Latest Updates
-
1 கப் கடலைப்பருப்பு இருந்தா.. சப்பாத்திக்கு இப்படி சைடு டிஷ் பண்ணுங்க.. டக்கரா இருக்கும்.. -
இந்த 4 ராசிகாரங்க அவங்க நண்பர்களுக்கு ரொம்ப விசுவாசமா இருப்பார்களாம் - உங்க ராசி இதுல இருக்கா? -
பார்லர் செல்லாமல் முகப்பொலிவை அதிகரிக்கணுமா? அப்ப ரோஸ் வாட்டரை இப்படி யூஸ் பண்ணுங்க... -
5 லட்ச ரூபாய்க்கு விற்கப்படும் உலகின் காஸ்ட்லியான ஐஸ்கிரீம் - அப்படி இதுல என்னதான் ஸ்பெஷல் தெரியுமா? -
1 கப் பச்சரிசி இருந்தா.. ஈவ்னிங் டைம்-ல இந்த ஸ்நாக்ஸை செய்யுங்க.. பசங்க கேட்டு விரும்பி சாப்பிடுவாங்க.. -
World Heart Day 2026: 1 சிகரெட் அடிச்சா 20 நிமிஷத்துல இதயத்துல என்ன நடக்கும்? - விளக்கும் இதய நிபுணர்! -
4 பிரெட் இருந்தா இந்த மாதிரி சுவையான புலாவ் செஞ்சு பாருங்க - வீட்ல எல்லோரும் விரும்பி சாப்பிடுவாங்க -
சூரியனின் நட்சத்திர பெயர்ச்சி: அக்டோபர் 11 வரை இந்த 5 ராசிக்கு பணமும், வெற்றியும் குவியும்! -
லாயருக்கும், அட்வகேட்டுக்கும் உள்ள வித்தியாசம் என்ன தெரியுமா? அப்ப ரெண்டும் ஒன்னு இல்லையா? ஷாக் ஆகாதீங்க -
அவலும், முட்டையும் இருந்தா.. காலையில் இந்த டிபனை ட்ரை பண்ணி பாருங்க..
புதன் பெயர்ச்சியால் பிப்ரவரி 07 முதல் அடுத்த 20 நாட்கள் இந்த 3 ராசிகளின் அதிர்ஷ்டம் பிரகாசிக்கும்..
புதன் 2023 பிப்ரவரி மாதத்தில் 3 முறை ராசியை மாற்றுகிறார். அதில் முதலாவதாக பிப்ரவரி 07 ஆம் தேதி புதன் தனுசு ராசியில் இருந்து மகர ராசிக்கு செல்கிறார். இந்த மகர ராசியில் புதன் பிப்ரவரி 27 வரை இருப்பார்.
நவகிரகங்களில் புத்திகாரனான புதன் மிகவும் குறுகிய காலத்தில் ராசியை மாற்றும் கிரகமாகும். மேலும் புதன் மிதுனம் மற்றும் கன்னி ராசிகளின் அதிபதியாவார். அப்படிப்பட்ட புதன் 2023 பிப்ரவரி மாதத்தில் 3 முறை ராசியை மாற்றுகிறார். அதில் முதலாவதாக பிப்ரவரி 07 ஆம் தேதி புதன் தனுசு ராசியில் இருந்து மகர ராசிக்கு செல்கிறார். இந்த மகர ராசியில் புதன் பிப்ரவரி 27 வரை இருப்பார்.

புதன் ராசியை மாற்றும் போது அதன் தாக்கம் அனைத்து ராசிகளிலுமே காணப்படும். ஆயினும் இந்த புதன் பெயர்ச்சியால் 3 ராசிக்காரர்கள் அற்புதமான பலனைப் பெறப் போகிறார்கள். சொல்லப்போனால் இந்த 20 நாட்கள் இந்த ராசிக்காரர்கள் ஏராளமான நற்பலனைப் பெறப் போகிறார்கள். இப்போது அந்த ராசிக்காரர்கள் யார்யார் என்பதைக் காண்போம். உங்கள் ராசியும் அதில் உள்ளதா என்பதை தொடர்ந்து படித்து தெரிந்து கொள்ளுங்கள்.

