Latest Updates
-
சனிபெயர்ச்சியால் 2027-ல் சகல நன்மைகளையும் பெறப்போகும் 4 ராசிகள் - உங்க ராசி இதுல இருக்கா? -
21 நாட்கள் தொடர்ந்து 1 நெல்லிக்காய் சாப்பிடுங்க, உடம்புல நடக்குற அதிசயத்தை பாருங்க.. கூறும் டாக்டர்! -
பாலக் புலாவ் ரெசிபி - இந்த சத்தான புலாவை ட்ரை பண்ணுங்க - குழந்தைகள் விரும்பி சாப்பிடுவாங்க -
பழைய விமானங்கள் ஓய்வு பெற்ற அவற்றின் நிலை என்னவாகும் தெரியுமா? இப்படிலாம் கூட பண்ணுவாங்களா? -
ஆண்டின் கடைசி சூரிய கிரகணம்: நாளை முதல் அடுத்த 90 நாட்கள் இந்த 4 ராசிக்கு அதிர்ஷ்டமா இருக்கும்.. -
இந்த கஞ்சியை தினமும் 1 கப் குடிங்க, 1 மாசத்துல உடல் எடை குறைவதை பாப்பீங்க.. -
இன்றைய ராசிபலன் 11 ஆகஸ்ட் 2026: இன்று இந்த 3 ராசிக்காரங்களுக்கு பெரிய நஷ்டம் தேடிவரப்போகுதாம் -
சுக்கிரனின் நட்சத்திர பெயர்ச்சி: நாளை முதல் இந்த 4 ராசிக்காரங்க கொஞ்சம் கவனமா இருக்கணும்! -
சனிபகவானின் நட்சத்திர பெயர்ச்சியால் பெரிய இழப்புகளை சந்திக்கப்போகும் 3 ராசிகள் இவங்கதான் -
லான்ச்பாக்ஸிற்கு ஒருடைம் இந்த பீட்ருட் தேங்காய் சாதம் செய்யுங்க - குழந்தைங்க விரும்பி சாப்பிடுவாங்க..
அஸ்வினி நட்சத்திரம் செல்லும் ராகு: இந்த 3 ராசிக்காரர்களுக்கு தொழிலில் நல்ல லாபம் கிடைக்கப் போகுது...
2023 பிப்ரவரி 09 ஆம் தேதி ராகு அஸ்வினி நட்சத்திரத்திற்கு செல்கிறார். அஸ்வினி நட்சத்திரத்தின் அதிபதி கேது. இதனால் ராகு இந்த நட்சத்திரத்திற்கு செல்வது மிகவும் அற்புதமானதாக இருக்கும்.
ஜோதிடத்தின் படி, கிரகங்கள் அவ்வப்போது ராசியை மட்டுமின்றி, நட்சத்திரங்களையும் மாற்றும். கிரகங்களின் ராசி மற்றும் நட்சத்திர மாற்றங்களானது 12 ராசிகளிலுமே தாக்கத்தை ஏற்படுத்தும். அதில் நிழல் கிரகமாக கருதப்படும் ராகு தற்போது மேஷ ராசியில் பயணித்து வருகிறார். ராகு ராசியை மாற்றுவதற்கு 18 மாதங்கள் ஆகும். அந்த வகையில் 2023 ஆம் ஆண்டில் ராகு அக்டோபர் மாதம் ராசியை மாற்றவுள்ளார். அதற்கு முன் 2023 பிப்ரவரி 09 ஆம் தேதி ராகு அஸ்வினி நட்சத்திரத்திற்கு செல்கிறார்.

அஸ்வினி நட்சத்திரத்தின் அதிபதி கேது. இதனால் ராகு இந்த நட்சத்திரத்திற்கு செல்வது மிகவும் அற்புதமானதாக இருக்கும். அஸ்வினி நட்சத்திரத்திற்கு ராகு செல்வதால், அதன் தாக்கம் அனைத்து ராசிகளிலும் காணப்படும். குறிப்பாக 3 ராசிக்காரர்களுக்கு இந்த ராகுவின் நட்சத்திர மாற்றமானது தொழிலில் நல்ல முன்னேற்றத்தையும், நல்ல நிதி ஆதாயத்தையும் வழங்கும். இப்போது ராகு அஸ்வினி நட்சத்திரத்திற்கு செல்வதால் தொழிலில் நல்ல பலனைப் பெறும் ராசிக்காரர்கள் யார்யார் என்பதைக் காண்போம்.

