Latest Updates
-
30 ஆண்டுக்கு பின் சனியும்-செவ்வாயும் மீனத்தில் இணைவதால் இந்த 3 ராசிக்காரங்க டபுள் ஜாக்பாட் அடிக்கப்போறாங்களாம் -
No Oil Noi Boil Recipe: அடுப்பே தேவைப்படாத ஆரோக்கியமான, சுவையான இட்லி மற்றும் சட்னி ரெசிபி...ட்ரை பண்ணுங்க...! -
1 வருடத்துக்கு பின் மேஷம் செல்லும் சுக்கிரன்: இந்த 3 ராசிக்காரங்க ஜெயிக்கிற குதிரையா ஜொலிக்கப் போறாங்களாம்...! -
336 ஆண்டுகளுக்கு முன் சத்ரபதி சாம்பாஜி மகாராஜாக்கு 11 மார்ச் 'இதே' நாளில் என்ன நடந்தது தெரியுமா? -
4 பிரெட், 1 கப் தயிர் இருந்தா 10 நிமிஷத்துல இந்த மாதிரி வடை சுடுங்க... மொறுமொறுனு டேஸ்ட் பிரமாதமா இருக்கும்... -
இந்த 4 ராசி ஆண்கள் ரொம்ப பொஸசிவான கணவர்களாக இருப்பார்களாம்...இவங்க மனைவிகள்தான் பாவம்..உங்க ராசி இதுல இருக்கா? -
LPG Gas: தலைவிரித்தாடும் சிலிண்டர் தட்டுப்பாடு... சிலிண்டர் சீக்கிரம் தீராம இருக்க இப்படி சமையல் பண்ணுங்க...! -
கோதுமை ரவா தோசையும்.. புதினா சட்னியும்..- 10 நிமிடத்தில் எப்படி செய்றது-ன்னு பாத்து ட்ரை பண்ணுங்க.. -
இன்றைய ராசிபலன் 11 மார்ச் 2026: இன்று இந்த 4 ராசிக்காரங்களுக்கு மனஉளைச்சலான நாளாக இருக்குமாம்...! -
குரு-புதன் உருவாக்கும் சக்தி வாய்ந்த ராஜயோகம்: இந்த 3 ராசிக்கு டபுள் ஜாக்பாட் அடிக்கப்போகுது...
தனுசு ராசியில் புதன் அஸ்தமனமாவதால் அடுத்த 2 வாரம் இந்த ராசிக்காரர்களுக்கு கொஞ்சம் சிரமமா இருக்கும்..
வக்ர புதன் தனுசு ராசியில் 2023 ஜனவரி 02 ஆம் தேதி அஸ்தமனமாகி, 2023 ஜனவரி 13 ஆம் தேதி உதயமாகிறார். இதனால் அடுத்த 10 நாட்கள் அஸ்தமனமாகியிருக்கும் புதனின் தாக்கம் 12 ராசிகளிலும் காணப்படும்.
வேத ஜோதிடத்தில், நவகிரகங்களின் இளவரசனாக கருதப்படுபவர் புதன். இந்த புதன் புத்திசாலித்தனம், பகுத்தறிவு திறன் மற்றும் நல்ல தகவல் தொடர்பு ஆகியவற்றின் காரணியாக கருதப்படுகிறார். சூரிய மண்டலத்தில் புதன் சூரியனுக்கு மிகவும் அருகில் இருக்கும் மிகச்சிறிய மற்றும் வேகமாக நகரும் கிரகமாகும். மேலும் புதன் ஒருவரது ஜாதகத்தில் சிறப்பான நிலையில் இருந்தால், அவர் எந்த ஒரு சூழ்நிலையையும் புத்திசாலித்தனமாக கையாள்வதோடு, பேச்சில் மற்றவர்களை ஈர்ப்பார்கள்.

இந்த புதன் 2022 டிசம்பர் 31 ஆம் தேதி வக்ர நிலையில் தனுசு ராசிக்கு சென்றார். இந்நிலையில் வக்ர புதன் தனுசு ராசியில் 2023 ஜனவரி 02 ஆம் தேதி அஸ்தமனமாகி, 2023 ஜனவரி 13 ஆம் தேதி உதயமாகிறார். இதனால் அடுத்த 10 நாட்கள் அஸ்தமனமாகியிருக்கும் புதனின் தாக்கம் 12 ராசிகளிலும் காணப்படும். இப்போது தனுசு ராசியில் அஸ்தமனமாகியுள்ள புதனால் 12 ராசிக்காரர்களும் எந்த மாதிரியான பலன்களைப் பெறுவார்கள் என்பதைக் காண்போம்.

