Latest Updates
-
1 கப் ரவை இருந்தா.. ஈவ்னிங் கண்டிப்பா இந்த ஸ்நாக்ஸை ட்ரை பண்ணுங்க.. செமயா இருக்கும்.. -
1 வருடம் கழித்து மீனம் செல்லும் சூரியன்: மார்ச் 15 முதல் இந்த 4 ராசிக்காரங்க எச்சரிக்கையா இருக்கணும்.. -
கல்யாண வீட்டு தஞ்சை வத்தக்குழம்பு - எப்படி செய்றது-ன்னு பாத்து செஞ்சு பாருங்க.. டேஸ்ட் அள்ளும்.. -
World Kidney Day 2026: சிறுநீரகங்கள் ஆரோக்கியமா இருக்கணுமா? அப்ப டாக்டர் சொல்ற இந்த 5 உணவுகளை சாப்பிடுங்க.. -
ராகு-கேதுவால் உருவாகியுள்ள கால சர்ப்ப யோகம்: இந்த 3 ராசிக்கு மார்ச் 26 வரை வெற்றியும், பணமும் குவியப்போகுது... -
இந்த கஞ்சியை தினமும் காலையில் 1 கப் குடிங்க.. உடல் எடை ஜெட் வேகத்தில் குறையும்... -
இன்றைய ராசிபலன் 10 மார்ச் 2026: இன்று இந்த 4 ராசிக்காரர்களுக்கு துரதிர்ஷ்டம் துரத்தும் நாளாக இருக்குமாம்...! -
மீனத்தில் உருவாகும் திரிகிரக யோகம்: தனுசு உள்ளிட்ட 3 ராசிக்கு தொழிலில் நல்ல முன்னேற்றம் ஏற்படும்... -
முடி அதிகமா கொட்டுதா? அப்ப தேங்காய் எண்ணெயுடன் இந்த எண்ணெயை சேர்த்து யூஸ் பண்ணுங்க.. -
300 ஆண்டுக்கு பின் உருவாகும் சுக்ராதித்ய யோகம் 2026: இந்த 3 ராசிக்காரர்களுக்கு கோடீஸ்வர யோகம் தேடிவரப்போகுதாம்
Makar Sankranti 2023 Rasi Palan: சூரிய பெயர்ச்சியால் ஜனவரி 14 முதல் இந்த ராசிகளுக்கு சூப்பரா இருக்கப் போகுது..
2023 ஆம் ஆண்டின் முதல் சூரிய பெயர்ச்சி ஜனவரி 14 ஆம் தேதி நிகழ்கிறது. இந்த பெயர்ச்சியின் போது சூரியன் சனி ஆளும் மகர ராசிக்கு செல்கிறார். இது மகர சங்கராந்தி என்று அழைக்கப்படுகிறது.
ஜோதிடத்தில் சூரியன் மிகவும் முக்கியமான கிரகமாகும். நவகிரகங்களின் தலைவனாக கருதப்படும் சூரியன், ஒவ்வொரு மாதமும் ராசியை மாற்றுவார். அப்படி சூரியன் ராசியை மாற்றும் நாள் தான் சங்கராந்தி என்று அழைக்கப்படுகிறது. 2023 ஆம் ஆண்டின் முதல் சூரிய பெயர்ச்சி ஜனவரி 14 ஆம் தேதி நிகழ்கிறது. இந்த பெயர்ச்சியின் போது சூரியன் சனி ஆளும் மகர ராசிக்கு செல்கிறார். மகர ராசிக்கு சூரியன் செல்வதால், இது மகர சங்கராந்தி என்று அழைக்கப்படுகிறது. மேலும் சூரியன் மகர ராசிக்கு செல்லும் போது தான், தமிழ் மாதமான தை மாதம் பிறக்கிறது.

