Latest Updates
-
கோதுமை ரவா தோசையும்.. புதினா சட்னியும்..- 10 நிமிடத்தில் எப்படி செய்றது-ன்னு பாத்து ட்ரை பண்ணுங்க.. -
இன்றைய ராசிபலன் 11 மார்ச் 2026: இன்று இந்த 4 ராசிக்காரங்களுக்கு மனஉளைச்சலான நாளாக இருக்குமாம்...! -
குரு-புதன் உருவாக்கும் சக்தி வாய்ந்த ராஜயோகம்: இந்த 3 ராசிக்கு டபுள் ஜாக்பாட் அடிக்கப்போகுது... -
தமிழ்நாட்டில் உள்ள சர்க்கரை நோயை குணப்படுத்தும் 1,300 ஆண்டுகள் பழமையான இந்த கோயில் பற்றி தெரியுமா? -
1 கப் ரவை இருந்தா.. ஈவ்னிங் கண்டிப்பா இந்த ஸ்நாக்ஸை ட்ரை பண்ணுங்க.. செமயா இருக்கும்.. -
1 வருடம் கழித்து மீனம் செல்லும் சூரியன்: மார்ச் 15 முதல் இந்த 4 ராசிக்காரங்க எச்சரிக்கையா இருக்கணும்.. -
கல்யாண வீட்டு தஞ்சை வத்தக்குழம்பு - எப்படி செய்றது-ன்னு பாத்து செஞ்சு பாருங்க.. டேஸ்ட் அள்ளும்.. -
World Kidney Day 2026: சிறுநீரகங்கள் ஆரோக்கியமா இருக்கணுமா? அப்ப டாக்டர் சொல்ற இந்த 5 உணவுகளை சாப்பிடுங்க.. -
ராகு-கேதுவால் உருவாகியுள்ள கால சர்ப்ப யோகம்: இந்த 3 ராசிக்கு மார்ச் 26 வரை வெற்றியும், பணமும் குவியப்போகுது... -
இந்த கஞ்சியை தினமும் காலையில் 1 கப் குடிங்க.. உடல் எடை ஜெட் வேகத்தில் குறையும்...
வக்ர புதன் பெயர்ச்சி: டிசம்பர் 31 முதல் அடுத்த 17 நாட்கள் இந்த ராசிக்காரங்க உஷாரா இருக்கணும்...
2022 டிசம்பர் 31 ஆம் தேதி வக்ர புதன் பெயர்ச்சியால் 12 ராசிக்காரர்களும் எந்த மாதிரியான பலன்களைப் பெறப் போகிறார்கள் என்பதைக் காண்போம்.
Retrograde Mercury Transit In Sagittarius: 2022 ஆம் ஆண்டின் இறுதி வாரத்தில் உள்ளோம். இந்த ஆண்டின் கடைசி நாளில் புத்திகாரனான புதன் வக்ர நிலையில் தனுசு ராசிக்கு செல்கிறார். பின் 2023 ஜனவரி 18 ஆம் தேதி தனுசு ராசியில் வக்ர நிவர்த்தி அடைகிறார். பொதுவாக கிரகங்கள் வக்ர நிலையில் இருக்கும் போது, அதன் நற்பலன்கள் தாமதமாகும். அதுவும் புத்தாண்டு தொடங்குவதற்கு முந்தைய தினம் புதன் வக்ர பெயர்ச்சி நிகழ்வதால், அதன் தாக்கம் நிச்சயம் அனைத்து ராசிகளிலும் காணப்படும்.

வேத ஜோதிடத்தில் புதன் தகவல் தொடர்பு, அறிவு, பகுப்பாய்வு சிந்தனை ஆகியவற்றின் காரணியாக கருதப்படுகிறார். இந்த குணங்கள் அனைத்தும் ஒருவரிடம் இருந்தால், அந்நபரின் ஜாதகத்தில் புதன் வலுவாக உள்ளார். அதுவே புதன் பலவீனமாக இருந்தால், பேச்சுத் திறமை குறைவாகவும், பகுப்பாய்வு சிந்தனையை பலவீனமாகவும் கொண்டிருப்பார். இப்போது 2022 டிசம்பர் 31 ஆம் தேதி வக்ர புதன் பெயர்ச்சியால் 12 ராசிக்காரர்களும் எந்த மாதிரியான பலன்களைப் பெறப் போகிறார்கள் என்பதைக் காண்போம்.

