Latest Updates
-
இன்றைய ராசிபலன் 12 ஆகஸ்ட் 2026: இன்று இந்த 4 ராசிக்காரங்களுக்கு அதிர்ஷ்டக்கதவு திறக்கப்போகுதாம் -
Solar Eclipse 2026: ஆண்டின் கடைசி சூரிய கிரகணம்: 12 ராசிக்கும் எப்படி இருக்கும் தெரியுமா? -
சுக்கிரன் சொந்த ராசிக்குள் நுழைவதால் வெற்றிகளையும், செல்வத்தையும் குவிக்கப்போகும் 3 ராசிகள் யார் தெரியுமா? -
Aadi Amavasai 2026: ஆடி அமாவாசை ஸ்பெஷல் பரங்கிக்காய் பாயாசம் ரெசிபி - செஞ்சு பாருங்க - செமையா இருக்கும் -
எப்பவும் ஒரே மாதிரி பாஸ்தா செய்யாம, இப்படி முட்டை பொடிமாஸ் பெப்பர் பாஸ்தா செய்யுங்க.. அள்ளும்.. -
Aadi Amavasai 2026: ஆடி அமாவாசை நாளில் மறந்தும் இந்த 7 விஷயங்களை செஞ்சுடாதீங்க.. -
இந்த 4 ராசி ஆண்கள் ரொம்ப கவர்ச்சியானவர்களாக இருப்பார்களாம் - உங்க ராசி இதுல இருக்கா? -
1 வருடம் கழித்து சிம்ம ராசிக்கு செல்லும் புதன்: ஆகஸ்ட் இறுதியில் இந்த 4 ராசிக்கு செல்வம் குவியப்போகுது! -
Aadi Amavasai 2026: தர்ப்பணம் என்றால் என்ன? ஆடி அமாவாசை அன்று ஏன் அவசியம் தர்ப்பணம் கொடுக்க வேண்டும் -
மூட்டு வலி நீங்க, இரத்தம் ஊற உதவும் முருங்கைக்கீரை கொள்ளு சூப் - எப்படி செய்யணும் தெரியுமா?
30 ஆண்டுகளுக்கு பின் சனி-சுக்கிர சேர்க்கை: பிப்ரவரி 15 வரை இந்த 3 ராசிக்கு அதிர்ஷ்டம் தான்!
30 ஆண்டுகளுக்கு பின் சனி கும்ப ராசிக்கு சென்றுள்ளதால், இந்த கும்ப ராசியில் நிகழும் சனி சுக்கிர சேர்க்கையும் 30 ஆண்டுகளுக்கு பின் நிகழ்கிறது.
ஜோதிட சாஸ்திரத்தின் படி, அழகு, ஆடம்பரம், காதல் ஆகியவற்றின் காரணியாக கருதப்படுபவர் சுக்கிரன். இந்த சுக்கிரன் ரிஷபம் மற்றும் துலாம் ராசிகளின் அதிபதியாவார். இந்த சுக்கிரன் மீன ராசியில் உச்சத்திலும், கன்னி ராசியில் வலுவிழந்தும் இருப்பார். இத்தகைய சுக்கிரன் சனி ஆளும் கும்ப ராசிக்கு ஜனவரி 22 ஆம் தேதி சென்றார். அதற்கு முன்னரே ஜனவரி 17 ஆம் தேதி சனி கும்ப ராசிக்கு சென்றார். இதனால் ஜனவரி 22 முதல் கும்ப ராசியில் சனியும், சுக்கிரனும் ஒன்றாக பயணித்து வருகிறார்கள்.

30 ஆண்டுகளுக்கு பின் சனி கும்ப ராசிக்கு சென்றுள்ளதால், இந்த கும்ப ராசியில் நிகழும் சனி சுக்கிர சேர்க்கையும் 30 ஆண்டுகளுக்கு பின் நிகழ்கிறது. எனவே இந்த சேர்க்கை மிகவும் சிறப்பு வாய்ந்தது. மேலும் இந்த சேர்க்கையானது 2023 பிப்ரவரி 15 ஆம் தேதி வரை இருப்பதால், சில ராசிக்காரர்கள் அபரிமிதமான செல்வத்தை பெறுவார்கள். இப்போது கும்பத்தில் நிகழ்ந்துள்ள சனி சுக்கிர சேர்க்கையால் அதிர்ஷ்டம் பெறும் ராசிக்காரர்கள் குறித்து காண்போம்.

