Latest Updates
-
மே மாத கிரக பெயர்ச்சிகளால் இந்த 4 ராசிக்காரர்களுக்கு கூரைய பிச்சு பண மழை கொட்டப்போகுது... -
வெந்தயக் கீரை பருப்பு கூட்டு - எப்படி செய்றது-ன்னு பாத்து ட்ரை பண்ணிப் பாருங்க.. -
கோடை வெயிலில் வீடு சூடாக இருக்கா? இந்த செடிகளை வளர்த்தால் குளிர்ச்சியும் பணமும் தேடி வரும்! -
100% மருந்து மாத்திரையின்றி கொலஸ்ட்ராலை குறைக்கணுமா? அப்ப இந்த டாக்டர் சொல்ற 'டயட் சார்ட்' ஃபாலோ பண்ணுங்க.. -
கோடை வெயிலில் வீட்டை குளிர்ச்சியாக வைக்கணுமா? இந்த வாஸ்து செடிகள் இருந்தா போதும், ஏசி தேவையில்லை! -
லட்சுமி நாராயண ராஜயோகம்: மே மாதத்தில் இந்த 3 ராசிக்காரர்களுக்கு பணமும், வெற்றியும் குவியப்போகுது! -
தக்காளியும், கொத்தமல்லியும் இருந்தா.. ஒருடைம் இந்த சைடு டிஷ் செய்யுங்க.. இட்லி, தோசைக்கு அள்ளும்.. -
இன்றைய ராசிபலன் 27 ஏப்ரல் 2026: இன்று இந்த 4 ராசிக்காரங்களுக்கு மோசமான நாள் காத்திருக்காம் -
செவ்வாய் சொந்த ராசிக்கு செல்வதால் டபுள் ஜாக்பாட் அடிக்கப்போகும் 3 ராசிகள் என்னென்ன தெரியுமா? -
அட்டகாசமான ஆந்திரா கத்திரிக்காய் தக்காளி சட்னி ரெசிபி - செஞ்சு பாருங்க, சுருக்குனு சூப்பரா இருக்கும்
கும்பத்தில் சனி அஸ்தமனமாவதால் ஜனவரி 30 முதல் இந்த 3 ராசிக்காரங்க கொஞ்சம் எச்சரிக்கையா இருக்கணும்...
2023 ஜனவரி 30 ஆம் தேதி சனி கும்ப ராசியில் சூரியனுக்கு அருகில் சென்று அஸ்தமனமாகிறார். இந்த சனி அஸ்தமனத்தால் சில ராசிக்காரர்கள் அதிக பிரச்சனைகளை சந்திக்க நேரிடும் என்பதால், சற்று எச்சரிக்கையாக இருக்க வேண்டும்.
நவகிரகங்களில் நீதிமான் என்று அழைக்கப்படுபவர் தான் சனி பகவான். இந்த சனி 30 ஆண்டுகளுக்கு பிறகு தனது சொந்த ராசியான கும்ப ராசிக்கு 2023 ஜனவரி 17 ஆம் தேதிக்கு சென்றார். சனி பகவானின் இந்த ராசி மாற்றத்தின் தாக்கம் 12 ராசிகளிலும் காணப்படும். மேலும் மகரம், கும்பம், மீனம் ஆகிய ராசிக்காரர்களுக்கு ஏழரை சனி தொடங்குகிறது. கடகம் மற்றும் துலாம் ராசிக்காரர்களுக்கு அஷ்டம மற்றும் அர்த்தாஷ்டம சனி ஆரம்பிக்கிறது. மேலும் சனியின் இந்த ராசி மாற்றத்தால் சில ராசிக்காரர்கள் நல்ல பலன்களையும், சிலர் மோசமான பலன்களையும் பெறலாம்.

இந்நிலையில் 2023 ஜனவரி 30 ஆம் தேதி சனி கும்ப ராசியில் சூரியனுக்கு அருகில் சென்று அஸ்தமனமாகிறார். இந்த சனி அஸ்தமனத்தால் சில ராசிக்காரர்கள் அதிக பிரச்சனைகளை சந்திக்க நேரிடும் என்பதால், சற்று எச்சரிக்கையாக இருக்க வேண்டும். ஏன் நிதி இழப்பு ஏற்படவும் வாய்ப்புள்ளது. இப்போது 2023 ஜனவரி 30 ஆம் தேதி சனி அஸ்தமனமாவதால் எந்த ராசிக்காரர்கள் எச்சரிக்கையாக இருக்க வேண்டும் என்பதைக் காண்போம்.