மேஷம்
மேஷ ராசியின் 9 ஆவது வீட்டிற்கு புதன் செல்கிறார். இதனால் வேலையில் மிதமான முடிவுகளையே காண்பீர்கள். வேலையில் அதிர்ஷ்டத்தை எதிர்பார்த்தால், அதில் சிறிது தாமதம் ஏற்டும். வியாபாரிகள் சில எதிர்ப்புகளை சந்திக்க நேரிடும். ஈகோ தொடர்பான பிரச்சனையால் வாழ்க்கைத் துணையுடனான உறவு சற்று பாதிக்கப்படும். ஆரோக்கியத்தைப் பொறுத்தவரை, தூக்கமின்மையால் அவதிப்படுவீர்கள் மற்றும் மன அழுத்தத்திற்கு ஆளாவீர்கள்.

ரிஷபம்
ரிஷப ராசியின் 8 ஆவது வீட்டிற்கு புதன் செல்கிறார். இதனால் வேலையைப் பொறுத்தவரை, நற்பலன்களைப் பெறுவதில் தாமதம் ஏற்படும். சரியான நேரத்தில் வேலையை முடிக்க முடியாமல் போகும். பணிபுரிபவர்கள் பதவி உயர்வுக்காக எதிர்பார்த்துக் கொண்டிருந்தால், இன்னும் சிறிது காலம் காத்திருக்க வேண்டும் வணிகர்கள் போட்டியாளர்களிடம் சில சவால்களை சந்திக்க நேரிடும். ஆரோக்கியத்தைப் பொறுத்தவரை, கண் வலியால் அவதிப்பட வாய்ப்புள்ளது.

மிதுனம்
மிதுன ராசியின் 7 ஆவது வீட்டிற்கு புதன் செல்கிறார். இதனால் வேலையில் சற்று சிறப்பாக செயல்பட்டு நல்ல முன்னேற்றத்தைக் காண்பீர்கள். உயர் அதிகாரிகளின் ஆதரவைப் பெறுவீர்கள். வணிகர்கள் மிதமான லாபத்தைப் பெறுவார்கள். புதிய தொழிலை தொடங்க திட்டமிடுவீர்கள். வாழ்க்கைத் துணையுடன் சிறந்த உறவையும், பிணைப்பையும் காண்பீர்கள். ஆரோக்கியத்தைப் பொறுத்தவரை, நன்றாக இருக்கும்.

கடகம்
கடக ராசியின் 6 ஆவது வீட்டிற்கு புதன் செல்கிறார். இதனால் இக்காலத்தில் தொழிலில் முன்னேற்றத்தைக் காணும் நல்ல வாய்ப்புக்களைப் பெறுவீர்கள். ஆனால் புதன் வக்ர பெயர்ச்சியால் தொழில் வாழ்க்கையில் ஒருவித திருப்தி கிடைக்காமல் போகலாம். உங்கள் வணிக யோசனைகள் உங்கள் வணிக கூட்டாளர்களின் கவனத்தை ஈர்க்கும். கடன்கள் வாங்கும் வாய்ப்புள்ளது. துணையுடன் நல்ல உறவைப் பேண முடியும். ஆரோக்கியத்தைப் பொறுத்தவரை, நன்றாக உணருவீர்கள்.

சிம்மம்
சிம்ம ராசியின் 5 ஆவது வீட்டிற்கு புதன் செல்கிறார். இதனால் உங்கள் வேலையில் உங்களின் பகுப்பாய்வுத் திறன்கள் மற்றும் புத்திசாலித்தனத்தைப் பயன்படுத்துவீர்கள். அதிகரித்து வரும் பணி அழுத்தத்தை சமாளிக்க அவற்றைப் பயன்படுத்த வேண்டியிருக்கும். வியாபாரிகளுக்கு எதிர்பார்த்த வருமானம் கிடைக்காது. உங்கள் வாழ்க்கை துணையுடன் மிதமான புரிதலை நீங்கள் காண்பீர்கள். ஆரோக்கியம் மிகவும் நன்றாக இருக்காது. அதற்காக தீவிர உடல்நல பிரச்சனைகளையும் சந்திக்கமாட்டீர்கள்.

கன்னி
கன்னி ராசியின் 4 ஆவது வீட்டிற்கு புதன் செல்கிறார். இதனால் பணியிடத்தில் முடிக்க வேண்டிய வேலைகள் அதிகமாக இருக்கும். இதனால் வேலைகள் சரியாக நடைபெற திட்டமிட வேண்டியிருக்கும். வியாபாரிகள் சில தடைகளை சந்தித்தாலும், சிறிது வருமானத்தைப் பெற வாய்ப்புள்ளது. ஆரோக்கியத்தைப் பொறுத்தவரை, மன அழுத்தத்தை சந்திக்க நேரிடும். இதனால் தூக்கமின்மை பிரச்சனையை சந்திக்க வாய்ப்புள்ளது.

