Latest Updates
-
டேட்டிங் ஆப் மூலம் நடக்கும் பில் மோசடி! இந்த அறிகுறிகள் தெரிந்தால் உடனே உஷாராகுங்கள்! -
வெயிலால் முகத்தில் எண்ணெய் அதிகம் வழியுதா? அப்ப இந்த முல்தானி மெட்டி ஃபேஸ் பேக்கை போடுங்க.. -
மே மாத கிரக பெயர்ச்சிகளால் இந்த 4 ராசிக்காரர்களுக்கு கூரைய பிச்சு பண மழை கொட்டப்போகுது... -
வெந்தயக் கீரை பருப்பு கூட்டு - எப்படி செய்றது-ன்னு பாத்து ட்ரை பண்ணிப் பாருங்க.. -
கோடை வெயிலில் வீடு சூடாக இருக்கா? இந்த செடிகளை வளர்த்தால் குளிர்ச்சியும் பணமும் தேடி வரும்! -
100% மருந்து மாத்திரையின்றி கொலஸ்ட்ராலை குறைக்கணுமா? அப்ப இந்த டாக்டர் சொல்ற 'டயட் சார்ட்' ஃபாலோ பண்ணுங்க.. -
கோடை வெயிலில் வீட்டை குளிர்ச்சியாக வைக்கணுமா? இந்த வாஸ்து செடிகள் இருந்தா போதும், ஏசி தேவையில்லை! -
லட்சுமி நாராயண ராஜயோகம்: மே மாதத்தில் இந்த 3 ராசிக்காரர்களுக்கு பணமும், வெற்றியும் குவியப்போகுது! -
தக்காளியும், கொத்தமல்லியும் இருந்தா.. ஒருடைம் இந்த சைடு டிஷ் செய்யுங்க.. இட்லி, தோசைக்கு அள்ளும்.. -
இன்றைய ராசிபலன் 27 ஏப்ரல் 2026: இன்று இந்த 4 ராசிக்காரங்களுக்கு மோசமான நாள் காத்திருக்காம்
2023 சனிப்பெயர்ச்சியால் ஜனவரி 17 முதல் இந்த 3 ராசிக்கு அட்டகாசமாவும், இந்த 4 ராசிக்கு மோசமாவும் இருக்கும்..
30 ஆண்டுகளுக்கு பின் சனி தனது சொந்த ராசியான கும்ப ராசிக்கு வருகிறார். இதனால் இந்த 2023 சனி பெயர்ச்சியானது இன்னும் சிறப்பு வாய்ந்தது என்றே கூறலாம்.
Sani Peyarchi 2023: ஜோதிட சாஸ்திரத்தில் சனி நவகிரகங்களிலேயே மிகவும் மெதுவாக நகரக்கூடியவர். இவர் ஒரு ராசியில் 2 1/2 ஆண்டுகள் பயணிப்பார். மேலும் சனி மகரம் மற்றும் கும்ப ராசிகளின் அதிபதியாவார். இவர் பாரபட்சமின்றி பலன்களை வழங்கக்கூடியவர். அதாவது ஒருவரது செயல்களுக்கு ஏற்ப பலன்களை வழங்குவார். இப்படிப்பட்ட சனி இன்னும் சில நாட்களில் தனது ராசியை மாற்றவுள்ளார். அதுவும் 2023 ஜனவரி 17 ஆம் தேதி தனது சொந்த ராசியான கும்ப ராசிக்கு செல்லவிருக்கிறார்.

30 ஆண்டுகளுக்கு பின் சனி தனது சொந்த ராசியான கும்ப ராசிக்கு வருகிறார். இதனால் இந்த 2023 சனி பெயர்ச்சியானது இன்னும் சிறப்பு வாய்ந்தது என்றே கூறலாம். சனி ராசியை மாற்றும் போது, அதன் தாக்கம் அனைத்து ராசிகளிலும் நல்லதாகவோ, கெட்டதாகவோ இருக்கலாம். குறிப்பாக இந்த சனி பெயர்ச்சியால் சில ராசிக்காரர்கள் சனியின் பிடியில் இருந்து விடுபடுகிறார்கள் மற்றும் 3 ராசிக்காரர்களுக்கு ஏழரை சனி தொடங்குகிறது. இப்போது 2023 சனிப்பெயர்ச்சியால் எந்த ராசிக்காரர்கள் நல்ல பலன்களையும், எந்த ராசிக்காரர்கள் பிரச்சனைகளையும் சந்திக்கப் போகிறார்கள் என்பதைக் காண்போம்.