மேஷம்
மேஷ ராசியின் 9 ஆவது வீட்டில் புதன் அஸ்தமனமாகியுள்ளார். இதனால் அரசியலில் உள்ளவர்கள் தங்களின் கருத்துக்களால் சிக்கலில் மாட்டிக் கொள்ள வாய்ப்புள்ளது. எனவே தொடர்பு கொள்ளும்போது விழிப்புடன் இருக்குமாறு அறிவுறுத்தப்படுகிறது. மற்றவர்களுடன் பேசும் போது வார்த்தைகளை புத்திசாலித்தனமாகத் தேர்ந்தெடுங்கள், ஏனெனில் உங்கள் வார்த்தைகள் அவமரியாதையாகவும் இறுதியில் அவர்களை காயப்படுத்தவும் வாய்ப்புள்ளது. ஆரோக்கியத்தில் சற்று விழிப்போடு இருங்கள்.

ரிஷபம்
ரிஷப ராசியின் 8 ஆவது வீட்டில் புதன் அஸ்தனமாகியுள்ளார். எனவே ரிஷப ராசிக்காரர்கள் திடீர் பண இழப்பை சந்திக்க நேரிடும். தோல் தொடர்பான சில நோய்த்தொற்றுகள் அல்லது இனப்பெருக்க அமைப்பு தொடர்பான ஏதேனும் உடல்நலப் பிரச்சனைகளை சந்திக்க நேரிடும். சில தவறான தகவல்தொடர்புகள் காரணமாக இந்த காலகட்டத்தில் உங்கள் மாமியார் உடனான உங்கள் உறவு பாதிக்கப்படலாம். எனவே எந்தவிதமான வாதங்கள் அல்லது தொடர்புடைய விவாதங்களைத் தவிர்க்கவும்.

மிதுனம்
மிதுன ராசியின் 7 ஆவது வீட்டில் புதன் அஸ்தமனமாகியுள்ளார். எனவே தொழில் வளர்ச்சிக்காக நீங்கள் நிறைய முயற்சிகளை மேற்கொள்வீர்கள், ஆனால் புதனின் நிலை காரணமாக உங்கள் அணுகுமுறை தவறாகப் புரிந்து கொள்ளப்பட்டு குழப்பத்தையும் தவறான புரிதலையும் ஏற்படுத்தக்கூடும். உங்கள் திட்டத்தை சிறிது காலத்திற்கு நிறுத்தி வைக்குமாறு அறிவுறுத்தப்படுகிறது. புதனின் நிலை காரணமாக திருமணமான மிதுன ராசிக்காரர்கள் தங்கள் தாய்க்கும் மனைவிக்கும் இடையே சிக்கி அவதிப்பட நேரிடும்.

கடகம்
கடக ராசியின் 6 ஆவது வீட்டில் புதன் அஸ்தமனமாகியுள்ளார். இதனால் வேலை மற்றும் தொழில் காரணமாக பயனற்ற பயணங்களை மேற்கொள்ள வேண்டியிருக்கும். இக்காலத்தில் உங்களின் பணி வெற்றிகரமாக முடிக்கப்படாது. இதனால் விரக்தி, பண இழப்பு மற்றும் உடல்நலக்குறைவு ஆகியவற்றை சந்திக்க நேரிடும். ஏதேனும் ஆன்லைன் பண மோசடியால் நீங்கள் ஏமாற்றப்படுவதற்கான வாய்ப்புகள் உள்ளன, எனவே எச்சரிக்கையாக இருங்கள்.

சிம்மம்
சிம்ம ராசியின் 5 ஆவது வீட்டில் புதன் அஸ்தமனமாகியுள்ளார். இதனால் இக்காலமானது நிதி வாழ்க்கைக்கு நல்லதல்ல. திடீர் பண இழப்பை சந்திக்க நேரிடும் என்பதால், தங்கள் பணத்தில் ரிஸ்க் எடுக்க வேண்டாம். உயர்கல்வி அல்லது சில தொழில்முறை படிப்புகளில் ஈடுபடத் திட்டமிடும் மாணவர்கள் ஒருமுறைக்கு இருமுறை யோசித்து, சரியான முடிவை எடுக்க அறிவுறுத்தப்படுகிறது.

கன்னி
கன்னி ராசியின் 4 ஆவது வீட்டில் புதன் அஸ்தமனமாகியுள்ளார். எனவே இக்காலத்தில் தாயின் உடல்நிலையில் கவனம் செலுத்துங்கள். வாகனத்தில் பிரச்சனைகளை சந்திக்க நேரிடலாம். வீட்டில் இருந்து வேலை செய்யும் தொழில் செய்பவர்கள் தங்கள் தொழில் வாழ்க்கையில் சில பிரச்சனைகளை சந்திக்க நேரிடும். ஆரோக்கியத்தில் சற்று விழிப்புடன் இருப்பது நல்லது.

