Latest Updates
-
சூரியன் துலாம் ராசிக்குள் நுழையப்போவதால் ஜெயிக்கிற குதிரையாக ஜொலிக்கப்போகும் 4 ராசிகள் - உங்க ராசி என்ன? -
தாபா ஸ்டைல் ராஜ்மா மசாலா ரெசிபி - இந்த மாதிரி சைடிஷ் செஞ்சு பாருங்க - சப்பாத்தி, பூரிக்கு அருமையா இருக்கும் -
1 கப் கடலைப்பருப்பு இருந்தா.. சப்பாத்திக்கு இப்படி சைடு டிஷ் பண்ணுங்க.. டக்கரா இருக்கும்.. -
இந்த 4 ராசிக்காரங்க அவங்க நண்பர்களுக்கு ரொம்ப விசுவாசமா இருப்பார்களாம் - உங்க ராசி இதுல இருக்கா? -
பார்லர் செல்லாமல் முகப்பொலிவை அதிகரிக்கணுமா? அப்ப ரோஸ் வாட்டரை இப்படி யூஸ் பண்ணுங்க... -
5 லட்ச ரூபாய்க்கு விற்கப்படும் உலகின் காஸ்ட்லியான ஐஸ்கிரீம் - அப்படி இதுல என்னதான் ஸ்பெஷல் தெரியுமா? -
1 கப் பச்சரிசி இருந்தா.. ஈவ்னிங் டைம்-ல இந்த ஸ்நாக்ஸை செய்யுங்க.. பசங்க கேட்டு விரும்பி சாப்பிடுவாங்க.. -
World Heart Day 2026: 1 சிகரெட் அடிச்சா 20 நிமிஷத்துல இதயத்துல என்னென்ன நடக்கும்? - விளக்கும் இதய நிபுணர்! -
4 பிரெட் இருந்தா இந்த மாதிரி சுவையான புலாவ் செஞ்சு பாருங்க - வீட்ல எல்லோரும் விரும்பி சாப்பிடுவாங்க -
சூரியனின் நட்சத்திர பெயர்ச்சி: அக்டோபர் 11 வரை இந்த 5 ராசிக்கு பணமும், வெற்றியும் குவியும்!
Budh Margi 2023: புதன் வக்ர நிவர்த்தியால் ஜனவரி 18 முதல் இந்த ராசிக்காரர்களின் வாழ்க்கை பிரகாசமா இருக்கும்..
புதன் வக்ர நிவர்த்தி அடையும் போது, அதன் தாக்கம் 12 ராசிகளிலும் காணப்படும். இப்போது தனுசு ராசியில் வக்ர நிவர்த்தி அடையும் புதனால் 12 ராசிக்காரர்களும் பெறும் பலன்கள் என்னவென்பதைக் காண்போம்.
ஜோதிட சாஸ்திரத்தில், நவகிரகங்களின் இளவரசனாக கருதப்படுபவர் புதன். இந்த புதன் புத்திசாலித்தனம், பேச்சு, கற்றல் திறன், பகுத்தறியும் திறன் மற்றும் நல்ல தகவல் தொடர்பு ஆகியவற்றின் காரணியாக கருதப்படுகிறார். மேலும் புதன் மிதுனம் மற்றும் கன்னி ராசிகளின் அதிபதியாவார். தற்போது போது மனுசு ராசியில் வக்ர நிலையில் பயணித்து வருகிறார்.

இந்நிலையில் 2023 ஜனவரி 18 ஆம் தேதி மாலை 06.42 மணிக்கு தனுசு ராசியில் புதன் வக்ர நிவர்த்தி அடைகிறார். அதன் பின் 2023 பிப்ரவரி 07 ஆம் தேதி தனுசு ராசியில் இருந்து மகர ராசிக்கு செல்வார். புதன் வக்ர நிவர்த்தி அடையும் போது, அதன் தாக்கம் 12 ராசிகளிலும் காணப்படும். இப்போது தனுசு ராசியில் வக்ர நிவர்த்தி அடையும் புதனால் 12 ராசிக்காரர்களும் பெறும் பலன்கள் என்னவென்பதைக் காண்போம்.

மேஷம்
மேஷ ராசியின் 9 ஆவது வீட்டில் புதன் வக்ர நிவர்த்தி அடைகிறார். இதனால் அனைத்து வகையிலும் நல்ல வெற்றியைப் பெறுவீர்கள். ஆன்மீகத்தில் ஆர்வம் அதிகரிக்கும். இக்காலத்தில் எடுக்கும் முடிவுகள் மற்றும் செய்யும் பணிகள் பாராட்டப்படும். எழுத்து துறையில் இருப்பவர்கள் நல்ல பெயரைப் பெறுவார்கள். மாணவர்களுக்கு இது நல்ல காலமாக இருக்கும்.

