Latest Updates
-
செவ்வாய்-சந்திர சேர்க்கையால் உருவாகும் மகாலட்சுமி ராஜயோகம்: மார்ச் 16 முதல் இந்த 3 ராசிக்கு பண மழை கொட்டும்.. -
18 மாதங்களுக்கு பின் உருவாகும் மங்களாதித்ய யோகம் 2026: இந்த 3 ராசிகளின் நீண்டகால ஆசைகள் நிறைவேறப்போகுதாம்...! -
1500 கிலோ தங்கத்தால் கட்டப்பட்ட தங்க கோயில் தமிழ்நாட்டில் எங்கு உள்ளது தெரியுமா? நீங்க இங்க போயிருக்கீங்களா? -
வெயிலால் உங்க முகம் கருமையாகாமல் இருக்கணுமா? அப்ப இந்த ஃபேஸ் பேக்கை அடிக்கடி போடுங்க... -
1 முறுக்கு பாக்கெட் இருந்தா இந்த மாதிரி காரைக்குடி ஸ்டைலில் குழம்பு வையுங்க... வித்தியாசமா சூப்பரா இருக்கும்.. -
வெயில் காலத்தில் மாலை வேளையில் இத செஞ்சு சாப்பிடுங்க.. உடம்பு குளுகுளு-ன்னு இருக்கும்.. -
அழகான பெண்கள் இந்த 4 ராசி ஆண்களை தேடிப்போய் காதலிப்பார்களாம்... உங்க ராசி இதுல இருக்கா? -
மார்ச் இறுதியில் நடக்கும் சுக்கிர பெயர்ச்சி: இந்த 3 ராசிக்கு கூரைய பிச்சுக்கிட்டு பணம் கொட்டப்போகுது... -
கேஸ் அதிகம் தேவைப்படாத அட்டகாசமான சாம்பார் சாதம் ரெசிபி..இந்த மாறி செஞ்சு பாருங்க... டேஸ்ட் செமயா இருக்கும்... -
அடுப்பில்லாமல் செய்யக்கூடிய பச்சப்புளி ரசம் - செஃப் மாதம்பட்டி ரங்கராஜ் ஸ்டைலில் எப்படி செய்றதுன்னு பாருங்க..
இந்திய வரலாறின் மிக அழகிய மகாராணிகள் இவர்கள் மட்டும்தானாம் தெரியுமா?
இந்திய வரலாற்றை பொறுத்தவரையில் பெண்களுக்கு மிகவும் முக்கியமான பங்கு அதில் உள்ளது. பல மகாராணிகள் மன்னரின் இறப்பிற்கு பிறகு போரில் ஈடுபட்டுள்ளனர்.
உலகம் முழுவதுதிலுமே அரசக் குடும்பங்களில் பிறந்த பெண்களுக்கென்று சில கட்டுப்பாடுகள் இருக்கத்தான் செய்தது. சில இராஜ்ஜியங்களில் ராணிகளுக்கு மிகவும் கடுமையான கட்டுப்பாடுகள் கூட விதிக்கப்பட்டு இருந்தது. ஆனால் அதனையும் மீறி வரலாற்றில் தடம் பதித்த மகாராணிகளைப் பற்றி நாம் படித்துக் கொண்டுதான் இருக்கிறோம்.

இந்திய வரலாற்றை பொறுத்தவரையில் பெண்களுக்கு மிகவும் முக்கியமான பங்கு அதில் உள்ளது. பல மகாராணிகள் மன்னரின் இறப்பிற்கு பிறகு போரில் ஈடுபட்டுள்ளனர். அதேசமயம் அழகிலும் இந்திய மகாராணிகளுக்கு இணை யாரும் இல்லை என்று தைரியமாக கூறலாம். ஏனெனில் இந்தியாவில் நிகழ்ந்த பல போர்களுக்கு காரணமாக இருந்தது அவர்களின் அழகுதான். இந்த பதிவில் இந்திய வரலாற்றின் மிக அழகிய ராணிகள் யார் யாரென்று பார்க்கலாம்.

ராணி சம்யுக்தா
கண்ணுஜ் மன்னரின் மகளும் பிருத்விராஜ் சவுகானின் மனைவியுமான ராணி சம்யுக்தா இந்தியா வரலாற்றின் காண்போரை மெய்மறக்க வைக்கும் அழகையும், அளவில்லாத புத்திக்கூர்மையையும் கொண்ட ராணியாக குறிப்பிடப்படுகிறார். அவரது காலகட்டத்தில் மிகவும் உறுதிவாய்ந்த பெண்ணாக இவர் அறியப்படுகிறார். இவரின் அழகில் மயங்கிய பிருத்விராஜ் சவுகானை இவர் திருமணம் செய்து கொண்ட கதை இந்தியாவின் மிகஅழகிய காதல் கதைகளில் ஒன்றாக கருதப்படுகிறது. இவரின் அழகைப் பற்றிய பெருமை இந்தியா முழுவதும் பரவி இருந்தது அதனாலதான் இவரை பார்ப்பதற்கு முன்னரே பிருத்விராஜ் சவுகான் இவரை காதலிக்கத் தொடங்கினார்.

