Latest Updates
-
இந்த 4 ராசிகாரங்க அவங்க நண்பர்களுக்கு ரொம்ப விசுவாசமா இருப்பார்களாம் - உங்க ராசி இதுல இருக்கா? -
பார்லர் செல்லாமல் முகப்பொலிவை அதிகரிக்கணுமா? அப்ப ரோஸ் வாட்டரை இப்படி யூஸ் பண்ணுங்க... -
5 லட்ச ரூபாய்க்கு விற்கப்படும் உலகின் காஸ்ட்லியான ஐஸ்கிரீம் - அப்படி இதுல என்னதான் ஸ்பெஷல் தெரியுமா? -
1 கப் பச்சரிசி இருந்தா.. ஈவ்னிங் டைம்-ல இந்த ஸ்நாக்ஸை செய்யுங்க.. பசங்க கேட்டு விரும்பி சாப்பிடுவாங்க.. -
World Heart Day 2026: 1 சிகரெட் அடிச்சா 20 நிமிஷத்துல இதயத்துல என்ன நடக்கும்? - விளக்கும் இதய நிபுணர்! -
4 பிரெட் இருந்தா இந்த மாதிரி சுவையான புலாவ் செஞ்சு பாருங்க - வீட்ல எல்லோரும் விரும்பி சாப்பிடுவாங்க -
சூரியனின் நட்சத்திர பெயர்ச்சி: அக்டோபர் 11 வரை இந்த 5 ராசிக்கு பணமும், வெற்றியும் குவியும்! -
லாயருக்கும், அட்வகேட்டுக்கும் உள்ள வித்தியாசம் என்ன தெரியுமா? அப்ப ரெண்டும் ஒன்னு இல்லையா? ஷாக் ஆகாதீங்க -
அவலும், முட்டையும் இருந்தா.. காலையில் இந்த டிபனை ட்ரை பண்ணி பாருங்க.. -
செப்டம்பர் 29, 2026: இன்று இந்த 3 ராசிக்காரங்களுக்கு தெண்ட செலவுகள் தேடிவரப்போகுதாம்
மகரம் செல்லும் சூரியனால் இன்று முதல் இந்த 3 ராசிக்காரர்களுக்கு தொழிலில் அமோக வெற்றி கிடைக்கும்...
மகரம் செல்லும் சூரியனால் அடுத்த ஒரு மாத காலம் சில ராசிக்காரர்களின் தொழில் வாழ்க்கை அமோகமாக இருக்கப் போகிறது. அதுவும் தொழிலில் நல்ல வெற்றியையும், முன்னேற்றத்தையும் காணப் போகிறார்கள்.
நவகிரகங்களின் தலைவனாக கருதப்படுபவர் சூரியன். இந்த சூரியன் கண்ணியம், தலைமைத்துவம், ஈகோ, சுயமரியாதை மற்றும் தொழில் ஆகியவற்றின் காரணியாக கருதப்படுகிறார். இவர் மாதத்திற்கு ஒருமுறை ராசியை மாற்றுவார். சூரியனின் ராசி மாற்றத்தின் போது, அனைத்து ராசிகளிலுமே அதன் தாக்கம் காணப்படும். அந்த வகையில் சூரியன் 2023 ஜனவரி மாதத்தின் 14 ஆம் தேதி, இரவு 8.22 மணிக்கு தனுசு ராசியில் இருந்து மகர ராசிக்கு செல்கிறார்.

இந்த சூரிய பெயர்ச்சியின் தாக்கம் அனைத்து ராசிகளிலும் காணப்பட்டாலும், சிலர் நற்பலனையும், சிலர் மோசமான பலனையும் பெறலாம். குறிப்பாக மகரம் செல்லும் சூரியனால் அடுத்த ஒரு மாத காலம் சில ராசிக்காரர்களின் தொழில் வாழ்க்கை அமோகமாக இருக்கப் போகிறது. அதுவும் தொழிலில் நல்ல வெற்றியையும், முன்னேற்றத்தையும் காணப் போகிறார்கள். இப்போது அந்த ராசிக்காரர்கள் யார்யார் என்பதைக் காண்போம். உங்கள் ராசியும் அதில் உள்ளதா என்பதை தொடர்ந்து படித்து தெரிந்து கொள்ளுங்கள்.