கடகம்
கடக ராசியின் 8 ஆவது வீட்டில் சனி அஸ்தமனமாகிறார். இதனால் இக்காலத்தில் கடக ராசிக்காரர்கள் தொழில், ஆரோக்கியம் போன்றவற்றில் பல சவால்களை சந்திக்க நேரிடும். எனவே சற்று எச்சரிக்கையாக இருக்க வேண்டும். வியாபாரிகள், வேலை செய்பவர்கள், முதலீட்டு முடிவுகளை கவனமாக எடுக்க வேண்டும். ஏனெனில் இக்காலத்தில் பண இழப்பு ஏற்பட வாய்ப்புள்ளது. செய்யும் வேலைகளை கவனமாக செய்ய வேண்டும். ஆரோக்கியத்தில் மிகவும் கவனமாக இருக்க வேண்டு. வாழ்க்கைத் துணையுடன் வாக்குவாதங்களைத் தவிர்க்க வேண்டும். இல்லாவிட்டால் மன உளைச்சலால் பிரச்சனைகளை சந்திக்க நேரிடும். முக்கியமாக இக்காலத்தில் யாருக்கும் கடன் கொடுத்துவிடாதீர்கள்.

சிம்மம்
சிம்ம ராசியின் 7 ஆவது வீட்டில் சனி அஸ்தமனமாகிறார். இதனால் இக்காலத்தில் உங்களின் பட்ஜெட்டில் குழப்பம் ஏற்படலாம். ஊதாரித்தனமாக செலவு செய்வதைக் கட்டுப்படுத்தாவிட்டால், கடுமையான நிதி நெருக்கடியில் சிக்கி அவதிப்பட நேரிடும். எனவே சிக்கனமாக செலவு செய்ய முயற்சி செய்யுங்கள். சனி அஸ்தமனமாவதால், காதல் மற்றும் திருமண வாழ்க்கையில் பாதிப்பு ஏற்படும். முக்கியமாக இந்த காலத்தில் எந்த ஒரு புதிய வேலைகளையும் தொடங்காமல் இருப்பது நல்லது.

விருச்சிகம்
விருச்சிக ராசியின் 4 ஆவது வீட்டில் சனி அஸ்தமனமாகிறார். இதனால் விருச்சிக ராசிக்காரர்கள் சற்று கவனமாக இருக்க வேண்டும். இந்த காலகட்டத்தில் யாருக்கும் பணம் கொடுத்துவிடாதீர்கள். இல்லாவிட்டால், அந்த பணம் திரும்ப கிடைக்காது. சனியின் நிலையால் உங்கள் தாயாரின் ஆரோக்கியம் மோசமடையக்கூடும் என்பதால் இக்காலத்தில் அவரைக் கவனித்துக் கொள்ள அறிவுறுத்தப்படுகிறது. சனி அஸ்தமனத்தால் தொழிலில் பாதிப்பு ஏற்படும். என்ன தான் புதிய வேலை வாய்ப்புகள் கிடைத்தாலும், சில காரணங்களால் அது தடைபடலாம்.
(பொறுப்புத் துறப்பு: மேலே கொடுக்கப்பட்டுள்ள தகவல் இணையத்தில் கிடைக்கும் அனுமானங்கள் மற்றும் தகவல்களின் அடிப்படையில் கொடுக்கப்பட்டுள்ளன மற்றும் நம்பகத்தன்மைக்கு உத்தரவாதம் இல்லை. தமிழ் போல்ட்ஸ்கை கட்டுரை தொடர்பான தகவலை உறுதிப்படுத்தவில்லை. மேலும் எங்கள் ஒரே நோக்கம் தகவலை வழங்குவது மட்டுமே. அதை வெறும் தகவலாக மட்டும் எடுத்துக் கொள்ள வேண்டும். எந்தவொரு தகவலையும் அனுமானத்தையும் பயிற்சி செய்வதற்கு அல்லது செயல்படுத்துவதற்கு முன், தயவுசெய்து சம்பந்தப்பட்ட நிபுணரை அணுகவும்.)



Click it and Unblock the Notifications