Latest Updates
-
October 2026: அக்டோபர் மாதம் இந்த 4 ராசிக்கு தொழில் ரீதியாக அதிர்ஷ்டமா இருக்கும்! -
சூரியன் துலாம் ராசிக்குள் நுழையப்போவதால் ஜெயிக்கிற குதிரையாக ஜொலிக்கப்போகும் 4 ராசிகள் - உங்க ராசி என்ன? -
தாபா ஸ்டைல் ராஜ்மா மசாலா ரெசிபி - இந்த மாதிரி சைடிஷ் செஞ்சு பாருங்க - சப்பாத்தி, பூரிக்கு அருமையா இருக்கும் -
1 கப் கடலைப்பருப்பு இருந்தா.. சப்பாத்திக்கு இப்படி சைடு டிஷ் பண்ணுங்க.. டக்கரா இருக்கும்.. -
இந்த 4 ராசிக்காரங்க அவங்க நண்பர்களுக்கு ரொம்ப விசுவாசமா இருப்பார்களாம் - உங்க ராசி இதுல இருக்கா? -
பார்லர் செல்லாமல் முகப்பொலிவை அதிகரிக்கணுமா? அப்ப ரோஸ் வாட்டரை இப்படி யூஸ் பண்ணுங்க... -
5 லட்ச ரூபாய்க்கு விற்கப்படும் உலகின் காஸ்ட்லியான ஐஸ்கிரீம் - அப்படி இதுல என்னதான் ஸ்பெஷல் தெரியுமா? -
1 கப் பச்சரிசி இருந்தா.. ஈவ்னிங் டைம்-ல இந்த ஸ்நாக்ஸை செய்யுங்க.. பசங்க கேட்டு விரும்பி சாப்பிடுவாங்க.. -
World Heart Day 2026: 1 சிகரெட் அடிச்சா 20 நிமிஷத்துல இதயத்துல என்னென்ன நடக்கும்? - விளக்கும் இதய நிபுணர்! -
4 பிரெட் இருந்தா இந்த மாதிரி சுவையான புலாவ் செஞ்சு பாருங்க - வீட்ல எல்லோரும் விரும்பி சாப்பிடுவாங்க
தனுசு ராசியில் புதன் அஸ்தமனம்: ஜனவரி 13 வரை இந்த 4 ராசிக்காரங்க நிறைய பிரச்சனைகளை சந்திப்பாங்க...
புதன் குரு ஆளும் தனுசு ராசியில் அஸ்தமனமாகியுள்ளதால், பல ராசிக்காரர்கள் நஷ்டத்துடன், நிறைய பிரச்சனைகளையும் சந்திக்க வாய்ப்புள்ளது. எந்த ராசிக்காரர்கள் புதன் அஸ்தமனத்தால் பிரச்சனைகளை சந்திக்கப் போகிறார்கள்?
Mercury Combust In Sagittarius on January 2023: புத்தாண்டில் நுழைந்த மறுநாளே புத்திகாரகனான புதன் தனது நிலையை மாற்றியுள்ளார். அதாவது வக்ர நிலையில் தனுசு ராசியில் உள்ள புத்திகாரகனான புதன், ஜனவரி 02 ஆம் தேதி அஸ்தமனமாகியுள்ளார். இந்த புதன் அஸ்தமனத்தின் தாக்கம் 12 ராசிகளிலுமே காணப்பட்டாலும், சில ராசிக்காரர்கள் நற்பலனையும், சிலர் மோசமான பலனையும் பெற வாய்ப்புள்ளது. புதன் இந்த அஸ்தமன நிலையில் 2023 ஜனவரி 13 ஆம் தேதி வரை இருப்பார்.

புதன் குரு ஆளும் தனுசு ராசியில் அஸ்தமனமாகியுள்ளதால், பல ராசிக்காரர்கள் நஷ்டத்துடன், நிறைய பிரச்சனைகளையும் சந்திக்க வாய்ப்புள்ளது. இப்போது எந்த ராசிக்காரர்கள் புதன் அஸ்தமனத்தால் பிரச்சனைகளை சந்திக்கப் போகிறார்கள் என்பதைக் காண்போம்.

