Latest Updates
-
செப்டம்பர் 27, 2026: இன்று இந்த 3 ராசிக்காரங்களுக்கு ஆபத்துகள் துரத்தும் நாளாக இருக்குமாம் -
வார ராசிபலன் (27 September 2026- 26 October 2026)- இந்த வாரம் இந்த 5 ராசிக்காரர்களுக்கு அதிர்ஷ்டமா இருக்கும்! -
4 முட்டை இருந்தா.. இந்த பக்குவத்துல மசாலா செய்யுங்க.. சப்பாத்திக்கு செமயா இருக்கும்.. -
நீங்க இந்த தேதிகளில் பிறந்தவங்களா? அப்ப 40 வயசுக்கு அப்புறம் உங்களுக்கு குபேர யோகம் தான்! -
கேரட்டை ஒருடைம் இப்படி செய்யுங்க.. பிடிக்காதவங்க கூட கேட்டு வாங்கி சாப்பிடுவாங்க.. -
தொப்பை குறையணுமா? அப்ப ஊட்டச்சத்து நிபுணர் சொல்ற இந்த பானத்தை மதிய உணவுக்கு முன் குடிங்க.. -
சனி நட்சத்திர பெயர்ச்சி: அக்டோபரில் மகரம் உள்ளிட்ட 3 ராசிக்கு கடின உழைப்புக்கான பலன் கிடைக்கப்போகுது! -
ரவா பன் தோசையும், தக்காளி சட்னியும் - எப்படி செய்றதுன்னு பாத்து ட்ரை பண்ணுங்க... -
செப்டம்பர் 26, 2026: இன்று இந்த 4 ராசிக்காரங்களுக்கு அதிர்ஷ்டம் கதவைத் தட்டும் நாளாக இருக்குமாம் -
அக்டோபரில் வக்ரமடையும் சுக்கிரன்: நவம்பர் வரை இந்த 3 ராசிக்கு பொற்காலமா இருக்கும்.. உங்க ராசி இதுல இருக்கா?
பிப்ரவரியில் நிகழும் கிரக பெயர்ச்சிகளால் இந்த 4 ராசிக்கு நிதி நிலையில் முன்னேற்றம் ஏற்படப் போகுது...
2023 பிப்ரவரியில் கிரகங்கள் ராசியை மாற்றுவதால், அதன் தாக்கம் 12 ராசிகளிலும் காணப்படும். குறிப்பாக 4 ராசிக்காரர்கள் இந்த கிரக பெயர்ச்சிகளால் அற்புதமான பலன்களைப் பெறப் போகிறார்கள்.
வேத ஜோதிடத்தின் படி, ஒவ்வொரு மாதமும் சில கிரகங்கள் ராசியை மாற்றும். அப்படி மாற்றுவதால், கிரக நிலைகளால் 12 ராசிக்காரர்களும் பெறும் பலன்களில் மாற்றம் ஏற்படும். அந்த வகையில் 2023 ஆம் ஆண்டின் இரண்டாவது மாதமான பிப்ரவரி மாதத்தில் 3 கிரகங்கள் ராசியை மாற்றவுள்ளன. அதுவும், சூரியன், புதன், சுக்கிரன் ஆகிய 3 கிரகங்கள் ராசியை மாற்றவிருக்கின்றன. அதில் 2023 பிப்ரவரி 07 ஆம் தேதி புதன் மகர ராசிக்கு செல்கிறார். அதன் பின் 2023 பிப்ரவரி 13 ஆம் தேதி சூரியன் கும்ப ராசிக்கு செல்கிறார். பின் 2023 பிப்ரவரி 15 ஆம் தேதி சுக்கிரன் மீன ராசிக்கு செல்கிறார்.

இப்படி கிரகங்கள் ராசியை மாற்றுவதால், அதன் தாக்கம் 12 ராசிகளிலும் காணப்படும். குறிப்பாக 4 ராசிக்காரர்கள் இந்த கிரக பெயர்ச்சிகளால் அற்புதமான பலன்களைப் பெறப் போகிறார்கள். இப்போது அந்த 4 ராசிக்காரர்கள் யார்யார் என்பதையும், எந்த மாதிரியான பலன்களைப் பெறப் போகிறார்கள் என்பதையும் காண்போம்.

