Latest Updates
-
4 முட்டை இருந்தா.. இந்த பக்குவத்துல மசாலா செய்யுங்க.. சப்பாத்திக்கு செமயா இருக்கும்.. -
நீங்க இந்த தேதிகளில் பிறந்தவங்களா? அப்ப 40 வயசுக்கு அப்புறம் உங்களுக்கு குபேர யோகம் தான்! -
கேரட்டை ஒருடைம் இப்படி செய்யுங்க.. பிடிக்காதவங்க கூட கேட்டு வாங்கி சாப்பிடுவாங்க.. -
தொப்பை குறையணுமா? அப்ப ஊட்டச்சத்து நிபுணர் சொல்ற இந்த பானத்தை மதிய உணவுக்கு முன் குடிங்க.. -
சனி நட்சத்திர பெயர்ச்சி: அக்டோபரில் மகரம் உள்ளிட்ட 3 ராசிக்கு கடின உழைப்புக்கான பலன் கிடைக்கப்போகுது! -
ரவா பன் தோசையும், தக்காளி சட்னியும் - எப்படி செய்றதுன்னு பாத்து ட்ரை பண்ணுங்க... -
செப்டம்பர் 26, 2026: இன்று இந்த 4 ராசிக்காரங்களுக்கு அதிர்ஷ்டம் கதவைத் தட்டும் நாளாக இருக்குமாம் -
அக்டோபரில் வக்ரமடையும் சுக்கிரன்: நவம்பர் வரை இந்த 3 ராசிக்கு பொற்காலமா இருக்கும்.. உங்க ராசி இதுல இருக்கா? -
October 2026 Horoscope: அக்டோபர் மாதத்தில் ராஜவாழ்க்கை வாழப்போகும் 4 ராசிகள் இவங்கதான் - உங்க ராசி என்ன? -
முட்டையை ஒரே மாதிரி செய்யாம.. ஒருடைம் இப்படி செஞ்சு சாப்பிடுங்க.. டேஸ்ட் தாறுமாறா இருக்கும்!
Shani Uday 2022: பிப்ரவரி 24 முதல் இந்த 5 ராசிகளுக்கு சனி பகவானின் அருள் முழுசா கிடைக்கப் போகுது...
ஜோதிடத்தின் படி, சனி பகவானின் உதயத்தால் 5 ராசிக்காரர்கள் பிப்ரவரி 24 ஆம் தேதியில் இருந்து நற்பலன்களைப் பெறப் போகிறார்கள். அந்த ராசிக்காரர்கள் யார்யார் என்பதைத் தொடர்ந்து படித்து தெரிந்து கொள்ளுங்கள்.
நவகிரகங்களில் ஒருவரது கர்மாவிற்கு ஏற்ற பலனை அளிப்பவர் மற்றும் நீதிமான் என்று அழைக்கப்படுபவர் சனி பகவான். இந்த சனி பகவானைக் கண்டு பலரும் அஞ்சுவதுண்டு. ஏனெனில் இவர் ஒரு ராசியில் இருந்து மற்றொரு ராசிக்கு இடம் பெயர்ந்தால், அது அனைத்து ராசிகளிலும் ஒரு பெரிய தாக்கத்தை ஏற்படுத்தும். இப்படிப்பட்ட சனி பகவான் 2 1/2 வருடத்திற்கு ஒருமுறை ராசியை மாற்றுவார். கிரகங்களிலேயே மிகவும் மெதுவாக நகரக்கூடியவரும் இவரே ஆவார். சனி பகவான் ராசியை மாற்றுவதற்கு முன் அஸ்தமனமாகி உதயமாவார்.

அந்த வகையில் சனி பகவான் 2022 ஜனவரி மாதத்தில் அஸ்தமனமானார். 2022 பிப்ரவரி 24 அன்று உதயமாகி, இயல்பு நிலையில் பயணிக்கவுள்ளார். சனி பகவானின் உதயத்தால் சில ராசிக்காரர்களுக்கு வெற்றியும், தொழிலில் புதிய வாய்ப்புக்களும் கிடைக்கும். ஜோதிடத்தின் படி, சனி பகவானின் உதயத்தால் 5 ராசிக்காரர்கள் பிப்ரவரி 24 ஆம் தேதியில் இருந்து நற்பலன்களைப் பெறப் போகிறார்கள். அந்த ராசிக்காரர்கள் யார்யார் என்பதைத் தொடர்ந்து படித்து தெரிந்து கொள்ளுங்கள்.

மேஷம்
மேஷ ராசியின் 10 ஆவது வீடான தொழில் வீட்டில் சனி உதயமாகிறார். இதனால் செவ்வாயை அதிபதியாக கொண்ட மேஷ ராசிக்காரர்கள், இக்காலத்தில் பணியிடத்தில் ஒரு பெரிய பதவியைப் பெற வாய்ப்புள்ளது. பல புதிய வேலை வாய்ப்புக்களை உங்களைத் தேடி வரும். உத்தியோகத்தில் இருப்பவர்களுக்கு வருமான உயர்விற்கான வாய்ப்புக்கள் உள்ளன. வியாபாரிகள் நல்ல லாபத்தைக் காண்பார்கள்.

ரிஷபம்
சனி உதயமாகும் போது ரிஷப ராசியில் ராஜ யோகம் உருவாகிறது. ஆகவே இக்காலத்தில் இந்த ராசிக்காரர்கள் வேலைகள் அனைத்திலும் வெற்றியைக் காண்பார்கள். அரசியலில் தொடர்புடையவர்களுக்கு இக்காலத்தில் பெரிய பதவி கிடைப்பதற்கான வாய்ப்புக்கள் அதிகம் உள்ளன.

கடகம்
கடக ராசியின் 7 ஆவது வீட்டில் சனி பகவான் உதயமாகிறார். இதனால் இக்காலத்தில் கூட்டு பணிகள் அனைத்திலும் வெற்றியைக் காண்பீர்கள். உங்கள் வாழ்க்கைத் துணைக்கு முழு ஆதரவு கிடைக்கும். இரும்பு, எண்ணெய் மற்றும் சுரங்கம் போன்ற சனி தொடர்பான வியாபாரம் செய்பவர்கள் இக்காலத்தில் சிறப்பான பலன்களைப் பெறுவார்கள்.

துலாம்
துலாம் ராசியின் வாகனம், தாய் மற்றும் மகிழ்ச்சி போன்றவற்றின் வீடான 4 ஆவது வீட்டில் சனி உதயமாகிறார். துலாம் ராசியின் அதிபதி சுக்கிரன். சனிக்கும் சுக்கிரனுக்கும் இடையே நட்புறவு உள்ளது. எனவே இக்காலத்தில் நிதி நிலையில் பெரிய முன்னேற்றம் ஏற்படும். பணியிடத்தில் உங்கள் செயல்திறனுக்காக பாராட்டுக்களைப் பெறுவீர்கள்.

மகரம்
மகர ராசிக்காரர்கள் இக்காலத்தில் நல்ல ராஜ வாழ்க்கையை வாழ்வார்கள். அரசியலில் தொடர்புடையவர்களுக்கு பெரிய பதவி கிடைக்கும். இக்காலத்தில் வியாபாரிகள் புதிய ஒப்பந்தங்களால் நல்ல ஆதாயம் பெற வாய்ப்புள்ளது. பங்கு சந்தையில் முதலீடு செய்து நற்பலன்களைப் பெறுவீர்கள். மேலும் உங்கள் கௌரவம் இக்காலத்தில் உயரும்.



Click it and Unblock the Notifications
