For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

ஆகஸ்ட் மாதத்தில் நீங்கள் பிறந்த தேதிக்கான பலன்களை தெரிஞ்சுக்கணுமா? அப்ப இத படிங்க...

ஆகஸ்ட் என்பது சனியின் மாதம். ஏனெனில் ஆகஸ்ட் எட்டாவது மாதம். சனியின் எண்ணிக்கை எட்டாக கருதப்படுகிறது. சனி அனைவருக்கும் நீதி வழங்கும் கிரகம். இது ஒருவரது வாழ்வில் பெரிய தாக்கத்தை ஏற்படுத்தும் கிரகமும் கூட.

|

எண் கணிதம் என்பது பிறந்த தேதியை அடிப்படையாக கொண்டு கணிக்கப்படுவது ஆகும். எண்கணித முறைப்படி, ஒருவரது தொழில், வியாபாரம், குடும்ப வாழ்க்கை, கல்வி போன்றவற்றை கணக்கிடலாம். உதாரணமாக, ஒருவர் பிறந்த தேதி 22 என்றால், 2+2=4 என்று கணக்கிட்டு எடுத்துக் கொள்ள வேண்டும்.

ஆகஸ்ட் என்பது சனியின் மாதம். ஏனெனில் ஆகஸ்ட் எட்டாவது மாதம். சனியின் எண்ணிக்கை எட்டாக கருதப்படுகிறது. சனி அனைவருக்கும் நீதி வழங்கும் கிரகம். இது ஒருவரது வாழ்வில் பெரிய தாக்கத்தை ஏற்படுத்தும் கிரகமும் கூட. சனி நல்ல நிலையில் இருந்தால், இந்த ஆகஸ்ட் பல நன்மைகளைத் தரும். அதுவே சனி கெட்ட நிலையில் இருந்தால், நீங்கள் மிகவும் மோசமான பலன்களைப் பெறுவதைக் குறிக்கிறது.

Numerology Monthly Predictions For August 2021 In Tamil

பெரும்பாலும் சனியால் பாதிக்கப்படுபவர்களைப் பார்த்தால், அது பணக்காரர்களாக அல்லது பணத்தின் மீது அதிக ஆசை கொண்டவர்களாக இருப்பர். உங்கள் வாழ்க்கையில் சனி இருப்பது பிரச்சனைகளை ஏற்படுத்தும். ஆனால் அது உங்களை எப்படி பாதிக்கிறது என்பதை நீங்கள் தெரிந்து கொள்ள வேண்டும். எண் 8 அதன் ஆழ்ந்த அறிவுக்கு பெயர் பெற்றது மற்றும் உங்களை ஒரு சிறந்த ஆய்வாளராக ஆக்குகிறது. எனவே, ஆகஸ்ட் மாதம் உங்களுக்கு நிறைய சவால்களையும் போராட்டங்களையும் தருகிறது. தொழில்துறை, இரசாயனத் துறை மற்றும் எண்ணெய் நிறுவனங்களில் பணிபுரிபவர்களுக்கு இது ஒரு சிறந்த நேரமாக இருக்கும்.

உற்பத்தித்திறனில் அதிகரிப்பு இருப்பதால் வணிகத்தில் இது உங்களுக்கு ஒரு சிறந்த நேரமாக இருக்கும். வெளிநாட்டில் வேலைக்கு விண்ணப்பிக்க விரும்புவோருக்கு, இந்த காலம் சாதகமாக இருக்கும். ஆனால் மற்ற நேரங்களில் அது உங்களுக்கு சவாலாக இருக்கலாம். இந்த ஆகஸ்ட்டில் ஒவ்வொரு பிறப்பு எண்ணும் என்ன கணிக்கிறது என்று பார்ப்போம்.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்
எண் 1

எண் 1

எண் கணிதத்தில், எண் 1 சூரியனைக் குறிக்கிறது. 1, 19 மற்றும் 28 ஆகிய தேதிகளில் பிறந்தவர்கள் சூரியனால் கட்டுப்படுத்தப்படுகிறார்கள். ஆகஸ்ட் உங்களுக்கு சராசரி மாதமாக இருக்கும். நீங்கள் கடினமாக உழைத்தால் வெற்றி நிச்சயம் உங்களுக்கு வரும். மன அழுத்தம் காரணமாக உடல்நல பிரச்சனைகளை சந்திக்கலாம். எனவே மிகவும் கவனமாக இருங்கள். இந்த மாதம் உங்கள் நிதி நிலைமை மிகவும் நன்றாக இருக்கும். காதல் வாழ்க்கை மன அழுத்தம் நிறைந்ததாக இருக்கலாம். ஆனால் இந்த காலகட்டத்தில் மாணவர்கள் சிறப்பாக இருப்பார்கள். மொத்தத்தில் இது உங்களுக்கு சராசரி மாதமாக இருக்கும்.

பரிகாரம்: ஒரு செம்பு பாத்திரத்தில் தண்ணீரை நிரப்பி, சூரியனுக்கு ஆராதணை செய்யுங்கள்.

