Latest Updates
-
குருபகவானின் நட்சத்திர மாற்றத்தால் ஜெயிக்கிற குதிரையாகப் போகும் 3 ராசிகள் - உங்க ராசி இதுல இருக்கா? -
நார்த் இந்தியன் ஸ்டைல் உருளைக்கிழங்கு சப்ஜி ரெசிபி - ட்ரை பண்ணி பாருங்க - தோசை,சப்பாத்திக்கு சூப்பரா இருக்கும் -
இந்த 4 ராசிக்காரர்களுக்கு இரண்டாவது திருமணம் நடக்க பிரகாசமான வாய்ப்பிருக்காம் - உங்க ராசி இதுல இருக்கா? -
தலப்பாக்கட்டி பன்னீர் பிரியாணி ரெசிபி - ட்ரை பண்ணி பாருங்க - மட்டன் பிரியாணி மாதிரியே இருக்கும் -
அரசு அதிகாரிகளின் குழந்தைகள் வெளிநாட்டில் படிக்க அனுமதிக்காத நாடு - மீறுனா அவ்வளவுதான் - எந்த நாடு தெரியுமா? -
அஸ்ஸாம் ஸ்டைல் சிக்கன் ரெசிபி - இந்த மாதிரி ட்ரை பண்ணி பாருங்க - டேஸ்ட் வித்தியாசமா அட்டகாசமா இருக்கும் -
கறி சுவையை மிஞ்சும் காளான் மிளகு வறுவல் - எப்படி செய்றதுன்னு பாத்து செஞ்சு பாருங்க.. அள்ளும்.. -
செப்டம்பர் 20, 2026: இன்றைய நாள் இந்த 3 ராசிகளுக்கு ரொம்ப துரதிர்ஷ்டமான நாளாக இருக்குமாம் -
வார ராசிபலன் (20 September 2026- 26 September 2026)- இந்த வாரம் இந்த 5 ராசிக்காரர்களுக்கு பணமழை கொட்டப்போகுது! -
ஹோட்டல் சுவையில் பன்னீர் சன்னா சால்னா எப்படி செய்றதுன்னு பாத்து ட்ரை பண்ணுங்க..
சூரியன் மீன ராசிக்கு செல்வதால் இந்த 4 ராசிக்கு அதிர்ஷ்டம் அடிக்கப் போகுது.. உங்க ராசி இதுல இருக்கா?
மீனம் செல்லும் சூரியனால் அனைத்து ராசிக்காரர்களும் பாதிக்கப்பட்டாலும், நான்கு ராசிக்காரர்கள் சிறப்பான பலன்கள் கிடைக்கப் போகிறது.
வேத ஜோதிடத்தின் படி, சூரியன் மாதத்திற்கு ஒருமுறை ராசியை மாற்றுவார். நவகிரகங்களின் தலைவனாக கருதப்படும் சூரியன் மாறுவதால், அது 12 ராசிக்காரர்களின் வாழ்விலும் பெரிய தாக்கத்தை ஏற்படுத்தும். சூரியன் தற்போது தனது மகனாக சனி பகவான் ஆளும் கும்ப ராசியில் பயணித்து வருகிறார். இவர் 2022 மார்ச் 15 ஆம் தேதி கும்ப ராசியில் இருந்து மீன ராசிக்கு இடம் பெயர்கிறார்.

ஜோதிடத்தில் சூரியன் மரியாதை மற்றும் புகழுக்கு காரணமானவராக கருதப்படுகிறார். ஒருவரது ஜாதகத்தில் சூரியன் வலுவாக இருந்தால், அவர்கள் அனைத்துவிதமான மகிழ்ச்சியும், பெருமையும், மரியாதையும் கிடைக்கும். மீனம் செல்லும் சூரியனால் அனைத்து ராசிக்காரர்களும் பாதிக்கப்பட்டாலும், நான்கு ராசிக்காரர்கள் சிறப்பான பலன்கள் கிடைக்கப் போகிறது. இப்போது மீனம் செல்லும் சூரியனால் எந்த 4 ராசிக்கு அதிர்ஷ்டமான காலமாக இருக்கப் போகிறது என்பதைக் காண்போம். உங்கள் ராசி இதில் உள்ளதா என்பதைப் பாருங்கள்.

ரிஷபம்
ரிஷப ராசியின் 11 ஆவது வீட்டிற்கு சூரியன் செல்கிறார். இதனால் இக்காலம் இந்த ராசிக்காரர்களுக்கு மிகவும் சாதகமாக இருக்கும். ஏனெனில் 11 ஆவது வீடு வருமான வீடு. ஆகவே இக்காலத்தில் வருமானத்தில் குறிப்பிடத்தக்க அதிகரிப்பு இருக்கும். வருமான அதிகரிப்பால் நிதி நிலைமை சிறப்பாக இருக்கும். பணிபுரிபவர்களுக்க இடமாற்றம் ஏற்படுவதற்கான வாய்ப்புள்ளது மற்றும் புதிய வேலை வாய்ப்புக்களும் கிடைக்கலாம். ரியல் எஸ்டேட்டில் நல்ல லாபம் கிடைக்கும். மொத்தத்தில் இக்காலம் உங்களுக்கு சாதகமான காலம்.

மிதுனம்
மிதுன ராசியின் 10 ஆவது வீட்டிற்கு சூரியன் செல்கிறார். இதனால் இக்காலத்தில் உங்களின் கடின உழைப்பிற்கான பலன் கிடைக்கும். உத்தியோகத்தில் மாற்றம் ஏற்பட வாய்ப்புள்ளது. வியாபாரிகளுக்கு வியாபாரத்தில் நல்ல லாபம் கிடைக்கும். அரசியல்வாதிகளுக்க இக்காலம் மிகவும் ஏற்றதாக இருக்கும். குடும்ப உறுப்பினர்களுடன் நல்ல நேரத்தை செலவிடுவதற்கான வலுவான வாய்ப்புக்கள் உள்ளன.

கடகம்
கடக ராசியின் 9 ஆவது வீட்டிற்கு சூரியன் செல்கிறார். இதனால் நல்ல பண வரவைப் பெறுவதற்கான வலுவான வாய்ப்புள்ளது. நீண்ட நாட்களாக தடைப்பட்டு வந்த வேலைகள் இக்காலத்தில் வெற்றிகரமாக முடிக்கப்படும். பணியிடத்தில் சிறப்பான செயல்திறனால் உயர் அதிகாரிகளால் பாராட்டப்படுவதோடு, பதவி உயர்வு மற்றும் சம்பள உயர்வைப் பெறுவதற்கான வாய்ப்புக்கள் உள்ளன. மேலும் வியாபாரத்தில் முதலீடு செய்வதற்கு சாதகமாக இருக்கும். அரசியலில் இருப்பவர்களுக்கு இது பொன்னான காலம். ஏனெனில் இக்காலத்தில் மரியாதையும், புகழும் அதிகரிக்கும்.

தனுசு
தனுசு ராசியின் 4 ஆவது வீட்டிற்கு சூரியன் செல்கிறார். இதனால் இக்காலத்தில் ஏராளமான நற்பலன்கள் கிடைக்கும். வியாபாரம் சிறப்பாக இருக்கும். அதனால் லாபம் பன்மடங்கு அதிகரிக்கும். உத்தியோகத்தில் இருப்பவர்களுக்கு இக்காலம் மிகவும் சிறப்பாக இருக்கும்.



Click it and Unblock the Notifications
