Latest Updates
-
அக்டோபரில் வக்ரமடையும் சுக்கிரன்: நவம்பர் வரை இந்த 3 ராசிக்கு பொற்காலமா இருக்கும்.. உங்க ராசி இதுல இருக்கா? -
October 2026 Horoscope: அக்டோபர் மாதத்தில் ராஜவாழ்க்கை வாழப்போகும் 4 ராசிகள் இவங்கதான் - உங்க ராசி என்ன? -
முட்டையை ஒரே மாதிரி செய்யாம.. ஒருடைம் இப்படி செஞ்சு சாப்பிடுங்க.. டேஸ்ட் தாறுமாறா இருக்கும்! -
உடுப்பி ஸ்டைல் கற்பூரவல்லி தம்பிலி ரெசிபி - ட்ரை பண்ணி பாருங்க - சளி, காய்ச்சல் டக்குனு காணாம போயிரும் -
October Matha Rasipalan 2026: அக்டோபரில் இந்த 3 ராசிக்காரங்க ஜாக்கிரதையா இருக்கணும்! உங்க ராசி இதுல இருக்கா? -
இந்த 4 ராசி ஆண்கள் அழகான பெண்களை விட அறிவான பெண்களைத்தான் விரும்புவார்களாம் - உங்க ராசி இதுல இருக்கா? -
2 உருளைக்கிழங்கும், வேர்க்கடலையும் இருந்தா.. ஈவ்னிங் டைம்-ல இந்த ஸ்நாக்ஸ் ட்ரை பண்ணி பாருங்க.. -
சூப்பர் எல் நினோவால் இந்தியாவில் நிகழப்போகும் 15800 உயிரிழப்புகள் - எந்தெந்த நாடுகள் ஆபத்தில் இருக்கு தெரியுமா -
சிகரெட்டை நிறுத்திய பிறகு நுரையீரல் சுத்தமடைய உண்மையில் எவ்வளவு காலம் ஆகும்? விளக்கும் நுரையீரல் நிபுணர்! -
1 முள்ளங்கியும், பாசிப்பருப்பும் இருந்தா இந்த மாதிரி செட்டிநாடு கூட்டு செஞ்சு பாருங்க - வேற லெவலில் இருக்கும்
சரஸ்வதி பூஜை 2023: சரஸ்வதி பூஜை கொண்டாடுவதற்கான காரணமும், வழிமுறைகளும்...
Saraswati Puja 2023: புரட்டாசி மாதத்தில் 9 நாட்கள் கொண்டாடப்படும் நவராத்திரி பண்டிகையானது, சார்தியா நவராத்திரி என்றும் அழைக்கப்படுகிறது. இது நாடு முழுவதும் பல்வேறு வழி முறைகளில் கொண்டாடப்படுகிறது.
இது பன்முகத்தன்மை மற்றும் அதே நேரத்தில் ஒற்றுமையின் மகிழ்ச்சியையும் பிரதிபலிக்கிறது. இந்தியாவின் கிழக்கு, மேற்கு மற்றும் வடக்குப் பகுதிகளில், நவராத்திரி பண்டிகை துர்க்கை அம்மனின் 9 அம்சங்களை வழிபடுவதன் மூலம் கொண்டாடப்படுகிறது.

