சனி சூரிய சேர்க்கையால் ஜனவரி 17 வரை இந்த ராசிக்காரங்க கொஞ்சம் ஜாக்கிரதையா இருக்கணும்..

சூரியனும், சனியும் 2023 ஜனவரி 17 ஆம் தேதி வரை மகர ராசியில் சேர்ந்திருப்பார்கள். அதன் பின் சனி தனது மற்றொரு சொந்த ராசியான கும்ப ராசிக்கு செல்கிறார்.

Sun-Saturn Conjunction In Capricorn On January 2023: ஜோதிடத்தில் கிரகங்கள் அவ்வப்போது ராசியை மாற்றும். அப்படி ராசியை மாற்றும் போது கிரக சேர்க்கைகள் உருவாகும். அதில் நவகிரகங்களின் தலைவனாக கருதப்படும் சூரியன் 2023 ஜனவரி 14 ஆம் தேதி மகர ராசிக்குள் நுழைந்துள்ளார். மகர ராசியானது சனி பகவானின் ராசியாகும். மேலும் இந்த மகர ராசியில் ஏற்கனவே சனி பகவான் பயணித்து வருகிறார். ஜோதிடத்தில் சூரியனும் சனியும் எதிரி கிரகங்களாக கருதப்படுகின்றன.

Sun-Saturn Conjunction In Capricorn On January 2023: Effects On All Zodiac Signs In Tamil

என்ன தான் சூரியனும், சனியும் தந்தை மகனாக இருந்தாலும், எதிரிகளாக கருதப்படுகிறார்கள். எதிரி கிரகங்கள் ஒன்றாக சேர்ந்திருப்பதால், அதன் தாக்கம் 12 ராசிகளிலும் காணப்படும். முக்கியமாக சூரியனும், சனியும் 2023 ஜனவரி 17 ஆம் தேதி வரை தான் சேர்ந்திருப்பார்கள். அதன் பின் சனி தனது மற்றொரு சொந்த ராசியான கும்ப ராசிக்கு செல்கிறார். இப்போது மகர ராசியில் சனி சூரிய சேர்க்கையால் 12 ராசிக்காரர்களும் எந்த மாதிரியான பலன்களைப் பெறப் போகிறார்கள் என்பதைக் காண்போம்.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்
மேஷம்

மேஷம்

மேஷ ராசியின் 10 ஆவது வீட்டில் சூரிய சனி சேர்க்கை நிகழ்கிறது. இதனால் ஆரோக்கியத்தைப் பொறுத்தவரை சவாலானதாக இருக்கும். பண பற்றாக்குறையை சந்திக்க நேரிடும். பணிபுரிபவர்கள் அலுவலகத்தில் உயர் அதிகாரிகளுடன் வாக்குவாதங்களைத் தவிர்க்க வேண்டும். இல்லாவிட்டால் வேலையை இழக்க நேரிடும். திருமணமான தம்பதிகளுக்கு இடையே தவறான புரிதல்கள் இருக்கலாம்.

ரிஷபம்

ரிஷபம்

ரிஷப ராசியின் 9 ஆவது வீட்டில் சூரிய சனி சேர்க்கை நிகழ்கிறது. இதனால் இக்காலத்தில் முழங்கால், தசை வலி பிரச்சனையால் அவதிப்படலாம். நிலுவையில் உள்ள பண விவகாரங்களைத் தீர்க்க தீவிர முயற்சிகள் தேவைப்படும். பணிபுரிபவர்கள் முன்பு செய்த கடின உழைப்பின் பலன்களை இக்காலத்தில் பெற வாய்ப்புள்ளது. திருமணமான தம்பதிகளுக்கு இடையே இருந்த பிரச்சனைகள் தீரும்.

மிதுனம்

மிதுனம்

மிதுன ராசியின் 8 ஆவது வீட்டில் சூரிய சனி சேர்க்கை நிகழ்கிறது. இதனால் ஆரோக்கியத்தில் சிறப்பு கவனம் செலுத்த வேண்டும். செலவுகளைக் கண்காணிக்க வேண்டும். பணிபுரிபவர்கள் தங்கள் இலக்குகளை அடைய கடினமாக உழைக்க வேண்டியிருக்கும். திருமணமானவர்கள் தங்கள் உறவில் பிரச்சனைகளை சந்திக்க நேரிடும்.

கடகம்

கடகம்

கடக ராசியின் 7 ஆவது வீட்டில் சூரிய சனி சேர்க்கை நிகழ்கிறது. இதனால் ஆரோக்கியத்தில் சில பிரச்சனைகளை சந்திக்க நேரிடும். நிதி ரீதியாக, நல்ல காலமாக இருக்கும். நல்ல பண ஆதாயங்களைப் பெறுவீர்கள் திருமணமானவர்கள் சச்சரவுகளில் ஈடுபடுவதைத் தவிர்க்க வேண்டும்.

சிம்மம்

சிம்மம்

சிம்ம ராசியின் 6 ஆவது வீட்டில் சூரிய சனி சேர்க்கை நிகழ்கிறது. இதனால் ஆரோக்கியத்தில் ஏற்றத்தாழ்வுகளை சந்திக்கலாம். கடன் வாங்குவதைத் தவிர்க்க அறிவுறுத்தப்படுகிறது. இல்லாவிட்டால் பணத்தை திரும்ப செலுத்துவதில் சிரமம் ஏற்படலாம். பணிபுரிபவர்கள் தங்கள் சகாக்களுடன் கருத்து வேறுபாடுகளை கொண்டிருக்கலாம். திருமணமானவர்களுக்கு இது நல்ல காலம்.

