Latest Updates
-
கேதுவின் நட்சத்திர மாற்றத்தால் இந்த 3 ராசிக்காரர்கள் டபுள் ஜாக்பாட் அடிக்கப்போறாங்களாம்... உங்க ராசி என்ன? -
ஹோட்டல் ஸ்டைல் ராயல் தேங்காய் சட்னி ரெசிபி... இந்த பொருளை சேர்த்து அரைச்சு பாருங்க... செமையா இருக்கும்...! -
புடலங்காய் வாங்குனா இந்த மாதிரி ஆந்திரா ஸ்டைலில் தொக்கு செஞ்சு பாருங்க...எல்லாத்துக்கும் செம சைடிஷா இருக்கும்! -
ஆரோக்கியமான விந்தணுவின் அறிகுறிகள்... உங்ககிட்ட இந்த அறிகுறிகள் இருக்கா? செக் பண்ணிக்கோங்க...! -
இந்த 4 ராசிக்காரங்க சாத்தானின் செல்ல குழந்தைகளாம்... தீய குணங்கள்தான் இவங்ககிட்ட அதிகமா இருக்குமாம்,,,! -
கொங்குநாடு தக்காளி குருமா ரெசிபி... இதை ஒருதடவை செஞ்சு பாருங்க...இட்லி, தோசைக்கு அட்டகாசமா இருக்கும்...! -
2K கிட்ஸ் அதிகம் விரும்பும் Slow Dating என்றால் என்ன? இளைஞர்கள் ஏன் டேட்டிங்கை விரும்புகிறார்கள் தெரியுமா? -
சனிபகவான்-சுக்கிரனின் அரிய இணைப்பால் இந்த 3 ராசிக்காரர்கள் வாழ்க்கையில் அற்புத மாற்றங்கள் நிகழப்போகுதாம்...! -
1/2 கப் கோதுமை ரவா இருந்தா.. காலையில் இந்த டிபனை செய்யுங்க.. கேட்டு விரும்பி சாப்பிடுவாங்க.. -
இன்றைய ராசிபலன் 05 மார்ச் 2026: இன்று இந்த 3 ராசிக்காரங்க கவனமாக வாகனம் ஓட்டணும்...!
தனுசு ராசியில் உதயமாகும் புதன்: ஜனவரி 12 முதல் இந்த ராசிகளுக்கு தொழிலில் நல்ல லாபம் கிடைக்கப் போகுது...
தனுசு ராசியில் புதன் உதயமாவதால் 3 ராசிக்காரர்கள் தொழிலில் அதிக வெற்றியையும், லாபத்தையும் பெறப் போகிறார்கள். இப்போது அந்த ராசிக்காரர்கள் யார்யார் என்பதைக் காண்போம்.
Mercury Rise In Sagittarius 2023: ஜோதிடத்தில் புதன் வியாபாரம் மற்றும் புத்திசாலித்தனத்தின் காரணியாக கருதப்படுகிறார். இந்த புதன் குறுகிய காலத்தில் ராசியை மாற்றுபவர். இந்த புதன் 2023 ஜனவரி 02 ஆம் தேதி தனுசு ராசியில் அஸ்தமனமானார். இதனால் புதனின் நற்பலன்கள் தடைபட்டு, கெடுபலன்களை அதிகம் பெறக்கூடும். 11 நாட்கள் அஸ்தமன நிலையில் இருக்கும் புதன், 2023 ஜனவரி 12 ஆம் தேதி தனுசு ராசியில் உதயமாகவுள்ளார். இந்த புதனின் மாற்றத்தால் அனைத்து ராசிகளிலுமே ஒருவித தாக்கம் தெரியும்.

குறிப்பாக தனுசு ராசியில் புதன் உதயமாவதால் 3 ராசிக்காரர்கள் தொழிலில் அதிக வெற்றியையும், லாபத்தையும் பெறப் போகிறார்கள். இப்போது அந்த ராசிக்காரர்கள் யார்யார் என்பதைக் காண்போம். உங்கள் ராசியும் அதில் உள்ளதா என்பதை தொடர்ந்து படித்து தெரிந்து கொள்ளுங்கள்.

மேஷம்
புதன் உதயமானது மேஷ ராசிக்காரர்களுக்கு நல்ல பலனை வாரி வழங்கும். ஏனென்றால் புதன் மேஷ ராசியின் 9 ஆவது வீட்டில் உதயமாகிறார். இது அதிர்ஷ்ட வீடாக கருதப்படுகிறது. எனவே இந்த காலத்தில் மேஷ ராசிக்காரர்களுக்கு அதிர்ஷ்டம் ஆதரவாக இருக்கும். அதிர்ஷ்டத்தின் ஆதரவால் அனைத்து விஷயங்களிலும் வெற்றி கிடைக்கும். குறிப்பாக மாணவர்கள் தேர்வுகளில் நல்ல வெற்றியைப் பெறுவார்கள்.

கன்னி
கன்னி ராசியின் அதிபதி புதன். எனவே புதன் உதயமானது கன்னி ராசிக்காரர்களுக்கு நன்றாக இருக்கும். ஏனெனில் புதன் கன்னி ராசியின் 4 ஆவது வீட்டில் உதயமாகிறார். எனவே இக்காலத்தில் அனைத்துவிதமான மகிழ்ச்சியும், பொருளும் கிடைக்கும். அதோடு பரம்பரை சொத்துக்களால் பலனைப் பெற வாய்ப்புள்ளது. வாகனம் மற்றும் புதிய சொத்து வாங்கும் வாய்ப்புகள் கிடைக்கும். புதனின் பார்வை 10 ஆவது வீட்டில் விழுவதால் வணிகம் பிரகாசமாக இருக்கும் மற்றும் நீண்ட கால முதலீடுகள் இக்காலத்தில் நல்ல பலனை அளிக்கும்.

மகரம்
புதன் உதயமானது மகர ராசிக்காரர்களுக்கு அற்புதமான பலன்களை வழங்கும். அதுவும் புதன் மகர ராசியின் 12 ஆவது வீட்டில் உதயமாகிறார். இதனால் இக்காலத்தில் திடீர் பண வரவு கிடைக்கும். அதே வேளையில் புதிய தொடர்புகளால் சமூக வட்டமும் அதிகரிக்கும். தொழில் ரீதியாக, இக்காலத்தில் பயணத்தை மேற்கொள்ள வேண்டியிருக்கும். இப்பயணத்தால் நல்ல லாபமும் கிடைக்கும். மேலும் இக்காலத்தில் உங்களின் சிக்கிய பணம் கைக்கு வந்து சேரும்.
(பொறுப்புத் துறப்பு: மேலே கொடுக்கப்பட்டுள்ள தகவல் இணையத்தில் கிடைக்கும் அனுமானங்கள் மற்றும் தகவல்களின் அடிப்படையில் கொடுக்கப்பட்டுள்ளன மற்றும் நம்பகத்தன்மைக்கு உத்தரவாதம் இல்லை. தமிழ் போல்ட்ஸ்கை கட்டுரை தொடர்பான தகவலை உறுதிப்படுத்தவில்லை. மேலும் எங்கள் ஒரே நோக்கம் தகவலை வழங்குவது மட்டுமே. அதை வெறும் தகவலாக மட்டும் எடுத்துக் கொள்ள வேண்டும். எந்தவொரு தகவலையும் அனுமானத்தையும் பயிற்சி செய்வதற்கு அல்லது செயல்படுத்துவதற்கு முன், தயவுசெய்து சம்பந்தப்பட்ட நிபுணரை அணுகவும்.)



Click it and Unblock the Notifications











