திருமண தடை, புத்திர பாக்கிய தடை நீக்கும் நாக சதுர்த்தி விரதம்!

சஷ்டி விரதத்தோடு அனுஷ்டிக்கப்படும் ஐப்பசி மாத நாக சதுர்த்தி முக்கியமானது. நாக சதுர்த்தி தினமான இன்று ராகு தோஷம் மற்றும் நாகதோஷம் போக்கும் நாக ராஜா காயத்ரி மந்திரம் கூறி நாகத்தை வழிபட திருமண தடை புத்த

புத்திர பாக்கியம் என்பது ஒவ்வொருவரின் வாழ்க்கையிலும் மிக முக்கியமான அம்சமாகும். இதனால்தான் திருமணப் பொருத்தம் பார்க்கும்போது ஜாதகத்தில் புத்திர பாக்கியம் எப்படி? புத்திர தோஷம் உள்ளதா? நாக தோஷம், ராகு தோஷம் உள்ளதா என்று பார்ப்பார்கள். ஒருவருடைய ஜாதகத்தில் நாக தோஷம் அல்லது ராகு தோஷம் இருக்க பற்பல காரணங்கள் உள்ளன. இந்த தோஷம் காரணமாக பலருக்கு திருமண தடை ஏற்படும், திருமணம் ஆன பிறகும் குழந்தை பாக்கியம் பெறுவதில் தடை ஏற்படும், செய்யும் தொழிலில் திடீர் நஷ்டம் ஏற்படும். சிலருக்கு தோல் சம்மந்தமான வியாதிகளும் வரக்கூடும். ஆகையால் ராகு தோஷத்தில் இருந்து விடுபடுவது மிக அவசியம்.

Naga Chaturthi 2019 Puja Timings

ஜாதக ரீதியாக இருக்கும் தோஷத்தை விடவும் நாகத்தைத் தாக்குவதன் மூலம் ஏற்படும் தோஷம் அபாயகரமானது. ஏழேழு ஜென்மங்கள் எடுத்தாலும் நாகம் தொடர்ந்து வரும் என்று கூறுவார்கள். இப்படிப்பட்ட தோஷத்திலிருந்து விடுபடுவதற்கு உகந்த வழிபாடு நாக சதுர்த்தி பூஜை மற்றும் விரதம்.

கருட பஞ்சமிக்கு முன்பு அமையும் சதுர்த்தி திதி நாளே நாக சதுர்த்தி தினமாகும். பொதுவாக, ஆடி மாதம் சதுர்த்தி தினத்தில் தொடங்கும் நாக சதுர்த்தி விரத வழிபாடு அடுத்த வருட ஆனி மாத சதுர்த்தியோடு முடிவடையும். இடைப்பட்ட மாதங்களில் வரும் ஒவ்வொரு சதுர்த்தி தினமும் நாக சதுர்த்தி தினமாகும். ஐப்பசி மாதம் சஷ்டி விரதத்தோடு அனுஷ்டிக்கப்படும் நாக சதுர்த்தி சிறப்பு வாய்ந்தது.

ஆதிசேஷன் என்ற நாகத்தின் மடியில்தான் விஷ்ணு பள்ளி கொண்டுள்ளார். சுப்பிரமணிய சுவாமியின் காலடியில் படம் எடுத்த நிலையில் நாகம் உள்ளது. நாக வழிபாடு என்பது வேத காலத்தில் இருந்தே இருக்கிறது. மனிதரின் ஜாதக அமைப்பில் தாக்கத்தை ஏற்படுத்துவது நவகிரகங்கள். இதில் ராகு, கேது கிரகங்கள் நாக வடிவுடையவை.

முற்பிறவியில் செய்த பாவங்களால் இந்த பிறவியில் பல துன்பங்களை அனுபவித்து வருகிறோம். புண்ணியம் செய்திருந்தால் இந்த பிறவியில் நல்ல பலன்களை அடைந்து வருகிறோம் என்று ஜோதிடர்கள் கூறுகின்றனர். இதில் நாக தோஷம் இருந்தால் குழந்தை பாக்கியம் இல்லாமலும், பிறந்த குழந்தைகள் ஊனமுற்றதாகவும், நோயால் அவதிப்படுவதும் குடும்பத்தினர் பிரிந்தும் பல்வேறு இன்னல்களை அனுபவித்து வருவர். இந்த துன்பங்களிருந்து மீளவும், நல்ல பலன்களை பெறவும் நாக தேவதைகளை மனம் உருகி வழிபட வேண்டும். நாக தேவதைகளின் அருளால் தோஷங்கள் விலகி நல்ல பலன்கள் பெறலாம் என்பது ஐதீகம்.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்
புத்திர பாக்கியம்

புத்திர பாக்கியம்

ஜாதகத்தில் புத்திர பாக்கியஸ்தானம் என்பது 5 ஆம் இடம். ஆண், பெண் இருவருக்கும் ஒரே இடம்தான். குழந்தை பாக்கியம் கிடைக்க 5 ஆம் இடம் மட்டும் காரணம் அல்ல. 5 ஆம் இடம் புத்திரஸ்தானம், புத்திரர்களைப்பற்றித் தெரிந்துகொள்ளும் இடம். ஆனால் ஆண், பெண் இருவர் சேர்க்கையின் மூலம்தான் கர்ப்பம் ஏற்படுகிறது. இதற்கு செவ்வாய், சுக்கிரன் சாதகமாக இருக்க வேண்டும்.

