For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

59 ஆண்டுகளுக்கு பிறகு 6 கிரகங்களின் அரிய சேர்க்கையால் நடக்கப்போகும் மாற்றங்கள் என்ன தெரியுமா?

பிப்ரவரி மாதம் ஒரு விசித்திரமான நிகழ்வு நடக்கவிருகிறது. 59 ஆண்டுகளுக்குப் பிறகு, 6 கிரகங்களின் விசித்திரமான நிகழ்வானது இந்த மாதத்தில் உருவாக உள்ளது.

|

பிப்ரவரி மாதம் ஒரு விசித்திரமான நிகழ்வு நடக்கவிருகிறது. 59 ஆண்டுகளுக்குப் பிறகு, கிரகங்களின் விசித்திரமான நிகழ்வானது இந்த மாதத்தில் உருவாக உள்ளது. பிப்ரவரி 10 ஆம் தேதி இரவு, சந்திரன் மகர ராசிக்குள் நுழையும் போது, ​​ஒரு அரிய மற்றும் அற்புதமான கிரகணம் ஏற்படும்.

Six Planets Rare Combination in Capricorn on February 2021 Effect on India Pakistan and China

இந்த கிரக சந்திப்பை வானியல் உலகம் மிகவும் கவனமாக கவனித்து வருகிறது. ஏனென்றால் 9 கிரகங்களில் 6 கிரகங்கள் மகர ராசியில் ஒன்றிணைகின்றன. இது உலகில், குறிப்பாக இந்தியா, பாகிஸ்தான் மற்றும் சீனாவின் மொத்த மாற்றத்திற்கு வழிவகுக்கும் என்று ஜோதிடர்கள் கணித்துள்ளனர். பூகம்பம், சூறாவளி, பனிப்புயல் மற்றும் பெரிய பொருளாதார வீழ்ச்சி ஆகியவை ஏற்படக்கூடும் என்றும் ஜோதிடர்கள் கணித்துள்ளனர்.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்
புவிசார் அரசியல் மாற்றங்கள்

புவிசார் அரசியல் மாற்றங்கள்

5 அல்லது அதற்கு மேற்பட்ட கிரகங்கள் (ராகு-கேது தவிர) ஒரு இராசியில் ஒன்றிணைந்தால், இந்தியா உட்பட உலகில் பெரிய புவிசார் அரசியல் மாற்றங்கள் ஏற்பட இருப்பதாகக் கூறப்படுகிறது. மேலும் இந்த மாற்றத்தின் விளைவானது பல தசாப்தங்களாக நீடிக்கும். பல நூற்றாண்டுகளுக்கு முன்பு, நாரத முனி தனது 'மயில் சித்திரம்' என்ற புத்தகத்தில், சூரியன், குரு, சனி, செவ்வாய், புதன் மற்றும் சுக்கிரன் போன்ற கிரகங்கள் ஒரு ராசியில் வரும் போது, ​​போர் அல்லது பெரிய வெகுஜன இயக்கங்கள் போன்ற அவசரநிலைகள் இருக்கும் என்று கூறினார்.

1962 ஆம் ஆண்டு

1962 ஆம் ஆண்டு

இதற்கு முன் 1962 ஆம் ஆண்டு பிப்ரவரி மாதத்தில் 7 கிரகங்கள் மகர ராசியில் இணைந்தன. இதன் விளைவாக, அமெரிக்காவும், பின்னர் சோவியத் ரஷ்யாவும் கியூபா ஏவுகணை நெருக்கடியில் சிக்கின. யுத்த பயம் காரணமாக உலக நாடுகள் இரண்டு முகாம்களாகப் பிரிக்கப்பட்டன. இது பல தசாப்தங்களாக பனிப்போருக்கு வழிவகுத்தது.

1979 ஆம் ஆண்டு

1979 ஆம் ஆண்டு

பின்னர், 1979 ஆம் ஆண்டு செப்டம்பர் மாதத்தில் 5 கிரகங்கள் சிம்ம ராசியில் இணைந்தன. அந்நேரத்தில், ஈரானில் இஸ்லாமிய புரட்சி உலகில் பரபரப்பை ஏற்படுத்தியது. இது ஆப்கானிஸ்தான், பாகிஸ்தான் மற்றும் இந்தியாவில், இஸ்லாமிய பயங்கரவாதம் அதிகரிக்க வழிவகுத்தது. பின்னர், பல நாடுகளில் இரத்தக் கொதிப்பு வெடித்தது.

