மாசி மாதம் புனித நீராடினால் என்னென்ன நன்மைகள் கிடைக்கும் தெரியுமா?

மாசி மாதம் அனைத்து ஆறுகளிலும் சமுத்திரங்களிலும் அமிர்தம் நிறைந்திருக்கும் எனவேதான் இந்த மாதத்தில் முக்கியமாக பவுர்ணமி தினத்தில் புனித நீராடுவதை வழக்கமாக கொண்டுள்ளனர்.

நீரின்றி அமையாது உலகு என்பதற்கு ஏற்ப, நீர்நிலைகளை பாதுகாக்க வேண்டும் என்பதை மக்களுக்கு உணர்த்தும் மாதமாக மாசி மாதம் விளங்குகிறது. வழக்கமாக கோவில் திருவிழாக்களில் இறுதி நிகழ்ச்சியாக தீர்த்தவாரி நிகழ்ச்சி நடைபெறும். ஆனால், இந்த மாசி மாதத்தில் மகம் நட்சத்திரமும் பவர்ணமியும் கூடிவரும் நாளில், அனைத்து ஊர்களிலும் கோவிலின் உற்சவர்கள் கிளம்பி நீர்நிலைகளுக்கு சென்று தீர்த்தவாரி வைபவம் நடைபெறும். தீர்த்தவாரி வைபவத்தில் தெய்வங்களோடு, மக்களும் இணைந்து இந்த நாளில் புனித தீர்த்தங்களில் நீராட இறைவனை தரிசனம் செய்து மகிழ்வார்கள். இந்த நாளில் புனித நீராடினால் நம்முடைய அனைத்து தோஷங்களும் விலகி ஓடிவிடும் என்பது ஐதீகம்.

Masi Month Special and importance

அரசியல்வாதிகள் தங்களின் பிறந்தநாளுக்கு சித்திரையில் பிறந்த சிங்கமே, ஐப்பசியில் பிறந்த அடைமழையே, புரட்டாசியில் பிறந்த புனிதனே, மாசியில் பிறந்த மகத்துவமே என்று ரூம் போட்டு யோசித்து அடைமொழி வைப்பார்கள். ஆனால் உண்மையில், தமிழ் மாதங்களில் மிகவும் மகத்துவமான மாதமாக போற்றப்படுவது மாசி மாதம் தான்.

புண்ணிய நதிகளில் நீராடுவதற்கு மிகவும் உகந்த மாதமாகவும், சுப நிகழ்ச்சிகள் நடத்துவதற்கு ஏற்றதாகவும் மாசி மாதம் உள்ளது. இந்த மாதத்தில் தான் சகல வரங்களையும் தரும் மகா சிவராத்திரி திருநாள் கொண்டாடப்படுகிறது. ஆறுமுகக்கடவுளான முருகனை வழிபடவும் இந்த மாதம் உகந்ததாகும். அதோடு முன்னோர்களின் ஆசியைப் பெற்றுத் தரும் அமாவாசையும் வருகிறது.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்
புண்ணிய மாதம் மாசி மாதம்

புண்ணிய மாதம் மாசி மாதம்

பூவுலகில் பிறந்த ஒவ்வொரு பெண்ணும் அன்னை பராசக்தியின் அம்சமே. அவர்கள் அனைவரையும் நம் தாயைப் போல் கருத வேண்டும். உனக்கு தெய்வ அனுக்கிரஹம் கிடைக்க வேண்டுமானால், அன்னை பராசக்தியின் காலடியை பற்றிக்கொள், அவள் தான் ஆக்கல், காத்தல், அழித்தல் ஆகிய மூன்று செயல்களையும் சிறப்பாக செய்கிறாள், என்ற உயரிய ஆன்மீக நெறியை போதித்து வழிநடத்தியவர் ராமகிருஷ்ண பரமஹம்சர். அந்த மகான் அவதரித்த புண்ணிய மாதம் மாசி மாதம்.

விஷ்ணுவுக்கு உகந்த ஏகாதசி

விஷ்ணுவுக்கு உகந்த ஏகாதசி

விரதங்களிலேயே உயர்ந்த விரதம் ஏகாதசி விரதம். இது மாத மாதம் வரும் விரதமாக இருந்தாலும், மாசி மாதத்தில் வரும் விஜயா ஏகாதசி விரதம் தனித்துவம் மிக்கதாகும். விஜயா என்றால் வெற்றி என்று அர்த்தமாகும். ஆகவே, இந்த விஜயா ஏகாதசி விரதத்தை கடைபிடித்தால் கடல் கடந்து சென்றும் வெற்றியை நிலை நாட்ட முடியும் என்பது நம்பிக்கையாகும்.

வெற்றி தரும் ஏகாதசி

வெற்றி தரும் ஏகாதசி

பகவான் ஸ்ரீராமபிரானே இந்த விஜயா ஏகாதசி விரதத்தை கடைபிடித்து கடல் கடந்து சென்று ராவணனுடன் போரிட்டு வெற்றி பெற்றார். எனவே, விஜயா ஏகாதசி நாளில் ஏழு வகையான தானியங்களை ஒன்றன் மீது ஒன்றாக பரப்பி வைத்து அதில் கலசம் வைத்து பெருமாளை ஆவாஹனம் செய்து வழிபட்டால், நாம் நினைக்கும் சகல காரியங்களும் வெற்றி பெறும்.

