Latest Updates
-
ஹிரோஷிமா-நாகசாகியில் வெடித்த அணுகுண்டில் எத்தனை பேர் இறந்தார்கள்? உயிர் பிழைத்தவர்கள் நிலை என்னவானது தெரியுமா? -
18 ஆண்டுகளுக்கு பின் சிம்ம ராசியில் இணையும் சூரியன்-கேது: இந்த 3 ராசிக்காரர்களின் அதிர்ஷ்ட கதவு திறக்கப்போகுது -
உடனடி கார தோசையும், வெள்ளை சட்னியும் - எப்படி செய்றதுன்னு பாத்து ட்ரை பண்ணுங்க.. -
இன்றைய ராசிபலன் 07 ஆகஸ்ட் 2026: இன்று இந்த 4 ராசிக்காரங்க மனஉளைச்சலால் கஷ்டப்படப்போறாங்களாம் -
மிதுன ராசியில் உருவாகும் மகாலட்சுமி ராஜயோகம் இந்த 3 ராசிக்காரர்களை ஜெயிக்கிற குதிரையாக மாற்றப்போகுதாம் -
கேரட் தக்காளி தொக்கு ரெசிபி - இந்த மாதிரி சைடிஷ் செஞ்சு பாருங்க - இட்லி, தோசைக்கு அட்டகாசமா இருக்கும் -
இந்த இடங்களில் மச்சம் உள்ள ஆண்கள் சக்கரவர்த்தியாக வாழும் அதிர்ஷ்டம் உள்ளவர்களாம் - உங்களுக்கு இருக்கா? -
ஆரஞ்சு ரசம் ரெசிபி - இந்த மாதிரி ரசம் வைச்சு பாருங்க - சுவையாவும், ஆரோக்கியமாவும் இருக்கும் -
12 மாநிலங்கள் வழியாக செல்லும் இந்தியாவின் உயிர்நாடி என்று அழைக்கப்படும் நெடுஞ்சாலை எது தெரியுமா? -
குழந்தைகளின் இரத்த சர்க்கரை அளவை அதிகரிக்கும் சில பொதுவான லன்ச்பாக்ஸ் தவறுகள்! இனிமே பண்ணாதீங்க
புதன் அஸ்தமனமாவதால் பிப்ரவரி 28 முதல் இந்த 7 ராசிக்கு பிரச்சனை அதிகமா இருக்காது... உங்க ராசி என்ன?
புத்திகாரகனான புதன் 2023 பிப்ரவரி 28 ஆம் தேதி கும்ப ராசியில் அஸ்தமனமாகவுள்ளார். புதன் அஸ்தமனமாவதால், புதன் இந்த காலத்தில் வலுவிழந்து இருக்கும். சொல்லப்போனால் புதனின் தாக்கம் அவ்வளவாக இருக்காது.
கிரங்களின் நிலைகளில் அவ்வப்போது மாற்றங்கள் ஏற்படும். அப்படி ஏற்படும் மாற்றங்கள் அனைத்து ராசிகளிலுமே காணப்படும். அந்த வகையில் புத்திகாரகனான புதன் 2023 பிப்ரவரி 28 ஆம் தேதி கும்ப ராசியில் அஸ்தமனமாகவுள்ளார். புதன் அஸ்தமனமாவதால், புதன் இந்த காலத்தில் வலுவிழந்து இருக்கும். சொல்லப்போனால் புதனின் தாக்கம் அவ்வளவாக இருக்காது.

அதுவும் கும்ப ராசியானது சனி ஆளும் ராசி. இந்த ராசியில் ஏற்கனவே சனி பகவான் பயணித்து வருகிறார். இந்நிலையில் கும்ப ராசியில் அஸ்தமனமாகும் புதன், எந்த ராசிக்கும் நல்ல பலனளிக்காது. அதே சமயம் சில ராசிக்காரர்களுக்கு எந்த பிரச்சனையும் ஏற்படாது. இப்போது கும்ப ராசியில் அஸ்தமனமாகும் புதனால் எந்த ராசிக்காரர்கள் நற்பலனைப் பெறப் போகிறார்கள் என்பதைக் காண்போம்.

ரிஷபம்
ரிஷப ராசியின் 10 ஆவது வீட்டில் புதன் அஸ்தமனமாகவுள்ளார். இதனால் பணிபுரிபவர்கள் அலுவலகத்தில் பாராட்டைப் பெறுவார்கள். ஆனால் உயர் அதிகாரிகளிடம் நற்பெயரைப் பெற கடினமாக உழைக்க வேண்டியிருக்கும். இக்காலத்தில் அடிக்கடி கோபப்பட நேரிடும். உங்கள் வேலைகளில் தடைகளை சந்திக்க நேரிடும். இருப்பினும் அதை மீறி வெற்றிகரமாக முடிப்பீர்கள். வியாபாரிகள் புதிய ஒப்பந்தத்தைப் பெற சிரமப்படுவார்கள். இருப்பினும் கூடுதல் முயற்சிகளால் ஒப்பந்தத்தைப் பெற்றுவிடுவார்கள்.

