Latest Updates
-
செப்டம்பர் 27, 2026: இன்று இந்த 3 ராசிக்காரங்களுக்கு ஆபத்துகள் துரத்தும் நாளாக இருக்குமாம் -
வார ராசிபலன் (27 September 2026- 26 October 2026)- இந்த வாரம் இந்த 5 ராசிக்காரர்களுக்கு அதிர்ஷ்டமா இருக்கும்! -
4 முட்டை இருந்தா.. இந்த பக்குவத்துல மசாலா செய்யுங்க.. சப்பாத்திக்கு செமயா இருக்கும்.. -
நீங்க இந்த தேதிகளில் பிறந்தவங்களா? அப்ப 40 வயசுக்கு அப்புறம் உங்களுக்கு குபேர யோகம் தான்! -
கேரட்டை ஒருடைம் இப்படி செய்யுங்க.. பிடிக்காதவங்க கூட கேட்டு வாங்கி சாப்பிடுவாங்க.. -
தொப்பை குறையணுமா? அப்ப ஊட்டச்சத்து நிபுணர் சொல்ற இந்த பானத்தை மதிய உணவுக்கு முன் குடிங்க.. -
சனி நட்சத்திர பெயர்ச்சி: அக்டோபரில் மகரம் உள்ளிட்ட 3 ராசிக்கு கடின உழைப்புக்கான பலன் கிடைக்கப்போகுது! -
ரவா பன் தோசையும், தக்காளி சட்னியும் - எப்படி செய்றதுன்னு பாத்து ட்ரை பண்ணுங்க... -
செப்டம்பர் 26, 2026: இன்று இந்த 4 ராசிக்காரங்களுக்கு அதிர்ஷ்டம் கதவைத் தட்டும் நாளாக இருக்குமாம் -
அக்டோபரில் வக்ரமடையும் சுக்கிரன்: நவம்பர் வரை இந்த 3 ராசிக்கு பொற்காலமா இருக்கும்.. உங்க ராசி இதுல இருக்கா?
நடிகை சமந்தாவின் அந்த 3 டாட்டூக்களின் ரகசியம் தெரியுமா?
நீங்கள் நடிகை சமந்தாவின் தீவிர ரசிகரா? உங்களுக்கு இந்த தென்னிந்திய அழகியைப் பற்றி அனைத்தும் தெரியுமா? அப்படியானால் அவர் உடலில் குத்தியுள்ள 3 ரகசியமான டாட்டூக்களின் உண்மையான அர்த்தம் தெரியுமா?
தென்னிந்தியாவில் தமிழ், தெலுங்கு நடிகைகளை எடுத்துக் கொண்டால், டாப் 10 நடிகைகளின் பட்டியலில் ஒருவராக நடிகை சமந்தா அக்கினேனி நிச்சயம் இருப்பார். இவரது மிகச்சிறந்த நடிகை மட்டுமின்றி, பல திறமைகளைத் தன்னுள் கொண்டவரும் கூட எனலாம்.

நடிகை சமந்தா அக்கினேனி ஆரோக்கியத்தின் மீதும் அழகின் மீது அதிக அக்கறை எடுத்துக் கொள்பவர் என்பதை இவரது இன்ஸ்டாகிராம் பக்கத்தை வைத்தே கூறலாம். அந்த அளவில் அவர் இன்ஸ்டாகிராமில் மிகவும் ஆக்டிவ்வாக உள்ளார். இவரது இன்ஸ்டா பக்கத்தைப் பார்த்தால் தினமும் வித்தியாசமான யோகா நிலைகளை செய்து எடுத்த போட்டோக்களைக் காணலாம். தற்போது இவரது இன்ஸ்டா பக்கத்தை சுமார் 10 மில்லியனுக்கும் அதிகமானோர் பின்பற்றுகின்றனர்.
நீங்கள் நடிகை சமந்தாவின் தீவிர ரசிகரா? உங்களுக்கு இந்த தென்னிந்திய அழகியைப் பற்றி அனைத்து விஷயங்களும் தெரியுமா? அப்படியானால் அவரது உடலில் குத்தியுள்ள 3 ரகசியமான டாட்டூக்களின் உண்மையான அர்த்தம் உங்களுக்கு தெரியுமா? இல்லையென்றால் இக்கட்டுரையைத் தொடர்ந்து படியுங்கள்.

