Latest Updates
-
World Heart Day 2026: 1 சிகரெட் அடிச்சா 20 நிமிஷத்துல இதயத்துல என்ன நடக்கும்? - விளக்கும் இதய நிபுணர்! -
4 பிரெட் இருந்தா இந்த மாதிரி சுவையான புலாவ் செஞ்சு பாருங்க - வீட்ல எல்லோரும் விரும்பி சாப்பிடுவாங்க -
சூரியனின் நட்சத்திர பெயர்ச்சி: அக்டோபர் 11 வரை இந்த 5 ராசிக்கு பணமும், வெற்றியும் குவியும்! -
லாயருக்கும், அட்வகேட்டுக்கும் உள்ள வித்தியாசம் என்ன தெரியுமா? அப்ப ரெண்டும் ஒன்னு இல்லையா? ஷாக் ஆகாதீங்க -
அவலும், முட்டையும் இருந்தா.. காலையில் இந்த டிபனை ட்ரை பண்ணி பாருங்க.. -
செப்டம்பர் 29, 2026: இன்று இந்த 3 ராசிக்காரங்களுக்கு தெண்ட செலவுகள் தேடிவரப்போகுதாம் -
புதன் துலாம் ராசியில் வக்ர பெயர்ச்சியை தொடங்கப்போவதால் இந்த 3 ராசிகளின் கனவுகள் பலிக்கப்போகுதாம் -
1 கப் சின்ன வெங்காயம் இருந்தா இந்த மாதிரி ஆந்திரா ஸ்டைலில் தொக்கு செஞ்சு பாருங்க - சூப்பர் சைடிஷா இருக்கும் -
அக்டோபர் மாத சூரிய பெயர்ச்சி: இந்த 6 ராசிக்காரங்க அடுத்த 1 மாதம் கவனமா இருக்கணும்! -
சைக்கோவாக நடந்து கொள்ளும் 4 ஆபத்தான ராசிகள் - உங்க ராசி இதுல இருக்கா?
சனியின் நட்சத்திரப் பெயர்ச்சியால் மார்ச் 15 முதல் இந்த 6 ராசிக்காரங்க நிறைய பிரச்சனைகளை சந்திக்க போறாங்க...
2023 மார்ச் 06 ஆம் தேதி சனி பகவான் கும்ப ராசியில் உதயமானார். இந்நிலையில் 2023 மார்ச் 15 ஆம் தேதி சனியின் நட்சத்திர பெயர்ச்சி நிகழவுள்ளது. அதாவது, சனி பகவான் சதய நட்சத்திரத்திற்குள் நுழைகிறார்.
Saturn Transit In Sathayam Nakshatra On 15 March 2023: ஜோதிட சாஸ்திரத்தின் படி, கிரகங்களின் இயக்கம் மனித வாழ்க்கையில் அதிக தாக்கத்தை ஏற்படுத்தும். அதுவும் நவகிரகங்களில் சனி பகவானின் தாக்கமானது அனைத்து ராசிகளிலுமே சற்று அதிகம் இருக்கும். சனி பகவான் 2 1/2 ஆண்டுகளுக்கு ஒருமுறை ராசியை மாற்றுவார். அந்த வகையில் 30 ஆண்டுகளுக்கு பின் சனி பகவான் 2023 ஆம் ஆண்டில் தனது அசல் முக்கோண ராசியான கும்ப ராசிக்குள் நுழைந்தார். கும்பத்தில் நுழைந்த சில நாட்களிலேயே சனி பகவான் கும்ப ராசியில் அஸ்தமனமானார்.

அதைத் தொடர்ந்து 2023 மார்ச் 06 ஆம் தேதி சனி பகவான் கும்ப ராசியில் உதயமானார். இந்நிலையில் 2023 மார்ச் 15 ஆம் தேதி சனியின் நட்சத்திர பெயர்ச்சி நிகழவுள்ளது. அதாவது, சனி பகவான் சதய நட்சத்திரத்திற்குள் நுழைகிறார். சனியின் இந்த நட்சத்திர மாற்றமானது அனைத்து ராசிகளிலுமே தாக்கத்தை ஏற்படுத்தும். அதில் சில ராசிக்காரர்கள் நற்பலனைப் பெற்றாலும், சில ராசிக்காரர்கள் பிரச்சனைகளை சந்திக்கலாம். இப்போது சதய நட்சத்திரத்திற்கு செல்லும் சனியால் எந்த ராசிக்காரர்கள் அதிக பிரச்சனைகளை சந்திக்கப் போகிறார்கள் என்பதைக் காண்போம்.

ரிஷபம்
ரிஷப ராசியின் 10 ஆவது வீட்டில் சனி உள்ளார். இது தொழில் வீடாகும். இதனால் இக்காலத்தில் ரிஷப ராசிக்காரர்களின் வேலையில் மாற்றம் ஏற்படலாம் அல்லது இடமாற்றத்திற்கும் வாய்ப்புள்ளது. இருப்பினும் தொழிலில் நல்ல வளர்ச்சிக்கான வாய்ப்புக்களும் கிடைக்கக்கூடும். பணிபுரிபவர்கள் சில போராட்டங்களை சந்திக்க நேரிடும். இதன் விளைவாக நீங்கள் உங்கள் வேலையில் இருந்து விலகவும் வாய்ப்புள்ளது.

