Latest Updates
-
கோதுமை ரவா தோசையும்.. புதினா சட்னியும்..- 10 நிமிடத்தில் எப்படி செய்றது-ன்னு பாத்து ட்ரை பண்ணுங்க.. -
இன்றைய ராசிபலன் 11 மார்ச் 2026: இன்று இந்த 4 ராசிக்காரங்களுக்கு மனஉளைச்சலான நாளாக இருக்குமாம்...! -
குரு-புதன் உருவாக்கும் சக்தி வாய்ந்த ராஜயோகம்: இந்த 3 ராசிக்கு டபுள் ஜாக்பாட் அடிக்கப்போகுது... -
தமிழ்நாட்டில் உள்ள சர்க்கரை நோயை குணப்படுத்தும் 1,300 ஆண்டுகள் பழமையான இந்த கோயில் பற்றி தெரியுமா? -
1 கப் ரவை இருந்தா.. ஈவ்னிங் கண்டிப்பா இந்த ஸ்நாக்ஸை ட்ரை பண்ணுங்க.. செமயா இருக்கும்.. -
1 வருடம் கழித்து மீனம் செல்லும் சூரியன்: மார்ச் 15 முதல் இந்த 4 ராசிக்காரங்க எச்சரிக்கையா இருக்கணும்.. -
கல்யாண வீட்டு தஞ்சை வத்தக்குழம்பு - எப்படி செய்றது-ன்னு பாத்து செஞ்சு பாருங்க.. டேஸ்ட் அள்ளும்.. -
World Kidney Day 2026: சிறுநீரகங்கள் ஆரோக்கியமா இருக்கணுமா? அப்ப டாக்டர் சொல்ற இந்த 5 உணவுகளை சாப்பிடுங்க.. -
ராகு-கேதுவால் உருவாகியுள்ள கால சர்ப்ப யோகம்: இந்த 3 ராசிக்கு மார்ச் 26 வரை வெற்றியும், பணமும் குவியப்போகுது... -
இந்த கஞ்சியை தினமும் காலையில் 1 கப் குடிங்க.. உடல் எடை ஜெட் வேகத்தில் குறையும்...
இங்கிலாந்தின் புதிய பிரதமரான இந்திய வம்சாவளியைச் சேர்ந்த ரிஷி சுனக் - இவரைப் பற்றிய சில சுவாரஸ்ய தகவல்கள்!
இங்கிலாந்தின் பிரதமராக இருந்த போரிஸ் ஜான்சன் ராஜினாமா செய்த பின்னர், லிஸ் ட்ரஸ் பிரதமரானார். ஆனால் பதவி ஏற்ற 45 நாட்களில் இவரும் திடீரென பதவியை ராஜினாமா செய்ததையடுத்து, ரிஷி சுனக் இங்கிலாந்தின் பிரதமராக பதவி ஏற்றார்.
தற்போது இங்கிலாந்து அரசியல் களம் பரபரப்பாக உள்ளது. ஏனெனில் இங்கிலாந்தின் பிரதமராக இருந்த போரிஸ் ஜான்சன் ராஜினாமா செய்த பின்னர், லிஸ் ட்ரஸ் பிரதமரானார். ஆனால் பதவி ஏற்ற 45 நாட்களில் இவரும் திடீரென பதவியை ராஜினாமா செய்ததையடுத்து, ரிஷி சுனக் இங்கிலாந்தின் பிரதமராக 2022 அக்டோபர் 24 திங்கட்கிழமை, தீபாவளி அன்று பதவி ஏற்றார். இங்கிலாந்தின் கன்சர்வேட்டிவ் கட்சியை சேர்ந்தவர் ரிஷி சுனக். இவர் குறுகிய காலத்தில் எம்.பி ஆக இருந்து இங்கிலாந்தின் மிகவும் உயர் பதவியை அடைந்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

1997 இல் பிரதமராக இருந்த டோனி பிளேயரை பிரதமர் பதவி ஏற்கும் போது 44 வயது. ஆனால் ரிஷி சுனக் அவரை விட குறைவான வயதில் இங்கிலாந்தின் பிரதமர் பதவியை ஏற்று, இங்கிலாந்தில் இளம் வயதில் பிரதமரானவர் என்ற பெயரையும் பெற்றுள்ளார். முக்கியமாக இவர் இந்திய வம்சாவளியைச் சேர்ந்தவர் மற்றும் இந்து மதத்தைச் சேர்ந்தவர். இப்போது இங்கிலாந்தின் புதிய பிரதமரான ரிஷி சுனக் பற்றி பலரும் அறியாத சில சுவாரஸ்யமான விஷயங்களைப் பற்றி காண்போம்.

