Latest Updates
-
குரு-புதன் உருவாக்கும் சக்தி வாய்ந்த ராஜயோகம்: இந்த 3 ராசிக்கு டபுள் ஜாக்பாட் அடிக்கப்போகுது... -
தமிழ்நாட்டில் உள்ள சர்க்கரை நோயை குணப்படுத்தும் 1,300 ஆண்டுகள் பழமையான இந்த கோயில் பற்றி தெரியுமா? -
1 கப் ரவை இருந்தா.. ஈவ்னிங் கண்டிப்பா இந்த ஸ்நாக்ஸை ட்ரை பண்ணுங்க.. செமயா இருக்கும்.. -
1 வருடம் கழித்து மீனம் செல்லும் சூரியன்: மார்ச் 15 முதல் இந்த 4 ராசிக்காரங்க எச்சரிக்கையா இருக்கணும்.. -
கல்யாண வீட்டு தஞ்சை வத்தக்குழம்பு - எப்படி செய்றது-ன்னு பாத்து செஞ்சு பாருங்க.. டேஸ்ட் அள்ளும்.. -
World Kidney Day 2026: சிறுநீரகங்கள் ஆரோக்கியமா இருக்கணுமா? அப்ப டாக்டர் சொல்ற இந்த 5 உணவுகளை சாப்பிடுங்க.. -
ராகு-கேதுவால் உருவாகியுள்ள கால சர்ப்ப யோகம்: இந்த 3 ராசிக்கு மார்ச் 26 வரை வெற்றியும், பணமும் குவியப்போகுது... -
இந்த கஞ்சியை தினமும் காலையில் 1 கப் குடிங்க.. உடல் எடை ஜெட் வேகத்தில் குறையும்... -
இன்றைய ராசிபலன் 10 மார்ச் 2026: இன்று இந்த 4 ராசிக்காரர்களுக்கு துரதிர்ஷ்டம் துரத்தும் நாளாக இருக்குமாம்...! -
மீனத்தில் உருவாகும் திரிகிரக யோகம்: தனுசு உள்ளிட்ட 3 ராசிக்கு தொழிலில் நல்ல முன்னேற்றம் ஏற்படும்...
Mangal Margi 2023: வக்ர நிவர்த்தி அடையும் செவ்வாயால் ஜனவரி 13 முதல் இந்த ராசிக்காரர்களின் வாழ்க்கையே மாறபோகுது
2023 ஜனவரி 13 ஆம் தேதி செவ்வாய் வக்ர நிவர்த்தி அடைவதால் 12 ராசிக்காரர்களும் எந்த மாதிரியான பலன்களைப் பெறப் போகிறார்கள் என்பதைக் காண்போம்.
Mangal Margi 2023: நவகிரகங்களில் செவ்வாய் தைரியம், துணிச்சல் ஆகியவற்றின் காரணியாக கருதப்படுகிறார். ஒருவரது ஜாதத்தில் செவ்வாய் நல்ல நிலையில் இருந்தால், அவர் எதையும் தைரியமாகவும், மனக்கிளர்ச்சியுடனும் செய்வார்கள். மேலும் எதையும் வெளிப்படையாக பேசக்கூடியவராக இருப்பார்கள். அதுவே செவ்வாய் மோசமான நிலையில் இருந்தால், செவ்வாய் தோஷத்தால் பல பிரச்சனைகளை வாழ்வில் சந்திப்பார்கள். இப்படிப்பட்ட செவ்வாய் தற்போது சுக்கிரன் ஆளும் ரிஷப ராசியில் வக்ர நிலையில் பயணித்து வருகிறார்.

இந்நிலையில் 2 1/2 மாதங்கள் கழித்து 2023 ஜனவரி 13 ஆம் தேதி வெள்ளிக்கிழமை ரிஷப ராசியில் வக்ர நிவர்த்தி அடைந்து, நேர்பாதையில் பயணிக்கவுள்ளார். இதனால் இதுவரை செவ்வாயால் கஷ்டப்பட்டு வந்த பல ராசிக்காரர்கள் நற்பலனைப் பெறப் போகிறார்கள். மேலும் செவ்வாய் வக்ர நிவர்த்தி அடைவதால், அதன் தாக்கம் 12 ராசிகளிலும் காணப்படும். இப்போது 2023 ஜனவரி 13 ஆம் தேதி செவ்வாய் வக்ர நிவர்த்தி அடைவதால் 12 ராசிக்காரர்களும் எந்த மாதிரியான பலன்களைப் பெறப் போகிறார்கள் என்பதைக் காண்போம்.

