Latest Updates
-
சூரியன் துலாம் ராசிக்குள் நுழையப்போவதால் ஜெயிக்கிற குதிரையாக ஜொலிக்கப்போகும் 4 ராசிகள் - உங்க ராசி என்ன? -
தாபா ஸ்டைல் ராஜ்மா மசாலா ரெசிபி - இந்த மாதிரி சைடிஷ் செஞ்சு பாருங்க - சப்பாத்தி, பூரிக்கு அருமையா இருக்கும் -
1 கப் கடலைப்பருப்பு இருந்தா.. சப்பாத்திக்கு இப்படி சைடு டிஷ் பண்ணுங்க.. டக்கரா இருக்கும்.. -
இந்த 4 ராசிக்காரங்க அவங்க நண்பர்களுக்கு ரொம்ப விசுவாசமா இருப்பார்களாம் - உங்க ராசி இதுல இருக்கா? -
பார்லர் செல்லாமல் முகப்பொலிவை அதிகரிக்கணுமா? அப்ப ரோஸ் வாட்டரை இப்படி யூஸ் பண்ணுங்க... -
5 லட்ச ரூபாய்க்கு விற்கப்படும் உலகின் காஸ்ட்லியான ஐஸ்கிரீம் - அப்படி இதுல என்னதான் ஸ்பெஷல் தெரியுமா? -
1 கப் பச்சரிசி இருந்தா.. ஈவ்னிங் டைம்-ல இந்த ஸ்நாக்ஸை செய்யுங்க.. பசங்க கேட்டு விரும்பி சாப்பிடுவாங்க.. -
World Heart Day 2026: 1 சிகரெட் அடிச்சா 20 நிமிஷத்துல இதயத்துல என்னென்ன நடக்கும்? - விளக்கும் இதய நிபுணர்! -
4 பிரெட் இருந்தா இந்த மாதிரி சுவையான புலாவ் செஞ்சு பாருங்க - வீட்ல எல்லோரும் விரும்பி சாப்பிடுவாங்க -
சூரியனின் நட்சத்திர பெயர்ச்சி: அக்டோபர் 11 வரை இந்த 5 ராசிக்கு பணமும், வெற்றியும் குவியும்!
தனுசு ராசியில் புதன் வக்ர நிவர்த்தியடைவதால் இன்று முதல் அடுத்த 20 நாட்கள் இந்த 7 ராசிக்கு எதிலும் வெற்றி தான்!
பேச்சு, புத்தி, தகவல் தொடர்பு, கற்றல் திறன் ஆகியவற்றின் காரணியாக கருதப்படும் புதன், தனுசு ராசியில் வக்ர நிவர்த்தி அடைவதால் சில ராசிக்காரர்கள் ஏராளமான நற்பலன்களைப் பெறப் போகிறார்கள்.
ஜோதிடத்தில் கிரகங்களின் இயக்கங்களைக் கொண்டு பலன்கள் கணித்து கூறப்படுகின்றன. மேலும் நவகிரகங்கள் ஒவ்வொன்றும் அவ்வப்போது ராசியை மாற்றும். அப்படி மாற்றும் போது அதன் தாக்கம் 12 ராசிகளிலும் நல்லதாகவோ கெட்டதாகவோ இருக்கலாம். அந்த வகையில் 2023 ஜனவரி 02 ஆம் தேதி புதன் தனுசு ராசியில் அஸ்தமனமானார். அதன் பின் ஜனவரி 13 ஆம் தேதி தனுசு ராசியில் உதயமானார். அதைத் தொடர்ந்து 2023 ஜனவரி 18 ஆம் தேதி புதன் தனுசு ராசியில் வக்ர நிவர்த்தி அடைந்து, நேர்பாதையில் பயணிக்கவுள்ளார்.

பேச்சு, புத்தி, தகவல் தொடர்பு, கற்றல் திறன் ஆகியவற்றின் காரணியாக கருதப்படும் புதன், தனுசு ராசியில் வக்ர நிவர்த்தி அடைவதால் சில ராசிக்காரர்கள் ஏராளமான நற்பலன்களைப் பெறப் போகிறார்கள். இப்போது தனுசு ராசியில் வக்ர நிவர்த்தி அடையும் புதனால் எந்தெந்த ராசிக்காரர்கள் நற்பலன்களைப் பெறப் போகிறார்கள் என்பதைக் காண்போம்.

ரிஷபம்
ரிஷப ராசியின் 8 ஆவது வீட்டில் புதன் வக்ர நிவர்த்தி அடைகிறார். இதனால் திடீர் நிதி ஆதாயங்கள் கிடைக்கும். வணிகர்களுக்கு புதிய ஒப்பந்தங்கள் கிடைக்கும். பேச்சு தொடர்பான வேலையில் இருப்பவர்கள், இக்காலத்தில் நல்ல முன்னேற்றத்தைக் காண்பார்கள். மாணவர்கள் இக்காலத்தில் படிப்பில் சிறந்து விளங்குவார்கள்.

