Latest Updates
-
1 கப் வேர்க்கடலையும், கொத்தமல்லியும் இருந்தா இந்த மாதிரி சுருக்குனு சட்னி அரைங்க - டேஸ்ட் தாறுமாறா இருக்கும் -
July 2026: ஜூலை மாதத்தின் முக்கியமான நாட்கள் மற்றும் விரத தினங்கள் என்னென்ன தெரியுமா? -
2 பிரட்டும், அரை கப் கடலை மாவும் இருந்தா டக்குனு இந்த டிபனை பண்ணுங்க - டேஸ்ட்டா, ஆரோக்கியமா இருக்கும் -
சனிபகவான் வக்ர பெயர்ச்சியை தொடங்கப் போவதால் பணத்தையும், புகழையும் குவிக்கப்போகும் 3 ராசிகள் -
ட்ராபிக் சிக்னலில் ஏன் உலகம் முழுக்க சிவப்பு, மஞ்சள், பச்சை நிறம் மட்டுமே பயன்படுத்தப்படுகிறது தெரியுமா? -
முட்டைக்கோஸ் இருந்தா இந்த மாதிரி ஆந்திரா ஸ்டைலில் பிரியாணி செஞ்சு பாருங்க - கமகமனு சூப்பரா இருக்கும் -
July 2026 Horoscope: இந்த 4 ராசிக்காரங்க ஜூலை மாதத்தில் கொடிகட்டி பறக்கப்போறாங்களாம் - உங்க ராசி இதுல இருக்கா? -
1 கப் சேமியா இருந்தா.. காலையில் ஒருடைம் இந்த டிபனை செய்யுங்க.. ருசியானதும், சத்தானதும் கூட.. -
இன்றைய ராசிபலன் 24 ஜூன் 2026: இன்று இந்த 4 ராசிக்காரங்களுக்கு ரொம்ப துரதிர்ஷ்டமான நாளாக இருக்குமாம் -
ஜூலை 02-ல் நடக்கும் சனி நட்சத்திர பெயர்ச்சி: இந்த 4 ராசிக்கு பண வரவு அதிகரிக்கும்..
பல ஆண்டுகளுக்கு பின் புதன் மற்றும் சுக்கிரன் குருவுடன் சேர்ந்து உருவாக்கிய நவபஞ்சம் ராஜயோகம்!
குருவுடன் சேர்ந்து புதன் மற்றும் சுக்கிரன் நவபஞ்சம் ராஜயோகத்தை உண்டாக்குகிறது. இந்த நவபஞ்சம் யோகம் மிகவும் மங்களகரமான ஒரு ராஜயோகமாகும்.
வேத ஜோதிடத்தில் கிரகங்களின் நிலையைப் பொறுத்து தான் பலன்கள் கணித்து கூறப்படுகின்றன. கிரகங்கள் அவ்வப்போது ராசியை மாற்றிக் கொண்டே இருக்கும். அப்படி மாறும் போது கிரகங்களின் சேர்க்கையால் சுப அல்லது அசுப யோகங்களும் உருவாகும். இதனால் கிரகங்களினால் கிடைக்கும் பலன்களும் அவ்வப்போது மாறும். அந்த வகையில் குருவுடன் சேர்ந்து புதன் மற்றும் சுக்கிரன் நவபஞ்சம் ராஜயோகத்தை உண்டாக்குகிறது. இந்த நவபஞ்சம் யோகம் மிகவும் மங்களகரமான ஒரு ராஜயோகமாகும்.

இந்த நவபஞ்சம் ராஜயோகம் உருவாகும் போது ஒருவரின் அதிர்ஷ்டம் திறந்து, ஏராளமான நற்பலன்கள் கிடைக்கும். அதில் 2022 நவம்பர் 11 ஆம் தேதி சுக்கிரன் மற்றும் குருவால் நவபஞ்சம் ராஜயோகம் உருவானது. அதன் பின் நவம்பர் 16 ஆம் தேதி புதன் மற்றும் குருவால் நவபஞ்சம் ராஜயோகம் உருவானது. பின்பு நவம்பர் 16 ஆம் தேதி விருச்சிக ராசிக்கு செல்லும் சூரியனுக்கும், குருவுக்கும் நவபஞ்சம் ராஜயோக சம்பந்தம் ஏற்படுகிறது. எனவே குரு, சூரியன், சுக்கிரன் அல்லது புதன் யாருடைய ராசியை ஆள்கிறார்களோ, அந்த ராசிக்காரர்களின் அதிர்ஷ்டம் பிரகாசித்து, வாழ்வில் நல்ல செல்வம் மற்றும் முன்னேற்றம் ஏற்படும். இப்போது அந்த ராசிக்காரர்கள் யார்யார் என்பதைக் காண்போம்.

