. -
செப்டம்பர் 21, 2026: இன்றைய நாள் இந்த 4 ராசிகளுக்கு வீண் செலவுகள் தேடிவருமாம் - கவனமா இருங்க -
குருபகவானின் நட்சத்திர மாற்றத்தால் ஜெயிக்கிற குதிரையாகப் போகும் 3 ராசிகள் - உங்க ராசி இதுல இருக்கா? -
நார்த் இந்தியன் ஸ்டைல் உருளைக்கிழங்கு சப்ஜி ரெசிபி - ட்ரை பண்ணி பாருங்க - தோசை,சப்பாத்திக்கு சூப்பரா இருக்கும்
விருச்சிகம் செல்லும் சூரியனால் இன்று முதல் இந்த 4 ராசிக்காரங்க நிறைய பிரச்சனைய சந்திக்க போறாங்க...
சூரியன் மாதம் ஒருமுறை ராசியை மாற்றுவார். அந்த வகையில் சூரியன் 2022 நவம்பர் 16 ஆம் தேதி, அதாவது இன்று துலாம் ராசியில் இருந்து விருச்சிக ராசிக்கு மாறினார்.
ஜோதிட சாஸ்திரத்தில் நவகிரகங்களின் ராஜாவாக கருதப்படுபவர் சூரியன். இந்த சூரியன் மாதம் ஒருமுறை ராசியை மாற்றுவார். அந்த வகையில் சூரியன் 2022 நவம்பர் 16 ஆம் தேதி, அதாவது இன்று துலாம் ராசியில் இருந்து விருச்சிக ராசிக்கு மாறினார். சூரியனின் ராசி மாற்றத்தின் போது தான் தமிழ் மாதங்கள் பிறக்கின்றன. இந்நிலையில் சூரியன் விருச்சிக ராசிக்கு செல்லும் போது தான் கார்த்திகை மாதம் பிறக்கிறது. சூரியன் ராசியை மாற்றும் போது அதன் தாக்கம் அனைத்து ராசிகளிலும் இருக்கும்.

செவ்வாய் ஆளும் விருச்சிக ராசிக்கு சூரியன் வருவதால், சில ராசிக்காரர்கள் நிறைய பிரச்சனைகளை சந்திப்பார்கள். குறிப்பாக குடும்பம், வேலை மற்றும் நிதி விஷயங்களில் பிரச்சனைகளை சந்திக்கக்கூடும். இப்போது விருச்சிகம் செல்லும் சூரியனால் எந்த ராசிக்காரர்கள் நிறைய பிரச்சனைகளை சந்திக்கப் போகிறார்கள் என்பதைக் காண்போம்.

மேஷம்
மேஷ ராசியின் 8 ஆவது வீட்டில் சூரியன் உள்ளார். இதனால் மேஷ ராசிக்காரர்கள் ஆரோக்கிய பிரச்சனைகளை சந்திக்க நேரிடும். இக்காலத்தில் சளி, காய்ச்சல் மற்றும் தோல் பிரச்சனைகளை சந்திக்க அதிக வாய்ப்புள்ளது. நிதி நிலைமை சற்று மோசமாக இருக்கும். எனவே இக்காலத்தில் உங்கள் செலவுகளை கட்டுக்குள் வைத்திருங்கள். அரசு வேலை செய்பவர்கள் சற்று எச்சரிக்கையாக இருக்க வேண்டும். சூரியனால் சந்திக்கும் பிரச்சனைகளைத் தவிர்க்க தினமும் சூரியனை வழிபடுங்கள்.

ரிஷபம்
ரிஷப ராசியின் 7 ஆவது வீட்டில் சூரியன் உள்ளார். எனவே ரிஷப ராசிக்காரர்கள் திருமண வாழ்க்கையில் பிரச்சனைகளை சந்திப்பார்கள். வாழ்க்கைத் துணையுடன் வாக்குவாதங்களால் உறவு மோசமடையக்கூடும் இக்காலத்தில் தொழிலில் பல பிரச்சனைகளை சந்திக்க நேரிடும். பண விஷயத்தில் யாரையும் கண்மூடித்தனமாக நம்பாதீர்கள். சூரியனின் நிலையால் உங்கள் வாழ்க்கைத் துணையின் ஆரோக்கியம் பாதிக்கப்படும். கூட்டு வணிகம் செய்பவர்கள், கூட்டாளருடன் பிரச்சனைகளை சந்திக்க வாய்ப்புள்ளது. சூரியனால் சந்திக்கும் பிரச்சனைகளைத் தவிர்க்க ரிஷப ராசிக்காரர்கள் காயத்ரி மந்திரத்தை தினமும் சொல்ல வேண்டும்.

கன்னி
கன்னி ராசியின் 3 ஆவது வீட்டில் சூரியன் உள்ளார். இதனால் இந்த ராசிக்காரர்களுக்கு நிதி இழப்பு ஏற்பட வாய்ப்புள்ளது. வியாபாரிகளுக்கு இக்காலத்தில் லாபம் சற்று குறைவாக இருக்கும். மாணவர்களுக்கு இது நல்ல காலம் அல்ல. இக்காலத்தில் தன்னம்பிக்கை சற்று குறைவாக இருக்கும். தனிப்பட்ட வாழ்க்கையில் சில பிரச்சனைகளை சந்திக்க நேரிடும். காதலிப்பவர்களின் உறவுகள் பாதிக்கப்படலாம். கன்னி ராசிக்காரர்கள் சூரியனால் சந்திக்கும் பிரச்சனைகளை தவிர்க்க ஒவ்வொரு ஞாயிற்றுக் கிழமையும் ஆதித்ய ஹிருதய ஸ்தோத்திரத்தை சொல்ல வேண்டும்.

தனுசு
தனுசு ராசியின் 12 ஆவது வீட்டில் சூரியன் உள்ளார். இதனால் இந்த ராசிக்காரர்கள் ஆரோக்கிய பிரச்சனைகளை சந்திப்பார்கள். வயதானவர்கள் இதயம் தொடர்பான பிரச்சனைகளை சந்திக்க வாய்ப்புள்ளது. இந்த காலகட்டத்தில் தனுசு ராசிக்காரர்களின் தன்னம்பிக்கை சற்று குறையும். பணிபுரிபவர்கள் உடன் வேலை செய்வோருடன் கருத்து வேறுபாடுகளை சந்திக்கலாம். குடும்ப உறுப்பினர்களுடன் கருத்து வேறுபாடுகள் வரலாம். நிதியைப் பொறுத்தவரை, செலவுகள் அதிகரிக்கும்.
(பொறுப்புத் துறப்பு: மேலே கொடுக்கப்பட்டுள்ள தகவல் இணையத்தில் கிடைக்கும் அனுமானங்கள் மற்றும் தகவல்களின் அடிப்படையில் கொடுக்கப்பட்டுள்ளன மற்றும் நம்பகத்தன்மைக்கு உத்தரவாதம் இல்லை. தமிழ் போல்ட்ஸ்கை கட்டுரை தொடர்பான தகவலை உறுதிப்படுத்தவில்லை. மேலும் எங்கள் ஒரே நோக்கம் தகவலை வழங்குவது மட்டுமே. அதை வெறும் தகவலாக மட்டும் எடுத்துக் கொள்ள வேண்டும். எந்தவொரு தகவலையும் அனுமானத்தையும் பயிற்சி செய்வதற்கு அல்லது செயல்படுத்துவதற்கு முன், தயவுசெய்து சம்பந்தப்பட்ட நிபுணரை அணுகவும்.)



Click it and Unblock the Notifications
