Latest Updates
-
5 லட்ச ரூபாய்க்கு விற்கப்படும் உலகின் காஸ்ட்லியான ஐஸ்கிரீம் - அப்படி இதுல என்னதான் ஸ்பெஷல் தெரியுமா? -
1 கப் பச்சரிசி இருந்தா.. ஈவ்னிங் டைம்-ல இந்த ஸ்நாக்ஸை செய்யுங்க.. பசங்க கேட்டு விரும்பி சாப்பிடுவாங்க.. -
World Heart Day 2026: 1 சிகரெட் அடிச்சா 20 நிமிஷத்துல இதயத்துல என்ன நடக்கும்? - விளக்கும் இதய நிபுணர்! -
4 பிரெட் இருந்தா இந்த மாதிரி சுவையான புலாவ் செஞ்சு பாருங்க - வீட்ல எல்லோரும் விரும்பி சாப்பிடுவாங்க -
சூரியனின் நட்சத்திர பெயர்ச்சி: அக்டோபர் 11 வரை இந்த 5 ராசிக்கு பணமும், வெற்றியும் குவியும்! -
லாயருக்கும், அட்வகேட்டுக்கும் உள்ள வித்தியாசம் என்ன தெரியுமா? அப்ப ரெண்டும் ஒன்னு இல்லையா? ஷாக் ஆகாதீங்க -
அவலும், முட்டையும் இருந்தா.. காலையில் இந்த டிபனை ட்ரை பண்ணி பாருங்க.. -
செப்டம்பர் 29, 2026: இன்று இந்த 3 ராசிக்காரங்களுக்கு தெண்ட செலவுகள் தேடிவரப்போகுதாம் -
புதன் துலாம் ராசியில் வக்ர பெயர்ச்சியை தொடங்கப்போவதால் இந்த 3 ராசிகளின் கனவுகள் பலிக்கப்போகுதாம் -
1 கப் சின்ன வெங்காயம் இருந்தா இந்த மாதிரி ஆந்திரா ஸ்டைலில் தொக்கு செஞ்சு பாருங்க - சூப்பர் சைடிஷா இருக்கும்
சனி-புதன் சேர்க்கையால் பிப்ரவரி 27 முதல் இந்த 3 ராசிக்காரங்க கொஞ்சம் ஜாக்கிரதையா இருக்கணும்...
சனி-புதன் சேர்க்கை காலத்தில் மிகவும் கவனமாக இருக்க வேண்டும். இப்போது சனி-புதன் சேர்க்கையால் எந்த ராசிக்காரர்கள் கவனமாக இருக்க வேண்டும் என்பதைக் காண்போம்.
Saturn Mercury Conjunction In Aquarius: ஜோதிடத்தில் கிரகங்களின் ராசி மாற்றத்தின் போது சில சமயங்களில் கிரக சேர்க்கைகள் நிகழும். ஒரு ராசியில் இரண்டு அல்லது அதற்கு மேற்பட்ட கிரகங்கள் இணைந்து பயணிக்கலாம். அப்படி கிரகங்கள் இணைந்து பயணிக்கும் போது, அதன் பலன் அனைத்து ராசிகளிலுமே காணப்படும். அந்த வகையில் 2023 பிப்ரவரி 27 ஆம் தேதி புதன் சனிஆளும் கும்ப ராசிக்கு செல்கிறார். இந்த கும்ப ராசியில் ஏற்கனவே சனி பயணித்து வருகிறார். இதனால் கும்பத்தில் சனி-புதன் சேர்க்கை பல ஆண்டுகளுக்கு பின் நிகழவுள்ளது.

சனி மற்றும் புதன் ஆகிய இரண்டும் நட்பு கிரகங்களாக இருந்தாலும், சனி-புதன் சேர்க்கையின் தாக்கமானது 12 ராசிகளிலுமே காணப்படும். இந்த சேர்க்கையால் சில ராசிக்காரர்கள் ஏராளமான நற்பலன்களைப் பெறலாம். இருப்பினும் 3 ராசிக்காரர்கள் இந்த சனி-புதன் சேர்க்கை காலத்தில் மிகவும் கவனமாக இருக்க வேண்டும். இப்போது சனி-புதன் சேர்க்கையால் எந்த ராசிக்காரர்கள் கவனமாக இருக்க வேண்டும் என்பதைக் காண்போம்.