மேஷம்
பிப்ரவரி மாத கிரக பெயர்ச்சிகளால் மேஷ ராசிக்காரர்கள் அற்புதமான பலன்களைப் பெறுவார்கள். இந்த மாதத்தில் வணிகர்களுக்கு சிக்கிய பணம் கைக்கு வந்து சேரும். புதிய வாகனம் மற்றும் சொத்து வாங்குவதற்கான வாய்ப்புக்கள் கிடைக்கும். அதே வேளையில் பழைய முதலீடுகளில் இருந்து நல்ல லாபம் கிடைக்கும். ஆனால் ஆரோக்கியத்தில் மட்டும் கவனம் செலுத்த வேண்டும் மற்றும் எப்போதும் ஒருவித பதற்றத்துடன் இருக்கக்கூடும்.

கன்னி
பிப்ரவரி மாதமானது கன்னி ராசிக்காரர்களுக்கு மிகவும் பயனுள்ளதாக இருக்கும். வேலை தேடுபவர்களுக்கு மற்றும் அரசு வேலைக்கு தயாராகிக் கொண்டிருப்பவர்களுக்கு, வேலை கிடைக்கும் வாய்ப்புள்ளது. இந்த மாதத்தில் தடைபட்ட வேலைகள் வெற்றிகரமாக முடிக்கப்படும். இந்த மாதத்தில் உடன்பிறந்தவர்களின் ஒத்துழைப்பு கிடைக்கும். தொழிலதிபர்கள் இந்த மாதத்தில் நிறைய ஆர்டர்களைப் பெறுவதால், லாபம் அதிகம் கிடைக்கும். முக்கியமாக இந்த மாதத்தில் வீட்டில் சுப நிகழ்ச்சிகள் நடப்பதற்கான வாய்ப்புள்ளது.

துலாம்
துலாம் ராசிக்காரர்களுக்கு பிப்ரவரி மாதமானது சாதகமாக இருக்கும். வெளிநாட்டில் படிக்க விரும்புவோரின் விருப்பம் நிறைவேறும். வணிகர்கள் இந்த மாதத்தில் வேலை தொடர்பான பயணங்களை மேற்கொள்ள வேண்டியிருக்கும் மற்றும் அந்த பயணத்தால் நல்ல நிதி ஆதாயமும் கிடைக்கும். திருமணமானவர்களுக்கு துணையுடனான உறவு வலுபெறும். இந்த மாதத்தில் நண்பர்கள் அல்லது குடும்ப உறுப்பினர்களுடன் சுற்றுலா செய்ய வாய்ப்புக்கள் கிடைக்கலாம்.

தனுசு
தனுசு ராசிக்காரர்களுக்கு பிப்ரவரி மாத கிரக பெயர்ச்சிகளானது பொன்னான பலன்களைத் தரப் போகிறது. ஜனவரியில் ஏழரை சனியில் இருந்து தனுசு ராசிக்காரர்கள் விடுதலை பெற்றுள்ளார்கள். இதனால் இதுவரை தொழில் மற்றும் வியாபாரத்தில் மந்தத்தை சந்தித்தவர்களுக்கு, பிப்ரவரி மாதத்தில் இருந்து நல்ல முன்னேற்றம் தெரியும். பணிபுரிபவர்கள் இந்த மாதத்தில் அதிக பணத்தை சேமிக்கும் வாய்ப்பைப் பெறுவார்கள். புதிய வேலை தேடுபவர்களுக்கு நல்ல வேலையும் கிடைக்கும். நீதிமன்ற வழக்குகளில் தீர்ப்புகளும் சாதகமாக வரும்.
(பொறுப்புத் துறப்பு: மேலே கொடுக்கப்பட்டுள்ள தகவல் இணையத்தில் கிடைக்கும் அனுமானங்கள் மற்றும் தகவல்களின் அடிப்படையில் கொடுக்கப்பட்டுள்ளன மற்றும் நம்பகத்தன்மைக்கு உத்தரவாதம் இல்லை. தமிழ் போல்ட்ஸ்கை கட்டுரை தொடர்பான தகவலை உறுதிப்படுத்தவில்லை. மேலும் எங்கள் ஒரே நோக்கம் தகவலை வழங்குவது மட்டுமே. அதை வெறும் தகவலாக மட்டும் எடுத்துக் கொள்ள வேண்டும். எந்தவொரு தகவலையும் அனுமானத்தையும் பயிற்சி செய்வதற்கு அல்லது செயல்படுத்துவதற்கு முன், தயவுசெய்து சம்பந்தப்பட்ட நிபுணரை அணுகவும்.)



Click it and Unblock the Notifications
