Latest Updates
-
October 2026: அக்டோபர் மாதம் இந்த 4 ராசிக்கு தொழில் ரீதியாக அதிர்ஷ்டமா இருக்கும்! -
சூரியன் துலாம் ராசிக்குள் நுழையப்போவதால் ஜெயிக்கிற குதிரையாக ஜொலிக்கப்போகும் 4 ராசிகள் - உங்க ராசி என்ன? -
தாபா ஸ்டைல் ராஜ்மா மசாலா ரெசிபி - இந்த மாதிரி சைடிஷ் செஞ்சு பாருங்க - சப்பாத்தி, பூரிக்கு அருமையா இருக்கும் -
1 கப் கடலைப்பருப்பு இருந்தா.. சப்பாத்திக்கு இப்படி சைடு டிஷ் பண்ணுங்க.. டக்கரா இருக்கும்.. -
இந்த 4 ராசிக்காரங்க அவங்க நண்பர்களுக்கு ரொம்ப விசுவாசமா இருப்பார்களாம் - உங்க ராசி இதுல இருக்கா? -
பார்லர் செல்லாமல் முகப்பொலிவை அதிகரிக்கணுமா? அப்ப ரோஸ் வாட்டரை இப்படி யூஸ் பண்ணுங்க... -
5 லட்ச ரூபாய்க்கு விற்கப்படும் உலகின் காஸ்ட்லியான ஐஸ்கிரீம் - அப்படி இதுல என்னதான் ஸ்பெஷல் தெரியுமா? -
1 கப் பச்சரிசி இருந்தா.. ஈவ்னிங் டைம்-ல இந்த ஸ்நாக்ஸை செய்யுங்க.. பசங்க கேட்டு விரும்பி சாப்பிடுவாங்க.. -
World Heart Day 2026: 1 சிகரெட் அடிச்சா 20 நிமிஷத்துல இதயத்துல என்னென்ன நடக்கும்? - விளக்கும் இதய நிபுணர்! -
4 பிரெட் இருந்தா இந்த மாதிரி சுவையான புலாவ் செஞ்சு பாருங்க - வீட்ல எல்லோரும் விரும்பி சாப்பிடுவாங்க
சனி உருவாக்கும் சச மகாபுருஷ யோகத்தால் ஜனவரி 17 முதல் இந்த ராசிகளின் தலைவிதி மாறப்போகுது...
ஜோதிடத்தின் படி, 2023 ஜனவரி 17 ஆம் தேதி சனி பகவான் மகர ராசியில் இருந்து கும்ப ராசிக்கு செல்கிறார். 30 ஆண்டுகளுக்கு பின் கும்ப ராசிக்கு செல்லும் சனியினால், சச மகாபுருஷ யோகம் உருவாகப் போகிறது.
2023 ஆம் ஆண்டின் ஜனவரி மாதத்தில் பல முக்கிய கிரகங்கள் ராசியை மாற்றவுள்ளன. குறிப்பாக மனித வாழ்க்கையில் அதிக தாக்கத்தை ஏற்படுத்தும் சனி பகவான் ராசியை மாற்றவுள்ளார். இந்த ராசி மாற்றத்தால், ஒரு சுப யோகம் உருவாகவுள்ளது. இந்த யோகஙத்தால் பொருளாதார நிலை மேம்படுவதோடு, தொழிலில் நல்ல வெற்றியும் கிடைக்கும்.

ஜோதிடத்தின் படி, 2023 ஜனவரி 17 ஆம் தேதி சனி பகவான் மகர ராசியில் இருந்து கும்ப ராசிக்கு செல்கிறார். 30 ஆண்டுகளுக்கு பின் கும்ப ராசிக்கு செல்லும் சனியினால், சச மகாபுருஷ யோகம் உருவாகப் போகிறது. இந்த யோகத்தின் பலன் அனைத்து ராசிகளிலுமே காணப்படும். இருப்பினும் இந்த யோகத்தால், சில ராசிக்காரர்களின் தலைவிதி மாறப் போகிறது. அதாவது எதிர்பாராத நற்பலனைப் பெறப் போகிறார்கள். இப்போது அந்த ராசிக்காரர்கள் யார்யார் என்பதைக் காண்போம்.