ரிஷபம்
ரிஷப ராசியின் 8 ஆவது வீட்டில் புதன் வக்ர நிவர்த்தி அடைகிறார். இதனால் இக்காலமானது ஏற்ற இறக்கம் நிறைந்ததாக இருக்கும். உங்களின் எதிரிகள் அதிகரிப்பார்கள். ஆரோக்கியத்தில் சற்று கவனமாக இருக்க வேண்டும். பணியிடத்தில் சதிக்கு பலியாவதைத் தவிர்க்க, வேலையை முடித்துவிட்டு வீட்டிற்கு வர வேண்டும். பரம்பரை சொத்து தொடர்பான பிரச்சனைகள் பெரிதாக வாய்ப்புள்ளது. பண பரிவர்த்தனைகளில் கவனமாக இருங்கள்.

மிதுனம்
மிதுன ராசியின் 7 ஆவது வீட்டில் புதன் வக்ர நிவர்த்தி அடைகிறார். இதனால் சிறப்பான வெற்றியைப் பெறுவீர்கள். கூட்டு வியாபாரம் செய்வதைத் தவிர்க்க வேண்டும். தொழில் மற்றும் வியாபாரத்தில் முன்னேற்றம் ஏற்படும். எடுக்கும் முடிவுகள் நல்ல பலன்களைத் தரும். திருமண வாழ்க்கை இனிமையாக இருக்கும். மாமியார்-மாமனாருடனான உறவுகள் வலுவாக இருக்கும். உங்களைச் சுற்றியுள்ளவர்களே உங்களை வீழ்த்த முயற்சிப்பார்கள். எனவே சற்று ஜாக்கிரதையாக இருங்கள்.

கடகம்
கடக ராசியின் 6 ஆவது வீட்டில் புதன் வக்ர நிவர்த்தி அடைகிறார். எனவே இக்காலம் அவ்வளவு நன்றாக இருக்காது. இக்காலத்தில் எதிரிகள் அதிகரிப்பார்கள். நீதிமன்ற விஷயங்களால் மன அழுத்தம் அதிகரிக்கும். அதிக அலைச்சல் மற்றும் செலவுகளை எதிர்கொள்ள வேண்டியிருக்கும். நண்பர்கள் மற்றும் உறவினர்களிடம் இருந்து விரும்பத்தகாத செய்திகளைப் பெறுவீர்கள். வாகனம் ஓட்டும் போது கவனமாக இருக்க வேண்டும். மாணவர்கள் தேர்வில் நல்ல மதிப்பெண்களைப் பெற அதிகம் முயற்சிக்க வேண்டும்.

சிம்மம்
சிம்ம ராசியின் 5 ஆவது வீட்டில் புதன் வக்ர நிவர்த்தி அடைகிறார். இதனால் அனைத்து வகையிலும் நற்பலன்களைப் பெறுவீர்கள். மாணவர்கள் போட்டியில் வெற்றி பெறுவார்கள். காதல் திருமணம் செய்ய விரும்பினால், அதற்கு இக்காலம் சிறப்பு வாய்ந்ததாக இருக்கும். குடும்ப உறுப்பினர்களின் முழு ஆதரவு கிடைக்கும். நீண்ட நாட்களாக எதிர்பார்த்த காரியங்கள் நிறைவேறும். இக்காலத்தில் உங்களின் திட்டங்களை ரகசியமாக வைத்துக் கொண்டு செயல்பட்டால், வெற்றி பெறுவீர்கள்.

கன்னி
கன்னி ராசியின் 4 ஆவது வீட்டில் புதன் வக்ர நிவர்த்தி அடைகிறார். இதனால் நண்பர்கள் மற்றும் உறவினர்களின் மூலம் நல்ல செய்திகள் கிடைக்கும். வெளியூர் பயணங்களால் நல்ல ஆதாயம் கிடைக்கும். வெளிநாட்டில் படிக்க முயற்சி எடுத்தால், அதற்கு இக்காலம் சாதகமாக இருக்கும். சொத்து தொடர்பான பிரச்சனைகள் தீரும். பெற்றோரின் ஆரோக்கியத்தில் கவனம் செலுத்துங்கள்.

துலாம்
துலாம் ராசியின் 3 ஆவது வீட்டில் புதன் வக்ர நிவர்த்தி அடைகிறார். இதனால் இக்காலத்தில் கடினமான சூழ்நிலைகளையும் எளிதில் கையாள்வீர்கள். ஆன்மீகத்தில் ஆர்வம் அதிகரிக்கும். தொண்டுகளில் நாட்டம் அதிகரிக்கும். இக்காலத்தில் எடுக்கும் முடிவுகள் பாராட்டப்படும். சமூகத்தில் அந்தஸ்தும், கௌரவமும் அதிகரிக்கும்.