கடகம்
கடக ராசியின் 7 ஆவது வீட்டிற்கு புதன் செல்கிறார். இது திருமண வாழ்க்கை மற்றும் கூட்டாண்மையின் வீடாக கருதப்படுகிறது. இதனால் இக்காலத்தில் கடக ராசிக்காரர்கள் வாழ்க்கைத் துணையின் முழு ஆதரவைப் பெறுவார்கள். உங்கள் வாழ்க்கைத் துணையுடனான உறவு சிறப்பாக இருக்கும். வணிகர்கள் இக்காலத்தில் புதிய ஒப்பந்தத்தைப் பெறுவார்கள். கூட்டு தொழில் செய்பவர்கள் இக்காலத்தில் நல்ல லாபத்தைப் பெறுவார்கள். திருமணமாகாதவர்களுக்கு திருமண வரன் கிடைக்க வாய்ப்புள்ளது.

கன்னி
கன்னி ராசியின் 5 ஆவது வீட்டிற்கு புதன் செல்கிறார். இது காதல் விவகாரம், முன்னேற்றம் ஆகியவற்றின் வீடாக கருதப்படுகிறது. இதனால் இக்காலத்தில் உங்களின் மரியாதை அதிகரிக்கும். பணியிடத்தில் உங்களுக்கு அதிக உரிமைகள் வழங்கப்படும். பதவி உயர்வு கிடைப்பதற்கான வாய்ப்புக்கள் உள்ளன. காதலிப்பவர்களுக்கு திருமணம் நடைபெற வாய்ப்புள்ளது. மேலும் இக்காலத்தில் குழந்தைகளால் சில நல்ல செய்திகளைப் பெறுவீர்கள்.

துலாம்
துலாம் ராசியின் 4 ஆவது வீட்டிற்கு புதன் செல்கிறார். இதனால் இக்காலத்தில் துலாம் ராசிக்காரர்கள் அனைத்துவிதமான உடல் சுகங்களையும் பெறுவார்கள். வாகனம் மற்றும் வீடு வாங்கும் திட்டமிருந்தால், அதில் வெற்றி கிடைக்கும். பணிபுரிபவர்களுக்கு தங்கள் உயர் அதிகாரிகளுடனான உறவு மேம்படும். தொழிலதிபர்களுக்கு இந்த காலகட்டத்தில் ஒரு பெரிய மற்றும் புதிய ஒப்பந்தம் கிடைக்கும் வாய்ப்புள்ளது. முக்கியமாக உங்கள் தாயுடனான உறவு சிறப்பாக இருக்கும்.
(பொறுப்புத் துறப்பு: மேலே கொடுக்கப்பட்டுள்ள தகவல் இணையத்தில் கிடைக்கும் அனுமானங்கள் மற்றும் தகவல்களின் அடிப்படையில் கொடுக்கப்பட்டுள்ளன மற்றும் நம்பகத்தன்மைக்கு உத்தரவாதம் இல்லை. தமிழ் போல்ட்ஸ்கை கட்டுரை தொடர்பான தகவலை உறுதிப்படுத்தவில்லை. மேலும் எங்கள் ஒரே நோக்கம் தகவலை வழங்குவது மட்டுமே. அதை வெறும் தகவலாக மட்டும் எடுத்துக் கொள்ள வேண்டும். எந்தவொரு தகவலையும் அனுமானத்தையும் பயிற்சி செய்வதற்கு அல்லது செயல்படுத்துவதற்கு முன், தயவுசெய்து சம்பந்தப்பட்ட நிபுணரை அணுகவும்.)



Click it and Unblock the Notifications
