Latest Updates
-
July 2026: ஜூலை மாதத்தின் முக்கியமான நாட்கள் மற்றும் விரத தினங்கள் என்னென்ன தெரியுமா? -
2 பிரட்டும், அரை கப் கடலை மாவும் இருந்தா டக்குனு இந்த டிபனை பண்ணுங்க - டேஸ்ட்டா, ஆரோக்கியமா இருக்கும் -
சனிபகவான் வக்ர பெயர்ச்சியை தொடங்கப் போவதால் பணத்தையும், புகழையும் குவிக்கப்போகும் 3 ராசிகள் -
ட்ராபிக் சிக்னலில் ஏன் உலகம் முழுக்க சிவப்பு, மஞ்சள், பச்சை நிறம் மட்டுமே பயன்படுத்தப்படுகிறது தெரியுமா? -
முட்டைக்கோஸ் இருந்தா இந்த மாதிரி ஆந்திரா ஸ்டைலில் பிரியாணி செஞ்சு பாருங்க - கமகமனு சூப்பரா இருக்கும் -
July 2026 Horoscope: இந்த 4 ராசிக்காரங்க ஜூலை மாதத்தில் கொடிகட்டி பறக்கப்போறாங்களாம் - உங்க ராசி இதுல இருக்கா? -
1 கப் சேமியா இருந்தா.. காலையில் ஒருடைம் இந்த டிபனை செய்யுங்க.. ருசியானதும், சத்தானதும் கூட.. -
இன்றைய ராசிபலன் 24 ஜூன் 2026: இன்று இந்த 4 ராசிக்காரங்களுக்கு ரொம்ப துரதிர்ஷ்டமான நாளாக இருக்குமாம் -
ஜூலை 02-ல் நடக்கும் சனி நட்சத்திர பெயர்ச்சி: இந்த 4 ராசிக்கு பண வரவு அதிகரிக்கும்.. -
மழைக்காலத்தில் சரும நிறத்தை அதிகரிக்கணுமா? இந்த ஃபேஸ் பேக்கை போடுங்க...
சனி-செவ்வாய் உருவாக்கும் ஷடாஷ்டக யோகம்: இந்த 5 ராசிகளுக்கு அக்டோபர் 16 முதல் சூப்பரா இருக்கும்..
2022 அக்டோபர் 16 ஆம் தேதி செவ்வாய் மிதுன ராசிக்கு செல்கிறார். இந்த மிதுன ராசியின் அதிபதி புதன். இந்த புதன் செவ்வாயின் எதிரி கிரகமாவார். இப்படிப்பட்ட சூழ்நிலையில் சனி மற்றும் செவ்வாயின் நிலைகளால் ஷடாஷ்டக யோகம் உருவாகிறது.
ஜோதிடத்தில் நவகிரகங்களின் தளபதி செவ்வாய் ஆவார். இந்த செவ்வாய் ஒரு ராசியில் இருந்து மற்றொரு ராசிக்கு செல்ல சுமார் 45 நாட்கள் ஆகும். தற்போது செவ்வாய் ரிஷப ராசியில் பயணித்து வருகிறார். இந்நிலையில் 2022 அக்டோபர் 16 ஆம் தேதி செவ்வாய் மிதுன ராசிக்கு செல்கிறார். இந்த மிதுன ராசியின் அதிபதி புதன். இந்த புதன் செவ்வாயின் எதிரி கிரகமாவார். இப்படிப்பட்ட சூழ்நிலையில் சனி மற்றும் செவ்வாயின் நிலைகளால் ஷடாஷ்டக யோகம் உருவாகிறது.

ஷடாஷ்டக யோகம் மிகவும் மோசமான யோகமாக கருதப்படுகிறது. எனவே இந்த செவ்வாய் பெயர்ச்சிக்கு பின் நாட்டில் பல மாற்றங்கள் ஏற்படவுள்ளன. மேலும் இந்த யோகத்தின் தாக்கம் அனைத்து ராசிகளிலும் காணப்படும். குறிப்பாக யாருடைய ஜாதகத்தில் செவ்வாய் அசுப வீடுகளுக்கு அதிபதியாக உள்ளாரோ, அவர்கள் வாழ்வில் பல பிரச்சனைகளை சந்திப்பார்கள். ஆனால் சில ராசிக்காரர்களுக்கு இந்த செவ்வாய் பெயர்ச்சி நற்பலன்களைத் தரும். இப்போது செவ்வாய் மற்றும் சனியினால் உருவாகும் ஷடாஷ்டக யோகத்தினால் நற்பலன்களைப் பெறப் போகும் ராசிக்காரர்கள் யார்யார் என்பதைக் காண்போம்.