மகா பிரதோஷம்

மகா பிரதோஷம்

பிரதோஷ வழிபாடு என்பது நந்தி தேவருக்கு உகந்ததாகும். அன்றைய நாளில் நந்தி தேவருக்கு அபிஷேகம், ஆராதனை செய்து வழிபட்டால் நாம் கேட்ட வரம் கிடைக்கும். மாதாமாதம் வளர்பிறை திதியில் வரும் திரயோதசி திதியை பிரதோஷ நாளாக கொண்டாடி வருகிறோம். அதே போல் மாசி மாத சிவராத்திரி நாளுக்கு முன்பு வரும் பிரதோஷ தினத்தை மஹாபிரதோஷம் என்று கொண்டாடி வருகிறோம். இந்நாளில் நந்தி தேவரையும் சிவபெருமானையும் வணங்கி வழிபட்டால் நம்முடைய அனைத்து துயரங்களும் நீங்கும்.

மாசி மகம்

மாசி மகம்

நீரின்றி அமையாது உலகு என்பதற்கு ஏற்ப, நீர்நிலைகளை பாதுகாக்க வேண்டும் என்பதை மக்களுக்கு உணர்த்தும் மாதமாக மாசி மாதம் விளங்குகிறது. வழக்கமாக கோவில் திருவிழாக்களில் இறுதி நிகழ்ச்சியாக தீர்த்தவாரி நிகழ்ச்சி நடைபெறும். ஆனால், இந்த மாசி மாதத்தில் மகம் நட்சத்திரமும் பவர்ணமியும் கூடிவரும் நாளில், அனைத்து ஊர்களிலும் கோவிலின் உற்சவர்கள் கிளம்பி நீர்நிலைகளுக்கு சென்று தீர்த்தவாரி வைபவம் நடைபெறும்.

தோஷங்கள் நீங்கும்

தோஷங்கள் நீங்கும்

தீர்த்தவாரி வைபவத்தில் தெய்வங்களோடு, மக்களும் இணைந்து இந்த நாளில் புனித தீர்த்தங்களில் நீராட இறைவனை தரிசனம் செய்து மகிழ்வார்கள். இந்த நாளில் புனித நீராடினால் நம்முடைய அனைத்து தோஷங்களும் விலகி ஓடிவிடும் என்பது ஐதீகம். மக்கள் தெய்வங்களோடு சேர்ந்து நீராடி இறைவனை வழிபடுவதால் இந்த திருவிழா கடலாடும் விழா என்றும் அழைக்கப்படுகிறது.

முன்னோர்கள் வழிபாடு

முன்னோர்கள் வழிபாடு

மாசி மாதம் வரும் மகம் நட்சத்திரத்தை பித்ருதேவா நட்சத்திரம் என்று அழைக்கப்படுகிறது. இந்த பித்ருதேவா தான் நம்முடைய முன்னோர்களுக்கு ஆத்ம சாந்தியை அளிப்பவர். எனவே, மாசி மகம் நாளில் புனித நதிகளிலும் நீர் நிலைகளிலும் நீராடி பிதுர் மகாஸ்நானம் செய்தால், நமது முன்னோர்களின் ஆத்மா சாந்தியடைந்து, மகிழ்ச்சியோடு நமக்கு பரிபூரண ஆசியை வழங்குவார்கள் என்று சாஸ்திரங்கள் கூறிகின்றன.

ஜெகத்தை ஆளும் மாசி மகம்

ஜெகத்தை ஆளும் மாசி மகம்

அதோடு, எம்பெருமான் முருகன், காக்கும் கடவுளான ஸ்ரீமஹாவிஷ்ணு மற்றும் உமாபரமேஸ்வரர் ஆகிய மூவருக்கும் மிகவும் உகந்தது மாசி மகம் நாள். எனவே அன்றைய நாளில் முறைப்படி விரதமிருந்து நீர்நிலைகளில் நீராடி மூன்று தெய்வங்களையும் வழிபட்டால், இப்பிறப்பு மட்டுமல்லாமல் முன் ஜென்மங்களில் செய்த பாவங்களை அனைத்தும் விலகி ஓடிவிடும்.

மகா சிவராத்திரி விரதம்

மகா சிவராத்திரி விரதம்

இவை அனைத்திற்கும் மேலாக, இந்துக்கள் அனைவரும் தங்களின் ஆணவ குணத்தை ஒழித்து, அனைவருக்கும் மேலான சிவபெருமான வணங்கும் மகா சிவராத்திரி திருநாள் வருவதும் இந்த மாசி மாதத்தில் தான். மகா சிவராத்திரி நாளில் மனிதர்கள் மட்டுமில்லாமல், தேவாதி தேவர்கள், பிரம்மா, விஷ்ணு என அனைவரும் ஒன்று கூடி நாள் முழுக்க விரதமிருந்து இரவு முழுவதும் கண்விழித்து சிவபெருமான வணங்குவதும் இந்த நன்னாளில் தான். அந்த நாளில் மூன்றாம் ஜாம பூஜையின் போது சிவபெருமானை வழிபட்டால் எப்பேர்ப்பட்ட பாவங்கள் செய்திருந்தாலும் அது நம்மை விட்டு விலகிப்போகும்.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்

Story first published: Thursday, February 13, 2020, 11:29 [IST]
Desktop Bottom Promotion