கடகம்
கடக ராசியின் 8 ஆவது வீட்டில் சனி-புதன் சேர்க்கை நிகழ்கிறது. இதனால் இக்காலத்தில் உங்கள் சொந்தக்காரரே உங்களுக்கு எதிராக சதி செய்யக்கூடும். உங்கள் உடன் பிறந்தவர்களுடன் கருத்து வேறுபாடுகள் ஏற்படுவதற்கான வாய்ப்புள்ளது. ஆரோக்கிய விஷயத்தில் சற்று கவனமாக இருக்க அறிவுறுத்தப்படுகிறது. பங்குச் சந்தையில் முதலீடு செய்ய நினைத்தால், அதை தவிர்க்க வேண்டும். இல்லாவிட்டால் பண இழப்புகளை சந்திக்க நேரிடும். இக்காலகட்டத்தில் யாரையும் நம்பாதீர்கள்.

கன்னி
கன்னி ராசியின் 6 ஆவது வீட்டில் சனி-புதன் சேர்க்கை நிகழ்கிறது. இதனால் இக்காலத்தில் எதிரிகள் அதிகரிப்பார்கள். அலுவலகத்தில் வெற்றியைக் காண கடினமாக உழைக்க வேண்டியிருக்கும். உங்களின் முக்கியமான வேலைகளில் இடையூறு ஏற்படக்கூடும். இக்காலகட்டத்தில் உங்களின் செலவுகள் அதிகரிக்கும் வாய்ப்புள்ளதால், தேவையில்லாத செலவுகளைத் தவிர்த்திடுங்கள். இல்லாவிட்டால் பண பிரச்சனைகளை சந்திப்பீர்கள். உங்கள் தாயுடனான உறவு மோசமாக வாய்ப்புள்ளது. உங்களுக்கு ஏற்கனவே சரும பிரச்சனைகள் இருந்தால், இக்காலத்தில் சற்று கவனமாக இருக்க அறிவுறுத்தப்படுகிறது.

விருச்சிகம்
விருச்சிக ராசியின் 4 ஆவது வீட்டில் சனி-புதன் சேர்க்கை நிகழ்கிறது. இதனால் இக்காலத்தில் மன கஷ்டம் அதிகரிக்கும். உங்களின் வேலையில் பிரச்சனைகளை அதிகம் சந்திக்க நேரிடும். இருப்பினும், வேலையில் அதிக கவனத்தை செலுத்த வேண்டும். இக்காலகட்டத்தில் உங்களின் பேச்சால் குடும்பத்தில் பல கருத்து வேறுபாடுகள் ஏற்படக்கூடும். அரசு வேலையில் இருப்பவர்கள் கவனமாக இருக்க வேண்டும். மாணவர்களுக்கு இந்த காலம் சற்று கடினமாக இருக்கும்.
(பொறுப்புத் துறப்பு: மேலே கொடுக்கப்பட்டுள்ள தகவல் இணையத்தில் கிடைக்கும் அனுமானங்கள் மற்றும் தகவல்களின் அடிப்படையில் கொடுக்கப்பட்டுள்ளன மற்றும் நம்பகத்தன்மைக்கு உத்தரவாதம் இல்லை. தமிழ் போல்ட்ஸ்கை கட்டுரை தொடர்பான தகவலை உறுதிப்படுத்தவில்லை. மேலும் எங்கள் ஒரே நோக்கம் தகவலை வழங்குவது மட்டுமே. அதை வெறும் தகவலாக மட்டும் எடுத்துக் கொள்ள வேண்டும். எந்தவொரு தகவலையும் அனுமானத்தையும் பயிற்சி செய்வதற்கு அல்லது செயல்படுத்துவதற்கு முன், தயவுசெய்து சம்பந்தப்பட்ட நிபுணரை அணுகவும்.)



Click it and Unblock the Notifications
