Latest Updates
-
சனி, குரு, ராகு-கேதுவின் நிலைகளால் 2027 வரை ராஜயோகத்தைப் பெறும் ராசிக்காரர்கள் யார்யார் தெரியுமா? -
பிஜ்னோரில் நடந்த கொடூரம்! லிவ்-இன் உறவில் இந்த அறிகுறிகள் தெரிந்தால் உஷார், இல்லையென்றால் ஆபத்து! -
கோடையில் பால் போன்ற சருமம் வேண்டுமா? அப்ப இந்த மைதா ஃபேஸ் பேக்கை போடுங்க.. -
சுக்கிரனின் நட்சத்திர பெயர்ச்சி: மே 8 முதல் இந்த 3 ராசிக்காரர்களின் செல்வம் டபுள் ஆகப்போகுது! -
வீட்டில் இந்த 4 செடிகள் இருந்தா போதும்… புழுதிப் புயலையும் தாண்டி அதிர்ஷ்டம் தேடி வரும்! -
கேரட்டும், மாங்காயும் இருந்தா.. இப்படி செஞ்சு பாருங்க.. எல்லாத்துக்குமே டக்கரா இருக்கும்.. -
கப்பர் யோக காலத்தில் பணத்தை இழக்காதீங்க! இந்த 5 வாஸ்து மாற்றங்கள் செழிப்பை அள்ளித்தரும்! -
Mathi Meen Benefits: அடிக்கடி மத்தி மீன் சாப்பிடுவதால் கிடைக்கும் நன்மைகளை பட்டியலிட்ட டாக்டர் தினேஷ்! -
May 2026 Monthly Numerology: உங்க பிறந்த தேதியை சொல்லுங்க.. மே மாதம் எப்படி இருக்கும்-ன்னு சொல்றோம்... -
கொளுத்தும் வெயிலில் உடல் எடையைக் குறைக்க உதவும் 3 விதமான கூழ் ரெசிபிக்கள் - எப்படி செய்யணும் தெரியுமா?
March Horoscope 2023: மார்ச் மாசம் இந்த ராசிக்காரங்க வாழ்க்கையில் பெரிய மாற்றம் ஏற்படப் போகுது..
மார்ச் மாதம் 12 ராசிக்காரர்களின் வாழ்க்கையில் ஒருசில மாற்றங்களைக் கொண்டு வரப் போகிறது. உங்களுக்கு 2023 ஆம் ஆண்டின் மார்ச் மாதம் எப்படி இருக்கப் போகிறது என்பதை தெரிந்து கொள்ள ஆவலாக உள்ளதா?

March Horoscope 2023: ஒவ்வொரு மாதமும் கிரகங்களின் நிலைகளைப் பொறுத்து பலன்கள் வேறுபடும். அந்த வகையில் மார்ச் மாதம் 12 ராசிக்காரர்களின் வாழ்க்கையில் ஒருசில மாற்றங்களைக் கொண்டு வரப் போகிறது. உங்களுக்கு 2023 ஆம் ஆண்டின் மார்ச் மாதம் எப்படி இருக்கப் போகிறது என்பதை தெரிந்து கொள்ள ஆவலாக உள்ளதா? கீழே 12 ராசிக்காரர்களும் மார்ச் மாதத்தில் எந்த மாதிரியான பலன்களைப் பெறப் போகிறார்கள் என மார்ச் மாத ராசிப்பலன்கள் கொடுக்கப்பட்டுள்ளன. உங்கள் ராசிக்கு 2023 மார்ச் மாதம் எப்படி இருக்கும் என்பதை தொடர்ந்து படித்து தெரிந்து கொள்ளுங்கள்.

மேஷம்
மேஷ ராசிக்காரர்களே! இந்த மாதம் உங்களுக்கு அற்புதமான மாதமாக இருக்கப் பேகிற. தொழிலில் நல்ல வளர்ச்சியைக் காணப் போகிறீர்கள். நீங்கள் யாரையேனும் காதலித்துக் கொண்டிருந்தால், இந்த மாதத்தில் அவர்கள் உங்களால் ஈர்க்கப்பட வாய்ப்புள்ள. மேலும் தொழில் ரீதியாக உங்களின் தகுதியை நிரூபிக்க வாய்ப்புக்களைப் பெறுவீர்கள். வியாபாரிகளுக்கு அவர்களின் திட்டங்கள் விருப்பப்படி நிறைவேறும். மொத்தத்தில் இந்த மாதம் சாதகமாக இருக்கும்.