மேஷம்
மேஷ ராசிக்காரர்கள் செவ்வாய் பெயர்ச்சிக்குப் பின் தைரியமாகவும், பொறுமையாகவும் இருப்பார்கள். மேலும் இதுவரை முடிவு எடுப்பதில் சந்தித்த பிரச்சனைகள் நீங்கும். பணியிடத்தில் ஆற்றலுடன் செயல்படுவீர்கள் மற்றும் உயர் அதிகாரிகளின் பாராட்டைப் பெறுவீர்கள். ஆனால் இக்காலத்தில் உங்கள் கோபத்தைக் கட்டுப்படுத்த வேண்டும். இல்லாவிட்டால் வாக்குவாதத்தால் மன அழுத்தம் அதிகரிக்கும்.

சிம்மம்
சிம்ம ராசிக்காரர்கள் செவ்வாய் பெயர்ச்சியால் வருமானத்தில் நல்ல அதிகரிப்பைக் காண்பார்கள். நிதி நிலையில் நல்ல முன்னேற்றம் இருக்கும். நிறைவேறாத ஆசைகளை இக்காலத்தில் நிறைவேற்றுவீர்கள். செவ்வாயின் நிலையால் பணியிடம் உற்சாகமாக இருக்கும். திருமண வாழ்க்கை மகிழ்ச்சிகரமாக இருக்கும். குடும்ப வாழ்வில் அமைதி நிலவும்.

கன்னி
கன்னி ராசிக்ககாரர்கள் செவ்வாய் பெயர்ச்சியால் தொழிலில் சாதகமான பலன்களைப் பெறுவார்கள். நிதி நிலையில் நல்ல முன்னேற்றம் ஏற்படும். வாகனம், சொத்து வாங்குவதற்கான எண்ணம் எழும். தொழில் வாழ்க்கையில் நிலைமைகள் சாதகமாக இருக்கும். வியாபாரிகளுக்கு இக்காலம் லாபகரமாக இருக்கும்.

மகரம்
மகர ராசிக்காரர்களுக்கு இந்த செவ்வாய் பெயர்ச்சியால் உருவாகும் யோகத்தால் நல்ல பலன்கள் கிடைக்கும். உங்கள் எதிரிகளை இக்காலத்தில் வெற்றி பெறுவீர்கள். கல்வி, வியாபாரம் மற்றும் வேலையில் விரைவான முன்னேற்றத்தைப் பெறுவீர்கள். வணிகர்கள் இக்காலத்தில் மிகவும் முக்கியமான முடிவுகளை எடுக்க வேண்டியிருக்கும் மற்றும் இது எதிர்காலத்தில் மிகவும் பயனளிக்கும் வகையில் இருக்கும்.

மீனம்
மீன ராசிக்காரர்களுக்கு செவ்வாய் பெயர்ச்சியால் உருவான யோகத்தால் இக்காலம் மகிழ்ச்சிகரமாக இருக்கும். நிதி முன்னேற்றத்திற்கான வாய்ப்புக்கள் உள்ளன. அசையும் அல்லது அசைய சொத்துக்களால் நல்ல பணத்தை சம்பாதிப்பீர்கள். வியாபாரிகள் தங்கள் வியாபாரத்தை விரிவுபடுத்துவார்கள். இக்காலத்தில் குடும்ப உறுப்பினர்களின் ஆதரவு கிடைக்கும். மேலும் திருமணமானவர்களின் திருமண வாழ்க்கை மகிழ்ச்சிகரமாக இருக்கும்.
(பொறுப்புத் துறப்பு: மேலே கொடுக்கப்பட்டுள்ள தகவல் இணையத்தில் கிடைக்கும் அனுமானங்கள் மற்றும் தகவல்களின் அடிப்படையில் கொடுக்கப்பட்டுள்ளன மற்றும் நம்பகத்தன்மைக்கு உத்தரவாதம் இல்லை. தமிழ் போல்ட்ஸ்கை கட்டுரை தொடர்பான தகவலை உறுதிப்படுத்தவில்லை. மேலும் எங்கள் ஒரே நோக்கம் தகவலை வழங்குவது மட்டுமே. அதை வெறும் தகவலாக மட்டும் எடுத்துக் கொள்ள வேண்டும். எந்தவொரு தகவலையும் அனுமானத்தையும் பயிற்சி செய்வதற்கு அல்லது செயல்படுத்துவதற்கு முன், தயவுசெய்து சம்பந்தப்பட்ட நிபுணரை அணுகவும்.)



Click it and Unblock the Notifications