முதுகு டாட்டூ
நடிகை சமந்தா தனது முதுகில் ஒரு அழகான பச்சை குத்தியுள்ளார். அது அவரது பின் கழுத்துக்கு கீழே இரண்டு தோள்களுக்கு நடுவே உள்ளது. அது என்ன டாட்டூ என்றால் 'ymc' என்னும் மூன்று எழுத்தாகும். அந்த மூன்று எழுத்திற்கான அர்த்தத்தை நீங்கள் தெரிந்து கொள்ள விரும்புகிறீர்களா? இதோ அதற்கான விடை.
2010 ஆம் ஆண்டு திரைப்பட தயாரிப்பாளர் கௌதம் மேனனின் விமர்சன ரீதியாக பாராட்டப்பட்ட ஒரு தெலுங்கு காதல் திரைப்படமான 'Ye Maaya Chesave' என்னும் படத்தில் சமந்தா அறிமுகமானார். இந்த திரைப்படம் தான் சமந்தாவின் வாழ்க்கையையே மாற்றியதாம். இந்த படத்தில் சமந்தாவின் நிஜ வாழ்க்கை கணவரான நடிகர் நாக சைதன்யாவும் நடித்திருந்தார். ஆகவே தனது தலையெழுத்தை மாற்றி அமைத்த திரைப்படத்தை வாழ்நாள் முழுவதும் நினைவுகூறும் வகையில், அந்த திரைப்படத்தின் முதல் எழுத்துக்களை தனது முதுகில் டாட்டூவாக குத்தியுள்ளார்.

விலா எலும்பில் டாட்டூ
சமந்தா தனது உடலில் குத்தியுள்ள இரண்டாவது டாட்டூ என்றால் அது விலா எலும்பு பகுதியில் இருப்பது. அதுவும் இந்த டாட்டூவானது சமீபத்தில் சமந்தாவின் ரசிகர் அவரை புடவையில் போஸ் கொடுக்கும் படி எடுத்த போட்டோவில் தென்பட்டது. அது என்ன டாட்டூ என்று பார்த்தால், அவரது கணவர் நாக சைதன்யாவின் புனைப்பெயர் என்று கூறப்படும் 'Chay' ஆகும். நிச்சயம் இது நடிகை சமந்தாவின் ஒரு வித்தியாசமான மற்றும் ரொமான்டிக்கான டாட்டூ என்றே கூற வேண்டும்.

மணிக்கட்டு டாட்டூ
மூன்றாவது டாட்டூ சமந்தாவின் மணிக்கட்டு பகுதியில், இரட்டை அம்புகளைக் கொண்ட வைக்கிங் சின்னம் பச்சையாக குத்தப்பட்டுள்ளது. மேலும் இதே மாதிரியான டாட்டூவை அவரது கணவர் நாக சைதன்யாவின் கையிலும் இருப்பதாக கூறப்படுகிறது.

டாட்டூ ராணி
இதுவரை தென்னிந்திய நடிகைகள் யாரும் இவ்வளவு டாட்டூக்களை தங்கள் உடலில் குத்தியது இல்லை. ஆகவே, நடிகை சமந்தாவை தென்னிந்திய சினிமாவின் டாட்டூ ராணி என்றே கூறலாம். அதோடு இவர் குத்தியுள்ள டாட்டூக்கள் ஒவ்வொன்றும் உண்மையிலேயே அனைவரையும் கவரும் வகையில் அற்புதமான அர்த்தத்துடன் உள்ளது. என்ன நண்பர்களே! சொல்வது சரிதானே?



Click it and Unblock the Notifications
