Latest Updates
-
அரசு அதிகாரிகளின் குழந்தைகள் வெளிநாட்டில் படிக்க அனுமதிக்காத நாடு - மீறுனா அவ்வளவுதான் - எந்த நாடு தெரியுமா? -
அஸ்ஸாம் ஸ்டைல் சிக்கன் ரெசிபி - இந்த மாதிரி ட்ரை பண்ணி பாருங்க - டேஸ்ட் வித்தியாசமா அட்டகாசமா இருக்கும் -
கறி சுவையை மிஞ்சும் காளான் மிளகு வறுவல் - எப்படி செய்றதுன்னு பாத்து செஞ்சு பாருங்க.. அள்ளும்.. -
செப்டம்பர் 20, 2026: இன்றைய நாள் இந்த 3 ராசிகளுக்கு ரொம்ப துரதிர்ஷ்டமான நாளாக இருக்குமாம் -
வார ராசிபலன் (20 September 2026- 26 September 2026)- இந்த வாரம் இந்த 5 ராசிக்காரர்களுக்கு பணமழை கொட்டப்போகுது! -
ஹோட்டல் சுவையில் பன்னீர் சன்னா சால்னா எப்படி செய்றதுன்னு பாத்து ட்ரை பண்ணுங்க.. -
பார்லர் போகாமலே உங்க முகம் பளபளன்னு இருக்கணுமா? அப்ப காபித் தூள் வெச்சு இப்படி ஃபேஸ் பேக் போடுங்க.. -
அசைவ உணவுக்கு இணையான சத்துக்களைக் கொண்ட சைவ உணவுகள் இதாங்க! நோட் பண்ணி வெச்சுக்கோங்க.. -
பீட்ரூட்டை இப்படி சாம்பார் செய்யுங்க.. பிடிக்காதவங்க கூட கேட்டு விரும்பி சாப்பிடுவாங்க.. -
செவ்வாய் பெயர்ச்சியால் இன்று முதல் 12 ராசிக்காரர்களுக்கும் எப்படி இருக்கும் தெரியுமா?
சனி செவ்வாய் சேர்க்கையால் மே 17 வரை இந்த ராசிக்காரங்க ரொம்பவும் எச்சரிக்கையாக இருக்கணும்..
ஜோதிட சாஸ்திரப்படி, இரட்டை யோகம் மிகவும் அசுபமாக கருதப்படுகிறது. கும்பத்தில் சனி, செவ்வாய் சேர்க்கையால் 12 ராசிகளிலும் ஒருவித மோசமான தாக்கம் இருந்தாலும், 3 ராசிக்காரர்கள் மிகவும் எச்சரிக்கையாக இருக்க வேண்டும்.
வேத ஜோதிடத்தின் படி, சனிக்கும் செவ்வாய்க்கும் இடையே ஒரு பகை உணர்வு உள்ளது. பகை உணர்வு கொண்ட இரண்டு கிரகங்கள் ஒரு ராசியில் ஒன்றாக பயணித்தால், அதன் விளைவாக பல பிரச்சனைகளை சந்திக்க வேண்டியிருக்கும். இந்நிலையில் 2022 ஏப்ரல் 29 முதல் மே 17 வரை செவ்வாய் மற்றும் சனி ஒன்றாக கும்ப ராசியில் சேர்ந்து பயணிக்கின்றன. இதில் சனி பகவான் ஏப்ரல் 29 ஆம் தேதி கும்ப ராசிக்கு வந்துள்ளார். இந்த ராசியில் ஏற்கனவே செவ்வாய் பயணித்து வருகிறார்.

கும்ப ராசியில் சனியும், செவ்வாயும் இணைவதால், அந்த ராசியில் இரட்டை யோகம் உருவாகிறது. ஜோதிட சாஸ்திரப்படி இந்த யோகம் மிகவும் அசுபமாக கருதப்படுகிறது. கும்பத்தில் சனி, செவ்வாய் சேர்க்கையால் 12 ராசிகளிலும் ஒருவித மோசமான தாக்கம் இருந்தாலும், 3 ராசிக்காரர்கள் மிகவும் எச்சரிக்கையாக இருக்க வேண்டும். ஏனெனில் இந்த யோகத்தால் 3 ராசிக்காரர்கள் அதிக சிரமங்களை சந்திக்க நேரிடும். இப்போது அந்த ராசிக்காரர்கள் யார்யார் என்பதைக் காண்போம்.

கடகம்
கடக ராசியின் 8 ஆவது வீட்டில் சனி மற்றும் செவ்வாய் சேர்க்கை நிகழ்ந்துள்ளது. 8 ஆவது வீடு வயது, ஆபத்து மற்றும் விபத்து ஆகியவற்றின் வீடாக கருதப்படுகிறது. ஆகவே, கடக ராசிக்காரர்களுக்கு இந்த சேர்க்கையால் பெரிய பாதிப்பு ஏற்படும். பணியிடத்தில் எவ்வித ஆபத்தும் ஏற்படாதவாறு கவனமாக இருக்க வேண்டும். ஏனெனில் இக்காலத்தில் எந்த ஒரு சிறிய தவறும் பெரிய மோசமான விளைவை ஏற்படுத்தும். குறிப்பாக வாகனம் ஓட்டும் போது கவனமாக ஓட்ட வேண்டும்.

கன்னி
கன்னி ராசியின் 6 ஆவது வீட்டில் சனி மற்றும் செவ்வாய் சேர்க்கை நிகழ்ந்துள்ளது. இந்த வீடு கடன், எதிரிகள், ஆரோக்கியம் மற்றும் கடின உழைப்பு ஆகியவற்றை குறிக்கிறது. ஆகவே கனனி ராசிக்காரர்கள் ஆரோக்கியத்தில் அதிக கவனம் செலுத்த வேண்டும். எதிரிகளிடம் உஷாராக இருக்க வேண்டும். அதிக செலவுகளால் கடன் வாங்கும் வாய்ப்பு ஏற்படலாம். எனவே உங்கள் செலவுகளை கவனியுங்கள்.

கும்பம்
கும்ப ராசியின் முதல் வீட்டில் சனி மற்றும் செவ்வாய் சேர்க்கை நிகழ்ந்துளளதால், இக்காலம் கும்ப ராசிக்காரர்கள் அதிக சிரமங்களை சந்திக்க நேரிடும். இக்காலத்தில் இந்த ராசிக்காரர்கள் மிகவும் கவனமாக இருக்க வேண்டும். மேலும் இக்கால கட்டத்தில் இந்த ராசிக்காரர்கள் அதிக கோபம் மற்றும் எரிச்சல் கொள்வார்கள். வாழ்க்கைத் துணை மற்றும் உடன் பணிபுரிபவர்களுடன் தகராறு ஏற்படுவதற்கான வலுவான வாய்ப்பு உள்ளது.

சனி-செவ்வாய் சேர்க்கையின் பாதிப்புகளை தவிர்ப்பதற்கான பரிகாரங்கள்:
* செவ்வாய் மற்றும் சனி சேர்க்கையால் அதிக பாதிப்புகளை சந்திப்பவர்கள், செவ்வாய் கிழமைகளில் பஜ்ரங் பானை சொல்ல வேண்டும்.
* சனி மற்றும் செவ்வாய் பகவானுக்கு உரிய மந்திரங்களை உச்சரிக்க வேண்டும்.
* சனி-செவ்வாய் சேர்க்கையால் பாதிக்கப்பட்டவர்கள் சனி மற்றும் செவ்வாய் தொடர்பான பொருட்களை தானம் செய்ய வேண்டும்.



Click it and Unblock the Notifications
