மேஷம் முதல் மீனம் வரை 12 ராசிக்காரங்களும் இப்படி சபதம் எடுங்க... உங்க லட்சியத்தை அடையலாம்..

2020 புத்தாண்டு பிறக்கப்போகுது. 2019 முடியப்போகுது. பிறக்கப்போகிற புத்தாண்டில் என்னென்ன விசயங்களை செய்யலாம் என்ற சில சபதங்களை போட்டு சிலர் டைரியில் எழுதி வைத்திருப்பார்கள்.

புத்தாண்டு என்று தெரிந்தாலே சிலர் வரப்போகிற ஆண்டிலாவது இந்த தவறுகளை செய்யாமல் இருக்க வேண்டும் சோம்பேறித்தனத்தை விட வேண்டும். அதிகாலையில் சூரிய உதயத்திற்கு முன்பு எழ வேண்டும் என்று உறுதிமொழியோ சபதமோ எடுப்பார்கள். 2020ஆம் ஆண்டில் இருந்தாவது நல்ல விசயங்களை செய்யவேண்டும் என்றும் அம்மா சொல் பேச்சை கேட்கவேண்டும் என்றும் உறுதிமொழி எடுப்பார்கள். எந்த ராசிக்காரர்கள் என்னமாதிரியான உறுதிமொழி எடுக்க வேண்டும் அதை எப்படி செயல்படுத்த வேண்டும் என்று ஜோதிடர்கள் கணித்துள்ளனர்.

New Years Resolution Should Be, Based on Your Zodiac Sign

21ஆம் நூற்றாண்டின் இரண்டு பத்தாண்டின் கடைசி ஆண்டு 2020. இந்த 20 ஆண்டுகளில் 2 கே கிட்ஸ் படிப்பை முடித்திருப்பீர்கள். சிலர் படித்துக்கொண்டிருப்பீர்கள். 90 கிட்ஸ் பலர் 30 வயதை கடந்திருப்பிர்கள். இந்த 2020 ஆண்டிலாவது நமக்கு கல்யாணம் நடக்க வேண்டும் அதற்கான முயற்சிகளை எடுக்கலாம் என்று சிலர் யோசிக்கலாம், உடற்பயிற்சி செய்யலாம். வாக்கிங் போகலாம் என்று கூட யோசிக்கலாம். மேஷம் முதல் முதல் மீனம் வரை 12 ராசிக்காரர்களும் என்னென்ன சபதங்களை எடுக்கலாம் என்னென்ன உறுதிமொழிகளை எடுக்கலாம் என்று பாருங்கள்.

நல்ல எண்ணங்கள், நேர்மறை எண்ணங்கள் நேர்மறையான செயல்களை கொண்டு வருகின்றன. நல்லது மட்டுமே நடக்கும் என்று நம்புவர்களுக்கு நல்லது கண்டிப்பாக நடக்கும். இந்த 2020 புத்தாண்டு முதலே எதிர்மறை எண்ணங்கள் எதையும் மனதில் எண்ணாமல் நல்ல செயல்களையும் இலக்குகளையும் நோக்கி நமது பயணம் இருக்கட்டும். ஒவ்வொருக்கும் ஒரு இலக்கு இருக்கும். அந்த இலக்கை அடைய சில முயற்சிகளை எடுப்பார்கள் புத்தாண்டு பிறப்பு என்பது ஒவ்வொருவருக்கும் ஒரு வயது கூடுகிறது.

2020ஆம் ஆண்டு எண் கணித கூட்டுத்தொகைப்படி ராகு ஆண்டாக பிறக்கிறது. நட்சத்திரங்கள் ராசிகளின் அடிப்படையில் என்னென்ன செய்யலாம் என்ன உறுதிமொழிகளை எடுக்கலாம் என்று யோசித்து எடுத்து அதன்படி செயல்படுத்துங்கள்.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்
மேஷம்

மேஷம்

சுறுசுறுப்பாக எப்போதும் துறு துறுவென்று ஓடிக்கொண்டிருக்கும் மேஷ ராசிக்காரர்களே உங்களுக்கு என்று புதிய இலக்கை நிர்ணயித்துக்கொள்ளங்கள். அந்த இலக்கை நோக்கி உங்கள் பயணம் இருக்கட்டும். உடற்பயிற்சியோ நடைப்பயிற்சியோ அதை உற்சாகமாக செய்யுங்கள். எதையும் திருப்தியாக செய்யுங்கள் இலக்கை நோக்கி நடக்கத்தொடங்குங்கள் 2020ஆம் ஆண்டு உங்களுக்கான ஆண்டாக புதிய தொடக்கமாக இருக்கட்டும். எந்த சபதத்தையும் வெற்றிகரமாக முடிக்க திட்டமிடுதல் முக்கியம்.

