Just In
- 1 hr ago
Today Rasi Palan 25 January 2023: இன்று இந்த ராசிக்காரர்கள் எந்தவொரு முதலீடும் செய்வதைத் தவிர்க்கவும்...
- 9 hrs ago
உங்க சருமம் பளபளன்னு ஜொலிக்கவும் முடி நீளமா வளரவும் பப்பாளியை எப்படி யூஸ் பண்ணனும் தெரியுமா?
- 10 hrs ago
நீங்க இந்த உயரத்துல இருந்தா? உங்களுக்கு புற்றுநோய் ஏற்படும் ஆபத்து அதிகமாம்..ஆய்வு கூறும் அதிர்ச்சி முடிவுகள்!
- 10 hrs ago
உங்க வியாபாரத்தில் நல்ல லாபம் கிடைக்கணுமா? அப்ப இந்த வாஸ்து டிப்ஸ்களை ஃபாலோ பண்ணுங்க..
Don't Miss
- News
"கொடூரத்தின் உச்சம்.." அரசு வேலைக்காக 5 மாத பச்சிளம் குழந்தையை கொடூரமாக கொன்ற பெற்றோர்! பயங்கரம்
- Automobiles
சட்டபடி இது தப்புங்க! ஆட்டோ எக்ஸ்போவில் தில்லாக காட்சியளித்த மாடிஃபைடு கார்கள்... எல்லாமே செம்ம அழகா இருக்கு!
- Finance
Budget 2023: பட்ஜெட்டில் இப்படி ஒரு சர்பிரைஸ் கிடைக்குமா.. தங்கம் இறக்குமதியாளர்களுக்கு வாய்ப்பு?
- Sports
பந்துவீச்சில் மாற்றம் செய்தேன்.. இரட்டிப்பாக உழைப்பதில் மகிழ்ச்சி.. டி20 தொடருக்கு ரெடி - ஹர்திக்
- Movies
உடல்நிலை தேறியுள்ளது.. கைவிரலை உயர்த்திக் காட்டி ரசிகர்களுக்கு அப்டேட் சொன்ன விஜய் ஆண்டனி!
- Technology
Android போன்களுக்கு புது சோதனை.! 'இதை' செஞ்சுடாதீங்க.! மானம், பணம் எல்லாமே போய்விடும்.! எச்சரிக்கை.!
- Travel
கன்பார்ம் செய்யப்பட்ட ரயில் டிக்கெட்டின் பயண தேதியை மாற்ற வேண்டுமா – இப்படி செய்யுங்கள்!
- Education
CRPF Head constable Recruitment 2023:பிளஸ் டூ பாஸ்? 1,458 பணிக்கு விண்ணப்பிக்க நாளை கடைசி வாய்ப்பு...!
இந்த 5 ராசிக்காரங்க பலவீனமான மனநிலை கொண்டவர்களாம்... இவங்கள யாராலும் காப்பாற்ற முடியாது...!
ஒவ்வொருவரின் வாழ்க்கையும் அதற்கான சொந்த சவால்களைக் கொண்டுள்ளது, அதை உடைக்காமல் சமாளிக்க, பலம் வாய்ந்த மனநலம் இருப்பது மிகவும் இன்றியமையாதது. சிலரால் வாழ்க்கையின் ஏற்ற தாழ்வுகளை சிரமமின்றி நிர்வகிக்க முடியும் மற்றும் பதற்றமடையாமல் இருக்க முடியும், சூழ்நிலை எவ்வளவு கடினமாக இருந்தாலும் அதனை சமாளித்து வெளியே வரமுடியும்.
சிலர் இதற்கு முற்றிலும் நேர்மாறாக மிகவும் நிலையற்றவர்களாக மற்றும் சிறிய விஷயங்களுக்குக் கூட அஞ்சுவார்கள். அவர்கள் உணர்ச்சிரீதியாக நிலையற்றவர்கள் மற்றும் சிறிய பிரச்சினை கூட அவர்களை மன அழுத்தத்திற்கு ஆளாக்குகின்றன. அத்தகையவர்கள் மற்றவர்களிடமிருந்து உணர்ச்சிபூர்வமான ஆதரவைத் தேடுகிறார்கள் மற்றும் தனியாக நிற்பதை விரும்புவதில்லை. இந்த உணர்திறன் மற்றும் உணர்ச்சிப்பூர்வமான மனிதர்கள் எந்தவொரு சூழ்நிலையையும் சமாளிப்பது மிகவும் கடினம், ஏனென்றால் அவர்களால் நீண்ட காலம் சமாளிக்க முடியாது மற்றும் உடைந்து போய்விடுவார்கள். உணர்ச்சிரீதியாக நிலையற்ற மற்றும் பலவீனமான ராசிகள் என்னென்ன என்று இந்த பதிவில் பார்க்கலாம்.