ராணி பத்மாவதி
பத்மாவதியின் புகழைப் பற்றி நாம் நன்கு அறிவோம். ராஜபுத்திர மன்னரான ராவல் ரத்தன் சிங்கை திருமணம் செய்து கொண்ட இவர் சித்தூரின் ராணியாக இருந்தார். பத்மாவதியை திருமணம் செய்து கொள்வதற்காக இவர் மாலிக்கின் சிங்குடன் போரிட்டார். இவருடைய அழகின் பெருமை டெல்லியை ஆண்ட அலாவுதீன் கில்ஜி வரை சென்றது, இதனால் அவர் சித்தூரின் மீது படையெடுக்க நேர்ந்தது. இறுதியில் பத்மாவதி தன் உயிரை மாய்த்துக் கொண்டார்.

மகாராணி காயத்ரி தேவி
மகாராணி காயத்ரி தேவி அவரின் பட்டப்பெயரான ஜெய்ப்பூரின் ராஜமாதா என்பதன் மூலம் அறியப்படுகிறார். கூச் பெஹரின் இளவரசியாக பிறந்த இவர் இரண்டாம் சவாய் மேன் சிங்கை திருமணம் செய்து கொண்டு மகாராணியாக மாறினார். இவரின் அழகும், வசீகரமும் அனைவரையும் கவர்வதாக இருந்தது, அந்த காலக்கட்டத்தில் இவரின் உடைகளும், நகைகளும் மிகவும் நவீனமானதாக இருந்தது.

பரோடாவின் சீதா தேவி
மிர்ஜாபூரின் இளவரசியாக பிறந்த இவர் தன்னுடைய மகிழ்ச்சியான வாழ்க்கைமுறைக்காக புகழ் பெற்றவராக இருந்தார். இவரை இந்தியாவின் வாலிஸ் சிம்ப்சன் என்று அழைத்தார்கள். காண்பவரை கவர்ந்திழுக்கும் அழகும், இனிமையான குணமும் கொண்ட இவர் சந்தேகத்திற்கு இடமின்றி இந்தியாவின் அழகிய ராணிகளில் ஒருவர் ஆவார்.

ராணி விஜயா தேவி
அழகு மற்றும் அறிவின் உருவமாக அவரின் காலக்கட்டத்தில் ராணி விஜயா தேவி அறியப்பட்டார்.எ;அழகு மட்டுமின்றி இவர் வீணை மற்றும் கர்நாடக இசையில் நிபுணராக விளங்கினார். மேலும் அரச குடும்பத்தில் இவரைப் போல பியானோ வாசித்தவர்களும் யாரும் இல்லை.

கபூர்தலாவின் சீதா தேவி
ஜமீன்தாரின் மகளாக பிறந்த இவர் கபூர்தலாவின் இளவரசரை திருமணம் செய்து கொண்டார். வசீகரிக்கும் அழகை கொண்ட இவர் பல ஐரோப்பிய மொழிகளை பேசுவதில் வல்லவராக இருந்தார். இவரின் நாகரீகமான வாழ்க்கைமுறையும், நீளமான உடைகளும், கழுத்தை மறைக்கும் நெக்லேஸ்களும் இவரின் அழகை மேலும் அதிகரித்தது.

மகாராணி ஜீஜாபாய்
மகாராணி ஜீஜாபாய் பொதுவாக ராஜமாதா ஜீஜாபாய் என்று அழைக்கப்படுகிறார். ஒரு இராணுவத் தளபதியை திருமணம் செய்து கொண்ட இவர்தான் மராட்டிய சாம்ராஜ்ஜியத்தை நிறுவிய சத்ரபதி சிவாஜியின் தாய் ஆவார். இவரின் அழகு அந்த காலக்கட்டத்தில் அபிப்பிராந்தியத்தில் மிகவும் புகழ் பெற்றதாக இருந்தது.

ராணி லட்சுமிபாய்
ராணி லட்சுமிபாயின் உண்மையான பெயர் மணிகர்ணிகா ஆகும். ஜான்சியின் மகாராஜாவை திருமணம் செய்துகொண்ட பிறகுதான் இவருக்கு லட்சுமிபாய் என்ற பெயர் வந்தது. இவர் வாரணாசியில் பிராமண குடும்பத்தில் பிறந்தவர். இவர் மகாராணியாக மாறியவுடன் இவரின் வீரத்திற்காகவும், அழகுக்காகவும் உயர்ந்த புகழைப் பெற்றார்.



Click it and Unblock the Notifications