விருச்சிகம்
விருச்சிக ராசியின் 2 ஆவது வீட்டில் புதன் வக்ர நிவர்த்தி அடைகிறார். இதனால் நிதி நிலை வலுவாகும். கடன் கொடுத்த பணம் திரும்ப கிடைக்கும். ஆனால் இக்காலத்தில் யாருக்கும் கடன் கொடுக்காதீர்கள். இல்லாவிட்டால் நிதி இழப்பு ஏற்படும். குடும்பத்தில் பிரிவினை ஏற்பட விட்டுவிடாதீர்கள். நிலம்-சொத்து தொடர்பான விவகாரங்கள் தீரும்.புதிய வாகனம் வாங்கும் வாய்ப்பு உண்டு.

தனுசு
தனுசு ராசியின் முதல் வீட்டில் புதன் வக்ர நிவர்த்தி அடைகிறார். இதனால் எதிர்பாராத பல ஏற்ற தாழ்வுகளை சந்திக்க நேரிடும். உங்கள் கௌரவம் அதிகரிக்கும். உங்களைச் சுற்றியுள்ளவர்கள் உங்களை அவமானப்படுத்த ஒரு வாய்ப்பையும் விடமாட்டார்கள். மாணவர்கள் போட்டியில் வெற்றி பெறுவார்கள். புதுமணத் தம்பதிகளுக்கு குழந்தை பாக்கியம் கிடைக்கும் வாய்ப்பும் உள்ளது.

மகரம்
மகர ராசியின் 12 ஆவது வீட்டில் புதன் வக்ர நிவர்த்தி அடைகிறார். இதனால் இக்காலத்தில் அதிக அலைச்சல் மற்றும் செலவுகளை சந்திக்க நேரிடும். வெளிநாட்டு நிறுவனங்களில் வேலை அல்லது குடியுரிமைக்காக எடுக்கும் முயற்சிகளில் நல்ல வெற்றி கிடைக்கும். நீதிமன்றம் தொடர்பான விஷயங்களை வெளியே தீர்த்துக் கொள்வது நல்லது. ஆரோக்கியத்தில் சற்று கவனமாக இருங்கள்.

கும்பம்
கும்ப ராசியின் 11 ஆவது வீட்டில் புதன் வக்ர நிவர்த்தி அடைகிறார். இதனால் நீங்கள் பெரிய வேலையைத் தொடங்க விரும்பினால், அதற்கு இக்காலம் சாதகமாக இருக்கும். வேலையில் மாற்றத்தை எதிர்பார்த்துக் கொண்டிருந்தால், அதற்கு இக்காலம் சிறப்பாக இருக்கும். சர்ச்சைக்குரிய விஷயங்களை நீதிமன்றம் வரை கொண்டு செல்லாமல், வெளியே தீர்த்துக் கொள்வது நல்லது. காதல் திருமணம் செய்து கொள்ள விரும்பினால், அதற்கு இக்காலம் சாதகமாக இருக்கும்.

மீனம்
மீன ராசியின் 10 ஆவது வீட்டில் புதன் வக்ர நிவர்த்தி அடைகிறார். இதனால் இக்காலத்தில் எதிர்பாராத பல இனிமையான பலன்களைப் பெறுவீர்கள். அரசு துறையில் காத்திருக்கும் பணிகள் வெற்றிகரமாக முடிவடையும். வீடு, வாகனம் வாங்கும் வாய்ப்புண்டு. பெற்றோரின் ஆரோக்கியத்தில் கவனம் செலுத்த அறிவுறுத்தப்படுகிறது. போட்டியில் கலந்து கொள்ளும் மாணவர்களுக்கு இக்காலம் மிகவும் சாதகமாக இருக்கும்.
(பொறுப்புத் துறப்பு: மேலே கொடுக்கப்பட்டுள்ள தகவல் இணையத்தில் கிடைக்கும் அனுமானங்கள் மற்றும் தகவல்களின் அடிப்படையில் கொடுக்கப்பட்டுள்ளன மற்றும் நம்பகத்தன்மைக்கு உத்தரவாதம் இல்லை. தமிழ் போல்ட்ஸ்கை கட்டுரை தொடர்பான தகவலை உறுதிப்படுத்தவில்லை. மேலும் எங்கள் ஒரே நோக்கம் தகவலை வழங்குவது மட்டுமே. அதை வெறும் தகவலாக மட்டும் எடுத்துக் கொள்ள வேண்டும். எந்தவொரு தகவலையும் அனுமானத்தையும் பயிற்சி செய்வதற்கு அல்லது செயல்படுத்துவதற்கு முன், தயவுசெய்து சம்பந்தப்பட்ட நிபுணரை அணுகவும்.)



Click it and Unblock the Notifications