ரிஷபம்

ரிஷபம்

மன உறுதியும் தன்னம்பிக்கையும் கொண்ட ரிஷப ராசிக்காரர்களே உங்களுக்கு 2020ஆம் ஆண்டு நிறைய சவால்களையும் போர்களையும் சந்திக்க வேண்டியிருக்கும். சில நேரம் சகிப்புத்தன்மையும் விட்டுக்கொடுத்தலும் அவசியம். குடும்பத்தில் ஒருவருக்கொருவர் புரிந்து கொள்ளுங்கள்.போர்கள் முடிவுக்கு வரும். இந்த புத்தாண்டில் சகிப்புத்தன்மை வளர்த்துக்கொள்ள வேண்டும் என்று நீங்க சபதம் எடுத்தால் போதும் உங்களுக்கு நன்மைகள் அதிகம் நடக்கும்.

மிதுனம்

மிதுனம்

2020 ஆம் ஆண்டில் நிறைய சவால்கள் டாஸ்க்குகளை மிதுனம் ராசிக்காரர்கள் சந்திக்க வேண்டியிருக்கும். உங்களுடைய இலக்குகளை நோக்கி படிப்படியாக முன்னேறுங்க. இந்த ஆண்டு உங்களுக்கான ஆண்டாக உள்ளது. வேலை செய்யும் இடத்தில் நீங்கள் அனைத்தையும் இழுத்துப்போட்டுக்கொள்ள வேண்டாம். அதுவே உங்களுக்கு தலைவலியாக போய்விடும். எந்த காரியத்தையும் எளிதாக முடிக்க முடியும் என்ற நம்பிக்கையுடன் அணுகுங்கள் ஈசியாக முடித்துவிடுவீர்கள்.

கடகம்

கடகம்

கடகம் ராசிக்காரர்களுக்கு இந்த புத்தாண்டு அற்புதமான ஆண்டாக அமைந்துள்ளது. அன்பும் நட்பும் இணைந்த ஆண்டாக அமைந்துள்ளது. நீங்க நிர்ணயிக்கும் இலக்கை எளிதில் அடைவீர்கள். அனைவரிடமும் அன்பாக இருக்கவேண்டும் யாருடனும் சண்டை போடக்கூடாது என்று கடகம் ராசிக்காரர்கள் சபதம் எடுங்க இந்த ஆண்டு உங்களுக்கானதாக மாறும்.

சிம்மம்

சிம்மம்

சிம்ம ராசிக்காரர்கள் அதிகம் தன்னம்பிக்கையும் தைரியமும் கொண்டவர்கள். உங்க எனர்ஜி லெவல் இந்த ஆண்டு வேற மாதிரியாக இருக்கும். உங்க எண்ணங்கள் நிறைவேறும். உங்க இலக்கை இந்த புத்தாண்டில் எளிதில் அடைவீர்கள். நீங்கள் அதிகம் சம்பாதிக்க வேண்டும், திறமையாக வேலை செய்ய வேண்டும் என்று நினைத்தாலும் அந்த லட்சியத்தை எளிதில் அடைவீர்கள்.

கன்னி

கன்னி

கன்னி ராசிக்காரர்கள் புத்திசாலித்தனம் அதிகம் கொண்டவர்கள். 2020ஆம் ஆண்டில் நீங்க ஒரு பெரிய லிஸ்ட் வைத்திருப்பீர்கள். ஆனால் அனைத்துமே நிறைவேற வேண்டும் என்று நினைப்பது ஒருவித பதற்றத்தை ஏற்படுத்திவிடும். இந்த ஆண்டு முழுக்க எந்த பதற்றமும் இன்றி நிதானமாக இருக்கவேண்டும் என்று நினையுங்கள். அதுவே உங்களை அமைதிப்படுத்தும். உங்க எனர்ஜியை வீணாக்க வேண்டாம். சக்தியை சேமித்து உங்களின் எண்ணங்களை நேர்மறை எண்ணங்களாக மாற்றுங்கள். பொறுப்புகளை அதிகம் வளர்த்துக்கொள்ளுங்கள். இந்த ஆண்டு எதிர்மறை எண்ணங்களை விட்டு விடலாம் என கன்னி ராசிக்காரர்கள் சபதம் எடுக்கலாம்.