பொதுவாக சூரிய பெயர்ச்சி 12 ராசிகளிலுமே தாக்கத்தை ஏற்படுத்தும். அதில் சில ராசிக்காரர்கள் நற்பலனையும், சில ராசிக்காரர்கள் மோசமான பலன்களையும் பெறலாம். இப்போது மகரம் செல்லும் சூரியனால் ஜனவரி 14 முதல் அடுத்த ஒரு மாதம் 12 ராசிக்காரர்களுக்கும் எப்படி இருக்கும் என்பதைக் காண்போம்.

மேஷம்
மேஷ ராசியின் 10 ஆவது வீட்டிற்கு சூரியன் செல்கிறார். இதனால் இக்காலம் ஒரு வரப்பிரசாதமாக இருக்கும். அரசு வேலைக்கு விண்ணப்பிக்க விரும்பினால், அதைப் பெறுவதற்கான வாய்ப்புள்ளது. உங்களின் நிலுவையில் உள்ள வேலைகள் வெற்றிகரமாக முடிக்கப்படும். இக்காலத்தில் பெற்றோரின் முழு ஆதரவு கிடைக்கும். அரசியலில் இருப்பவர்கள் இக்காலத்தில் எந்த ஒரு முடிவை எடுத்தாலும், அதில் நற்பலன்கள் கிடைக்கும். ஆனால் இக்காலத்தில் உங்களின் எந்த ஒரு திட்டங்களையும் ரகசியமாக வைத்துக் கொள்ளுங்கள்.

ரிஷபம்
ரிஷப ராசியின் 9 ஆவது வீட்டிற்கு சூரியன் செல்கிறார். இதனால் இக்காலத்தில் உங்களின் வழியில் உள்ள தடைகள் விலகும். ஆன்மீகத்தில் ஆர்வம் அதிகரிக்கும். வெளிநாட்டு நிறுவனங்களில் வேலைக்காக அல்லது குடியுரிமைக்காக எடுக்கும் முயற்சிகளில் வெற்றி கிடைக்கும். தைரியத்தாலும், துணிச்சலாலும் சாதனைகளைப் புரிவீர்கள். எடுக்கும் எந்த ஒரு வேலையிலும் வெற்றி பெறுவீர்கள். மூத்த குடும்ப உறுப்பினர்கள் மற்றும் சகோதரர்களுடன் கருத்து வேறுபாடுகள் வளர விடாதீர்கள். திருமண விஷயங்களில் சற்று தாமதம் ஏற்படலாம்.

மிதுனம்
மிதுன ராசியின் 8 ஆவது வீட்டிற்கு சூரியன் செல்கிறார். இதனால் சூரியனின் அருளால் நற்பலன்கள் கிடைக்கும். ஆனால் சனி, புதன் சேர்க்கை ஆரோக்கியத்தை பாதிக்கும். எனவே ஆரோக்கிய விஷயத்தில் சற்று கவனமாக இருக்க வேண்டும். வேலை செய்யும் இடத்தில் சதிக்கு ஆளாக வாய்ப்புள்ளதால் கவனமாக இருங்கள். உங்களைச் சுற்றியுள்ளவர்கள் உங்களை வீழ்த்த முயற்சிப்பார்கள். எனவே அவர்களிடம் சற்று கவனமாக இருங்கள். உங்களின் உத்தியும் ஆற்றலும் வேலை-வியாபாரமுத்தில் நல்ல வெற்றியைத் தரும்.

கடகம்
கடக ராசியின் 7 ஆவது வீட்டிற்கு சூரியன் செல்கிறார். இதனால் திருமண வாழ்க்கையில் கசப்பு ஏற்படலாம். திருமணம் தொடர்பான பேச்சு வார்த்தைகளில் சற்று தாமதம் ஏற்படலாம். வேலை மற்றும் வியாபாரத்தின் பார்வையில் இந்த சூரியப் பெயர்ச்சி சாதகமாக இருக்கும். இக்காலத்தில் அரசின் முழு ஒத்துழைப்பு கிடைக்கும். உங்கள் ஆரோக்கியத்தில் சற்று கவனமாக இருங்கள்.