கடகம்
சனியின் நட்சத்திர மாற்றத்தால் கடக ராசிக்காரர்கள் ஆரோக்கிய பிரச்சனைகளை சந்திக்க நேரிடும். தனியால் துறையில் வேலை செய்பவர்கள் நேர்மறையான முடிவுகளைப் பெற கடினமாக உழைக்க வேண்டும். மேலும் பணிபுரிபவர்கள் பல தடைகளையும், பிரச்சனைகளையும் சந்திக்க நேரிடும். இதன் விளைவாக சிலர் தங்களின் வேலையை ராஜினாமா செய்யவும் வாய்ப்புள்ளது. வியாபாரம் செய்பவர்கள், முதலீடு செய்யும் போது கூடுதல் எச்சரிக்கையாக இருக்க வேண்டும்.

கன்னி
சனியின் நட்சத்திர மாற்றத்தின் போது, கன்னி ராசியின் 6 ஆவது வீட்டில் சனி இருப்பதால், வேலை செய்பவர்கள் இக்காலத்தில் பணியிடத்தில் அதிக வேலை அழுத்தத்தை சந்திக்க நேரிடும். இதனால் மன உளைச்சலுக்கு ஆளாக நேரிடும். சிலருக்கு வேலை மாற்றம் அல்லது இடமாற்றத்திற்கும் வாய்ப்புள்ளது. வியாபாரம் செய்பவர்கள் வேலையாட்களால் சில பிரச்சனைகளை சந்திக்கலாம் மற்றும் சில நஷ்டங்களை சந்திக்கவும் வாய்ப்புள்ளது.

விருச்சிகம்
விருச்சிக ராசிக்காரர்களுக்கு ஏற்கனவே அர்த்தஷ்டம சனியால் பாதிக்கப்பட்டுள்ளதால், இந்த ராசிக்காரர்கள் தொழிலில் சில பிரச்சனைகளை சந்திப்பார்கள். வணிகர்கள் இக்காலத்தில் தங்கள் வணிகத்தை விரிவுபடுத்த எந்த ஒரு திட்டத்தையும் தொடங்கக்கூடாது. இல்லாவிட்டால் பெரிய நஷ்டத்தை சந்திக்க நேரிடும். மேலும் இக்காலத்தில் செய்யும் ஒவ்வொரு வேலையிலும் கூடுதல் கவனமாக இருக்க அறிவுறுத்தப்படுகிறது.

கும்பம்
கும்ப ராசிக்காரர்களுக்கு ஏழரை சனியின் இரண்டாவது கட்டம் நடப்பதால், இந்த ராசிக்காரர்கள் தங்களின் பணியிடத்தில் அதிக வேலை அழுத்தத்தை சந்திப்பார்கள் மற்றும் உடன் பணிபுரிபவர்களின் ஆதரவு கிடைக்காமல் அவதிப்பட நேரிடும். தொழிலதிபர்கள் முதலீடுகளை இக்காலத்தில் செய்யும் போது மிகவும் எச்சரிக்கையாக இருக்க வேண்டும். இல்லாவிட்டால் இழப்புக்களை சந்திக்க நேரிடும்.

மீனம்
மீன ராசிக்காரர்களுக்கு ஏழரை சனி தொடங்கியுள்ளது. இதனால் இந்த ராசிக்காரர்கள் தொழில் வாழ்க்கையில் சில தோல்விகளையும், ஏமாற்றங்களையும் சந்திக்க நேரிடும். பணிபுரிபவர்களுக்கு தேவையற்ற வேலை மாற்றம் ஏற்படலாம் மற்றும் சிலருக்கு பணியிடத்தில் வேலைப்பளு அதிகரிக்கலாம். புதிய தொழில் தொடங்க நினைத்தால், அதை இக்காலத்தில் தவிர்க்க அறிவுறுத்தப்படுகிறது. இல்லாவிட்டால் நஷ்டத்தை சந்திக்க நேரிடும்.
(பொறுப்புத் துறப்பு: மேலே கொடுக்கப்பட்டுள்ள தகவல் இணையத்தில் கிடைக்கும் அனுமானங்கள் மற்றும் தகவல்களின் அடிப்படையில் கொடுக்கப்பட்டுள்ளன மற்றும் நம்பகத்தன்மைக்கு உத்தரவாதம் இல்லை. தமிழ் போல்ட்ஸ்கை கட்டுரை தொடர்பான தகவலை உறுதிப்படுத்தவில்லை. மேலும் எங்கள் ஒரே நோக்கம் தகவலை வழங்குவது மட்டுமே. அதை வெறும் தகவலாக மட்டும் எடுத்துக் கொள்ள வேண்டும். எந்தவொரு தகவலையும் அனுமானத்தையும் பயிற்சி செய்வதற்கு அல்லது செயல்படுத்துவதற்கு முன், தயவுசெய்து சம்பந்தப்பட்ட நிபுணரை அணுகவும்.)



Click it and Unblock the Notifications