கொரோனா ஆரம்பம்

கொரோனா ஆரம்பம்

2019 ஆம் ஆண்டு டிசம்பர் 26 ஆம் தேதி தனுசு ராசியில் சூரிய கிரகணம் ஏற்பட்ட போது, 5 கிரகங்கள் (ராகு-கேது தவிர) ஒன்றிணைந்தன. இதனால் உலகம் முழுவதும் கொரோனா வைரஸ் தொற்று மற்றும் பொருளாதார மந்தநிலை ஏற்பட்டது. இப்போது 2021 ஆம் ஆண்டு பிப்ரவரி 11 ஆம் தேதி, சூரியன், சந்திரன், புதன், சுக்கிரன், குரு மற்றும் சனி ஆகிய 6 கிரகங்கள் மகர ராசியின் ஒன்றிணைவதால், உலகம் முழுவதும் பெரிய அரசியல் மற்றும் சமூக மாற்றங்கள் ஏற்படலாம்.

இந்தியாவில் என்ன நடக்கப் போகிறது?

இந்தியாவில் என்ன நடக்கப் போகிறது?

6 கிரகங்களின் ஒருங்கிணைப்பின் விளைவுகள் இந்தியாவிலும் தெரியும் என கருதப்படுகிறது. மகர ராசியில் கிரகங்களின் பெயர்ச்சியால் இந்தியாவின் நிலை மிகவும் கடினமானதாக இருக்கும். கொரோனா தொற்றுநோய், பொருளாதார மந்தநிலை மற்றும் சீனாவுடனான எல்லைத் தகராறு என பலவற்றால் பாதிக்கப்பட்டுள்ள இந்தியா அடுத்த ஆண்டு முதல் பாதியில் பெரும் நெருக்கடியில் சிக்கக்கூடும். கூடுதலாக, அதிகரித்துவரும் வேலையின்மை மற்றும் பண வீக்கம் நாட்டில் பெரிய அரசியல் மற்றும் சமூக மாற்றங்களுக்கு வழிவகுக்கும். இருப்பினும், இந்த 6 கிரகங்களின் ஒருங்கிணைப்பு விவசாயிகளுக்கு மகிழ்ச்சியைத் தரும் என்று கருதப்படுகிறது.

விவசாயிகள் பலப்படுத்தப்படலாம்

விவசாயிகள் பலப்படுத்தப்படலாம்

மகரத்தில் இருக்கும் சனி மற்றும் சந்திரன் விவசாயப் பொருட்கள் மற்றும் விவசாயிகளுடன் ஒரு சிறப்பான உறவைக் கொண்டுள்ளன. மகர ராசியில் சேரும் 6 கிரகங்களில் 4 கிரகங்கள், திருவோணம் நட்சத்திரத்தில் உள்ளன. இதனால் மத மோதல்கள் மற்றும் மருத்துவத் துறையில் சில சர்ச்சைக்குரிய முன்னேற்றங்கள் அடுத்த இரண்டு மாதங்களில் ஏற்பட வாய்ப்புள்ளது.

பாகிஸ்தானில் பூகம்பம்

பாகிஸ்தானில் பூகம்பம்

நமது அண்டை நாடான சீனாவும், பாகிஸ்தானும் அடுத்த ஆண்டு தொடக்கத்தில் ஒரு பெரிய நெருக்கடியை சந்திக்கும். மிதுனம் என்பது பாகிஸ்தானின் சந்திர அடையாளமாகும். எனவே 8 ஆவது வீட்டில் செல்வதால், பெரிய பூகம்பத்தால் நாட்டுக்கு சேதம் ஏற்பட வழிவகுக்கும் என்று நம்பப்படுகிறது. பிப்ரவரி 11 ஆம் தேதி அமாவாசை நாளில், சூரியனும், சந்திரனும் பூமியில் மாற்றங்கள் ஏற்படுத்தும். இதன் விளைவாக பாகிஸ்தான் மற்றும் வட இந்தியாவில் 15 நாட்களுக்குள் பூகம்பத்தை உணரக்கூடும்.

வட இந்தியாவில் புயல்

வட இந்தியாவில் புயல்

பிப்ரவரி அமாவாசைக்கு பிறகு அசாதாரண மழை, புயல் மற்றும் ஆலங்கட்டி மழை பெய்ய வாய்ப்புள்ளது. வட இந்தியாவில், ஆழங்கட்டி மழை சில இடங்களில் விவசாய பயிர்களை அழிக்கக்கூடும். மேலும் மலைகளில் பனிப்பொழிவு வலுவாகும்.

சீனாவில் பேரழிவு ஏற்படும்

சீனாவில் பேரழிவு ஏற்படும்

சனி மற்றும் குரு உள்ளிட்ட பிற கிரகங்களின் மாற்றம், சீனாவில் பெரும் பொருளாதார நெருக்கடியை ஏற்படுத்தும். சீனாவின் பங்குச் சந்தையில் ஏற்படும் சரிவு, உலகெங்கிலும் உள்ள நாடுகளையும் பாதிக்கக்கூடும்.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்

English summary

Six Planets Rare Combination in Capricorn on February 2021 Effect on India Pakistan and China

6 planet rare combination in capricorn effect: After 59 years, 6 planets combination in capricorn; what will happen and countries will see big changes in the world. Know more..
Desktop Bottom Promotion