Latest Updates
-
தலைமுடி கொத்து கொத்தா கொட்டுதா? அப்ப இந்த எண்ணெயை தயாரிச்சு யூஸ் பண்ணுங்க.. -
இந்த 3 ராசிக்காரர்களுக்கு 40 வயசுக்கு மேல தான் அதிர்ஷ்டம் பிரகாசிக்கும்.. உங்க ராசி இதுல இருக்கா? -
உங்ககிட்ட இந்த 6 அறிகுறிகள் தெரியுதா? அப்ப உடம்புல கெட்ட கொலஸ்ட்ரால் அதிகமா இருக்குன்னு அர்த்தம்.. உஷார்.. -
மணமணக்கும்.. திண்டுக்கல் ஸ்டைல் சீரக சம்பா முட்டை பிரியாணி - எப்படி செய்றதுன்னு பாத்து ட்ரை பண்ணுங்க... -
குரு பகவானால் உருவாகியுள்ள விபரீத ராஜயோகம்: அசுர வளர்ச்சியை காணப்போகும் 3 ராசிக்காரங்க இவங்க தான்! -
மட்டன் வாங்குனா.. இப்படி ஊற வெச்சு குழம்பு செய்யுங்க.. இட்லி, சாதம்-ன்னு எல்லாத்துக்கும் அட்டகாசமா இருக்கும்.. -
இன்றைய ராசிபலன் 06 செப்டம்பர் 2026: இன்று இந்த 3 ராசிகளுக்கு வீண் செலவுகள் அதிகரிக்கும் நாளாக இருக்குமாம் -
உங்க ராசியை சொல்லுங்க? இந்த வாரம் உங்களுக்கு எப்படி இருக்கும்னு நாங்க சொல்றோம்! -
சிக்கன் வாங்குனா இந்த ஆந்திரா சிக்கன் 555 செஞ்சு பாருங்க - காரசாரமா சூப்பரா இருக்கும் -
இந்த 4 ராசி ஆண்கள் பெரிய ப்ளேபாயாக இருப்பார்களாம் - இவங்ககிட்ட ஜாக்கிரதையா இருங்க
வீட்டுல இந்த தவறுகளை செய்யாதீங்க.. இல்லன்னா பண பிரச்சனையை அதிகமா சந்திப்பீங்க...
வீட்டில் வாஸ்து தோஷம் இருந்தால், அது வாழ்வில் பல கஷ்டங்களை சந்திக்க வைக்கும். குடும்பத்தில் குழப்பம் ஏற்படும். முக்கியமாக வீட்டில் பணம் தங்காமல், பண பிரச்சனையை சந்திக்க வேண்டியிருக்கும்.
ஒருவர் குடியிருக்கும் வீடு வாஸ்துப்படி இருந்தால், அந்த வீட்டில் உள்ளோர் நல்ல மகிழ்ச்சியான மற்றும் செழிப்பான வாழ்க்கையை வாழ்வார்கள். வாஸ்துப்படி வீட்டில் உள்ள ஒவ்வொரு அறை மட்டுமின்றி, வீட்டில் வைத்திருக்கும் பொருட்களும் முக்கியத்துவம் வாய்ந்தது. அதுமட்டுமின்றி, வீட்டை சுத்தமாக வைத்துக் கொள்ள வேண்டும். வீட்டில் வாஸ்து தோஷம் இருந்தால், அது வாழ்வில் பல கஷ்டங்களை சந்திக்க வைக்கும். குடும்பத்தில் குழப்பம் ஏற்படும். முக்கியமாக வீட்டில் பணம் தங்காமல், பண பிரச்சனையை சந்திக்க வேண்டியிருக்கும்.

உங்கள் வீட்டில் இம்மாதிரியான சூழ்நிலையை சந்தித்தால், உங்கள் வீட்டில் வாஸ்து குறைபாடு உள்ளது என்பதை புரிந்து கொள்ள வேண்டும். அதோடு அதை சரிசெய்யும் முயற்சியில் ஈடுபட வேண்டும்.