மிதுனம்
ராகுவின் நட்சத்திர மாற்றத்தால் மிதுன ராசிக்காரர்கள் அற்புதமான பலனைப் பெறுவார்கள். ஏனெனில் ராகு மிதுன ராசியில் வருமான வீட்டில் உள்ளார். எனவே இந்த ராசிக்காரர்கள் வருமானத்தில் அதிகரிப்பை காண்பார்கள். பல வழிகளில் பணம் சம்பாதிக்கும் வாய்ப்பைப் பெறுவார்கள். அரசியலில் இருப்பவர்கள் பதவி உயர்வைப் பெற வாய்ப்புள்ளது. நிர்வாக துறையில் இருப்பவர்கள் நல்ல வெற்றியைக் காண்பார்கள். பங்குச் சந்தை, பந்தயம் போன்றவற்றில் நல்ல லாபத்தைப் பெறுவார்கள். உடன் பிறந்தவர்களுடனான ஒருங்கிணைப்பு நன்றாக இருக்கும்.

கடகம்
ராகுவின் நட்சத்திர மாற்றத்தால் கடக ராசிக்காரர்களுக்கு சிறப்பாக இருக்கும். ஏனெனில் ராகு கடக ராசியின் 10 ஆவது வீட்டில் உள்ளார். இதனால் கடக ராசிக்காரர்கள் இக்காலத்தில் புதிய வேலை வாய்ப்பைப் பெறுவார்கள். தந்தையுடனான உறவு இனிமையாக இருக்கும். வணிகர்கள் நல்ல லாபத்தைப் பெறுவார்கள். வேலை செய்பவர்கள் தங்களின் பணியிடத்தில் பதவி உயர்வு மற்றும் சம்பள உயர்வைப் பெறலாம். பரம்பரை சொத்துக்களால் இனி நல்ல லாபம் இக்காலத்தில் கிடைக்கும்.

கன்னி
ராகுவின் நட்சத்திர மாற்றமானது கன்னி ராசிக்காரர்களுக்கு மங்களரமானதாக இருக்கும். கன்னி ராசியின் 6 ஆவது வீட்டில் ராகு இருப்பதால், நிலம் மற்றும் வீடு வாங்கும் யோகம் கிடைக்கும். திருமணமாகாதவர்கள் இக்காலத்தில் தங்கள் துணையை சந்திக்கலாம். பரம்பரை சொத்துக்களால் நல்ல ஆதாயம் மிகடைக்கும். வெளிநாடு செல்ல நினைப்போரின் விருப்பங்கள் நிறைவேறும். வணிகர்கள் இக்காலத்தில் கடன் வாங்க நினைத்தால், அது எளிதில் கிடைக்கும். பங்குச் சந்தை, பந்தயம் போன்றவற்றில் இருந்து நல்ல பண பலன்கள் கிடைக்கும்.
(பொறுப்புத் துறப்பு: மேலே கொடுக்கப்பட்டுள்ள தகவல் இணையத்தில் கிடைக்கும் அனுமானங்கள் மற்றும் தகவல்களின் அடிப்படையில் கொடுக்கப்பட்டுள்ளன மற்றும் நம்பகத்தன்மைக்கு உத்தரவாதம் இல்லை. தமிழ் போல்ட்ஸ்கை கட்டுரை தொடர்பான தகவலை உறுதிப்படுத்தவில்லை. மேலும் எங்கள் ஒரே நோக்கம் தகவலை வழங்குவது மட்டுமே. அதை வெறும் தகவலாக மட்டும் எடுத்துக் கொள்ள வேண்டும். எந்தவொரு தகவலையும் அனுமானத்தையும் பயிற்சி செய்வதற்கு அல்லது செயல்படுத்துவதற்கு முன், தயவுசெய்து சம்பந்தப்பட்ட நிபுணரை அணுகவும்.)



Click it and Unblock the Notifications