ரிஷபம்
ரிஷப ராசிக்காரர்களே! இந்த மாதம் நீங்கள் சற்று எச்சரிக்கையாக இருக்க வேண்டும். குறிப்பாக பணியிடத்தில் உங்களின் வேலையை கவனமாக செய்ய அறிவுறுத்தப்படுகிறது. உங்களை திசைத் திருப்ப பலர் முயற்சிப்பார்கள். அதை புறக்கணித்து, உங்கள் வேலையில் மட்டும் கவனத்தை செலுத்துங்கள். தனிப்பட்ட வாழ்க்கையைப் பொறுத்தவரை, உங்கள் வாழ்க்கைத் துணையுடனான உறவில் விரிசல் ஏற்பட வாய்ப்புள்ளது. இந்த மாதத்தில் உங்கள் பேச்சில் கவனமாக இருக்க வேண்டும். இல்லாவிட்டால் பெரிய வாக்குவாதம் அல்லது சண்டையை சந்திக்க நேரிடும்.

மிதுனம்
மிதுன ராசிக்காரர்களே! இந்த மாதம் நீங்கள் முன்னேற்றத்திற்கான பல வாய்ப்புக்களை பெறுவீர்கள். எந்த வாய்ப்பையும் நழுவ விடாமல் புத்திசாலித்தனமாக பயன்படுத்திக் கொள்ளுங்கள். இதனால் இந்த மாதத்தில் நல்ல மாற்றத்தை மற்றும் முன்னேற்றத்தை இம்மாதத்தில் காண்பீர்கள். பணிபுரிபவர்களுக்கு கடின உழைப்பிற்கான பலன் கிடைக்கும். அதோடு பதவி உயர்வு கிடைக்கவும் வாய்ப்புள்ளது. பங்கு சந்தையில் முதலீடு செய்தால் நல்ல லாபம் கிடைக்கும். குடும்பத்தினருன் இம்மாதத்தில் நல்ல நேரத்தை செலவிடுவீர்கள்.

கடகம்
கடக ராசிக்காரர்களே! இந்த மாதத்தில் உங்களின் நிதி நிலை மிகவும் சிறப்பாக இருக்கும். தொழிலில் முன்னேற்றத்திற்கான பல வாய்ப்புகள் கிடைக்கும். இந்த மாதத்தில் சிறப்பாக உங்களின் முழு திறனை வெளிக்காட்டி பணிபுரிந்தால், பதவி உயர்வு கிடைக்கும். இம்மாதத்தில் நிலம் அல்லது வீட்டில் பணத்தை முதலீடு செய்வது நல்லது. மேலும் கடன் வாங்கியிருந்தால், அதை இக்காலத்தில் அடைத்துவிடுவீர்கள்.

சிம்மம்
சிம்ம ராசிக்காரர்களே! இந்த மாதத்தில் நீங்கள் உங்கள் ஆரோக்கிய விஷயத்தில் மிகவும் கவனமாக இருக்க வேண்டும். மார்ச் மாதத்தில் அதிக பிரச்சனைகளை சந்திக்க மாட்டீர்கள். தொழில் ரீதியாக, பணியிடத்தில் சிறப்பாக செயல்படுவீர்கள். வியாபாரம் செய்பவர்கள் இம்மாதத்தில் நல்ல பலனைப் பெறுவார்கள். மேலும் குடும்பத்தினருடனும் நண்பர்களுடனும் மகிழ்ச்சியாக நேரத்தை செலவிடும் வாய்ப்புகள் கிடைக்கும்.

கன்னி
கன்னி ராசிக்காரர்களே! இந்த மாதம் உங்களுக்கு இனிமையான மாதமாக இருக்கும். நிலுவையில் உள்ள அனைத்து வேலைகளும் வெற்றிகரமாக முடிக்கப்படும். இதுவரை நீங்கள் மன அழுத்தத்தால் பாதிக்கப்பட்டிருந்தால், இந்த மாதத்தில் அதிலிருந்து விடுபடுவதற்கான ஏராளமான வாய்ப்புகள் கிடைக்கும். உங்களின் தனிப்பட்ட வாழ்க்கை மகிழ்ச்சிகரமாக இருக்கும். திருமணமாகாதவர்களுக்கு நல்ல திருமண வரன் தேடி வரும்.

துலாம்
துலாம் ராசிக்காரர்களே! இந்த மாதம் நீங்கள் நிதி ரீதியாக அதிர்ஷ்டசாலியாக இருப்பீர்கள். இந்த மாதத்தில் முதலீடு செய்தால், அதில் நல்ல பலனைப் பெறுவீர்கள். பணிபுரிபவர்களுக்கு இம்மாதத்தில் பதவி உயர்வு, சம்பள உயர்வு போன்றவை கிடைக்க வாய்ப்புள்ளது. இந்த மாதத்தில் உங்களின் திறமைகளை வெளிப்படுத்துவதற்கான பல வாய்ப்புக்களைப் பெறுவீர்கள்.

