Latest Updates
-
முகலாய ஸ்டைல் வெஜ் பிரியாணி ரெசிபி - ட்ரை பண்ணி பாருங்க - அசைவ பிரியாணியை விட சூப்பரா இருக்கும் -
1/4 கிலோ மட்டன் வாங்குனா.. இப்படி மசாலா அரைச்சு தண்ணி குழம்பு வையுங்க.. ஊத்தி ஊத்தி குடிப்பாங்க.. -
செப்டம்பர் 27, 2026: இன்று இந்த 3 ராசிக்காரங்களுக்கு ஆபத்துகள் துரத்தும் நாளாக இருக்குமாம் -
வார ராசிபலன் (27 September 2026- 26 October 2026)- இந்த வாரம் இந்த 5 ராசிக்காரர்களுக்கு அதிர்ஷ்டமா இருக்கும்! -
4 முட்டை இருந்தா.. இந்த பக்குவத்துல மசாலா செய்யுங்க.. சப்பாத்திக்கு செமயா இருக்கும்.. -
நீங்க இந்த தேதிகளில் பிறந்தவங்களா? அப்ப 40 வயசுக்கு அப்புறம் உங்களுக்கு குபேர யோகம் தான்! -
கேரட்டை ஒருடைம் இப்படி செய்யுங்க.. பிடிக்காதவங்க கூட கேட்டு வாங்கி சாப்பிடுவாங்க.. -
தொப்பை குறையணுமா? அப்ப ஊட்டச்சத்து நிபுணர் சொல்ற இந்த பானத்தை மதிய உணவுக்கு முன் குடிங்க.. -
சனி நட்சத்திர பெயர்ச்சி: அக்டோபரில் மகரம் உள்ளிட்ட 3 ராசிக்கு கடின உழைப்புக்கான பலன் கிடைக்கப்போகுது! -
ரவா பன் தோசையும், தக்காளி சட்னியும் - எப்படி செய்றதுன்னு பாத்து ட்ரை பண்ணுங்க...
30 ஆண்டுகளுக்கு பின் சனி உருவாக்கும் சச ராஜயோகத்தால் இந்த 4 ராசிக்கு தொழிலில் ஜாக்பாட் அடிக்கப்போகுது..
2023 மார்ச் 09 ஆம் தேதி சனி உதயமாவார். கும்பத்தில் சனி உதயமாகும் போது, சச ராஜ யோகம் உருவாகும். ஜோதிடத்தில் இந்த யோகம் மிகவும் மங்களகரமான யோகமாக கருதப்படுகிறது.
2023 ஆம் ஆண்டில் நுழைய இன்னும் சில நாட்களே உள்ளன. இந்த புதிய ஆண்டில் பல முக்கிய கிரகங்கள் ராசியை மாற்றவுள்ளன. இதனால் பல சுப மற்றும் அசுப யோகங்களும் உருவாகும். குறிப்பாக மிகவும் மெதுவாக நகரும் கிரகமான சனி ஜனவரி மாதத்தில் ராசியை மாற்றவுள்ளது. இதன் தாக்கம் அனைத்து ராசிகளிலும் காணப்படும். அதுவும் 2023 ஆம் ஆண்டின் ஜனவரி 17 ஆம் தேதி சனி பகவான் மகரத்தில் இருந்து கும்ப ராசிக்கு செல்லவுள்ளார். 30 ஆண்டுகளுக்கு பின் கும்ப ராசிக்கு செல்கிறார்.

கும்ப ராசிக்கு சனி சென்ற பின்னர், அந்த ராசியில் சனி அஸ்தமனமாவார். பின் மார்ச் 09 ஆம் தேதி சனி உதயமாவார். கும்பத்தில் சனி உதயமாகும் போது, சச ராஜ யோகம் உருவாகும். ஜோதிடத்தில் இந்த யோகம் மிகவும் மங்களகரமான யோகமாக கருதப்படுகிறது. இந்த யோகத்தால் அனைத்து ராசிக்கார்களும் சிறப்பான பலனைப் பெறுவார்கள். இந்த ராஜ யோகமானது தொழிலில் நல்ல முன்னேற்றம், வியாபாரத்தில் நல்ல வெற்றி, செல்வ வளம் ஆகியவற்றைத் தரும். இப்போது சனி உருவாக்கும் சச ராஜ யோகத்தால் எந்த ராசிக்காரர்களுக்கு தொழிலில் ஜாக்பாட் அடிக்கப் போகிறது என்பதைக் காண்போம்.