சிம்மம்
சிம்ம ராசியின் 6 ஆவது வீட்டிற்கு சூரியன் செல்கிறார். இதனால் இக்காலம் ஒரு வரப்பிரசாதமாக இருக்கும். இக்காலத்தில் விரும்பிய வெற்றியைப் பெறுவீர்கள். நீதிமன்ற வழக்குகளில் தீர்ப்புகள் சாதகமாக இருக்கும். இரகசிய எதிரிகள் தோற்கடிக்கப்படுவார்கள். ஆனால் இக்காலக்கட்டத்தில் யாருக்கும் அதிகக் கடன் கொடுக்காதீர்கள். இல்லாவிட்டால் பண இழப்பு ஏற்பட வாய்ப்புள்ளது. தாய்வழியில் இருந்து விரும்பத்தகாத செய்திகளைப் பெறுவீர்கள்.

கன்னி
கன்னி ராசியின் 5 ஆவது வீட்டிற்கு சூரியன் செல்கிறார். இதனால் இக்காலத்தில் பல எதிர்பாராத நற்பலன்கள் கிடைக்கும். போட்டியில் கலந்து கொள்ளும் மாணவர்கள் வெற்றி பெற அதிக முயற்சியை எடுக்க வேண்டும். ஆராய்ச்சிப் பணிகளில் ஆர்வமுள்ள மாணவர்கள் வெற்றி பெறுவார்கள். குழந்தை தொடர்பான கவலைகளும் உங்களைத் தொந்தரவு செய்யலாம். காதல் விஷயங்களில் அலட்சியமாக இருப்பீர்கள். உங்கள் தொழிலில் கவனம் செலுத்துவது நல்லது.

துலாம்
துலாம் ராசியின் 4 ஆவது வீட்டிற்கு சூரியன் செல்கிறார். இதனால் குடும்பத்தில் சண்டை சச்சரவுகள் அதிகரிக்கும். நண்பர்கள் மற்றும் உறவினர்களிடமிருந்து விரும்பத்தகாத செய்திகளைப் பெறுவதற்கான வாய்ப்புகள் உள்ளன. உங்கள் பொருட்கள் திருடு போக வாய்ப்புள்ளதால், கவனமாக இருங்கள். பெற்றோரின் ஆரோக்கியத்தில் கவனம் செலுத்துங்கள். நிலுவையில் உள்ள பணிகள் முடிக்கப்படி சற்று தாமதம் ஏற்படலாம். பொறுமையாக இருந்தால், வெற்றி கிடைக்கும்.

விருச்சிகம்
விருச்சிக ராசியின் 3 ஆவது வீட்டிற்கு சூரியன் செல்கிறார். இதனால் இக்காலம் இந்த ராசிக்காரர்களுக்கு ஒரு வரப்பிரசாதாமக இருக்கும். இக்காலத்தில் அனைத்திலும் வெற்றி கிடைக்கும். தைரியம் அதிகரிக்கும். ஆன்மிகத்தில் ஆர்வம் அதிகரிக்கும். வெளிநாட்டு நிறுவனங்களில் வேலை அல்லது குடியுரிமைக்காக எடுக்கும் முயற்சிகளும் வெற்றி பெறும். மூத்த குடும்ப உறுப்பினர்கள் மற்றும் சகோதரர்களுடன் கருத்து வேறுபாடுகள் ஏற்பட வேண்டாம். நிலம் மற்றும் சொத்து தொடர்பான பிரச்சினைகள் தீரும்.