மேஷம்
மேஷ ராசியின் 11 ஆவது வீட்டில் சனி சுக்கிர சேர்க்கை நிகழ்ந்துள்ளது. இது வருமான வீடாகும். இதனால் இச்சேர்க்கை காலத்தில் இந்த ராசிக்காரர்களுக்கு இழந்த பணம் திரும்ப கிடைக்கும். முதலீடு செய்த பணத்தால் நல்ல லாபம் கிடைக்கும். பணிபுரிபவர்களுக்கு பதவி உயர்வு கிடைக்க வாய்ப்புள்ளது. வியாபாரிகளுக்கு நல்ல லாபம் கிடைக்கும். பங்கு சந்தை, பந்தயத்தில் முதலீடு செய்ய நினைத்தால், அதற்கு இக்காலம் நல்ல காலம். மொத்தத்தில் இந்த சேர்க்கையானது வாழ்வில் நல்ல செழிப்பைத் தரும்.

ரிஷபம்
ரிஷப ராசியின் 10 ஆவது வீட்டில் சனி சுக்கிர சேர்க்கை நிகழ்ந்துள்ளது. இதனால் இந்த ராசிக்காரர்கள் இச்சேர்க்கை காலத்தில் கடின உழைப்பின் பலனைப் பெறுவார்கள். சனியின் அருளால் வேலையில் முன்னேற்றம் ஏற்படும். வேலை தேடுபவர்களுக்கு புதிய வேலை வாய்ப்புகள் கிடைக்கும். உங்களின் வசதிகள் அதிகரிக்கும். அதிர்ஷ்டத்தின் முழு ஆதரவும் கிடைக்கும். அதிக முதலீடு செய்ய வாய்ப்புகள் கிடைக்கும். முக்கியமாக வியாபாரத்தை விரிவாக்க வாய்ப்புகள் கிடைக்கும்.

மகரம்
மகர ராசியின் 2 ஆவது வீட்டில் சனி சுக்கிர சேர்க்கை நிகழ்ந்துள்ளது. இதனால் இந்த ராசிக்காரர்கள் இச்சேர்க்கை காலத்தில் நல்ல வெற்றியையும், செழிப்பையும் பெறுவார்கள். அதுவும் பல வழிகளில் இருந்து பணம் பெற வாய்ப்புள்ளது. இக்காலத்தில் பரம்பரை சொத்துக்கள் உங்கள் கைக்கு கிடைக்க வாய்ப்புள்ளது. இந்த காலகட்டத்தில் புதிய வணிக வாய்ப்புகள் கிடைக்கும் மற்றும் நிதி நிலையில் முன்னேற்றம் ஏற்படும். சுக்கிரனின் அருளால் உங்கள் வங்கி இருப்பில் பணம் அதிகம் சேரும். முக்கியமாக சிக்கிய பணம் இக்காலத்தில் கைக்கு கிடைக்க வாய்ப்புள்ளது.
(பொறுப்புத் துறப்பு: மேலே கொடுக்கப்பட்டுள்ள தகவல் இணையத்தில் கிடைக்கும் அனுமானங்கள் மற்றும் தகவல்களின் அடிப்படையில் கொடுக்கப்பட்டுள்ளன மற்றும் நம்பகத்தன்மைக்கு உத்தரவாதம் இல்லை. தமிழ் போல்ட்ஸ்கை கட்டுரை தொடர்பான தகவலை உறுதிப்படுத்தவில்லை. மேலும் எங்கள் ஒரே நோக்கம் தகவலை வழங்குவது மட்டுமே. அதை வெறும் தகவலாக மட்டும் எடுத்துக் கொள்ள வேண்டும். எந்தவொரு தகவலையும் அனுமானத்தையும் பயிற்சி செய்வதற்கு அல்லது செயல்படுத்துவதற்கு முன், தயவுசெய்து சம்பந்தப்பட்ட நிபுணரை அணுகவும்.)



Click it and Unblock the Notifications