எண் 2

எண் 2

எண் 2 சந்திரனைக் குறிக்கிறது. இது 2, 11, 20 மற்றும் 29 ஆகிய தேதிகளில் பிறந்தவர்களின் ஆட்சி எண். இந்த ஆகஸ்ட் மாதம் உங்களுக்கு நல்ல மாதமாக இருக்கும். வேலையை மாற்ற விரும்புவோருக்கு, இப்போது அதை செய்ய சிறந்த நேரம். ஆகஸ்ட் மாதம் உங்கள் தொழில் சிறப்பாக இருக்கும். இம்மாதத்தில் நிதி சிக்கல்கள் எதுவும் இருக்காது. வேலை மற்றும் வியாபாரத்தில் வளர்ச்சியுடன் லாபமும் இருக்கும். ஆரோக்கியத்தைப் பொறுத்தவரை, சராசரியாக இருக்கும். சளி பிடிக்காமல் பார்த்துக் கொள்ளுங்கள். காதல் வாழ்க்கையில் தவறான புரிதல்கள் இருக்கலாம். குடும்ப உறவுகள் கடினமாக இருப்பதால், உங்கள் குடும்பத்துடன் நல்ல உறவைப் பேண முயற்சி செய்யுங்கள்.

பரிகாரம்: தயிரை தானமாக கொடுங்கள் மற்றும் தினமும் விநாயரை வணங்குங்கள்.

எண் 3

எண் 3

எண் 3 குருவைக் குறிக்கிறது. இது 3, 12, 21 மற்றும் 30 ஆகிய தேதிகளில் பிறந்தவர்களின் ஆட்சி எண். இந்த மாதம் இவர்களுக்கு சவாலான காலமாக இருக்கும். பணத்தைப் பொறுத்தவரை, இந்த காலம் சராசரியாக இருக்கும். இம்மாதத்தில் நீங்கள் உங்கள் வாழ்க்கையை சிறந்த முறையில் அனுபவிப்பீர்கள். அனைவருடனும் நல்ல புரிதல் இருப்பதால், நீங்கள் ஆற்றல் மிக்கவராக இருப்பீர்கள். இம்மாதம் குடும்பத்தினருடன் மகிழ்ச்சியாக இருப்பீர்கள். இம்மாதம் உங்கள் ஆரோக்கியத்தை கவனித்துக் கொள்ளுங்கள் மற்றும் ஆரோக்கியமற்ற உணவைத் தவிர்த்திடுங்கள்.

பரிகாரம்: அரச மரத்திற்கு கீழே விளக்கேற்றுங்கள்.

எண் 4

எண் 4

எண் 4 ராகுவைக் குறிக்கிறது. இது 4, 13, 22 மற்றும் 31 ஆகிய தேதிகளில் பிறந்தவர்களின் ஆட்சி எண். இந்த காலகட்டத்தில் ராகு உங்களுக்கு வெற்றியைத் தருவார். மேலும் நீங்கள் செய்த கடின உழைப்பிற்கான நல்ல பலன்களைப் பெறுவீர்கள். இந்த மாதம் ஆற்றல் மிக்கவராக இருப்பீர்கள். இந்த ஆற்றல் உங்களுக்கு நேர்மறை முடிவுகளைத் தரும். நிதி ரீதியாக வெற்றி பெறுவீர்கள். யாருக்கும் கடன் கொடுக்காதீர்கள். உங்கள் வாழ்க்கைத் துணை மற்றும் குடும்பத்தினரிடமிருந்து நல்ல ஆதரவைப் பெறுவீர்கள். பிஸியான அட்டவணை காரணமாக, உங்கள் உடல்நலம் பாதிக்கப்படலாம், எனவே உங்களை நன்றாக கவனித்துக் கொள்ளுங்கள்.

பரிகாரம்: சிவலிங்கத்திற்கு சர்க்கரை சேர்த்த நீரால் அபிஷேகம் செய்யுங்கள் மற்றும் மஹா மிருத்யுஞ்ஜய மந்திரத்தை சொல்லுங்கள்.

எண் 5

எண் 5

எண் 5 புதனைக் குறிக்கிறது. இது 5, 14 மற்றும் 23 ஆகிய தேதிகளில் பிறந்தவர்களின் ஆட்சி எண். இந்த காலம் உங்கள் வணிகத்திற்கு ஒரு அருமையான காலமாகும். இந்த மாதம், உங்கள் கடின உழைப்பின் பலன்களை பெறுவீர்கள். மேலும் இந்த மாதம் புதிய விஷயங்களை முயற்சி செய்யலாம். இந்த காலம் உங்கள் வாழ்க்கைத் துணையுடனான உறவிற்கு சாதகமானது. ஒட்டுமொத்தமாக, இந்த காலம் உங்கள் தொழிலுக்கு சிறந்த காலமாக இருக்கும்.