கருமுட்டைகள் விந்தணுக்கள்

கருமுட்டைகள் விந்தணுக்கள்

ஆண்கள் ஜாதகத்தில் வீரியஸ்தானமான மூன்றாம் இடம். மூன்றாம் அதிபதி பலமாக இருந்தால்தான் ஆண்மை, வீரியம் இருக்கும். சுக்கிரன் பலமாக இருந்தால்தான் விந்து உற்பத்தி சீராக இருக்கும். சுக்கிரன் ஜாதகத்தில் பலம் குறைந்தோ, நீசமாகவோ இருந்தால் விந்து நீர்த்துப்போய் இருக்கும். விந்தணுக்களின் எண்ணிக்கை குறைவாக இருக்கும். பெண்களுக்கு கரு முட்டைகள் சரியான வளர்ச்சி ஏற்படாது. கரு முட்டை குறைபாடு காரணமாக கர்ப்பம் தரிக்க முடியாத நிலை உண்டாகும்.

கருப்பை வளர்ச்சி

கருப்பை வளர்ச்சி

பெண்கள் ஜாதகத்தில் சுகஸ்தானம் என்ற நான்காம் இடம் இது வயிறு சம்பந்தமான இடம். இதனால் இந்த இடம் பலமாக இருக்க வேண்டும். புத்திரகாரகன் குரு வலுவாக இருப்பது அவசியம். பெண்கள் ஜாதகத்தில் துலாம் ராசியில் ராகு, கேது, சூரியன், இந்த ராசியில் சூரியன் நீசம் அடைகிறார். மேலும் 6, 8, 12 ஆம் ஆதிபத்யம் பெற்ற கிரகங்கள் இருந்தால் புத்திர பாக்கியம் தள்ளிப்போகும் கருச்சிதைவு ஏற்படும். ஆண் ஜாதகத்தில் விருச்சிக ராசியில் சூரியன், சுக்கிரன் இருவரும் இருந்தால் தாமத புத்திர பாக்கியம் அமையும்.

குழந்தை பாக்கியம் தரும் குரு

குழந்தை பாக்கியம் தரும் குரு

நான்காம் வீட்டில் ராகு, சந்திரன், சனி சம்பந்தப்படும்போது மாதவிடாய் பிரச்னைகள் ஏற்படும். செவ்வாயின் அமைப்பு சரியில்லை என்றால் ரத்த சோகை, அதிக உதிரப்போக்கு ஏற்படும். புத்திர பாக்கியம் அமைய இத்தனை பிரச்னைகள் இருக்கிறது. ஆகையால் ஆண்பெண் இருவரின் ஜாதகத்திலும் 5 ஆம் இடத்தை தவிர சுக்கிரன், குரு நல்ல பலத்துடன் இருப்பது மிகவும் முக்கியம்.

புத்திர தோஷம்

புத்திர தோஷம்

மூன்றாம் இடமும், செவ்வாயும் பலமாக இருந்தால்தான் வீரிய சக்தியும் விந்து சுரப்பும் அதிகம் இருக்கும். மேலும் அந்த காலக்கட்டத்தில் நடைபெறுகின்ற தசா புக்திகள்தான் கர்ப்பம் தரிப்பதற்கு காரணமாக இருக்கின்றது. ஆகையால் ஜாதகத்தில் புத்திர தோஷம் என்று 5 ஆம் வீட்டை மட்டும் பார்க்கக்கூடாது. உடல் ரீதியாக என்ன பிரச்னை 4, 5, 10, 11 போன்ற ஸ்தானங்களைப் பார்ப்பது அவசியம். 3 ஆம் இடமாகிய வீரியஸ்தானத்தையும், குரு, சுக்கிரன் இருவரின் பலத்தையும் தெரிந்து அதற்குரிய மருத்துவத்தையும், சாஸ்திர பரிகாரங்களையும் செய்வது சிறப்பானதாகும்.

நாக தோஷம் நீங்கும்

நாக தோஷம் நீங்கும்

நாக சதுர்த்தி தினமான இன்று நாகர்களின் புராணத்தை படித்து நாகராஜா காயத்ரி மந்திரம் கூறி வழிபட தோஷங்கள் நீங்கும்.

