Latest Updates
-
October 2026: அக்டோபர் மாதம் இந்த 4 ராசிக்கு தொழில் ரீதியாக அதிர்ஷ்டமா இருக்கும்! -
சூரியன் துலாம் ராசிக்குள் நுழையப்போவதால் ஜெயிக்கிற குதிரையாக ஜொலிக்கப்போகும் 4 ராசிகள் - உங்க ராசி என்ன? -
தாபா ஸ்டைல் ராஜ்மா மசாலா ரெசிபி - இந்த மாதிரி சைடிஷ் செஞ்சு பாருங்க - சப்பாத்தி, பூரிக்கு அருமையா இருக்கும் -
1 கப் கடலைப்பருப்பு இருந்தா.. சப்பாத்திக்கு இப்படி சைடு டிஷ் பண்ணுங்க.. டக்கரா இருக்கும்.. -
இந்த 4 ராசிக்காரங்க அவங்க நண்பர்களுக்கு ரொம்ப விசுவாசமா இருப்பார்களாம் - உங்க ராசி இதுல இருக்கா? -
பார்லர் செல்லாமல் முகப்பொலிவை அதிகரிக்கணுமா? அப்ப ரோஸ் வாட்டரை இப்படி யூஸ் பண்ணுங்க... -
5 லட்ச ரூபாய்க்கு விற்கப்படும் உலகின் காஸ்ட்லியான ஐஸ்கிரீம் - அப்படி இதுல என்னதான் ஸ்பெஷல் தெரியுமா? -
1 கப் பச்சரிசி இருந்தா.. ஈவ்னிங் டைம்-ல இந்த ஸ்நாக்ஸை செய்யுங்க.. பசங்க கேட்டு விரும்பி சாப்பிடுவாங்க.. -
World Heart Day 2026: 1 சிகரெட் அடிச்சா 20 நிமிஷத்துல இதயத்துல என்னென்ன நடக்கும்? - விளக்கும் இதய நிபுணர்! -
4 பிரெட் இருந்தா இந்த மாதிரி சுவையான புலாவ் செஞ்சு பாருங்க - வீட்ல எல்லோரும் விரும்பி சாப்பிடுவாங்க
செவ்வாய் வக்ர நிவர்த்தி அடைவதால் ஜனவரி 13 முதல் இந்த 3 ராசிக்காரங்க தொழிலில் வளர்ச்சியை காணப் போறாங்க..
2023 ஜனவரி 13 ஆம் தேதி செவ்வாய் ரிஷப ராசியில் வக்ர நிவர்த்தி அடைகிறார். இப்படி செவ்வாய் வக்ர நிவர்த்தி அடைவதால் அதன் தாக்கம் அனைத்து ராசிகளிலுமே தெரியும்.
Mars Margi In Taurus 2023: வேத ஜோதிடத்தின் படி, நவகிரகங்கள் அவ்வப்போது ராசியை மாற்றும். கிரகங்கள் நேராக பயணிக்கும் போது, அதில் சில கிரகங்கள் பின்னோக்கி வக்ர நிலையில் பயணித்து, சில காலம் கழித்து வக்ர நிவர்த்தி அடைந்து நேர்பாதையில் பயணிக்கும். அந்த நவகிரகங்களில் தைரியத்தையும், துணிச்சலையும் தருபவர் தான் செவ்வாய். இந்த செவ்வாய் தற்போது வக்ர நிலையில் பயணித்து வருகிறார்.

இந்நிலையில் 2023 ஜனவரி 13 ஆம் தேதி செவ்வாய் ரிஷப ராசியில் வக்ர நிவர்த்தி அடைகிறார். இப்படி செவ்வாய் வக்ர நிவர்த்தி அடைவதால் அதன் தாக்கம் அனைத்து ராசிகளிலுமே தெரியும். ஆனால் சில ராசிக்காரர்கள் இந்த வக்ர நிவர்த்தியால் தொழிலில் முன்னேற்றத்தை, சிறப்பான பலன்களையும் பெறவுள்ளார்கள். இப்போது அந்த ராசிக்காரர்கள் யார் என்பதைக் காண்போம்.

மீனம்
மீன ராசியின் 3 ஆவது வீட்டில் செவ்வாய் வக்ர நிவர்த்தி அடைகிறார்கள். இது தைரியம், வலிமை மற்றும் உடன்பிறந்தவர்களின் வீடாகும். எனவே இக்காலத்தில் உங்களின் தன்னம்பிக்கை அதிகரிக்கும். அதோடு, பணியிடத்தில் உங்களின் பலம் அதிகரிக்கும். ரிஸ்க் எடுக்கும் வேலையில் நல்ல லாபத்தைப் பெறுவீர்கள். மேலும் சகோதர சகோதரிகளின் ஆதரவை இக்காலத்தில் முழுமையாக பெறுவீர்கள்.

கடகம்
கடக ராசியின் 11 ஆவது வீட்டில் செவ்வாய் வக்ர நிவர்த்தி அடைகிறார். இது வருமானம் மற்றும் லாபத்தின் வீடாகும். எனவே இக்காலத்தில் வருமானத்தில் மிகப்பெரிய முன்னேற்றம் ஏற்படும். இது தவிர வேலையில் இருப்பவர்களுக்கு பதவி உயர்வு அல்லது சம்பள உயர் கிடைக்க வாய்ப்புள்ளது. நிதிமன்ற வழக்குகளில் வெற்றி கிடைக்கும். மறுபுறம், மாணவர்கள் கடின உழைப்பால் சிறந்த வெற்றியைப் பெறுவார்கள். போட்டி தேர்வுகளில் நல்ல முடிவுகளை பெறுவீர்கள்.

சிம்மம்
சிம்ம ராசியின் 10 ஆவது வீட்டில் செவ்வாய் வக்ர நிவர்த்தியடைகிறார்கள். இது வேலை மற்றும் பணியிடத்தின் வீடாகும். எனவே சிம்ம ராசிக்காரர்கள் இக்காலத்தில் புதிய வேலை வாய்ப்பைப் பெற வாய்ப்புள்ளது. பணியிடத்தில் உங்களின் வேலை பாராட்டப்படும். வெளிநாட்டில் பணிபுரிபவர்களுக்கு இக்காலம் நல்ல ஏற்றத்தை தரும் காலமாக கருதப்படுகிறது. அதே நேரத்தில், இக்காலத்தில் மேற்கொள்ளும் பயணங்களில் நல்ல லாபம் கிடைக்கும்.
(பொறுப்புத் துறப்பு: மேலே கொடுக்கப்பட்டுள்ள தகவல் இணையத்தில் கிடைக்கும் அனுமானங்கள் மற்றும் தகவல்களின் அடிப்படையில் கொடுக்கப்பட்டுள்ளன மற்றும் நம்பகத்தன்மைக்கு உத்தரவாதம் இல்லை. தமிழ் போல்ட்ஸ்கை கட்டுரை தொடர்பான தகவலை உறுதிப்படுத்தவில்லை. மேலும் எங்கள் ஒரே நோக்கம் தகவலை வழங்குவது மட்டுமே. அதை வெறும் தகவலாக மட்டும் எடுத்துக் கொள்ள வேண்டும். எந்தவொரு தகவலையும் அனுமானத்தையும் பயிற்சி செய்வதற்கு அல்லது செயல்படுத்துவதற்கு முன், தயவுசெய்து சம்பந்தப்பட்ட நிபுணரை அணுகவும்.)



Click it and Unblock the Notifications