பரிகாரம்: துர்கை அம்மனை வழிபட்டு, அவரது மந்திரத்தை சொல்லுங்கள்.

எண் 6

எண் 6

எண் 6 சுக்கிரனைக் குறிக்கிறது. இது 6, 15 மற்றும் 24 ஆகிய தேதிகளில் பிறந்தவர்களின் ஆட்சி எண். ஆகஸ்ட் மாதம் உங்களுக்கு மிகவும் சிறப்பாக இருக்கும். உங்கள் பணியிடத்தில் நீங்கள் பாராட்டப்படுவீர்கள். மேலும் வருமான உயர்விற்கும் வாய்ப்புள்ளது. சிறந்த எதிர்காலத்திற்கான முதலீடுகளைச் செய்ய வேண்டிய நேரம் இது. உங்கள் ஆரோக்கியத்தைப் பொறுத்தவரை, இந்த மாதம் சராசரி மாதமாக இருக்கும். எந்தவொரு வாக்குவாதத்திலும் ஈடுபடாதீர்கள். குறிப்பாக உங்கள் பெற்றோரின் ஆரோக்கியத்தை கவனித்துக் கொள்ளுங்கள்.

பரிகாரம்: விஷ்ணுவை வழிபடுங்கள்.

எண் 7

எண் 7

எண் 7 என்பது கேதுவைக் குறிக்கிறது. இது 7, 16 மற்றும் 25 ஆகிய தேதிகளில் பிறந்தவர்களின் ஆட்சி எண். இந்த மாதம் உங்கள் நிதி நிலைமை நன்றாக இருக்கும் மற்றும் உங்கள் கடந்த கால பண பிரச்சனைகளை தீர்க்கும். அலுவலக வேலை காரணமாக நீங்கள் பயணம் செய்ய வாய்ப்புகள் உண்டு. வேலை தொடர்பான மன அழுத்தம் காரணமாக, உங்கள் உடல்நிலை பாதிக்கப்படலாம். வாகனம் ஓட்டும் போது கவனமாக இருங்கள். ஏனெனில் விபத்து நேரிட வாய்ப்புள்ளது.

பரிகாரம்: கேது மந்திரத்தை சொல்லுங்கள். சிவலிங்கத்திற்கு நீரால் அபிஷேகம் செய்யுங்கள்.

எண் 8

எண் 8

எண் 8 சனியைக் குறிக்கிறது. இது 8, 17 மற்றும் 26 ஆகிய தேதிகளில் பிறந்தவர்களின் ஆட்சி எண். இந்த மாதம் உங்களுக்கு கொஞ்சம் சவாலாக இருக்கும். இந்த காலகட்டத்தில் எதையும் மாற்றவோ மற்றும் முயற்சிக்கவோ செய்யாதீர்கள். தேவையற்ற செலவுகளிலிருந்து விலகி இருங்கள், ஏனெனில் நீங்கள் நிதி நெருக்கடியை சந்திக்க நேரிடும். இந்த காலகட்டத்தில் உங்கள் மன ஆரோக்கியம் பாதிக்கப்படலாம். உறவில் இருப்பவர்களுக்கு இது சராசரி காலமாகும். இந்த மாதம் நீங்கள் குடும்ப பிரச்சினைகளை எதிர்கொள்வீர்கள் மற்றும் இது உங்களுக்கு மன உளைச்சலை ஏற்படுத்தலாம்.

பரிகாரம்: அனுமன் சாலிசாவை சொல்லுங்கள் மற்றும் சனியின் மந்திரத்தையும் சொல்லுங்கள்.

எண் 9

எண் 9

எண் 9 செவ்வாய் கிரகத்தைக் குறிக்கிறது. இது 9, 18 மற்றும் 27 ஆகிய தேதிகளில் பிறந்தவர்களின் ஆட்சி எண். நீங்கள் உங்கள் துறையில் புதிய விஷயங்களை முயற்சிக்க விரும்பினால் இந்த காலம் சிறப்பானதாக இருக்கும். இந்த மாதம் நீங்கள் நிதி ஸ்திரத்தன்மையையும் வருமான அதிகரிப்பையும் எதிர்பார்க்கலாம். உறவுகளில் உள்ளவர்களுக்கு இது ஒரு சிறந்த காலம் மற்றும் தம்பதிகள் ஆழமான அர்த்தமுள்ள பிணைப்பை எதிர்பார்க்கலாம். உங்கள் குடும்ப உறவுகளில் குழப்பம் ஏற்படலாம் மற்றும் குடும்ப உறுப்பினர்களின் ஆதரவைப் பெற நீங்கள் கடினமாக உழைக்க வேண்டியிருக்கும்.

பரிகாரம்: செவ்வாய்கிழமை அனுமனை வழிபடுங்கள் மற்றும் சூரிய மந்திரத்தை சொல்லுங்கள்.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்

English summary

Numerology Monthly Predictions For August 2021 In Tamil

Here in this article we are discussing about the Numerology monthly predictions for August 2021. Take a look.
Desktop Bottom Promotion