முட்கள் நிறைந்த செடிகள்
வீட்டில் முட்கள் நிறைந்த செடிகளை வைத்திருப்பது நல்லதல்ல. ஒருவேளை வைத்திருந்தால், அது வீட்டில் பிரச்சனைகளை உண்டாக்கும். ஏனெனில் இந்த வகை செடிகள் வீட்டில் நேர்மறை ஆற்றலின் கதவுகளை மூடும். மேலும் இந்த வகை செடிகள் வீட்டில் நிதி பிரச்சனைகளுக்கு வழிவகுக்கும். எனவே உங்கள் வீட்டில் இந்த செடிகள் இருந்தால், உடனே அதை அப்புறப்படுத்துங்கள்.

சிலந்தி வலை
வாஸ்துப்படி வீட்டின் தூய்மை மிகவும் இன்றியமையாதது. வீட்டை எப்போதும் அசுத்தமாக வைத்திருக்காதீர்கள். வீட்டில் குப்பைகளை தேக்கி வைத்திருக்காதீர்கள். மேலும் வீட்டில் சிலந்தி வலைகள் இருந்தால், அதை உடனே சுத்தம் செய்யுங்கள். ஏனெனில் சிலந்தி வலை உள்ள வீட்டில் லட்சுமி கடாட்சம் இருக்காது. சுத்தமான வீட்டில் தான் லட்சுமி வாசம் செய்வாள். எனவே வீட்டை சுத்தமாக வைத்துக் கொள்ளுங்கள்.

குழாயில் இருந்து நீர் வடிவது
வீட்டின் குழாயில் இருந்து எப்போதும் நீர் வடிவது மங்களகரமானதாக கருதப்படுவதில்லை. ஒருவருடைய வீட்டில் காரணமின்றி நீர் சொட்டிக் கொண்டிருந்தால், அந்த வீட்டில் வறுமை இருக்கும். பண பிரச்சனையை சந்திக்க நேரிடும். எனவ உங்கள் வீட்டில் குழாயில் இருந்து நீர் வடிந்தால், அதை உடனே சரிசெய்ய முயலுங்கள்.

வெளியே இருந்து உள்ளே வீட்டை பெருக்க வேண்டாம்
வீட்டை பெருக்க சரியான வழிகள் உள்ளன. வீட்டை துடைப்பம் கொண்டு பெருக்கும் போது, விளக்குமாறு நேராக இருக்க வேண்டும் என்பதை நினைவில் கொள்ளுங்கள். துடைப்பத்தை எப்போதும் வீட்டின் எதிர்பக்கத்தில் வைக்கக்கூடாது. இவ்வாறு செய்தால், அது வீட்டில் பண நெருக்கடியை உண்டாக்கும். மேலும் வீட்டை பெருக்கும் போது உள்ளே இருந்து தான் வெளியே குப்பைகளை தள்ள வேண்டும். இவ்வாறு செய்வதால், வீட்டில் உள்ள பிரச்சனைகள் நீங்குவதுடன் எதிர்மறை சக்தியும் வீட்டை விட்டு வெளியேறும். வீட்டில் எப்போதும் மகிழ்ச்சி, அமைதி மற்றும் செழிப்பு இருக்கும்.

துடைப்பம் லட்சுமியின் அடையாளம்
லட்சுமி தேவியின் அடையாளங்களில் ஒன்றாக துடைப்பம் கருதப்படுகிறது. இந்த துடைப்பத்தை ஒருபோதும் காலால் மிதிக்கக்கூடாது. மேலும் இதை எப்போதும் மறைவான இடத்தில் தான் வைத்திருக்க வேண்டும். வெளியாட்கள் வீட்டிற்கு வந்தால், அவர்களின் கண்ணில் படாத இடத்தில் துடைப்பத்தை வைத்திருக்க வேண்டும்.



Click it and Unblock the Notifications