மேஷம்
மேஷ ராசியின் 2 ஆவது வீட்டில் செவ்வாய் வக்ர நிவர்த்தி அடைகிறார். இதனால் இதுவரை குடும்ப உறுப்பினர்களுடன் இருந்த மோதல்கள் குறையும். நிதி தொடர்பான பிரச்சனைகள் குறையும். ஆரோக்கியம் தொடர்பான பிரச்சனைகள் குறைய ஆரம்பிக்கும். இருப்பினும் உணவுப்பழத்தில் சற்று கவனமாக இருக்க வேண்டும். மேலும் வாகனம் ஓட்டும் போது கவனமாக இருக்க அறிவுறுத்தப்படுகிறது.

ரிஷபம்
ரிஷப ராசியின் முதல் வீட்டில் செவ்வாய் வக்ர நிவர்த்தி அடைகிறார். இதனால் ரிஷப ராசிக்காரர்கள் ஆரோக்கியத்திற்காக அதிக பண செலவுகளை செய்ய வேண்டியிருக்கும். சொத்து சம்பந்தமான பிரச்சனைகளை சந்திக்கலாம். வணிகர்கள் ஒப்பந்தத்தின் போது நீங்கள் எச்சரிக்கையாக இருக்க வேண்டும். இழப்புகள் ஏற்பட வாய்ப்புள்ளதால் கவனமாக இருக்க வேண்டும்.

மிதுனம்
மிதுன ராசியின் 12 ஆவது வீட்டில் செவ்வாய் வக்ர நிவர்த்தி அடைகிறார். இதனால் பணிபுரியும் மிதுன ராசிக்காரர்கள் தங்கள் தொழில் வாழ்க்கையில் சிக்கல்களை எதிர்கொள்வார்கள். மருத்துவச் செலவுகள் உயரும். வாழ்க்கைத்துணையுடன் சில தேவையற்ற ஈகோ மோதல்கள் ஏற்படலாம். இக்காலத்தில் துணையுடன் வாக்குவாதங்களைத் தவிர்க்க முயற்சி செய்யுங்கள். இல்லாவிட்டால் உறவில் விரிசல் ஏற்படலாம்.

கடகம்
கடக ராசியின் 11 ஆவது வீட்டில் செவ்வாய் வக்ர நிவர்த்தி அடைகிறார். இதனால் இதுவரை சந்தத்த நிதி சிக்கல்கள், பணியிடத்தில் சிக்கல் மற்றும் மோதல்கள், பதவி உயர்வு மற்றும் அதிகரிப்புகளில் தாமதம், வேலை தேடுபவர்களுக்கு வேலை கிடைப்பதில் சிரமம் போன்ற பிரச்சனைகள் அனைத்தும் முடிவுக்கு வரும். மாணவர்களுக்கு நன்றாக இருக்கும். அதிர்ஷ்டம் மீண்டும் சாதகமாக இருக்கும்.

சிம்மம்
சிம்ம ராசியின் 10 ஆவது வீட்டில் செவ்வாய் வக்ர நிவர்த்தி அடைகிறார். இதனால் பணியிடத்தில் சந்தித்த பிரச்சனைகள் முடிவுக்கு வந்து, தொழில் வாழ்க்கையில் சிறப்பான பலன்கள் கிடைக்கும். பணி வாழ்க்கையில் உங்கள் நடத்தையில் நல்ல மாற்றத்தை அனுபவிப்பீர்கள். உங்கள் பெற்றோருடனான உங்கள் உறவும் மேம்படும், அவர்களின் ஆதரவைப் பெறுவீர்கள்.

கன்னி
கன்னி ராசியின் 9 ஆவது வீட்டில் செவ்வாய் வக்ர நிவர்த்தி அடைகிறார். இதனால் உங்கள் தந்தை மற்றும் வழிகாட்டிகளுடன் நீங்கள் எதிர்கொண்ட மோதல் அல்லது பனிப்போர் முடிவுக்கு வந்து அவர்களுடனான உங்கள் உறவு மேம்படும். உங்கள் பெற்றோரின் ஆரோக்கியத்தில் சற்று கவனம் செலுத்த வேண்டும். இக்காலத்தில் உங்கள் சகோதரரின் ஆதரவையும் பெறுவீர்கள்.

துலாம்
துலாம் ராசியின் 8 ஆவது வீட்டில் செவ்வாய் வக்ர நிவர்த்தி அடைகிறார். இதனால் இக்காலத்தில் திடீர் பிரச்சனையால் சற்று நிம்மதி இழந்து இருப்பீர்கள். உங்களின் பேச்சு இக்காலத்தில் கட்டளையிடுவது போன்று இருக்கும். எனவே உங்கள் உங்கள் பேச்சையும் வார்த்தைகளையும் கவனிக்க வேண்டும். பயணம் மேற்கொள்ளும் போது அதிக எச்சரிக்கையுடன் இருக்க முயற்சி செய்யுங்கள்.