விருச்சிகம்
விருச்சிக ராசிக்காரர்களே! இந்த மாதத்தில் நற்பலனைப் பெறுவீர்கள். வணிகத்தில் இருப்பவர்கள் புதிய முயற்சிகளை எடுக்கும் முன் நன்கு யோசித்த பின்னரே எடுக்க வேண்டும். பணிபுரிபவர்கள் அலுவலகத்தில் தங்களின் யோசனைகளை பகிர்ந்து கொள்வதன் மூலம் நற்பெயரைப் பெற வாய்ப்புள்ளது. காதலிப்பவர்களுக்கு இந்த மாதம் நன்றாக இருக்கும்.

தனுசு
தனுசு ராசிக்காரர்களே! இந்த மாதம் உங்களுக்கு சாதகமான மாதமாக இருக்கும். தடைப்பட்ட, நிலுவையில் உள்ள வேலைகள் இந்த மாதத்தில் வெற்றிகரமாக முடிக்கப்படும். இதுவரை நீங்கள் சந்தித்து வந்த பெரிய பிரச்சனை இந்த மாதத்தில் முடிவுக்கு வரப் போகிறது. குடும்பத்தினருடன் ஆன்மீக பயணங்களை மேற்கொள்வதற்கான வாய்ப்புள்ளது.

மகரம்
மகர ராசிக்காரர்களே! மார்ச் மாதத்தில் நீங்கள் மிகவும் எச்சரிக்கையாக இருக்க வேண்டும். உங்களைச் சுற்றியுள்ளவர்களிடம் சற்று கவனமாக இருக்க அறிவுறுத்தப்படுகிறது. ஏனெனில் உங்களைச் சுற்றியுள்ளவர்கள் உங்களுக்கு எதிராக சதி செய்வார்கள். எனவே பணிபுரிபவர்கள் அலுவலகத்தில் சற்று உஷாராக இருக்க வேண்டும் மற்றும் வேலையில் கவனத்தை செலுத்த அறிவுறுத்தப்படுகிறது.

கும்பம்
கும்ப ராசிக்காரர்களே! மார்ச் மாதமானது உங்களுக்கு சாதகமாக இருக்கும். உங்கள் நீண்ட நாள் கனவு, இந்த மாதத்தில் நிறைவேறலாம். வீடு, வாகனம் வாங்கும் ஆசை இருந்தால், அது இந்த மாதத்தில் நிறைவேற வாய்ப்புள்ளது. வேலை இல்லாதவர்களுக்கு புதிய வேலை கிடைக்க வாய்ப்புள்ளது. வாழ்க்கைத் துணையுடனான உறவு மிகவும் மகிழ்ச்சி நிறைந்து இருக்கும். திருமண வாழ்க்கை ரொமான்டிக்காக இருக்கும்.

மீனம்
மீன ராசிக்காரர்களே! மார்ச் மாதத்தில் உங்கள் காதல் வாழ்க்கையில் சில நல்ல மாற்றங்களைக் காண்பீர்கள். திருமணமானவர்கள், தங்கள் வாழ்க்கைத் துணையைப் பற்றிய புதிய விஷயங்களை தெரிந்து கொள்வீர்கள். தொழில் ரீதியாக, இந்த மாதத்தில் நல்ல சிறப்பான பலன்கள் கிடைக்கும். இந்த மாதத்தில் உங்களின் திறமைகளை வெளிக்காட்டுவதற்கான வாய்ப்புக்களைப் பெறுவீர்கள். அதை திறம்பட பயன்படுத்திக் கொண்டால், வாழ்வில் நல்ல முன்னேற்றத்தைக் காணலாம்.
(பொறுப்புத் துறப்பு: மேலே கொடுக்கப்பட்டுள்ள தகவல் இணையத்தில் கிடைக்கும் அனுமானங்கள் மற்றும் தகவல்களின் அடிப்படையில் கொடுக்கப்பட்டுள்ளன மற்றும் நம்பகத்தன்மைக்கு உத்தரவாதம் இல்லை. தமிழ் போல்ட்ஸ்கை கட்டுரை தொடர்பான தகவலை உறுதிப்படுத்தவில்லை. மேலும் எங்கள் ஒரே நோக்கம் தகவலை வழங்குவது மட்டுமே. அதை வெறும் தகவலாக மட்டும் எடுத்துக் கொள்ள வேண்டும். எந்தவொரு தகவலையும் அனுமானத்தையும் பயிற்சி செய்வதற்கு அல்லது செயல்படுத்துவதற்கு முன், தயவுசெய்து சம்பந்தப்பட்ட நிபுணரை அணுகவும்.)



Click it and Unblock the Notifications