Latest Updates
-
10 நிமிசத்தில் செய்யும் லெமன் அவல் உப்புமா ரெசிபி - செஞ்சு பாருங்க - சூப்பரா, ஆரோக்கியமா இருக்கும் -
லன்ச்பாக்ஸ்-க்கு இப்படி கேரட் ரைஸ் செஞ்சு குடுங்க - பிள்ளைங்க மிச்சம் வெக்காம சாப்பிடுவாங்க.. -
இந்த 2 ராசிக்காரர்களுக்கு துளியும் நன்றியுணர்வு இருக்காதாம் - இவங்களுக்கு ஹெல்ப் பண்றதே வேஸ்ட் -
Aadi Pooram 2026: ஆடிப்பூரம் நாளில் என்னென்ன செய்யணும் தெரியுமா? -
இந்தியா-பாகிஸ்தான் எல்லையை வெறும் 5 வாரத்தில் உருவாக்கியவர் யார் தெரியுமா? நம்ப முடியாத இந்திய வரலாறு -
கடகத்தில் உச்சமடையும் குரு பகவான்: இன்று முதல் இந்த 5 ராசிக்காரர்களின் பேங்க் பேலன்ஸ் உயரப்போகுது! -
சூரியன் சொந்த நட்சத்திரத்திற்குள் நுழைவதால் வாழ்க்கையில் உச்சத்தை தொடப்போகும் 3 ராசிகள் இவங்கதான் -
முருங்கைக்காய் பொரிச்ச குழம்பு - இப்படி செய்யுங்க.. தட்டு சோறு நொடியில் காலியாகும்.. -
சர்க்கரை நோயாளிகளுக்கான டாப் 5 காய்கறிகளை பட்டியலிட்ட டாக்டர்! என்னன்னு தெரிஞ்சுக்கோங்க.. -
நெல்லை ஸ்டைல் தலக சாம்பார் ரெசிபி - ஒரு தடவை செஞ்சு பாருங்க - ஒரு வாரம் வைச்சு சூப்பரா சாப்பிடலாம்
புதன் வக்ர நிவர்த்தியால் பிப்ரவரி 07 வரை இந்த 3 ராசிக்கு கஷ்டங்கள் அதிகமா இருக்கும்.. கவனமா இருங்க..
2023 ஜனவரியில் தனுசு ராசியில் வக்ர நிவர்த்தி அடைந்த புதனால் எந்த ராசிக்காரர்களுக்கு கஷ்டங்கள் நிறைந்ததாக இருக்கும் என்பதைக் காண்போம்.
ஜோதிடத்தில் புதன் நல்ல கிரகமாக கருதப்படுகிறது. நவகிரகங்களின் இளவரசனாக கருதப்படும் புதன், பேச்சு, தகவல் தொடர்பு, கற்றல் திறன் ஆகியவற்றின் காரணியாக கருதப்படுகிறார். பொதுவாக கிரகங்கள் வக்ர நிலையில் இருக்கும் போது அதன் ஆற்றல் சற்று குறைவாக இருக்கும் மற்றும் அது வழங்கும் பலன்களும் மோசமாகவே இருக்கும். அப்படி தான் புதன் வக்ர நிலையில் இருந்தார். இந்நிலையில் 2023 ஜனவரி 18 ஆம் தேதி மாலை 06.18 மணிக்கு புதன் வக்ர நிவர்த்தி அடைந்துள்ளார்.

புதன் வக்ர நிவர்த்தியின் தாக்கம் அனைத்து ராசிகளிலும் காணப்படும். அதில் பல ராசிக்காரர்கள் இதுவரை சந்தித்து வந்த பிரச்சனைகளில் இருந்து விடுபட்டு நற்பலன்களைப் பெறலாம். அதே சமயம் சில ராசிக்காரர்களுக்கு பிரச்சனைகள் மற்றும் கஷ்டங்கள் நிறைந்ததாக இருக்கும். இப்போது 2023 ஜனவரியில் தனுசு ராசியில் வக்ர நிவர்த்தி அடைந்த புதனால் எந்த ராசிக்காரர்களுக்கு கஷ்டங்கள் நிறைந்ததாக இருக்கும் என்பதைக் காண்போம்.