மேஷம்
மேஷ ராசியின் 11 ஆவது வீட்டில் சச ராஜ யோகம் உருவாகவுள்ளது. இந்த 11 ஆவது வீடு வருமானம் மற்றும் லாபத்தின் வீடாகும். எனவே மேஷ ராசிக்காரர்க்ள் தங்களின் வருமானத்தில் மிகப்பெரிய உயர்வைப் பெறப் போகிறார்கள். பணிபுரிபவர்களுக்கு இந்த யோகத்தால் சம்பள உயர்வு கிடைக்கும் வாய்ப்புள்ளது. மேலும் பிற மூலங்களில் இருந்தும் நல்ல பணத்தை சம்பாதிக்க முடியும். பதவி உயர்வு கிடைக்கவும் வாய்ப்புள்ளது.

மிதுனம்
மிதுன ராசியின் 9 ஆவது வீட்டில் சச ராஜயோகம் உருவாகவுள்ளது. இந்த 9 ஆவது வீடு அதிர்ஷ்ட வீடாகும். எனவே மிதுன ராசிக்காரர்கள் இந்த யோகத்தால் அதிர்ஷ்டத்தின் முழு ஆதரவைப் பெறுவார்கள். இதுவரை நிலுவையில் இருந்த பணிகள் இக்காலத்தில் வெற்றிகரமாக முடிக்கப்படும். பணிபுரிபவர்களுக்கு பதவி உயர்வு, சம்பள உயர்வு கிடைக்கும் வாய்ப்புள்ளது. முதலீடு செய்தால் நல்ல லாபம் கிடைக்கும். காதல் வாழ்க்கை மகிழ்ச்சிகரமாகவும், இனிமையாகவும் இருக்கும்.

சிம்மம்
சிம்ம ராசியின் 7 ஆவது வீட்டில் சச ராஜயோகம் உருவாகவுள்ளது. இந்த வீடு திருமண வாழ்க்கை மற்றும் கூட்டாண்மையின் வீடாகும். எனவே இக்காலத்தில் யாருடனாவது சேர்த்து கூட்டு தொழில் செய்து வந்தால், அவர்களுக்கு நல்ல லாபம் கிடைக்கும். உங்களின் செயல்களில் நல்ல வெற்றி கிடைக்கும். உங்களின் முடிவுகளில் உங்கள் வாழ்க்கைத் துணை மற்றும் குடும்ப உறுப்பினர்கள் ஆதரவளிப்பார்கள். புதிய கூட்டு தொழில் செய்ய நினைத்தால், அதற்கு இக்காலம் சிறந்ததாக இருக்கும். வியாபாரிகளுக்கு இக்காலம் லாபகரமாக இருக்கும்.

தனுசு
தனுசு ராசியின் 3 ஆவது வீட்டில் சச ராஜயோகம் உருவாகவுள்ளது. ஜோதிடத்தின் படி, இந்த வீடு தைரியம் மற்றும் துணிச்சலின் வீடாகும். ஆகவே இக்காலத்தில் தனுசு ராசிக்காரர்களின் தைரியமும் துணிச்சலும் அதிகரிக்கும். புதிய சவால்களை எதிர்கொண்டு, அதில் வெற்றி பெறுவீர்கள். வேலை செய்பவர்களுக்கு 2023 ஆம் ஆண்டு சிறப்பான ஆண்டாக இருக்கும். வேலை தேடுபவர்களுக்கு புதிய வேலை வாய்ப்புக்கள் கிடைக்கும். நிலம், சொத்து வாங்குவது, விற்பது போன்றவற்றில் நல்ல லாபம் கிடைக்கும். குடும்பத்தினரின் ஆதரவு இக்காலத்தில் முழுமையாக கிடைக்கும்.
(பொறுப்புத் துறப்பு: மேலே கொடுக்கப்பட்டுள்ள தகவல் இணையத்தில் கிடைக்கும் அனுமானங்கள் மற்றும் தகவல்களின் அடிப்படையில் கொடுக்கப்பட்டுள்ளன மற்றும் நம்பகத்தன்மைக்கு உத்தரவாதம் இல்லை. தமிழ் போல்ட்ஸ்கை கட்டுரை தொடர்பான தகவலை உறுதிப்படுத்தவில்லை. மேலும் எங்கள் ஒரே நோக்கம் தகவலை வழங்குவது மட்டுமே. அதை வெறும் தகவலாக மட்டும் எடுத்துக் கொள்ள வேண்டும். எந்தவொரு தகவலையும் அனுமானத்தையும் பயிற்சி செய்வதற்கு அல்லது செயல்படுத்துவதற்கு முன், தயவுசெய்து சம்பந்தப்பட்ட நிபுணரை அணுகவும்.)



Click it and Unblock the Notifications