மேஷம்
2023-ல் நடக்கும் சனிப்பெயர்ச்சியின் போது மேஷ ராசியின் 11 ஆவது வீட்டிற்கு சனி செல்கிறார். இதனால் மேஷ ராசிக்காரர்கள் அதிர்ஷ்டத்தின் முழு ஆதரவைப் பெறுவார்கள். உத்தியோகத்தில் முன்னேற்றம் ஏற்படுவதற்கான வாய்ப்புள்ளது. மேலும் தொழில் வாழ்க்கையில் பல சாதகமான முடிவுகளும் கிடைக்கும். முக்கியமாக சனியின் நிலையால் இந்த ராசிக்காரர்களின் வருமானம் அதிகரித்து, நிதி நிலை வலுவாகும்.

ரிஷபம்
ரிஷப ராசியின் 10 ஆவது வீட்டிற்கு சனி செல்கிறார். இதனால் 10 ஆவது வீட்டில் சச மகாபுருஷ யோகம் உருவாகிறது. எனவே இந்த ராசிக்காரர்கள் இந்த யோகத்தால் நல்ல பலன்களைப் பெறவுள்ளார்கள். முக்கியாக நல்ல பண பலன்களைப் பெறுவார்கள். அதே வேளையில் நீண்ட நாட்களாக முடங்கி இருந்த பணிகளானது இந்த சனிப்பெயர்ச்சிக்கு பின் வெற்றிகரமாக முடிக்கப்படும்.

கன்னி
கன்னி ராசியின் 6 ஆவது வீட்டிற்கு சனி செல்வதால், இந்த வீட்டில் சச மகாபுருஷ யோகம் உருவாகிறது. எனவே கன்னி ராசிக்காரர்களும் சுப பலன்களைப் பெறுவார்கள். குறிப்பாக வியாபாரத்தில் நல்ல முன்னேற்றம் ஏற்படும். இதுவரை ஏதேனும் நோயால் பாதிக்கப்பட்டு அவதிப்பட்டு வந்தால், இப்பெயர்ச்சிக்கு பின் நிவாரணம் கிடைக்கும். முக்கியமாக இப்பெயர்ச்சிக்கு பின் உங்களின் வேலையில் இருந்த தடைகள் அனைத்தும் நீங்கும்.

மகரம்
2023-ல் நடக்கும் சனிப்பெயர்ச்சியின் போது மகர ராசியின் 2 ஆவது வீட்டிற்கு சனி செல்கிறார். இந்த 2 ஆவது வீட்டில் சச மகாபுருஷ் யோகம் உருவாவதால், மகர ராசிக்காரர்கள் அதிர்ஷ்டத்தின் முழு ஆதரவைப் பெறுவார்கள். பணத்தை சேமிப்பதில் வெற்றி பெறுவீர்கள் மற்றும் நிதி நிலை வலுவாகும். குடும்ப உறுப்பினர்களின் முழு ஆதரவு கிடைக்கும். பரஸ்பர புரிதல் அதிகரிப்பதன் காரணமாக தம்பதிகளுக்கு இடையே உறவுகள் வலுவாகும்.
(பொறுப்புத் துறப்பு: மேலே கொடுக்கப்பட்டுள்ள தகவல் இணையத்தில் கிடைக்கும் அனுமானங்கள் மற்றும் தகவல்களின் அடிப்படையில் கொடுக்கப்பட்டுள்ளன மற்றும் நம்பகத்தன்மைக்கு உத்தரவாதம் இல்லை. தமிழ் போல்ட்ஸ்கை கட்டுரை தொடர்பான தகவலை உறுதிப்படுத்தவில்லை. மேலும் எங்கள் ஒரே நோக்கம் தகவலை வழங்குவது மட்டுமே. அதை வெறும் தகவலாக மட்டும் எடுத்துக் கொள்ள வேண்டும். எந்தவொரு தகவலையும் அனுமானத்தையும் பயிற்சி செய்வதற்கு அல்லது செயல்படுத்துவதற்கு முன், தயவுசெய்து சம்பந்தப்பட்ட நிபுணரை அணுகவும்.)



Click it and Unblock the Notifications