விருச்சிகம்
விருச்சிக ராசியின் 7 ஆவது வீட்டில் செவ்வாய் வக்ர நிவர்த்தி அடைகிறார். இதனால் திருமண வாழ்வில் இருந்த மோதல்களில் இருந்து சற்று நிவாரணம் கிடைக்கும். இருப்பினும் திருமண வாழ்க்கையில் கூடுதல் கவனம் செலுத்த வேண்டும். தொழில் மற்றும் கூட்டு தொழில் செய்பவர்களுக்கு நல்ல பலன்கள் கிடைக்கும். ஆனால் இக்காலத்தில் நீங்கள் திமிர் பிடித்தவர்களாக திகழ்வீர்கள். இது உங்கள் உறவுகளில் இடையூறை ஏற்படுத்தும். எனவே உங்கள் நடத்தையில் சற்று கவனமாக இருக்க அறிவுறுத்தப்படுகிறது.

தனுசு
தனுசு ராசியின் 6 ஆவது வீட்டில் செவ்வாய் வக்ர நிவர்த்தி அடைகிறார். இதனால் இக்காலத்தில் உங்கள் எதிரிகளால் உங்கள் உருவத்திற்கு எந்த விதத்திலும் தீங்கு விளைவிக்கவோ அல்லது தடுக்கவோ முடியாது. ஆரோக்கியத்தைப் பொறுத்தவரை சாதகமாக இருக்கும். போட்டித் தேர்வுகளுக்குத் தயாராகும் மாணவர்கள் வெற்றி பெறுவார்கள். தொலைதூர பயணத்திற்கான வாய்ப்புகள் உள்ளன.

மகரம்
மகர ராசியின் 5 ஆவது வீட்டில் செவ்வாய் வக்ர நிவர்த்தி அடைகிறார். இதனால் மாணவர்களுக்கு இக்காலம் சற்று சிறப்பாக இருக்கும். படிப்பில் நன்கு கவனம் செலுத்த முடியும். உங்கள் தாயாருடனான உங்கள் உறவு மேம்படும் மற்றும் இல்லற வாழ்க்கையில் மோதல்கள் தீர்க்கப்படும். இருப்பினும் சற்று விழிப்புடன் இருக்க அறிவுறுத்தப்படுகிறது.

கும்பம்
கும்ப ராசியின் 4 ஆவது வீட்டில் செவ்வாய் வக்ர நிவர்த்தி அடைகிறார். இதனால் இக்காலத்தில் அனைத்து போராட்டங்களும் தீர்வை நோக்கி நகரும். மேலும், சொத்து விற்பது அல்லது வாங்குவது தொடர்பான ஏதேனும் ஒப்பந்தம் அல்லது வாகனத்தை மாற்றும் திட்டத்தை நிறுத்தி வைத்திருந்தால், இப்போது அதை மேற்கொள்ளலாம். வேலை செய்யும் இடத்தில் நல்ல வாய்ப்புகளை உருவாக்கும், உங்களின் பணிச்சுமை மற்றும் பொறுப்பு அதிகரிக்கும். சம்பள உயர்வும் அதிகரிக்கும். மேலும் இக்காலத்தில் உங்கள் இலக்குகளை அடைவீர்கள் மற்றும் உங்கள் ஆசைகள் நிறைவேறும்.

மீனம்
மீன ராசியின் 3 ஆவது வீட்டில் செவ்வாய் வக்ர நிவர்த்தி அடைகிறார். இதனால் உங்கள் உடன்பிறந்தவர்களுடன் நீங்கள் எதிர்கொள்ளும் பிரச்சினைகள் தீர்க்கப்படும். ஆரோக்கியத்தைப் பொறுத்தவரை, சகிப்புத்தன்மையும் ஆற்றலும் அதிகமாக இருக்கும். நீண்ட காலமாக அவதிப்பட்டு வந்த கடந்தகால நோய்களில் இருந்து மீள்வீர்கள். நீங்கள் ஜோதிடம் கற்க நினைத்தால் அதற்கு இது மிகவும் நல்ல நேரம்.
(பொறுப்புத் துறப்பு: மேலே கொடுக்கப்பட்டுள்ள தகவல் இணையத்தில் கிடைக்கும் அனுமானங்கள் மற்றும் தகவல்களின் அடிப்படையில் கொடுக்கப்பட்டுள்ளன மற்றும் நம்பகத்தன்மைக்கு உத்தரவாதம் இல்லை. தமிழ் போல்ட்ஸ்கை கட்டுரை தொடர்பான தகவலை உறுதிப்படுத்தவில்லை. மேலும் எங்கள் ஒரே நோக்கம் தகவலை வழங்குவது மட்டுமே. அதை வெறும் தகவலாக மட்டும் எடுத்துக் கொள்ள வேண்டும். எந்தவொரு தகவலையும் அனுமானத்தையும் பயிற்சி செய்வதற்கு அல்லது செயல்படுத்துவதற்கு முன், தயவுசெய்து சம்பந்தப்பட்ட நிபுணரை அணுகவும்.)



Click it and Unblock the Notifications