மிதுனம்
மிதுன ராசியின் 9 ஆவது வீட்டில் புதன் அஸ்தமனமாகிறார். இதனால் இக்காலத்தில் வழக்கமான வேலைகளை செய்பவர்கள் வெளிநாடு செல்வதற்கான வாய்ப்பைப் பெறுவார்கள். மாணவர்கள் விரும்பிய கல்வி நிறுவனத்தில் உயர் படிப்புக்கான சேர்க்கையைப் பெறுவார்கள். ஆனால் சிறு தடைகள் மற்றும் தாமதங்களை சந்திக்க நேரிடும். வணிகர்கள் இக்காலத்தில் தங்கள் வணிகத்தை வெளிநாடு வரை கொண்டு செல்லும் வாய்ப்பைப் பெறுவார்கள். இருப்பினும் இக்காலத்தில் பணத்தைப் பெறுவதில் தடைகள் ஏற்படக்கூடும். தெரியாத நபர்களிடம் சற்று எச்சரிக்கையுடன் இருக்க அறிவுறுத்தப்படுகிறது.

சிம்மம்
சிம்ம ராசியின் 7 ஆவது வீட்டில் புதன் அஸ்தமனமாகிறார். இதனால் இக்காலத்தில் வணிகர்கள் மற்றவர்களுடன் தொடர்பு கொள்ளும் போது கவனமாக இருக்க வேண்டும். வாழ்க்கைத் துணையுடன் அல்லது குடும்ப உறுப்பினர்களுடன் சிறு பிரச்சனைகளை சந்திக்க நேரிடும். இருப்பினும் அந்த பிரச்சனைகள் சரியாகிவிடும். இக்காலத்தில் நீங்கள் சந்திக்கும் தவறான புரிதல் போன்ற பிரச்சனைகள் அனைத்தும் புதன் உதயமாகும் போது சரியாகிவிடும்.

கன்னி
கன்னி ராசியின் 6 ஆவது வீட்டில் புதன் அஸ்தமனமாகிறார். இதனால் இக்காலத்தில் சட்ட விஷயங்களில் சிக்கினால், அதிலிருந்து விரைவில் மீண்டுவிடுவீர்கள். பணியிடத்தில் உடன் பணிபுரிபவர்கள் அல்லது எதிரிகள் உங்களுக்கு எதிராக சதி செய்யலாம். கவனமாக இருந்தால், அந்த சதியை உடைக்கலாம். புதன் அஸ்தமன நிலையில் இருக்கும் காலத்தில் தகவல் தொடர்பு மோசமாக இருக்கும் என்பதால், மற்றவர்களுடன் பேசும் போது கவனமாக இருக்க அறிவுறுத்தப்படுகிறது.

துலாம்
துலாம் ராசியின் 5 ஆவது வீட்டில் புதன் அஸ்தமனமாகிறார். இதனால் இக்காலத்தில் வேலைகளில் தாமதங்களையும், தடைகளையும் சந்திக்க நேரிடும். இருப்பினும் முயற்சித்து வெற்றிகரமாக முடிப்பீர்கள். புதன் உங்களுக்கு நன்மை தரும் கிரகமாக இருப்பதால், அஸ்தமன காலத்தில் தீங்கை ஏற்படுத்தமாட்டார். ஆனால் வேலைகளில் தடைகளை மட்டும் ஏற்படுத்தக்கூடும். மேலும் புதன் கல்வி, புத்தி ஆகியவற்றின் காரக கிரகமாக இருப்பதால், ஆராய்ச்சியாளர்கள், ஆசிரியர்கள் போன்றவர்களுக்கு புதன் அஸ்தமனத்தின் தாக்கம் இருக்கும்.

மகரம்
மகர ராசியின் 2 ஆவது வீட்டில் புதன் அஸ்தமனமாகிறார். மேலும் புதன் மகர ராசிக்காரர்களுக்கு நன்மை தரும் கிரகம் என்பதால், அஸ்தமன காலத்தில் பெரிய பிரச்சனைகளைத் தரமாட்டார். ஆனால் இக்காலத்தில் மற்றவர்களுடன் பேசும் போது சற்று கவனமாக இருக்க வேண்டும். ஏனெனில் உங்கள் பேச்சால் பிரச்சனைகள் வருவதற்கான வாய்ப்புகள் அதிகம் உள்ளன.

கும்பம்
கும்ப ராசியின் முதல் வீட்டில் புதன் அஸ்தமனமாகிறார். இதனால் பணியிடத்தில் உங்கள் யோசனைகள் மற்றவர்களால் தவறாக புரிந்து கொள்ளப்பட்டு தவறாக பேசப்படும். இக்காலத்தில் உங்களின் வேலைகள் சுமூகமாக இல்லாமல் போகலாம். ஆனால் விரைவில் அனைத்தும் சரியாகிவிடும். தொழில் ரீதியாக, இக்காலம் சற்று மன அழுத்தம் நிறைந்ததாக இருக்கும். இருப்பினும், உங்களுக்கு பிரச்சனைகள் எதுவும் அதிகம் ஏற்படாது.
(பொறுப்புத் துறப்பு: மேலே கொடுக்கப்பட்டுள்ள தகவல் இணையத்தில் கிடைக்கும் அனுமானங்கள் மற்றும் தகவல்களின் அடிப்படையில் கொடுக்கப்பட்டுள்ளன மற்றும் நம்பகத்தன்மைக்கு உத்தரவாதம் இல்லை. தமிழ் போல்ட்ஸ்கை கட்டுரை தொடர்பான தகவலை உறுதிப்படுத்தவில்லை. மேலும் எங்கள் ஒரே நோக்கம் தகவலை வழங்குவது மட்டுமே. அதை வெறும் தகவலாக மட்டும் எடுத்துக் கொள்ள வேண்டும். எந்தவொரு தகவலையும் அனுமானத்தையும் பயிற்சி செய்வதற்கு அல்லது செயல்படுத்துவதற்கு முன், தயவுசெய்து சம்பந்தப்பட்ட நிபுணரை அணுகவும்.)



Click it and Unblock the Notifications