Latest Updates
-
இந்த 3 ராசிக்காரர்களுக்கு 40 வயசுக்கு மேல தான் அதிர்ஷ்டம் பிரகாசிக்கும்.. உங்க ராசி இதுல இருக்கா? -
உங்ககிட்ட இந்த 6 அறிகுறிகள் தெரியுதா? அப்ப உடம்புல கெட்ட கொலஸ்ட்ரால் அதிகமா இருக்குன்னு அர்த்தம்.. உஷார்.. -
மணமணக்கும்.. திண்டுக்கல் ஸ்டைல் சீரக சம்பா முட்டை பிரியாணி - எப்படி செய்றதுன்னு பாத்து ட்ரை பண்ணுங்க... -
குரு பகவானால் உருவாகியுள்ள விபரீத ராஜயோகம்: அசுர வளர்ச்சியை காணப்போகும் 3 ராசிக்காரங்க இவங்க தான்! -
மட்டன் வாங்குனா.. இப்படி ஊற வெச்சு குழம்பு செய்யுங்க.. இட்லி, சாதம்-ன்னு எல்லாத்துக்கும் அட்டகாசமா இருக்கும்.. -
இன்றைய ராசிபலன் 06 செப்டம்பர் 2026: இன்று இந்த 3 ராசிகளுக்கு வீண் செலவுகள் அதிகரிக்கும் நாளாக இருக்குமாம் -
உங்க ராசியை சொல்லுங்க? இந்த வாரம் உங்களுக்கு எப்படி இருக்கும்னு நாங்க சொல்றோம்! -
சிக்கன் வாங்குனா இந்த ஆந்திரா சிக்கன் 555 செஞ்சு பாருங்க - காரசாரமா சூப்பரா இருக்கும் -
இந்த 4 ராசி ஆண்கள் பெரிய ப்ளேபாயாக இருப்பார்களாம் - இவங்ககிட்ட ஜாக்கிரதையா இருங்க -
பஞ்சாபி சன்னா மசாலா ரெசிபி - ட்ரை பண்ணி பாருங்க - ஹோட்டலில் சாப்பிடுற மாதிரி இருக்கும்
மகரத்தில் சனி வக்ர நிவர்த்தியடைவதால் அக்டோபர் 23 முதல் இந்த 3 ராசிக்காரர்களின் பிரச்சனை அதிகரிக்கப் போகுது...
அக்டோபர் 23 ஆம் தேதி சனி பகவான் மகர ராசியில் வக்ர நிவர்த்தி அடைகிறார். சனி பகவான் வக்ர நிவர்த்தி அடையும் போது நற்பலன்கள் அதிகம் கிடைத்தாலும், சில ராசிக்காரர்களின் வாழ்வில் பிரச்சனைகள் அதிகரிக்கும்.
வேத ஜோதிடத்தின் படி, கிரகங்கள் ராசியை மாற்றும் போது அல்லது மற்றொரு கிரகத்துடன் இணையும் போது, அதன் தாக்கம் மனித வாழ்க்கையில் நிச்சயம் இருக்கும். குறிப்பாக நவகிரகங்களில் மிகவும் மெதுவாக நகரும் சனி ஒரு ராசியில் இருந்து மற்றொரு ராசிக்கு செல்ல எடுத்துக் கொள்ளும் காலம் இரண்டரை ஆண்டுகள் ஆகும். ஒருவரின் செயல்களுக்கு ஏற்ப பலனை அளிக்கும் சனி பகவானின் தாக்கம் மனித வாழ்க்கையில் அதிக தாக்கத்தை ஏற்படுத்தும்.

அந்த வகையில் இந்த ஆண்டின் ஏப்ரல் மாதத்தில் சனி பகவான் மகரத்தில் இருந்து கும்ப ராசிக்கு நுழைந்தார். அதன் பின் ஜூன் மாதத்தில் கும்பத்தில் வக்ரமாகி, ஜூலை மாதத்தில் வக்ர நிலையில் மகர ராசியை அடைந்து பயணித்து வருகிறார். இந்நிலையில் அக்டோபர் 23 ஆம் தேதி சனி பகவான் மகர ராசியில் வக்ர நிவர்த்தி அடைகிறார். சனி பகவான் வக்ர நிவர்த்தி அடையும் போது நற்பலன்கள் அதிகம் கிடைத்தாலும், சில ராசிக்காரர்களின் வாழ்வில் பிரச்சனைகள் அதிகரிக்கும். இப்போது சனி வக்ர நிவர்த்தி அடைவதால் எந்த ராசிக்காரர்கள் அதிக பிரச்சனைகளை சந்திக்கப் போகிறார்கள் என்பதைக் காண்போம்.