'ஓம் சர்பராஜாய வித்மஹே

நாகராஜாய தீமஹி

தன்னோ னந்தஹ் ப்ரசோதயாத்' - என கூறி நாகர்களை வணங்க வேண்டும்.

சர்பங்களுக்கெல்லாம் தலைவனான நாக ராஜனே உங்களை வணங்குகிறேன். நித்தமும் உங்களை நினைக்கும் இந்த அடியேனுக்கு ஆசி வழங்கி அருள்புரிய வேண்டுகிறேன். என்று வேண்டிக்கொண்டால் ராகு தோஷமும் நாக தோஷத்தால் ஏற்படும் பாதிப்புகளும் நீங்கும்.

பாம்புகளுக்கு கிடைத்த சாபம்

பாம்புகளுக்கு கிடைத்த சாபம்

பிரம்ம தேவரின் மகனான கஷ்யபருக்கு நான்கு மனைவிகள். அவர்களில், கத்ரி என்பவளிடத்தில் பிறந்தவர் நாகர். தாய் சொல்லைக் கேட்காததால், தீயில் விழுந்து இறக்கும்படி தாய் கத்ரி சாபம் கொடுத்தாள். அந்த சாபத்தினால், பல நாகங்கள் பரீட்சித்தின் மகன் மன்னன் ஜனமேஜயன் நடத்திய சர்ப்ப யாகத்தின்போது அக்கினியில் வீழ்ந்து இறந்தன. அஸ்தீகர், ஜனமேஜயனது யாகத்தைத் தடுத்து, நாகர்களுக்குச் சாப நிவர்த்தி கொடுத்தார். அவ்வாறு நாகர்கள் சாப நிவர்த்தி பெற்ற நாள்தான் நாக சதுர்த்தி நாள்.

குழந்தைகளின் ஆயுள் நீடிக்கும்

குழந்தைகளின் ஆயுள் நீடிக்கும்

நாக சதுர்த்தியன்று நாக தேவதைக்குப் பூஜை செய்து, புற்றுக்குப் பால் ஊற்றி, புற்றுமண்ணைப் பிரசாதமாக அணிந்து கொள்வார்கள். அன்றைய தினம் ஒன்பது நாக தேவதைகளான அனந்தன், வாசுகி, கிஷகாலன், அப்ஜன், மகரி அப்ஜன், கங்குபாலன், கார்க்கோடன், குளிஜன், பத்மன் ஆகியோர்களின் நாமத்தைச் சொல்லிக்கொண்டே புற்றுக்குப் பால் ஊற்றிப் பூஜிப்பது நல்லது. இந்த விரதத்தால் புத்திர பாக்கியம் உண்டாகும். புத்திர பாக்கியம் உள்ளவர்கள் இந்த விரதத்தைக் கடைப்பிடிப்பதால், புத்திரர்கள் தீர்க்க ஆயுளுடன் வாழ்வார்கள். விரதம் கடைப்பிடிக்கும்போது, நமது சக்திக்குத் தகுந்தபடி தங்கத்திலோ, அல்லது பிற உலோகத்திலோ பாம்பின் உருவம் செய்து அதை ஒரு கலசத்தில் வைத்துப் பூஜை செய்ய வேண்டும்.

தோஷம் நீக்கும் பரிகாரங்கள்

தோஷம் நீக்கும் பரிகாரங்கள்

புத்திர தோஷம் விரைவில் அகல குலதெய்வ வழிபாடு மிகவும் அவசியமாகும். சிவனுக்கு வில்வ இலையால் அர்ச்சனை செய்து வந்தால் குழந்தை பாக்கியம் வரும். வெள்ளியினால் செய்த நாகத்தைத் தானம் செய்தாலும் பலன் உண்டு. கிருத்திகை விரதம் இடைவிடாது இருந்தால் புத்திரதோஷ நிவர்த்தி ஏற்பட்டு, புத்திர பாக்கியம் உண்டாகும். சஷ்டி, கிருத்திகை, செவ்வாய்க்கிழமைகளில் விரதம் இருந்து முருகனை பக்தியுடன் பூஜை செய்ய புத்திர பாக்கியம் உண்டாகும். திருநாகேஸ்வரம், சங்கரன்கோவில் உள்ளிட்ட சர்ப்ப தோஷ நிவர்த்தி தலங்களுக்குச் சென்று நாகத்தை வழிபட வேண்டும். தலங்களுக்குச் சென்று நாகத்தை வழிபடுவதோடு மட்டுமல்லாமல் அம்பாளையும், சிவனையும் வணங்கினால் ராகு - கேது, சர்ப்ப தோஷங்கள் என்று அனைத்து விதமான தோஷங்களும் விலகி திருமணம் கைகூடும். பிரிந்திருக்கும் கணவன் மனைவி ஒன்று சேருவார்கள். குழந்தை பாக்கியம் கிடைக்கும்.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்

Story first published: Thursday, October 31, 2019, 13:39 [IST]
Desktop Bottom Promotion