For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

நரகத்தில் இருந்து தப்பிக்க சிவபெருமான் முருகனிடம் கூறிய ரகசியங்கள் என்ன தெரியுமா?

சிவபெருமான் பார்வதி தேவியிடம் மரணமில்லா வாழ்வைப் பற்றியும், மோட்சத்தை அடைவது பற்றியுமான ரகசியத்தைக் கூறினார் என்று நாம் அறிவோம். இந்த ரகசியத்தை சிவபெருமான் முருகப்பெருமானுக்கு ஒருமுறை கூறியது பலரும்

|

இந்து மதத்தின் மிக முக்கியமான கடவுள் என்றால் அது சிவபெருமான்தான். அதேபோல தமிழ்க்கடவுள் என்று அழைக்கப்படுபவர் முருகன் ஆவார். தமிழகத்தில் முருகன் மிக முக்கிய கடவுளாக இருக்கிறார். சிவபெருமானின் இளைய மகனான முருகப்பெருமான் சூரபத்மன் என்னும் அசுரனை அழிப்பதற்காக சிவபெருமானின் மூன்றாவது கண்ணிலிருந்து ஜோதி வடிவத்தில் உருவாக்கப்பட்டவர்.

secrets which Lord Shiva revealed to Karthikeya

சிவபெருமான் பார்வதி தேவியிடம் மரணமில்லா வாழ்வைப் பற்றியும், மோட்சத்தை அடைவது பற்றியுமான ரகசியத்தைக் கூறினார் என்று நாம் அறிவோம். ஆனால் இந்த ரகசியத்தை சிவபெருமான் முருகப்பெருமானுக்கு ஒருமுறை கூறியது பலரும் அறியாத ஒன்றாகும். இந்த பதிவில் சிவபெருமான் முருகனுக்கு அந்த ரகசியத்தை ஏன் கூறினார் என்று பார்க்கலாம்.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்
முருகனின் சந்தேகம்

முருகனின் சந்தேகம்

தெற்கு பகுதியில் உள்ள மக்களை சூரபத்மனிடம் இருந்து பாதுகாக்க சிவபெருமான் கார்த்திகேயனை அனுப்பினார். ஆனால் தனது பணியை நிறைவேற்றிய பிறகு கைலாயத்திற்கு திரும்ப வந்து மோட்சத்தை அடைய முடியுமா என்ற சந்தேகம் அவருக்கு எழுந்தது. இதற்கு சிவபெருமான் தூய பக்தியுடன் புனித ஸ்தலங்களுக்கு செல்கிற அனைவரும் மோட்சத்தை அடையலாம் என்று பதிலளித்தார்.

முருகனின் கேள்வி

முருகனின் கேள்வி

கார்த்திகேயன் அது எந்தெந்த இடங்கள் என்று கேட்டார், ஆசைகள் உதிக்காமல் தூய எண்ணங்கள் மட்டும் உதிக்கும் அந்த இடங்கள் எதுவென்று கேட்டார். இந்த கேள்விக்கு சிவபெருமான் " அனைத்து நதிகளும் புனித கங்கையில் இருந்துதான் உருவாகிறது, எனவே ஒவ்வொரு நதியும் புனித யாத்திரை செய்யக்கூடிய இடம்தான். ங்கள் பாவங்களைக் கழுவ விரும்பும் எவரும் முதலில் இந்த நதிகளின் நீரில் நீராடி, பின்னர் புனித திருமூர்த்தியின் தங்குமிடங்களைப் பார்வையிட வேண்டும் " என்று கூறினார்.

MOST READ: இந்த ராசிகளில் பிறந்தவர்கள் கண்டிப்பாக வைரம் அணியக்கூடாது... இல்லனா ஆபத்துதான்...!

சிவனின் பதில்

சிவனின் பதில்

காஷி, அயோத்தி, துவாரகா, மதுரா, ராம்தீர்த், புஷ்கர் ஆகிய இடங்களில் தானும், பிரம்மாவும், விஷ்ணுவும் ஒரு கணம் கூட விலகாமல் தங்களை சரணடைபவர்களின் பாவங்களின் மன்னிக்க காத்திருப்பதாக கூறினார். இந்த இடங்களை வெறுமனே பார்வையிடுவது ஒரு நபரை உலகின் அனைத்து துக்கங்களிலிருந்தும் விடுவிக்கும் என்று அவர் கூறினார். இங்கே அவர்கள் தங்களை சரணடையச் செய்து கடவுளிடம் தஞ்சம் பெறலாம்.

கலியுகம்

கலியுகம்

கலியுகத்தைப் பற்றி சிவபெருமான் கூறும்போது " கோமதி நதியில் புனித நீராடி, பின்னர் கிருஷ்ணருக்கு வணக்கம் செலுத்தும் ஒரு பக்தர் மோட்சத்தை அடைகிறார். வாரணாசியில் உள்ள பஞ்ச்கங்காவில் நீராடுவது பிறப்பு மற்றும் இறப்பு சுழற்சிகளிலிருந்து அவர்களை விடுவிக்கிறது. காஷிக்கு யாத்திரை சென்று விஸ்வநாதருக்கு வணக்கம் செலுத்தும் எவரும் இந்த உலகின் அனைத்து அடிமைத்தனங்களிலிருந்தும் விடுவிக்கப்படுகிறார்கள் " என்று கூறினார்.

நரகத்தில் இருந்து தப்பிக்கும் வழி

நரகத்தில் இருந்து தப்பிக்கும் வழி

நமது புனித நூல்களில் குறிப்பிட்டுள்ளபடி நம்முடைய மூதாதையர்களுக்கு புனித நதிக்கரையில் எள் விதைகள் மற்றும் தண்ணீருடன் தர்ப்பனம் கொடுப்பது நம்மை நரகத்தின் சித்திரவதைகளில் இருந்து பாதுகாக்கும் என்று சிவபெருமான் கூறுகிறார். மகாகாலேஷ்வரை வணங்குவதும் ஒரு மனிதனின் எல்லா பாவங்களையும் நீக்குவதாக சிவபெருமான் கூறினார்.

MOST READ: இந்த விஷயம் தெரிஞ்சா இனிமே நீங்களும் ஒட்டகப்பால்லதான் டீ குடிப்பீங்க...!

கிருஷ்ணர் கூறிய ரகசியம்

கிருஷ்ணர் கூறிய ரகசியம்

ஒரு நபர் தனது வாழ்க்கையில் இந்த யாத்திரைகளை முடித்தவுடன், அவர் கங்கோத்ரி & யமுனோத்ரிக்கு யாத்திரை செல்ல வேண்டும், அங்கு அவர் புனித நீராட வேண்டும், பின்னர் தங்களை பத்ரிநாத்திடம் சரணடைந்து கடைசியில் கேதார்நாத்தில் ஆசீர்வாதம் பெற வேண்டும். இந்த ரகசியத்தை கிருஷ்ணர் இறப்பதற்கு முன் யாத்திரைக்குச் சென்ற பாண்டவர்களுக்கு மோட்சத்தை அடையக் கூறினார்.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்

English summary

Secrets Which Lord Shiva Revealed To Karthikeya

Read to know that Lord Shiva revealed to Karthikeya, the secret to attaining Moksh in Kaliyuga.
Story first published: Thursday, October 3, 2019, 17:05 [IST]
Desktop Bottom Promotion