துலாம்
துலாம் ராசியின் 3 ஆவது வீட்டிற்கு புதன் செல்கிறார். எனவே வேலை காரணமாக நிறைய பயணங்களை செய்ய வேண்டியிருக்கும். ஆனால் அது நல்ல அனுபவமாக இருக்கும். வியாபாரிகளாக இருந்தால், கொஞ்ச அதிர்ஷ்டத்தால் சிறந்த வருமானத்தைப் பெற வாய்ப்புள்ளது. உங்கள் வாழ்க்கைத் துணையுடன் நீங்கள் ஒரு நல்ல தொடர்பு மற்றும் நல்லுறவை பராமரிக்க முடியும். ஆரோக்கியம் நன்றாக இருக்கும்.

விருச்சிகம்
விருச்சிக ராசியின் 2 ஆவது வீட்டிற் புதன் செல்கிறார். எனவே பணியிடத்தில் இலக்குகளை அடைவதில் சில தாமதங்களைச் சந்திக்க நேரிடும். வணிகர்கள் நல்ல லாபத்தைப் பெற முடியாது. உங்கள் போட்டியாளர்களிடமிருந்து சில சவால்களை சந்திக்க நேரிடும். வாழ்க்கைத் துணையுடன் வாக்குவாதங்கள் ஏற்பட வாய்ப்புள்ளது. ஆரோக்கியத்தைப் பொறுத்தவரை, கண்களில் பிரச்சனைகளை சந்திக்க வாய்ப்புள்ளது.

தனுசு
தனுசு ராசியின் முதல் வீட்டிற்கு புதன் செல்கிறார். இதனால் தொழிலில் நல்ல முடிவுகளைப் பெற வாய்ப்புள்ளது. தொழில் ரீதியாக பயணங்களை மேற்கொள்ள வேண்டியிருக்கும். வணிகர்கள் தங்கள் வணிகத்தை விரிவுப்படுத்துவதற்கான வாய்ப்புக்களைப் பெறுவார்கள். காதலைப் பொறுத்தவரை, உங்கள் துணையுடன் நெருக்கமான மற்றும் இனிமையான அன்மை பராமரிப்பீர்கள்.

மகரம்
மகர ராசியின் 12 ஆவது வீட்டிற்கு புதன் செல்கிறார். இதனால் பணிபுரிபவர்களுக்கு சரியான அங்கீகாரம் கிடைக்காமல் போகலாம். தொழில் ரீதியாக இக்காலம் திருப்திகரமாக இருக்காது. வணிகர்கள் விரும்பிய லாபத்தைப் பெற முடியாது. வாழ்க்கைத் துணையுடனான உறவில் நல்லிணக்கம் காணப்படாமல் போகலாம். இது உங்களுக்கு அதிக மன அழுத்தத்தை ஏற்படுத்தும். இதனால் ஆரோக்கியம் பாதிக்கப்பட வாய்ப்புள்ளது.

கும்பம்
கும்ப ராசியின் 11 ஆவது வீட்டிற்கு புதன் செல்கிறார். இதனால் தொழில் ரீதியாக மகிழ்ச்சியாகவும் திருப்திகரமாகவும் இருக்கும். வேலையில் விரும்பிய மரியாதை மற்றும் அங்கீகாரம் கிடைக்கும். வணிகர்கள் நல்ல லாபத்தைப் பெற முடியும். இதனால் வணிகத்தை விரிவாக ரிஸ்க் எடுக்க நினைப்பீர்கள். காதல் அல்லது திருமண வாழ்க்கையைப் பொறுத்தவரை, உங்கள் துணையுடன் நல்லுறவை பேண முடியும்.

மீனம்
மீன ராசியின் 10 ஆவது வீட்டிற்கு புதன் செல்கிறார். இதனால் தொழில் ரீதியாக வெளிநாடு செல்லும் வாய்ப்புக்கள் கிடைக்கும். இது நீங்கள் வளர நிறைய வாய்ப்புகளை உருவாக்க உதவும். வணிகர்கள், புதிய வணிகத் தொடர்புகளால் உங்களின் வணிகத்தை விரிவாக்கலாம். பண வரவு நன்றாக இருக்கும். நிறைய பணத்தை சேமிக்க முடியும். ஆரோக்கியத்தைப் பொறுத்தவரை நன்றாக இருக்கும்.



Click it and Unblock the Notifications











