Latest Updates
-
சிக்கன் வாங்குனா இந்த ஆந்திரா சிக்கன் 555 செஞ்சு பாருங்க - காரசாரமா சூப்பரா இருக்கும் -
இந்த 4 ராசி ஆண்கள் பெரிய ப்ளேபாயாக இருப்பார்களாம் - இவங்ககிட்ட ஜாக்கிரதையா இருங்க -
பஞ்சாபி சன்னா மசாலா ரெசிபி - ட்ரை பண்ணி பாருங்க - ஹோட்டலில் சாப்பிடுற மாதிரி இருக்கும் -
உலகின் முதல் பொறியியல் கல்லூரி எது? இந்தியாவில் தொடங்கப்பட்ட முதல் பொறியியல் கல்லூரி எது தெரியுமா? -
கர்நாடகா தர்காரி புலாவ் ரெசிபி - இந்த மாதிரி செஞ்சு பாருங்க - பிரியாணியை விட சூப்பரா இருக்கும் -
செஃப் தீனாவின் 2-இன்-1 ரெசிபி.. ரெஸ்டாரண்ட் ஸ்டைல் சோயா நெய் ரோஸ்ட் - எப்படி-ன்னு பாத்து ட்ரை பண்ணுங்க.. -
இன்றைய ராசிபலன் 05 செப்டம்பர் 2026: இன்று இந்த 3 ராசிகளுக்கு மனஅழுத்தமான அதிகரிக்கும் நாளாக இருக்குமாம் -
செப்டம்பர் 07-ல் சொந்த ராசிக்கு செல்லும் புதன்: இந்த 3 ராசிக்கு பிரச்சனை மேல் பிரச்சனை வந்து பாடாய்படுத்தும்! -
உலகிலேயே அதிக மதிப்புள்ள கரன்சி எந்த நாட்டுடையது தெரியுமா? டாலரை விட இந்த கரன்சியின் மதிப்புதான் அதிகம் -
பன்னீரும், காளானும் வெச்சு ஒருடைம் இப்படி சைடு டிஷ் பண்ணுங்க.. சப்பாத்தி, பூரிக்கு அள்ளும்..
சனி, சூரியன் மற்றும் குரு தங்கள் சொந்த ராசியில் இருப்பதால் நற்பலனைப் பெறும் ராசிக்காரர்கள்!
சனி, சூரியன் மற்றும் குரு ஆகிய மூன்று கிரகங்களும் தங்கள் சொந்த ராசியில் இருப்பதால், அது சில ராசிக்காரர்களுக்கு நல்ல பலன்களைத் தரும். அந்த ராசிக்காரர்கள் யார்யார் என்பதைக் காண்போம்.
வேத ஜோதிடத்தில் கிரகங்களின் இயக்கம் மிகவும் முக்கியத்துவம் வாய்ந்தது. ஒவ்வொரு கிரகமும் அவ்வப்போது தங்கள் ராசியை மாற்றும். அப்படி மாற்றும் போது அது மனித வாழ்க்கையில் பாதிப்பை ஏற்படுத்தும். அதுவும் ஒரு கிரகம் தனது சொந்த ராசியில் இருந்தால், அது மிகவும் நல்ல பலனை வழங்கும். இந்நிலையில் தற்போது மூன்று முக்கிய கிரகங்கள் தனது சொந்த ராசியில் பயணித்து வருகின்றன. அதாவது சூரியன் சிம்ம ராசியிலும், சனி மகர ராசியிலும், குரு மீன ராசியிலும் இருக்கின்றன.

ஜோதிடத்தில் சூரியன் ஆற்றல், நிர்வாகம், தந்தை, தலைவன் மற்றும் ஆன்மாவின் கிரகமாக கருதப்படுகிறது. சனி கர்மாவின் கிரகமாகும். வியாழன்/குரு, அனைத்து கிரகங்களிலும் மிகவும் மங்களகரமானது. திருமணம் மற்றும் செல்வத்தின் கிரகமாக கருதப்படுகிறது. இந்த மூன்று கிரகங்களும் சொந்த ராசியில் இருப்பதால், அது சில ராசிக்காரர்களுக்கு நல்ல பலன்களைத் தரும். அந்த ராசிக்காரர்கள் யார்யார் என்பதைக் காண்போம்.

மிதுனம்
ஆகஸ்ட் 17 ஆம் தேதி சூரியன் சிம்ம ராசிக்கு சென்றார். இந்நிலையில் ஏற்கனவே சனி மற்றும் குரு சொந்த ராசியில் பயணித்து வருகின்றனர். ஆகவே இந்த காலம் மிதுன ராசிக்கு நல்ல பலனைத் தரும். குறிப்பாக தொழில் மற்றும் வியாபாரத்தில் நல்ல வெற்றி கிடைக்கும். தைரியம் மற்றும் வலிமை அதிகரிக்கும். லாபத்திற்கான சிறந்த வாய்ப்புக்கள் கிடைக்கும். இக்காலத்தில் மரியாதை அதிகரிக்கும். அரசியலில் இருப்பவர்களுக்கு இக்காலம் சாதகமாக இருக்கும்.

கடகம்
சொந்த ராசியில் மூன்று கிரகங்கள் இருக்கும் காலமானது கடக ராசிக்காரர்களுக்கு பொற்காலமாக இருக்கும். முக்கியமாக இக்காலத்தில் லட்சுமி தேவியின் அருள் கிடைக்கும். பணம் சம்பாதிப்பதற்கு நல்ல வாய்ப்புக்கள் கிடைக்கும். அதிர்ஷ்டத்தின் ஆதரவால் தடைப்பட்ட வேலைகள் அனைத்தும் கூடிய விரைவில் முடியும். பணியிடத்தில் பதவி உயர்வைப் பெற வாய்ப்புள்ளது. நிலுவையில் உள்ள நீதிமன்ற வழக்குகள் உங்களுக்கு சாதகமாக இருக்கும். வியாபாரத்தில் நல்ல லாபம் கிடைக்கும்.

துலாம்
துலாம் ராசிக்காரர்களுக்கு இக்காலம் அதிர்ஷ்டமானதாக இருக்கும். சூரியன், சனி மற்றும் குரு சொந்த ராசியில் இருப்பதால், இக்காலத்தில் பண மழை பொழியும். தடைப்பட்ட வேலைகள் அனைத்தும் வெற்றிகரமாக முடிக்கப்படும். வியாபாரிகளுக்கு வியாபாரத்தில் நல்ல முன்னேற்றம் ஏற்படும். வெளியூர் செல்வதற்கான வாய்ப்புக்கள் உண்டு. முக்கியமாக நல்ல நிதி ஆதாயங்களைப் பெறுவதற்கான வாய்ப்புள்ளது.



Click it and Unblock the Notifications