Latest Updates
-
10 நிமிசத்தில் செய்யும் லெமன் அவல் உப்புமா ரெசிபி - செஞ்சு பாருங்க - சூப்பரா, ஆரோக்கியமா இருக்கும் -
லன்ச்பாக்ஸ்-க்கு இப்படி கேரட் ரைஸ் செஞ்சு குடுங்க - பிள்ளைங்க மிச்சம் வெக்காம சாப்பிடுவாங்க.. -
இந்த 2 ராசிக்காரர்களுக்கு துளியும் நன்றியுணர்வு இருக்காதாம் - இவங்களுக்கு ஹெல்ப் பண்றதே வேஸ்ட் -
Aadi Pooram 2026: ஆடிப்பூரம் நாளில் என்னென்ன செய்யணும் தெரியுமா? -
இந்தியா-பாகிஸ்தான் எல்லையை வெறும் 5 வாரத்தில் உருவாக்கியவர் யார் தெரியுமா? நம்ப முடியாத இந்திய வரலாறு -
கடகத்தில் உச்சமடையும் குரு பகவான்: இன்று முதல் இந்த 5 ராசிக்காரர்களின் பேங்க் பேலன்ஸ் உயரப்போகுது! -
சூரியன் சொந்த நட்சத்திரத்திற்குள் நுழைவதால் வாழ்க்கையில் உச்சத்தை தொடப்போகும் 3 ராசிகள் இவங்கதான் -
முருங்கைக்காய் பொரிச்ச குழம்பு - இப்படி செய்யுங்க.. தட்டு சோறு நொடியில் காலியாகும்.. -
சர்க்கரை நோயாளிகளுக்கான டாப் 5 காய்கறிகளை பட்டியலிட்ட டாக்டர்! என்னன்னு தெரிஞ்சுக்கோங்க.. -
நெல்லை ஸ்டைல் தலக சாம்பார் ரெசிபி - ஒரு தடவை செஞ்சு பாருங்க - ஒரு வாரம் வைச்சு சூப்பரா சாப்பிடலாம்
சனி உருவாக்கும் சச ராஜயோகம்: இந்த 3 ராசிக்காரர்களுக்கு இனி நிறைய லாபம் கிடைக்கும்..
30 ஆண்டுகளுக்கு பின் கும்ப ராசிக்கு வந்துள்ள சனி பகவான், இந்த ராசியில் சச மகாபுருஷ் ராஜயோகத்தை உருவாக்கவுள்ளார். சச ராஜயோகமானது ஒரு மங்களகரமான யோகம்.
ஜோதிடத்தில் ஒருவரது செயல்களுக்கு ஏற்ப பாரபட்சம் பாராமல் பலன்களை வழங்கக்கூடியவர் தான் சனி பகவான். இந்த சனி பகவான் 2023 ஆம் ஆண்டில் தனது சொந்த ராசியான கும்ப ராசிக்கு சென்றார். 30 ஆண்டுகளுக்கு பின் கும்ப ராசிக்கு வந்துள்ள சனி பகவான், இந்த ராசியில் சச மகாபுருஷ் ராஜயோகத்தை உருவாக்கவுள்ளார். சச ராஜயோகமானது ஒரு மங்களகரமான யோகம். இந்த யோகமானது ஒருவருக்கு தொழிலில் நல்ல வெற்றியுடன், நல்ல லாபத்தையும் பெற வைக்கும்.

சனி பகவான் உருவாக்கும் இந்த சச ராஜயோகத்தின் தாக்கம் அனைத்து ராசிகளிலும் காணப்பட்டாலும், சில ராசிக்காரர்கள் அபரிமிதமான லாபத்தைப் பெறப் போகிறார்கள். இப்போது சனி பகவான் உருவாக்கும் சச ராஜயோகத்தால் எந்த ராசிக்காரர்கள் நல்ல லாபத்தைக் காணப் போகிறார்கள் என்பதைக் காண்போம். உங்கள் ராசியும் அதில் உள்ளதா என்பதை தொடர்ந்து படித்து தெரிந்து கொள்ளுங்கள்.

கும்பம்
சனி உருவாக்கும் சச ராஜயோகம் கும்ப ராசிக்காரர்களுக்கு அற்புதமானதாக இருக்கும். முதல் வீட்டில் சனி இருப்பதால், இந்த யோகத்தால் உங்களின் மரியாதை அதிகரிக்கும். அரசியலில் இருப்பவர்கள் நல்ல பதவியைப் பெற வாய்ப்புள்ளது. திருமணமானவர்களுக்கு துணையுடனான உறவு இன்னும் வலுபெறும். பணிபுரிபவர்கள் மற்றும் வியாபாரிகள் தங்களில் தொழிலில் நல்ல முன்னேற்றத்திற்கான வாய்ப்புக்களைப் பெறுவார்கள். வணிகர்களுக்கு நல்ல லாபம் கிடைக்கும்.

மேஷம்
சனி பகவான் உருவாக்கும் சச ராஜயோகத்தால் மேஷ ராசிக்காரர்கள் நிதி ரீதியாக நல்ல பலனைப் பெறுவார்கள். பழைய முதலீடுகளில் இருந்து நல்ல பண பலன்கள் கிடைக்கும். மேலும் பணியிடத்தில் செல்வாக்கு அதிகரிக்கும். ஏற்றுமதி இறக்குமதி வியாபாரம் செய்பவர்கள் நல்ல லாபத்தைப் பெறுவார்கள். பங்குச் சந்தை மற்றும் லாட்டரிகளில் இருந்து நல்ல லாபம் கிடைக்கும் வாய்ப்புள்ளது. அரசு வேலைக்கு முயற்சிப்பவர்களுக்கு நல்ல வேலை கிடைக்கும் வாய்ப்புள்ளது.

தனுசு
தனுசு ராசிக்காரர்கள் 2023 சனிப் பெயர்ச்சிக்கு பின் ஏழரை சனியில் இருந்து விடுபடுகிறார்கள். அதோடு, சனி மூன்றாவது வீட்டிற்கு சென்றிருப்பதால், தைரியம் அதிகரிக்கும். சச ராஜயோகத்தால் வேலை செய்பவர்கள் மற்றும் வியாபாரிகளுக்கு நல்ல லாபம் கிடைக்கும் வாய்ப்புக்கள் உள்ளன. கலைத் துறையில் இருப்பவர்களுக்கு இக்காலம் மிகவும் அற்புதமானதாக இருக்கும்.
(பொறுப்புத் துறப்பு: மேலே கொடுக்கப்பட்டுள்ள தகவல் இணையத்தில் கிடைக்கும் அனுமானங்கள் மற்றும் தகவல்களின் அடிப்படையில் கொடுக்கப்பட்டுள்ளன மற்றும் நம்பகத்தன்மைக்கு உத்தரவாதம் இல்லை. தமிழ் போல்ட்ஸ்கை கட்டுரை தொடர்பான தகவலை உறுதிப்படுத்தவில்லை. மேலும் எங்கள் ஒரே நோக்கம் தகவலை வழங்குவது மட்டுமே. அதை வெறும் தகவலாக மட்டும் எடுத்துக் கொள்ள வேண்டும். எந்தவொரு தகவலையும் அனுமானத்தையும் பயிற்சி செய்வதற்கு அல்லது செயல்படுத்துவதற்கு முன், தயவுசெய்து சம்பந்தப்பட்ட நிபுணரை அணுகவும்.)



Click it and Unblock the Notifications