துலாம்
துலாம் ராசியின் 3 ஆவது வீட்டில் புதன் அஸ்தமனமாகியுள்ளார். இதனால் இக்காலத்தில் நீங்கள் திட்டமிட்ட பயணங்கள் திடீரென்று ரத்து செய்யப்படலாம். உங்கள் உடன்பிறந்த சகோதரருடன் சண்டையிடுவதைத் தவிர்க்க முயற்சி செய்யுங்கள். ஏனெனில் அது சண்டையாக மாறும். எழுத்து தொடர்பான துறையில் இருப்பவர்கள் கவனம் செலுத்துவதில் சிக்கல்களைச் சந்திக்க நேரிடும். உங்கள் கேஜெட்களில் சில சிக்கல்களை நீங்கள் சந்திக்க நேரிடலாம்.

விருச்சிகம்
விருச்சிக ராசியின் 2 ஆவது வீட்டில் புதன் அஸ்தமனமாகியுள்ளார். எனவே இக்காலத்தில் நீங்கள் பண ஆதாயங்களை எதிர்பார்த்துக் கொண்டிருந்தால், அது தாமதமாகலாம். மேலும் திடீர் பண இழப்பை சந்திக்க நேரிடும் என்பதால் ந்தவொரு ஊக வணிகத்திலும் ஈடுபட வேண்டாம். தொடர்பு கொள்ளும்போது, உங்கள் சொற்களைத் தேர்ந்தெடுப்பதில் புத்திசாலித்தனமாக இருங்கள். ஏனெனில் நீங்கள் தவறாகப் புரிந்து கொள்ளப்படலாம்.

தனுசு
தனுசு ராசியின் முதல் வீட்டில் புதன் அஸ்தமனமாகியுள்ளார். எனவே இக்காலத்தில் உங்கள் ஆரோக்கியத்தில் அக்கறை காட்ட வேண்டும். ஏனெனில் உடல்நலப் பிரச்சினைகளால் நீங்கள் பாதிக்கப்படுவதற்கான வாய்ப்புகள் உள்ளன. உங்கள் ஆளுமையிலும் ஏற்ற இறக்கங்கள் இருக்கலாம். இந்த காலத்தில் நீங்கள் சுய கட்டுப்பாட்டுடன் இருக்க அறிவுறுத்தப்படுகிறது.

மகரம்
மகர ராசியின் 12 ஆவது வீட்டில் புதன் அஸ்தமனமாகியுள்ளார். எனவே இந்த காலம் முழுவதும் உங்கள் தந்தையின் உடல்நிலையை கவனித்துக் கொள்ள வேண்டும். திடீர் வெளிநாட்டு பயணங்களை மேற்கொள்ள வேண்டிய வாய்ப்புகள் உள்ளன. அனால் அவை சாதகமாக இருக்காது என்பதால் சிறிது காலத்திற்கு ஒத்திவைக்க பரிந்துரைக்கப்படுகிறது. பல பண இழப்புகள் அல்லது செலவுகளை சந்திக்க நேரிடும்.

கும்பம்
கும்ப ராசியின் 11 ஆவது வீட்டில் புதன் அஸ்தமனமாகியுள்ளார். இதனால் சில தவறான முதலீட்டு முடிவுகளால் உங்கள் நிதி பாதிக்கப்படலாம். எனவே தற்போது முதலீடு செய்வதைத் தவிர்க்க முயற்சி செய்யுங்கள். வேலை வாய்ப்புக்காக காத்திருப்பவர்கள் தாமதத்தால் சற்று மனச்சோர்வடையலாம். ஆனால் போகப்போக விஷயங்கள் சிறப்பாக இருக்கும் என்பதால் பொறுமையாக இருங்கள்.

மீனம்
மீன ராசியின் 10 அவது வீட்டில் புதன் அஸ்தமனமாகியுள்ளார். எனவே தொழில் ரீதியாக எச்சரிக்கையாக இருக்க வேண்டும். மீண்டும் மீண்டும் தடைகளை சந்திக்க நேரிடும். தொடர்பு கொள்ளும் போது கூடுதல் விழிப்புடன் இருக்குமாறு அறிவுறுத்தப்படுகிறது.
(பொறுப்புத் துறப்பு: மேலே கொடுக்கப்பட்டுள்ள தகவல் இணையத்தில் கிடைக்கும் அனுமானங்கள் மற்றும் தகவல்களின் அடிப்படையில் கொடுக்கப்பட்டுள்ளன மற்றும் நம்பகத்தன்மைக்கு உத்தரவாதம் இல்லை. தமிழ் போல்ட்ஸ்கை கட்டுரை தொடர்பான தகவலை உறுதிப்படுத்தவில்லை. மேலும் எங்கள் ஒரே நோக்கம் தகவலை வழங்குவது மட்டுமே. அதை வெறும் தகவலாக மட்டும் எடுத்துக் கொள்ள வேண்டும். எந்தவொரு தகவலையும் அனுமானத்தையும் பயிற்சி செய்வதற்கு அல்லது செயல்படுத்துவதற்கு முன், தயவுசெய்து சம்பந்தப்பட்ட நிபுணரை அணுகவும்.)



Click it and Unblock the Notifications