மேஷம்
மேஷ ராசியின் 10 மற்றும் 11 ஆவது வீட்டின் அதிபதி தான் சனி. 2023 சனிப்பெயர்ச்சியின் போது சனி 11 ஆவது வீட்டிற்கு செல்கிறார். இதனால் தொழில் வாழ்க்கை மிகவும் நன்றாக இருக்கும். பணிபுரிபவர்களுக்கு பதவி உயர்வு, சம்பள உயர்வு போன்றவை கிடைக்க வாய்ப்புள்ளது. வெளிநாட்டில் படிக்க அல்லது குடியேற நினைப்பவர்களின் ஆசை இக்காலத்தில் நிறைவேறும். சிக்கிய பணம் இந்த சனிப்பெயர்ச்சிக்கு பின் கைக்கு வந்து சேரும். வியாபாரம் செய்பவர்கள், இந்த சனிப்பெயர்ச்சியால் நல்ல பலன்களைப் பெறுவார்கள்.

தனுசு
தனுசு ராசியின் 2 மற்றும் 3 ஆவது வீட்டின் அதிபதி சனி. இந்த சனி 2023 சனிப்பெயர்ச்சியின் போது 3 ஆவது வீட்டிற்கு செல்கிறார். இதனால் தனுசு ராசிக்காரர்கள் சனியின் பிடியில் இருந்து விடுபடுகிறார்கள். மேலும் வேலை செய்பவர்களுக்கு பதவி உயர்வு கிடைக்கும் வாய்ப்புள்ளது. போட்டி தேர்வுக்கு தயாராகிக் கொண்டிருப்பவர்கள், சனியின் நிலையால் இனிமேல் நல்ல பலன்களைப் பெறுவார்கள். அதுவும் தேர்வில் நல்ல மதிப்பெண்களுடன் வெற்றி பெறுவார்கள். இது தவிர, பயணங்களால் நல்ல ஆதாயம் கிடைக்கும்.

துலாம்
2023 சனிப்பெயர்ச்சியின் போது துலாம் ராசியின் 5 ஆவது வீட்டிற்கு சனி பகவான் செல்கிறார். இதனால் வியாபாரம் செய்வர்கள் இந்த சனியின் நிலையால் நல்ல நிதி ஆதாயத்தைப் பெறுவார்கள். மாணவர்களுக்கு இக்காலம் மிகவும் பொன்னான காலமாக இருக்கும். இதுவரை தொழிலில் பிரச்சனைகளை சந்தித்து வந்தவர்கள், இந்த சனிப் பெயர்ச்சிக்கு பின் நல்ல முன்னேற்றத்தைக் காண்பார்கள்.

2023 சனிப்பெயர்ச்சியால் மிகவும் கவனமாக இருக்க வேண்டிய ராசிக்காரர்கள்
30 ஆண்டுகளுக்கு பின் கும்ப ராசிக்கு பெயர்ச்சியாகும் சனி பகவானால் சில ராசிக்காரர்கள் நிறைய கெடு பலன்களைப் பெறக்கூடும். அதுவும் கடகம், கன்னி, மகரம், கும்பம் ஆகிய ராசிக்காரர்கள் அதிக பிரச்சனைகளை சந்திக்க நேரிடும். குறிப்பாக வேலை செய்பவர்கள் மற்றும் வியாபாரம் செய்பவர்கள் பிரச்சனைகளை சந்திக்க நேரிடும். மேலும் ஆரோக்கியம் தொடர்பான பிரச்சனைகளை சந்தித்து, நிறைய மருத்துவ செலவுகளை செய்ய வேண்டியிருக்கும்.
(பொறுப்புத் துறப்பு: மேலே கொடுக்கப்பட்டுள்ள தகவல் இணையத்தில் கிடைக்கும் அனுமானங்கள் மற்றும் தகவல்களின் அடிப்படையில் கொடுக்கப்பட்டுள்ளன மற்றும் நம்பகத்தன்மைக்கு உத்தரவாதம் இல்லை. தமிழ் போல்ட்ஸ்கை கட்டுரை தொடர்பான தகவலை உறுதிப்படுத்தவில்லை. மேலும் எங்கள் ஒரே நோக்கம் தகவலை வழங்குவது மட்டுமே. அதை வெறும் தகவலாக மட்டும் எடுத்துக் கொள்ள வேண்டும். எந்தவொரு தகவலையும் அனுமானத்தையும் பயிற்சி செய்வதற்கு அல்லது செயல்படுத்துவதற்கு முன், தயவுசெய்து சம்பந்தப்பட்ட நிபுணரை அணுகவும்.)



Click it and Unblock the Notifications