மிதுனம்
மிதுன ராசிக்காரர்களின் பாறை போன்ற வெளிப்தோற்றம் அவர்களை வலிமையானவர்களாக காட்டக்கூடும், ஆனால் அவர்களின் மனது மென்மையானதாகவும், பலவீனமானதாகவும் இருக்கும். அவர்களின் தன்னம்பிக்கை அதிவேகமாக கட்டுப்படுத்த முடியும், குறிப்பாக அது அவர்களின் நெருங்கிய நபரால் குறிவைக்கப்படும் போது. அவர்களின் உணர்ச்சி உறுதியற்ற தன்மை காரணமாக, அவர்கள் தங்களுக்கு நடந்த விஷயங்களைப் பற்றி அதிகமாகச் சிந்தித்துக்கொண்டே இருப்பார்கள், இதன் விளைவாக சமநிலையற்ற மற்றும் பாதுகாப்பற்ற முடிவுகளை எடுப்பார்கள்.

விருச்சிகம்
விருச்சிக ராசிக்காரர்கள் உறுதியான உறவு அல்லது காதலில் ஈடுபடும் போது பாதிக்கப்படுகின்றனர். இந்த ராசிக்காரர்கள் பச்சாதாபம் கொண்டவர்கள், தங்கள் இதயங்களை எளிதில் திறக்கிறார்கள் மற்றும் உணர்ச்சிமிக்க அன்பை நம்புகிறார்கள், இது அவர்களை பலவீனப்படுத்துகிறது. விருச்சிக ராசியில் பிறந்தவர்கள் மோதலை விரும்ப மாட்டார்கள், உள்ளுக்குள் ஆழமாக காயப்பட்டாலும், அவர்கள் ஒரு வார்த்தை கூட பேச மாட்டார்கள், மாறாக ரகசியமாக இருப்பார்கள் மற்றும் அவர்களின் உணர்வுகளை தாங்களாகவே பொறுத்துக்கொள்கிறார்கள்.

கடகம்
ராசி சக்கரத்தில் உணர்திறன் வாய்ந்த நட்சத்திர அறிகுறிகளில் ஒன்றாக கடக ராசி அங்கீகரிக்கப்பட்டுள்ளது. கடக ராசிக்காரர்கள் யாராவது அவர்களிடம் கண்டிப்பான மற்றும் கடுமையான தொனியில் பேசினால் அவர்கள் உடனடியாக உடைந்து விடுவார்கள். தண்ணீரால் ஆளப்படுவதால், இந்த உயிரினங்கள் தங்கள் இதயத்தில் இருந்து நேசிக்கிறார்கள், மேலும் தங்கள் அன்புக்குரியவர்கள்தங்களைப் போலவே உண்மையான அக்கறையுடன் இல்லை என்பது இவர்களுக்கு தெரிந்தால், அவர்கள் உண்மையில் காயமடைந்து குழப்பமாகிவிடுகிறார்கள்.

கும்பம்
சில சமயங்களில் கும்ப ராசிக்காரர்களுக்கு தங்கள் உணர்ச்சிகளைக் கையாளத் தெரியாது. அவர்கள் தங்கள் முடிவுகளிலும் செயல்களிலும் மிகவும் பிடிவாதமாக இருப்பதால், சிக்கலான சூழ்நிலைகளை எதிர்கொள்ள வேண்டியிருக்கும் போது எப்படி செயல்பட வேண்டும் என்று அவர்களுக்குத் தெரியாது. அவர்கள் எடுக்கும் முடிவுகள், அவர்களை மிகவும் பலவீனமானவர்களாக மாற்றுகிறது.

மீனம்
பச்சாதாபம், இரக்கம், கற்பனை மற்றும் மாய இராசி அடையாளமாகவும் முக்கியத்துவம் வாய்ந்த மீன ராசிக்காரர்கள் மற்றவர்களின் உணர்ச்சி துயரங்களை உணரும் ஆற்றலைக் கொண்டுள்ளார்கள் மற்றும் இரக்கமற்ற வார்த்தைகள் கூட அவர்களை ஆழமாக காயப்படுத்தலாம். உணர்ச்சிகளைப் பொறுத்தவரை, மீனம் மிகவும் பலவீனமானவர்கள், எனவே அவர்கள் ஆழமான மற்றும் தீவிரமான உறவுகளை மட்டுமே உருவாக்க விரும்புகிறார்கள். அவர்களால் காயத்தைத் தாங்க முடியாது, இதனால், மீனத்தில் பிறந்தவர்கள் தங்கள் அன்புக்குரியவர்களிடமிருந்து உறவுகளைத் துண்டிப்பதற்குப் பதிலாக உறவை பலப்படுத்துவதில் நம்பிக்கை கொண்டுள்ளனர்.