Latest Updates
-
World Heart Day 2026: 1 சிகரெட் அடிச்சா 20 நிமிஷத்துல இதயத்துல என்ன நடக்கும்? - விளக்கும் இதய நிபுணர்! -
4 பிரெட் இருந்தா இந்த மாதிரி சுவையான புலாவ் செஞ்சு பாருங்க - வீட்ல எல்லோரும் விரும்பி சாப்பிடுவாங்க -
சூரியனின் நட்சத்திர பெயர்ச்சி: அக்டோபர் 11 வரை இந்த 5 ராசிக்கு பணமும், வெற்றியும் குவியும்! -
லாயருக்கும், அட்வகேட்டுக்கும் உள்ள வித்தியாசம் என்ன தெரியுமா? அப்ப ரெண்டும் ஒன்னு இல்லையா? ஷாக் ஆகாதீங்க -
அவலும், முட்டையும் இருந்தா.. காலையில் இந்த டிபனை ட்ரை பண்ணி பாருங்க.. -
செப்டம்பர் 29, 2026: இன்று இந்த 3 ராசிக்காரங்களுக்கு தெண்ட செலவுகள் தேடிவரப்போகுதாம் -
புதன் துலாம் ராசியில் வக்ர பெயர்ச்சியை தொடங்கப்போவதால் இந்த 3 ராசிகளின் கனவுகள் பலிக்கப்போகுதாம் -
1 கப் சின்ன வெங்காயம் இருந்தா இந்த மாதிரி ஆந்திரா ஸ்டைலில் தொக்கு செஞ்சு பாருங்க - சூப்பர் சைடிஷா இருக்கும் -
அக்டோபர் மாத சூரிய பெயர்ச்சி: இந்த 6 ராசிக்காரங்க அடுத்த 1 மாதம் கவனமா இருக்கணும்! -
சைக்கோவாக நடந்து கொள்ளும் 4 ஆபத்தான ராசிகள் - உங்க ராசி இதுல இருக்கா?
புதன் உருவாக்கும் பத்ர ராஜயோகத்தால் பிப்ரவரி 7 முதல் இந்த 3 ராசிக்கு சூப்பரா இருக்கப் போகுது...
நவகிரகங்களின் இளவரசனாக கருதப்படும் புதன் 2023 பிப்ரவரி 07 ஆம் தேதி மகர ராசிக்கு செல்கிறார். புதன் மகர ராசிக்கு செல்லும் போது, மகர ராசியில் பத்ரா ராஜயோகம் உருவாகவுள்ளது.
ஜோதிட சாஸ்திரத்தின் படி, கிரகங்கள் ஒவ்வொன்றும் அவ்வப்போது ராசியை மாற்றும். அதில் சில கிரகங்கள் குறுகிய காலத்திலேயே ராசியை மாற்றும். அப்படி மாற்றும் போது சில நேரங்களில் சுப அல்லது அசுப யோகங்கள் உருவாகும் வாய்ப்புக்கள் உள்ளன. அந்த வகையில் நவகிரகங்களின் இளவரசனாக கருதப்படும் புதன் 2023 பிப்ரவரி 07 ஆம் தேதி மகர ராசிக்கு செல்கிறார். புதன் மகர ராசிக்கு செல்லும் போது, மகர ராசியில் பத்ரா ராஜயோகம் உருவாகவுள்ளது.

பத்ரா ராஜயோகம் என்பது புதனால் உருவாக்கப்படும் யோகமாகு. இது ஒரு மங்களகரமான மற்றும் அதிர்ஷ்டமான யோகம். இந்த யோகத்தால் ஒருவரது செல்வம், கௌரவம், திறன்கள் போன்றவை மேம்படும். புத்திகாரகனான புதன் சனி ஆளும் மகர ராசிக்கு செல்லும் போது உருவாகும் பத்ரா ராஜயோகத்தின் தாக்கம் அனைத்து ராசிகளிலுமே காணப்பட்டாலும், சில ராசிக்காரர்களுக்கு இந்த யோகமானது அதிர்ஷ்டத்தை பிரகாசிக்க வைக்கும். இப்போது அந்த ராசிக்காரர்கள் யார்யார் என்பதைக் காண்போம்.