துலாம்

துலாம்

சுக்கிரனை ராசி நாதனாகக் கொண்ட துலாம் ராசிக்காரர்களே இந்த 2020ஆம் ஆண்டு உங்களுக்கு பேலன்ஸ் ஆக ஆண்டாக அமையப்போகிறது. உங்க உடல் ஆரோக்கியத்தில நீங்க அக்கறை காட்டுங்க. உணவு விசயத்தில கவனமாக இருக்கணும் நேரங்கெட்ட நேரத்தில சாப்பிடக்கூடாது அதிக கொழுப்பு உணவுகளை இந்த ஆண்டு சாப்பிடக்கூடாது என்று நீங்க சபதம் எடுங்க. எண்ணெய் பலகாரங்களை அறவே தவிர்த்து விடுங்கள். இயற்கை உணவுக்கும் ஆர்கானிக் உணவுகளுக்கு மட்டுமே முக்கியத்துவம் கொடுக்கலாம் என நீங்க சபதம் எடுக்கலாம்.

விருச்சிகம்

விருச்சிகம்

செவ்வாயை ராசி அதிபதியாகக் கொண்ட விருச்சிக ராசிக்காரர்களே, 2020ஆம் ஆண்டு உங்களுக்கான ஆண்டான அமைகிறது. நீங்க ரொம்ப உணர்ச்சிவசப்படுவீங்க. உங்க பொறாமையையும் கோபத்தை விட்டு விடுவதாக நீங்க இந்த புத்தாண்டில் உறுதிமொழி எடுத்துக்கொள்ளுங்கள். உல்லாச பயணம் சென்று நிறைய இடங்களையும் நிறைய நபர்களையும் பார்க்க வேண்டும் என்று நீங்க எடுத்துக்கொள்ளும் உறுதிமொழி உங்களுக்கு நன்மை செய்யும் நிறைய அன்பானவர்களை உங்களுக்கு கொண்டு வந்து கொடுக்கும்.

தனுசு

தனுசு

குருவை ராசி நாதனாகக் கொண்ட தனுசு ராசிக்காரர்களே உங்களுக்கு இந்த ஆண்டு நீங்க வேலைப்பளுவை குறைத்துக்கொள்ளுங்கள். நிறைய ரெஸ்ட்லெஸ் ஆக இருப்பீங்க. எதிலும் நீங்க திருப்தியாக உணருங்கள். மன அழுத்தத்தை குறைக்க தியானம், யோகா செய்து உங்க நிம்மதியை அதிகரிக்க நீங்க உறுதிமொழி எடுத்துக்கொள்ளுங்கள்.

மகரம்

மகரம்

சனிபகவானை ராசி நாதனாகக் கொண்ட மகரம் ராசிக்காரர்களே, நீங்க இந்த ஆண்டு ரொம்ப உற்சாகமாக ஃப்ரீயாக ஃபீல் பண்ணுவீங்க. நிறைய நினைவுகளை அசைபோடுங்க. அந்த சந்தோஷ தருணங்கள் உங்களை உற்சாகப்படுத்தும். நீங்க திட்டம் போட்டு செயலாற்றுங்கள். இந்த ஆண்டு நல்ல வாய்ப்புகளை பயன்படுத்தி முன்னேற வேண்டும் என்று சபதம் எடுங்கள் நல்லதே நடக்கும்.

கும்பம்

கும்பம்

அனைவருக்கும் உதவும் எண்ணம் கொண்ட கும்பம் ராசிக்காரர்களே, நீங்க உங்க உணர்ச்சிகளை அதிகமாக வெளிக்காட்ட மாட்டீர்கள். பேச்சு கூட நிதானமாகவே இருக்கும். உங்க சந்தோஷ தருணங்களை நீங்க எப்போதுமே மகிழ்ச்சியுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். இந்த ஆண்டு முதல் எதையும் வெளிப்படையாக பேச வேண்டும் என்று முடிவெடுங்கள். கோபமே படக்கூடாது அதே நேரம் மன அழுத்தத்திற்கு ஆளாகக் கூடாது என்று நீங்க உறுதிமொழி எடுத்துக்கொள்ளுங்கள்.

மீனம்

மீனம்

குருவை ராசி நாதனாகக் கொண்ட மீனம் ராசிக்காரர்களே, நீங்க கலா ரசிகர்கள். இசையோ, ஓவியமோ, திரைத்துறையில் இருப்பவர்களோ இந்த ராசியில் பிறந்தவர்கள் நிறைய கனவுகளை வைத்திருப்பீர்கள். 2020ஆம் ஆண்டு உங்க கனவுகள் நனவாகும் காலம் வந்து விட்டது. தலைக்கணத்தை கழற்றி வையுங்கள். எதையும் இயல்பாக எடுத்துக்கொள்ள வேண்டும் என்று இந்த ஆண்டு முதல் நினையுங்கள் நல்லதே நடக்கும். 2020ஆம் ஆண்டு உங்களுக்கான ஆண்டாக அமையும்.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்

Story first published: Tuesday, January 7, 2020, 10:45 [IST]
Desktop Bottom Promotion