மேஷம்
மேஷ ராசியின் 5 ஆவது வீட்டின் அதிபதியான சூரியன், இப்பெயர்ச்சியின் போது 10 ஆவது வீட்டிற்கு செல்கிறார். இதனால் மேஷ ராசிக்காரர்கள் தங்களின் தொழில் வாழ்க்கையில் சாதகமான பலன்களைப் பெறவுள்ளார்கள். முக்கியமாக தங்களின் கடின உழைப்பிற்கான முழு பலனையும் இந்த காலகட்டத்தில் பெறுவார்கள். வேலை தேடிக் கொண்டிருப்பவர்களுக்கு புதிய வேலை வாய்ப்புகள் கிடைக்கும். தேர்வுகளுக்கு தயாராகிக் கொண்டிருப்பவர்களுக்கு இக்காலம் சிறப்பாக இருக்கும்.

கன்னி
கன்னி ராசியின் 12 ஆவது வீட்டின் அதிபதியான சூரியன், இப்பெயர்ச்சியின் போது 5 ஆவது வீட்டிற்கு செல்கிறார். இதனால் சமூகத்தில் கன்னி ராசிக்காரர்களின் அந்தஸ்து அதிகரிக்கும். நல்ல நிதி நன்மைகள் கிடைக்கும். மாணவர்கள் தேர்வில் நல்ல வெற்றியைப் பெறுவார்கள். வெளிநாட்டில் படிக்க விரும்புபவர்களுக்கு அதற்கான வாய்ப்புகள் கிடைக்கும். பணிபுரிபவர்கள் அலுவலகத்தில் தங்களின் வேலையால் நல்ல பாராட்டைப் பெறுவார்கள்.

தனுசு
தனுசு ராசியின் 9 ஆவது வீட்டின் அதிபதியான சூரியன், 2 ஆவது வீட்டிற்கு செல்கிறார். இதனால் இக்காலத்தில் தனுசு ராசிக்காரர்கள் தங்கள் குடும்பத்தினருடன் புனித யாத்திரையை மேற்கொள்ளும் வாய்ப்பைப் பெறுவார்கள். தொழிலில் நல்ல வெற்றியும், முன்னேற்றமும் ஏற்படும். இக்காலத்தில் நிதி நிலை சிறப்பாக இருக்கும். நிறைய பணத்தை சேமிக்க முடியும். முக்கியமாக இக்காலத்தில் குடும்ப உறுப்பினர்களின் முழு ஆதரவும் கிடைக்கும்.
(பொறுப்புத் துறப்பு: மேலே கொடுக்கப்பட்டுள்ள தகவல் இணையத்தில் கிடைக்கும் அனுமானங்கள் மற்றும் தகவல்களின் அடிப்படையில் கொடுக்கப்பட்டுள்ளன மற்றும் நம்பகத்தன்மைக்கு உத்தரவாதம் இல்லை. தமிழ் போல்ட்ஸ்கை கட்டுரை தொடர்பான தகவலை உறுதிப்படுத்தவில்லை. மேலும் எங்கள் ஒரே நோக்கம் தகவலை வழங்குவது மட்டுமே. அதை வெறும் தகவலாக மட்டும் எடுத்துக் கொள்ள வேண்டும். எந்தவொரு தகவலையும் அனுமானத்தையும் பயிற்சி செய்வதற்கு அல்லது செயல்படுத்துவதற்கு முன், தயவுசெய்து சம்பந்தப்பட்ட நிபுணரை அணுகவும்.)



Click it and Unblock the Notifications