ரிஷபம்
ரிஷப ராசியின் 5 மற்றும் 2 ஆவது வீட்டின் அதிபதியான புதன், 8 ஆவது வீட்டில் வக்ர நிவர்த்தி அடைந்துள்ளார். இதனால் ரிஷப ராசிக்காரர்கள் தங்கள் ஆரோக்கியத்தில் சற்று கவனமாக இருக்க வேண்டும். தனிப்பட்ட வாழ்க்கையிலும், தொழில் வாழ்க்கையிலும் சில பிரச்சனைகளை சந்திக்க வாய்ப்புள்ளது. இக்காலத்தில் பேசும் போது உங்கள் வார்த்தைகளை பார்த்து பயன்படுத்துங்கள். உங்களின் பேச்சே பல பிரச்சனைகளை இழுக்கலாம்.

கடகம்
கடக ராசியின் 3 மற்றும் 12 ஆவது வீட்டின் அதிபதியான புதன், 6 ஆவது வீட்டில் வக்ர நிவர்த்தி அடைந்துள்ளார். இதனால் இந்த ராசிக்காரர்கள் சற்று கலவையான பலன்களைப் பெறுவார்கள். வேலை செய்பவர்களுக்கு இக்காலம் சாதகமாக இருந்தாலும், ஆரோக்கிய பிரச்சனைகளால் அவதிப்படலாம். குறிப்பாக நிறைய மருத்துவ செலவுகளை செய்ய வேண்டியிருக்கும். எனவே ஆரோக்கிய விஷயத்தில் உஷாராக இருங்கள்.

மகரம்
மகர ராசியின் 6 மற்றும் 9 ஆவது வீட்டின் அதிபதியான புதன், 12 ஆவது வீட்டில் வக்ர நிவர்த்தி அடைந்துள்ளார். இதனால் இந்த ராசிக்காரர்கள் தொழில் வாழ்க்கையில் பாதகமாக விளைவுகளை சந்திக்க நேரிடும். உங்கள் தந்தையின் ஆரோக்கியம் மோசமடைய வாய்ப்புள்ளது. இந்நிலையில், உங்கள் தந்தையின் ஆரோக்கியத்தில் கவனமாக இருக்க அறிவுறுத்தப்படுகிறது.

புதனால் சந்திக்கும் பிரச்சனைகளைக் குறைக்கும் பரிகாரங்கள்
* புதன்கிழமைகளில் விநாயகரை முழு நம்பிக்கையுடன் வழிபடுங்கள்.
* புதன்கிழமைகளில் விரதமிருக்கலாம்.
* நீலம் மற்றும் பச்சை நிற ஆடைகளை ஏழை எளியோருக்கு தானமாக வழங்கலாம்.
* ஜோதிடரின் ஆலோசனைக்கு பிறகு புதனை வலுப்படுத்த மரகத கல்லை அணியலாம்.
(பொறுப்புத் துறப்பு: மேலே கொடுக்கப்பட்டுள்ள தகவல் இணையத்தில் கிடைக்கும் அனுமானங்கள் மற்றும் தகவல்களின் அடிப்படையில் கொடுக்கப்பட்டுள்ளன மற்றும் நம்பகத்தன்மைக்கு உத்தரவாதம் இல்லை. தமிழ் போல்ட்ஸ்கை கட்டுரை தொடர்பான தகவலை உறுதிப்படுத்தவில்லை. மேலும் எங்கள் ஒரே நோக்கம் தகவலை வழங்குவது மட்டுமே. அதை வெறும் தகவலாக மட்டும் எடுத்துக் கொள்ள வேண்டும். எந்தவொரு தகவலையும் அனுமானத்தையும் பயிற்சி செய்வதற்கு அல்லது செயல்படுத்துவதற்கு முன், தயவுசெய்து சம்பந்தப்பட்ட நிபுணரை அணுகவும்.)



Click it and Unblock the Notifications