1. இந்திய வம்சாவளியைச் சேர்ந்த முதல் இங்கிலாந்து பிரதமர்
ரிஷி சுனக் 1980 ஆம் ஆண்டு சவுத்தாம்டனில் உள்ள பஞ்சாபி-இந்திய வம்சாவளியைச் சேர்ந்த குடும்பத்தில் பிறந்தார். இவரது பெற்றோர் 1960-ல் இங்கிலாந்திற்கு குடிபெயர்ந்தனர். இவரது தந்தை யாஷ்வீர் சுனக் NHS மருத்துவர் மற்றும் இவரது தாயான உஷா சுனக் மருந்து கடை வைத்திருந்தார். இவர் இந்து மதத்தைப் பின்பற்றும் முதல் பிரதமராவார். இவருக்கு ஆங்கிலம் மட்டுமின்றி, பஞ்சாபி, இந்தி மொழிகளும் தெரியும்.

2. ஆக்ஸ்போர்டு மற்றும் ஸ்டான்போர்ட் பல்கலைக்கழகத்தில் பயின்றவர்
ரிஷி சுனக் உலகின் மிகவும் பிரபலமான பள்ளிகளில் ஒன்றான வின்செஸ்டர் கல்லூரியில் படித்த பின், தத்துவம், அரசியல் மற்றும் பொருளாதாரம் ஆகியவற்றை படிப்பதற்கு ஆக்ஸ்போர்டில் உள்ள லிங்கன் கல்லூரியில் படித்தார். அதன் பின்னர் அமெரிக்காவில் உள்ள ஸ்டான்போர்ட் பல்கலைக்கழகத்தில் ஃபுல்பிரைட் அறிஞராகத் தேர்ந்தெடுக்கப்பட்டார். இந்த பல்கலைகழகத்தில் இருந்து எம்பிஏ படிப்பை முடித்துவிட்டு வெளியேறினார்.

3. முதலீட்டு வங்கி நிறுவனத்தை இணைந்து நிறுவினார்
ரிஷி சுனக் அரசியலில் ஈடுபடுவதற்கு மன், 2001 மற்றும் 2004 ஆம் ஆண்டுகளுக்கு இடையே கோல்ட்மேன் சாக்ஸ் என்ற முதலீட்டு வங்கி நிறுவனத்தில் ஆய்வாளராகப் பணியாற்றி, தனது வணிக வாழ்க்கையைத் தொடங்கினார். பின் 2009 ஆம் ஆண்டு இவர் தெலேம் பார்ட்னர்ஸ் என்று அழைக்கப்படும் ஹெட்ஜ் நிதி நிறுவனத்தை இணைந்து நிறுவினார்.

4. திருமண வாழ்க்கை
ரிஷி சுனக் படிக்கும் காலத்தில் தன்னுடன் படித்த பெண்ணும், இந்தியாவின் புகழ்பெற்ற பிசினஸ்மேன் 'இன்போசிஸ்' நாராயணமூர்த்தியின் மகளுமாகிய அக்ஷதாவை காதலிருத்து பெற்றோர்கள் சம்மதத்துடன் பெங்களூருவில் 2009 ஆம் ஆண்டு திருமணம் செய்து கொண்டார். இவருக்கு கிருஷ்ணா, அனோஷ்கா என இரண்டு குழந்தைகள் உள்ளனர்.

5. ரிச்மண்ட் தொகுதி முதல் எம்.பி
ரிஷி சுனக் 2015 ஆம் ஆண்டில் ரிச்மண்ட் (யார்க்ஸ்) தொகுதியில் எம்.பி-யாக முதன்முதலாக தேர்ந்தெடுக்கப்பட்டார். பின் 2017 மற்றும் 2019 ஆம் ஆண்டிலும் மீண்டும் தேர்ந்தெடுக்கப்பட்டார். ரிஷி சுனக் இந்து மதத்தின் மீதுள்ள பற்றை வெளிப்படுத்தும் வகையில் பார்லிமென்டில் எம்.பி பதவி ஏற்கும் போது மிகவும் மதிக்கப்படும் இந்து நூலான பகவத் கீதையின் மீது பிரமாணம் எடுத்தார். இங்கிலாந்து நாடாளுமன்றத்தில் இவ்வாறு செய்த முதல் உறுப்பினர் இவர் தான்.

6. பணக்கார எம்.பி
ரிஷி சுனக் அரசியலில் நுழையும் முன்னரே இந்தியாவின் ஆறாவது பெரிய பணக்காரரான 'இன்போசிஸ்' என்.ஆர்.நாராயண மூர்த்தியின் மகளை திருமணம் செய்துள்ளார். இதனால் இவரும், இவரது மனைவியும் சேர்ந்து £730 மில்லியன் நிகரான மதிப்பை வைத்திருந்தனர். இது இவர்களை இங்கிலாந்தில் பணக்காரர்களுள் ஒருவராக்கி, ரிஷிக்கு 'பணக்கார எம்.பி' என்ற ஒரு பட்டத்தை பெற வைத்தது.



Click it and Unblock the Notifications