மேலும் நவராத்திரியின் இறுதி நாள் கொண்டாட்டமான தசரா, தீமைக்கு எதிரான நல்லதொரு வெற்றியை குறிக்கிறது. அதாவது துர்கா தேவி அரக்கனை வதம் செய்து மக்களுக்கு நன்மை செய்ததை குறிக்கிறது.
தென்னிந்திய மாநிலங்கள் கேரளா, தமிழ்நாடு, நவராத்திரியின் கடைசி நாளான 9 வது நாளில் சரஸ்வதி தேவியை வழிபடுகின்றனர். தென்னிந்தியாவை பொறுத்தவரை, நவராத்திரியானது முப்பெரும் தேவியரை பூஜிக்கும் பண்டிகையாக கொண்டாடப்படுகிறது. நவராத்திரியின் முதல் 3 நாட்கள் துர்கை, அடுத்த 3 நாட்கள் லட்சுமி மற்றும் கடைசி 3 நாட்கள் சரஸ்வதி தேவியை வழிபடுவர்.
சரஸ்வதி தேவி அறிவு, இசை, கலை மற்றும் ஞானத்தின் தெய்வ ரூபமாக கருதப்படுகின்றனர். சரஸ்வதி தேவியானவள் மும்மூர்த்திகளின் ஒரு பகுதியை முப்பெரும் தேவிகளை உருவாக்குகிறார். குழந்தைகள் படிப்பில் சிறந்து விளங்கவும், புத்திசாலியாகவும், அறிவாற்றலுடனும் விளங்க தெய்வத்தின் ஆசிகளை நாடுகின்றனர்.
இந்து புராணங்களின்படி இந்த பிரபஞ்சத்தை உருவாக்கியவர் பிரம்மாவின் மனைவியான சரஸ்வதி என்று அறியப்படுகிறது. எனவே, நவராத்திரியின் கடைசி நாளில், அம்மன், மகா சரஸ்வதியாக வெளிப்படுவார் என்று நம்பப்படுகிறது. இந்த ஆண்டு, சரஸ்வதி பூஜை அக்டோபர் 23 ஆம் தேதி வருகிறது.

சரஸ்வதி தேவியை வழிபடும் முறைகள்:
கொலு
நவராத்திரி பண்டிகையின் இறுதி நாளான சரஸ்வதி பூஜையின் போது, மக்கள் சரஸ்வதி சிலை அல்லது படத்திற்கு பூஜை செய்கிறார்கள். நவராத்திரி பண்டிகையின் ஒரு பகுதியாக, வீடுகளில் ‘கொலு' வைக்கும் பாரம்பரியம் வழக்கத்தில் இருந்து வருகிறது. கடவுள், தெய்வங்கள், விலங்குகள், பறவைகள், ஆன்மீக குருகள் மற்றும் கலைப்படைப்புகளின் சிறு உருவங்களை 5, 7, 9 ஆகிய ஒற்றை இலக்க படிகளை அமைத்து காட்சிக்கு வைப்பர்.

வெள்ளை நிற பொருட்கள்
சரஸ்வதி தேவிக்கு வெண்ணிறம் மிகவும் உகந்தது. எனவே, வெள்ளை புடவை அணிந்து, வெண்ணிற அன்னப்பறவையை ‘வாகனமாக' கொண்டிருக்கிறார். அவளை வணங்குவதற்கான விருப்பமான வழி என்றால், பெரும்பாலும் வெள்ளை பொருட்களைப் பயன்படுத்துவதே ஆகும்.

வெள்ளை நிற பூக்கள்
ஒவ்வொரு நாளும், வெள்ளை பூக்களால் தொடுக்கப்பட்ட மாலை, வெள்ளை நிற மலர்கள், வெள்ளை நிற ரங்கோலி, வெள்ளை எள், அரிசி மற்றும் தேங்காயுடன் தயாரிக்கப்பட்ட ‘நைவேத்தியம்' வழங்கி சிறப்பு பூஜை நடத்தப்படுகிறது. பக்தர்கள் வெள்ளை நிறத்தில் உடை அணிந்து தேவிக்கு பூஜை செய்கிறார்கள். வெள்ளை நிற அல்லி சரஸ்வதி தேவிக்கு விருப்பமான மலர் என்று நம்பப்படுகிறது.

புத்தகம் மற்றும் எழுது பொருட்கள்
மூன்று நாள் சரஸ்வதி பூஜையின் போது மாணவர்கள் மற்றும் குழந்தைகள் சரஸ்வதி தேவிக்கு முன்பு புத்தகங்கள், எழுதுபொருட்களை வைத்து வழிபடுகின்றனர். நவராத்திரியின் ஒன்பதாம் நாளான கடைசி நாளில் சரஸ்வதி தேவியின் ஆசீர்வாதத்துடன் பூஜைக்கு வைத்த பொருட்களை எடுத்து உபயோகிக்கின்றனர்.



Click it and Unblock the Notifications