ரிஷபம்
ரிஷப ராசியின் 9 ஆவது வீட்டில் பத்ரா ராஜயோகம் உருவாகவுள்ளது. இதனால் இக்காலத்தில் உங்களின் அதிர்ஷ்டம் பிரகாசிக்கும். வெளிநாடு செல்வதற்கான வாய்ப்புகள் கிடைக்கும். மாணவர்கள் தேர்வுகளில் நல்ல வெறறியைப் பெறுவார்கள். வீட்டில் சுப நிகழ்ச்சிகள் நடக்க வாய்ப்புள்ளது. ஆன்மீகத்தில் ஆர்வம் அதிகரிக்கும். குழந்தைகளால் இக்காலத்தில் மகிழ்ச்சியான செய்தியைப் பெறுவீர்கள்.

மகரம்
மகர ராசியின் முதல் வீட்டில் பத்ரா ராஜயோகம் உருவாகிறது. எனவே இந்த ராசிக்காரர்களின் தன்னம்பிக்கை இக்காலத்தில் அதிகரிக்கும். அதோடு வாழ்க்கையில் வசதிகள் அதிகரிக்கும். இந்த காலத்தில் பணத்தை சேமிப்பதிலும், முதலீடு செய்வதிலும் ஆர்வம் அதிகரிக்கும் மற்றும் அதில் வெற்றியும் கிடைக்கும். இக்காலகட்டத்தில் முன்னேற்றத்திற்கு கிடைக்கும் எந்த ஒரு சந்தர்ப்பத்தையும் நழுவவிடாதீர்கள். திருமணமாகாதவர்களுக்கு இக்காலத்தில் நல்ல திருமண வரன் கிடைக்கும். ஆரோக்கியத்தைப் பொறுத்தவரை, சிறப்பாக இருக்கும்.

கன்னி
கன்னி ராசியின் 5 ஆவது வீட்டில் பத்ரா ராஜயோகம் உருவாகவுள்ளது. இதனால் கன்னி ராசிக்காரர்கள் வியாபாரம் மற்றும் வேலையில் நல்ல வெற்றியைப் பெறுவார்கள். அதோடு வியாபாரிகளுக்கு நல்ல லாபமும், பணிபுரிபவர்களுக்கு வருமான உயர்வும் கிடைக்கும். இது தவிர புதிய வருமான வழிகளும் கிடைக்கும். வேலை தேடிக் கொண்டிருப்பவர்களுக்கு இக்காலத்தில் நல்ல வேலை கிடைக்கும். காதலிப்பவர்கள், தங்கள் துணையுடன் பயணம் செய்ய வாய்ப்புகள் கிடைக்கும்.
(பொறுப்புத் துறப்பு: மேலே கொடுக்கப்பட்டுள்ள தகவல் இணையத்தில் கிடைக்கும் அனுமானங்கள் மற்றும் தகவல்களின் அடிப்படையில் கொடுக்கப்பட்டுள்ளன மற்றும் நம்பகத்தன்மைக்கு உத்தரவாதம் இல்லை. தமிழ் போல்ட்ஸ்கை கட்டுரை தொடர்பான தகவலை உறுதிப்படுத்தவில்லை. மேலும் எங்கள் ஒரே நோக்கம் தகவலை வழங்குவது மட்டுமே. அதை வெறும் தகவலாக மட்டும் எடுத்துக் கொள்ள வேண்டும். எந்தவொரு தகவலையும் அனுமானத்தையும் பயிற்சி செய்வதற்கு அல்லது செயல்படுத்துவதற்கு முன், தயவுசெய்து சம்பந்தப்பட்ட நிபுணரை அணுகவும்.)



Click it and Unblock the Notifications