கன்னி

கன்னி

கன்னி ராசியின் 5 ஆவது வீட்டில் சூரிய சனி சேர்க்கை நிகழ்கிறது. இதனால் இதுவரை ஆரோக்கிய பிரச்சனைகளை சந்தித்தவர்கள் இக்காலத்தில் குணமடைவார்கள். இதுவரை சிக்கிய பணம் இக்காலத்தில் கைக்கு வரும். வேலை செய்பவர்கள் தங்களின் வருமானத்தில் உயர்வைக் காணலாம். திருமணமானவர்கள் தங்கள் துணையுடன் வலுவான பிணைப்பை உருவாக்குவார்கள்.

துலாம்

துலாம்

துலாம் ராசியின் 4 ஆவது வீட்டில் சூரிய சனி சேர்க்கை நிகழ்கிறது. இதனால் இக்காலத்தில் சற்று மன அழுத்தத்தை உணரலாம். வாழ்க்கையில் சில பிரச்சனைகளை சந்திக்கலாம். நிதி விஷயங்கள் சற்று நன்றாக இருக்கலாம். பணிபுரிபவர்கள் தங்களின் வேலையில் சில சவால்களை சந்திக்கலாம். திருமணமானவர்கள் தேவையில்லாத வாக்குவாதங்கள் அல்லது மோதல்களை உருவாக்கலாம்.

விருச்சிகம்

விருச்சிகம்

விருச்சிக ராசியின் 3 ஆவது வீட்டில் சூரிய சனி சேர்க்கை நிகழ்கிறது. இதனால் ஆரோக்கியம் சற்று நன்றாக இருக்கும். ஆனால் பெரிய முதலீடுகளை செய்ய வேண்டாம். இல்லாவிட்டால் இழப்பை சந்திக்க நேரிடும். வேலை தேடுபவர்களுக்கு நல்ல வேலை கிடைக்கலாம். திருமணமானவர்கள் தங்கள் துணையிடம் இருந்து எதிர்பார்த்த பதில்களைப் பெறுவார்கள்.

தனுசு

தனுசு

தனுசு ராசியின் 2 ஆவது வீட்டில் சூரிய சனி சேர்க்கை நிகழ்கிறது. இதனால் இக்காலத்தில் ஆரோக்கிய பிரச்சனைகளால் பாதிக்கப்படலாம். வயதானவர்கள் கண் தொடர்பான பிரச்சனைகளை சந்திக்கலாம். நிதி விஷயங்களில் கவனமாக இருக்க வேண்டும். பணிபுரிபவர்கள் வேலையில் சவால்களை சந்திக்கலாம். திருமணமான தம்பதிகள் சிறுசிறு சண்டைகளை போடலாம்.

மகரம்

மகரம்

மகர ராசியின் முதல் வீட்டில் சூரிய சனி சேர்க்கை நிகழ்கிறது. இதனால் சற்று ஆரோக்கிய பிரச்சனைகளை சந்திக்கலாம். நிதியைப் பொறுத்தவரை நன்றாக இருக்கும். தொழில்முனைவோர் புதிதாக உருவாக்கப்பட்ட உத்திகளால் வெற்றி பெறலாம். சிறு தொழில் செய்பவர்கள் நல்ல லாபத்தைப் பெறலாம். திருமணமானவர்களுக்கு ஓரளவு நன்றாக இருக்கும்.

கும்பம்

கும்பம்

கும்ப ராசியின் 12 ஆவது வீட்டில் சனி சூரிய சேர்க்கை நிகழ்கிறது. எனவே ஆரோக்கிய பிரச்சனைகள் சற்று அதிகரிக்கும். திடீர் பண செலவுகள் ஏற்படலாம். தொழிலதிபர்கள் வெளிநாட்டு நிறுவனங்களில் அதிக லாபத்தைப் பெறுவார்கள். திருமண வாழ்க்கை ஏற்ற இறக்கங்கள் நிறைந்திருக்கும். இக்காலத்தில் பேசும் போது கவனமாக இருக்க வேண்டும்.

மீனம்

மீனம்

மீன ராசியின் 11 ஆவது வீட்டில் சூரிய சனி சேர்க்கை நிகழ்கிறது. இதனால் ஆரோக்கியம் நன்றாக இருக்கும். கடந்த கால பிரச்சனைகளில் இருந்து மீண்டு வருவீர்கள். பணிபுரிபவர்கள் திடீர் பண ஆதாயத்தைப் பெறலாம். வணிகர்கள் புதிய உத்திகளால் பயனடைவார்கள். திருமணமான தம்பதிகளுக்கு இடையே சிறு பிரச்சனைகள் வரலாம்.

(பொறுப்புத் துறப்பு: மேலே கொடுக்கப்பட்டுள்ள தகவல் இணையத்தில் கிடைக்கும் அனுமானங்கள் மற்றும் தகவல்களின் அடிப்படையில் கொடுக்கப்பட்டுள்ளன மற்றும் நம்பகத்தன்மைக்கு உத்தரவாதம் இல்லை. தமிழ் போல்ட்ஸ்கை கட்டுரை தொடர்பான தகவலை உறுதிப்படுத்தவில்லை. மேலும் எங்கள் ஒரே நோக்கம் தகவலை வழங்குவது மட்டுமே. அதை வெறும் தகவலாக மட்டும் எடுத்துக் கொள்ள வேண்டும். எந்தவொரு தகவலையும் அனுமானத்தையும் பயிற்சி செய்வதற்கு அல்லது செயல்படுத்துவதற்கு முன், தயவுசெய்து சம்பந்தப்பட்ட நிபுணரை அணுகவும்.)

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்

Story first published: Saturday, January 14, 2023, 19:29 [IST]
Desktop Bottom Promotion