கடகம்
கடக ராசியின் 7 ஆவது வீட்டில் சனி வக்ர நிவர்த்தி அடைகிறார். இது வாழ்க்கைத் துணை மற்றும் கூட்டாண்மையின் வீடாகும். எனவே இந்த சனி வக்ர நிவர்த்தி சற்று தீங்கு விளைவிப்பதாக இருக்கும். குறிப்பாக வாழ்க்கைத் துணையுடன் கருத்து வேறுபாடுகள் ஏற்படலாம். கூட்டு தொழில் செய்பவர்கள் சில இழப்புக்களை சந்திக்க நேரிடலாம். இந்த காலத்தில் எந்த கூட்டு வேலையையும் தொடங்காதீர்கள். இல்லாவிட்டால் நஷ்டத்தை சந்திப்பீர்கள். சனி கும்ப ராசிக்கு சென்ற போதே, இந்த ராசிக்காரர்களுக்கு அஷ்டம சனி தொடங்கிவிட்டது. எனவே எங்கும் பணத்தை முதலீடு செய்துவிடாதீர்கள். பங்குச் சந்தையில் நஷ்டம் ஏற்பட வாய்ப்புள்ளது.

விருச்சிகம்
சனி வக்ர நிவர்த்தி அடைவதால் விருச்சிக ராசிக்காரர்களுக்கு இனி வரும் காலம் வேதனை நிறைந்த காலமாக இருக்கும். ஏனெனில் சனி பகவான் விருச்சிக ராசியின் 3 ஆவது வீட்டில் வக்ர நிவர்த்தி அடைகிறார். இது தைரியம், வலிமை, சகோதர சகோதரிகளின் வீடாகும். எனவே இக்காலத்தில் உங்கள் சகோதர சகோதரிகளிடம் இருந்து குறைவான ஆதரவையே பெறுவீர்கள். மூதாதையர் சொத்து தொடர்பான பிரச்சனைகள் வரலாம். குடும்ப உறுப்பினர்களுடன் கருத்து வேறுபாடுகள் ஏற்படலாம். பயணம் மேற்கொள்ளும் போது கவனமாக இருங்கள். அர்த்தாஷ்டம சனி நடப்பதால், உங்களின் அனைத்து வேலைகள் பாழாகும்.

மகரம்
சனி பகவான் என்ன தான் மகர ராசியின் அதிபதியாக இருந்தாலும், சனி வக்ர நிவர்த்தி அடைவது சற்று வேதனை நிறைந்தாகவே இருக்கும். ஏனெனில் சனி முதல் வீட்டில் வக்ர நிவர்த்தி அடைகிறார். எனவே ஆரோக்கியத்தில் சிறப்பு கவனம் செலுத்த வேண்டும். பணிபுரிபவர்களுக்கு அலுவலகத்தில் நிறைய தடைகள் வரலாம். வணிகம் செய்பவர்களுக்கு இக்காலம் சற்று சவாலானதாக இருக்கும். விபத்துக்கள் ஏற்பட வாய்ப்புள்ளதால், கவனமாக வாகனத்தை ஓட்ட அறிவுறுத்தப்படுகிறது.
(பொறுப்புத் துறப்பு: மேலே கொடுக்கப்பட்டுள்ள தகவல் இணையத்தில் கிடைக்கும் அனுமானங்கள் மற்றும் தகவல்களின் அடிப்படையில் கொடுக்கப்பட்டுள்ளன மற்றும் நம்பகத்தன்மைக்கு உத்தரவாதம் இல்லை. தமிழ் போல்ட்ஸ்கை கட்டுரை தொடர்பான தகவலை உறுதிப்படுத்தவில்லை. மேலும் எங்கள் ஒரே நோக்கம் தகவலை வழங்குவது மட்டுமே. அதை வெறும் தகவலாக மட்டும் எடுத்துக் கொள்ள வேண்டும். எந்தவொரு தகவலையும் அனுமானத்தையும் பயிற்சி செய்வதற்கு அல்லது செயல்படுத்துவதற்கு முன், தயவுசெய்து சம்பந்தப்பட்ட நிபுணரை அணுகவும்.)



Click it and Unblock the Notifications