ரிஷபம்
ரிஷப ராசிக்காரர்களுக்கு நவபஞ்சம் ராஜயோகம் தொழில் மற்றும் வியாபாரத்தில் நல்ல பலனைத் தரும் மற்றும் முன்னேற்றம் ஏற்படும். ஷேர் மார்க்கெட், பந்தயம், லாட்டரி போன்றவற்றில் நல்ல பணம் கிடைக்கும். உங்களின் வியாபாரம் வெளிநாட்டுடன் தொடர்புடையதாக இருந்தால் நல்ல லாபம் கிடைக்கும். திடீர் பண ஆதாயத்தைப் பெறவும் வாய்ப்புள்ளது. அரசியலில் இருப்பவர்கள் உயர் பதவியைப் பெறுவார்கள். சமூகத்தில் கௌரவம் அதிகரிக்கும். வாழ்க்கைத் துணை மூலம் பணம் கிடைக்க வாய்ப்புள்ளது.

மிதுனம்
நவபஞ்சம் ராஜயோகம் மிதுன ராசிக்காரர்களுக்கு நல்ல பலனைத் தரும். நீதிமன்ற வழக்குகள் இருந்தால், அதில் தீர்ப்புகள் உங்களுக்கு சாதகமாக வரும். புதிய வேலையை தேடிக் கொண்டிருந்தால், இக்காலத்தில் நல்ல வாய்ப்பைப் பெறுவீர்கள். இந்த யோக காலத்தில் உங்களின் தைரியமும், வீரமும் அதிகரிக்கும். வியாபாரிகளுக்கு நல்ல லாபம் கிடைக்கும். ஏற்கனவே நோயால் அவதிப்பட்டு வந்தால், இக்காலத்தில் அதிலிருந்து விடுபடுவீர்கள். சமூகத்தில் மற்றும் பணியிடத்தில் உங்களின் மரியாதை அதிகரிக்கும். அரசாங்கத்தால் நல்ல ஆதாயம் கிடைக்கும்.

கடகம்
கடக ராசிக்காரர்களுக்கு இந்த ராஜயோக காலமானது அதிர்ஷ்டத்தை அள்ளித் தரும். இக்காலத்தில் தடைபட்ட பணிகள் அனைத்தும் வெற்றிகரமாக முடிக்கப்படும். வேலை தொடர்பாக பயணம் மேற்கொள்ள நேரிடும். பழைய முதலீடுகளால் நற்பலன் கிடைக்கும். வியாபாரத்தில் நல்ல லாபம் கிடைக்கும். புதிய தொழில் தொடங்க நினைத்தால், அதற்கு இக்காலம் சிறந்ததாக இருக்கும். மாணவர்கள் தேர்வுகளில் நல்ல மதிப்பெண்களுடன் வெற்றி பெறுவார்கள்.
(பொறுப்புத் துறப்பு: மேலே கொடுக்கப்பட்டுள்ள தகவல் இணையத்தில் கிடைக்கும் அனுமானங்கள் மற்றும் தகவல்களின் அடிப்படையில் கொடுக்கப்பட்டுள்ளன மற்றும் நம்பகத்தன்மைக்கு உத்தரவாதம் இல்லை. தமிழ் போல்ட்ஸ்கை கட்டுரை தொடர்பான தகவலை உறுதிப்படுத்தவில்லை. மேலும் எங்கள் ஒரே நோக்கம் தகவலை வழங்குவது மட்டுமே. அதை வெறும் தகவலாக மட்டும் எடுத்துக் கொள்ள வேண்டும். எந்தவொரு தகவலையும் அனுமானத்தையும் பயிற்சி செய்வதற்கு அல்லது செயல்படுத்துவதற்கு முன், தயவுசெய்து சம்பந்தப்பட்ட நிபுணரை அணுகவும்.)



Click it and Unblock the Notifications