தனுசு
தனுசு ராசியின் 2 ஆவது வீட்டிற்கு சூரியன் செல்கிறார். இதனால் பல எதிர்பாராத பலன்கள் கிடைக்கும். யாரிடமும் மோசமாக பேசாதீர்கள் மற்றும் உங்களின் திட்டங்களை ரகசியமாக வைத்துக் கொள்ளுங்கள். உடல்நலம் தொடர்பான பிரச்சனைகளில் சற்று கவனமாக இருங்கள். குறிப்பாக வலது கண்ணில் பிரச்சனைகளை ஏற்பட வாய்ப்புள்ளது. குடும்பத்தில் பிரிவுகள் ஏற்பட வாய்ப்புள்ளதால், கவனமாக இருங்கள். சொத்து தொடர்பான பிரச்சனைகள் விரைவில் தீரும்.

மகரம்
மகர ராசியின் முதல் வீட்டிற்கு சூரியன் செல்கிறார். இதனால் தொழில் வியாபாரத்தில் புதிய சவால்களை சந்திக்க வேண்டி வரும். திடீர் மரியாதை கூடும். செல்வாக்கு மிக்கவர்களைச் சந்திப்பதன் மூலம், உங்கள் வேலையில் விரைவான வெற்றியைப் பெறுவீர்கள். உங்கள் வருமானம் அதிகரிக்கும். குடும்பத்தில் சுப காரியங்கள் நடக்கலாம். நீதிமன்ற விவகாரங்களை தங்களுக்குள் தீர்த்துக் கொள்வது புத்திசாலித்தனமாக இருக்கும்.

கும்பம்
கும்ப ராசியின் 12 ஆவது வீட்டிற்கு சூரியன் செல்கிறார். இதனால் இக்காலம் அவ்வளவு சிறப்பாக இருக்காது. இக்காலத்தில் உங்கள் செலவுகள் அதிகரிக்கும். உறவினர்களிடமிருந்து விரும்பத்தகாத செய்திகள் கிடைக்கும். அதிக பணத்தை யாருக்கும் கடனாக கொடுக்க வேண்டாம். இல்லையெனில், நீங்கள் நிதி இழப்பை சந்திக்க நேரிடும்.

மீனம்
மீன ராசியின் 11 ஆவது வீட்டிற்கு சூரியன் செல்கிறார். இதனால் வேலை, வியாபாரத்தில் முன்னேற்றம், உத்தியோகத்தில் பதவி உயர்வு, புதிய ஒப்பந்தம் கிடைக்கும் வாய்ப்புகள் உண்டாகும். உத்யோகத்தில் எடுக்கும் முயற்சிகள் பலனளிக்கும். கடினமான சூழ்நிலைகளைக் கூட எளிதாகக் கையாள்வீர்கள். குடும்ப உறுப்பினர்கள் மற்றும் உடன் பிறந்தவர்களுடன் கருத்து வேறுபாடுகள் அதிகரிக்கும். மாணவர்கள் தேர்வில் நல்ல மதிப்பெண்களைப் பெற அதிக முயற்சி எடுக்க வேண்டும்.
(பொறுப்புத் துறப்பு: மேலே கொடுக்கப்பட்டுள்ள தகவல் இணையத்தில் கிடைக்கும் அனுமானங்கள் மற்றும் தகவல்களின் அடிப்படையில் கொடுக்கப்பட்டுள்ளன மற்றும் நம்பகத்தன்மைக்கு உத்தரவாதம் இல்லை. தமிழ் போல்ட்ஸ்கை கட்டுரை தொடர்பான தகவலை உறுதிப்படுத்தவில்லை. மேலும் எங்கள் ஒரே நோக்கம் தகவலை வழங்குவது மட்டுமே. அதை வெறும் தகவலாக மட்டும் எடுத்துக் கொள்ள வேண்டும். எந்தவொரு தகவலையும் அனுமானத்தையும் பயிற்சி செய்வதற்கு அல்லது செயல்படுத்துவதற்கு முன், தயவுசெய்து சம்பந்தப்பட்ட நிபுணரை அணுகவும்.)



Click it and Unblock the Notifications