மேஷம்
மேஷ ராசியின் 9 ஆவது வீட்டில் புதன் அஸ்தமனமாகியிருப்பதால், மேஷ ராசிக்காரர்கள் சற்று மோசமான பலன்களையே பெறக்கூடும். குறிப்பாக இக்காலத்தில் மற்றவர்களுடன் பேசும் போது மிகவும் கவனமாக இருக்க வேண்டும். அதே சமயம் பேச்சில் நிதானத்தை கடைப்பிடிக்க வேண்டும். இல்லாவிட்டால், மிகப்பெரிய வாக்குவாதம் ஏற்படக்கூடும். மேலும் இக்காலத்தில் ஆரோக்கியத்தில் சற்று கவனமாக இருக்க வேண்டும்.

ரிஷபம்
ரிஷப ராசியின் 8 ஆவது வீட்டின் புதன் அஸ்தமனமாகியுள்ளார். இதனால் இக்காலத்தில் ரிஷப ராசிக்காரர்கள் முதலீடு செய்வதைத் தவிர்க்க வேண்டும். இல்லாவிட்டால் மிகப்பெரிய நஷ்டம் ஏற்படக்கூடும். சிலர் ஆரோக்கிய பிரச்சனைகளால் பாதிக்கப்பட வாய்ப்புள்ளது. உறவுகளிலும் விரிசல் ஏற்பட வாய்ப்புள்ளதால், சற்று கவனமாக இருங்கள்.

மிதுனம்
மிதுன ராசியின் 7 ஆவது வீட்டில் புதன் அஸ்தமனமாகியுள்ளார். இதனால் இக்காலத்தில் மிதுன ராசிக்காரர்கள் கூட்டு தொழில் செய்ய விரும்பினால், அதை சற்று தள்ளிப் போடுவது நல்லது. இல்லாவிட்டால் நஷ்டத்தை மற்றும் மோசமான பலன்களைப் பெறக்கூடும். இக்காலத்தில் உங்கள் வாழ்க்கைத் துணை மற்றும் தாயாருடன் கருத்து வேறுபாடுகள் ஏற்படலாம். இதன் விளைவாக பிரச்சனைகளை சந்திக்க வாய்ப்புள்ளது.

கடகம்
புதன் கடக ராசியின் 6 ஆவது வீட்டில் அஸ்தமனமாகியுள்ளார். இதனால் கடக ராசிக்காரர்கள் இக்காலத்தில் தொழில் ரீதியாக பிரச்சனைகளை சந்திக்க நேரிடும். அதே சமயம் தொழில் வாழ்க்கையில் பல சவால்களை சந்திக்கலாம். மேலும் இக்காலத்தில் மேற்கொள்ளும் பயணங்கள் தீங்கை விளைவிக்கும். நிதி ரீதியாக இக்காலம் சற்று மோசமாக இருக்கும். ஏமாறுவதற்கும் வாய்ப்புள்ளது. எனவே இக்காலத்தில் பண விஷயத்தில் சற்று எச்சரிக்கையாக இருக்க அறிவுறுத்தப்படுகிறது.
(பொறுப்புத் துறப்பு: மேலே கொடுக்கப்பட்டுள்ள தகவல் இணையத்தில் கிடைக்கும் அனுமானங்கள் மற்றும் தகவல்களின் அடிப்படையில் கொடுக்கப்பட்டுள்ளன மற்றும் நம்பகத்தன்மைக்கு உத்தரவாதம் இல்லை. தமிழ் போல்ட்ஸ்கை கட்டுரை தொடர்பான தகவலை உறுதிப்படுத்தவில்லை. மேலும் எங்கள் ஒரே நோக்கம் தகவலை வழங்குவது மட்டுமே. அதை வெறும் தகவலாக மட்டும் எடுத்துக் கொள்ள வேண்டும். எந்தவொரு தகவலையும் அனுமானத்தையும் பயிற்சி செய்வதற்கு அல்லது செயல்படுத்துவதற்கு முன், தயவுசெய்து சம்பந்தப்பட்ட நிபுணரை அணுகவும்.)



Click it and Unblock the Notifications