மிதுனம்
மிதுன ராசியின் 7 ஆவது வீட்டில் புதன் வக்ர நிவர்த்தி அடைகிறார். இதனால் மாணவர்களுக்கு இக்காலம் நன்றாக இருக்கும். ஆசிரியர் தொழிலில் இருப்பவர்களுக்கு இக்காலம் நல்ல காலமாக இருக்கும். உங்கள் ராசியில் குரு நல்ல நிலையில் இருப்பதால், கல்வி தொடர்பான தொழிலில் இருப்பவர்களுக்கு இக்காலம் பொற்காலமாக இருக்கும்.

கடகம்
கடக ராசியின் 6 ஆவது வீட்டில் புதன் வக்ர நிவர்த்தி அடைகிறார். இதனால் வழக்கறிஞர்கள் அல்லது நீதிபதி போன்ற நீதித்துறையில் இருப்பவர்களுக்கு இக்காலம் சிறந்த காலமாக இருக்கும். எம்என்சி-யில் தகவல் தொடர்பு சம்பந்தமான வேலையில் இருப்பவர்களுக்கும் இக்காலம் நன்றாக இருக்கும். மேலும் இக்காலத்தில் வெளிநாடு செல்வதற்கான வாய்ப்புக்களும் கிடைக்கும்.

துலாம்
துலாம் ராசியின் 3 ஆவது வீட்டில் புதன் வக்ரை நிவர்த்தி அடைகிறார். இதன் விளைவாக தொழில்முனைவோர் மற்றும் வணிகர்களுக்கு இக்காலம் நன்றாக இருக்கும். மூன்றாவது வீடு ரிஸ்க் எடுக்கும் திறன் மற்றும் தொடர்பு கொள்ளும் முறை ஆகியவற்றைக் குறிக்கிறது. எனவே மாஸ் கம்யூனிகேசன் மற்றும் பத்திரிக்கையில் ஈடுபடும் மாணவர்களுக்கு இக்காலம் நன்றாக இருக்கும். எழுத்து துறை மற்றும் படைப்பாற்றல் கலைஞர்களுக்கும் இக்காலம் நல்ல காலமாக இருக்கும்.

தனுசு
தனுசு ராசியின் முதல் வீட்டில் புதன் வக்ர நிவர்த்தி அடைகிறார். எனவே வியாபாரிகளுக்கு இக்காலம் நன்றாக இருக்கும். வியாபாரம் செழிக்கும். சமூகத்தில் கௌரவமும், புகழும் அதிகரிப்பதற்கான வாய்ப்புகள் உள்ளன. இக்காலகட்டத்தில் உங்களின் தொழில் வளர்ச்சிக்கு உதவும் புதிய தொடர்புகளை உருவாக்குவீர்கள்.

கும்பம்
கும்ப ராசியின் 11 ஆவது வீட்டில் புதன் வக்ர நிவர்த்தி அடைகிறார். இதனால் ஆசிரியர்கள், பேராசிரியர்கள் போன்றவர்களுக்கு இக்காலம் நல்ல காலமாக இருக்கும். எழுத்து தொடர்பான வேலை செய்பவர்கள் இக்காலத்தில் முன்னேற்றத்திற்கான வாய்ப்பைப் பெறுவார்கள். புதனின் பார்வை 5 ஆவது வீட்டில் விழுவதால், படிப்பு மற்றும் கற்பிப்பதில் ஆர்வம் அதிகரிக்கும்.

மீனம்
மீன ராசியின் 10 ஆவது வீட்டில் புதன் வக்ர நிவர்த்தி அடைகிறார். இதனால் இக்காலமானது கூட்டு வணிகம் தொடங்குவதற்கு நல்ல காலமாக இருக்கும். மாணவர்கள் படிப்பில் சிறந்து விளங்குவார்கள். உங்கள் வாழ்க்கைத் துணையுடன் செய்யும் எந்த வேலையும் செழிக்கும். தனியால் துறையில் வேலை செய்வோருக்கு புதிய வாய்ப்புகள் கிடைக்கும் மற்றும் பதவி உயர்வுக்கான வாய்ப்புகளும் உள்ளன.
(பொறுப்புத் துறப்பு: மேலே கொடுக்கப்பட்டுள்ள தகவல் இணையத்தில் கிடைக்கும் அனுமானங்கள் மற்றும் தகவல்களின் அடிப்படையில் கொடுக்கப்பட்டுள்ளன மற்றும் நம்பகத்தன்மைக்கு உத்தரவாதம் இல்லை. தமிழ் போல்ட்ஸ்கை கட்டுரை தொடர்பான தகவலை உறுதிப்படுத்தவில்லை. மேலும் எங்கள் ஒரே நோக்கம் தகவலை வழங்குவது மட்டுமே. அதை வெறும் தகவலாக மட்டும் எடுத்துக் கொள்ள வேண்டும். எந்தவொரு தகவலையும் அனுமானத்தையும் பயிற்சி செய்வதற்கு அல்லது செயல்படுத்துவதற்கு முன், தயவுசெய்து சம்பந்தப்பட்ட நிபுணரை அணுகவும்.)



Click it and Unblock the Notifications
