Latest Updates
-
உடல் சூட்டைக் குறைக்கும் வெந்தய களி - இப்படி பாரம்பரிய முறைப்படி செஞ்சு சாப்பிடுங்க.. ருசி அள்ளும்.. -
இன்றைய ராசிபலன் 23 ஏப்ரல் 2026: இன்று இந்த 4 ராசிக்காரங்களுக்கு கனவுகள் பலிக்கும் நாளாக இருக்குமாம் -
சூரியனின் இரட்டை கிரக பெயர்ச்சியால் ராஜயோகத்தை அடையப்போகும் 3 ராசிகள் என்னென்ன தெரியுமா? -
பரங்கிக்காய் வாங்குனா இந்த மாதிரி சட்னி அரைச்சு பாருங்க - இட்லி, தோசைக்கு செமையா இருக்கும் -
தேங்காய்ப் பாலை இந்த மாதிரி யூஸ் பண்ணுனா உங்கள் முடி சரசரனு ஆரோக்கியமா வளருமாம் - ட்ரை பண்ணுங்க -
செட்டிநாடு பச்சை மாங்காய் வத்தக் குழம்பு ரெசிபி - ட்ரை பண்ணுங்க, சுருக்குனு சூப்பரா இருக்கும் -
கல்லீரலில் உள்ள நச்சுக்களை டக்குனு வெளியேற்றி உயிரைக் காக்கும் சிறந்த 10 உணவுகள் -
முட்டை தக்காளி குருமா ரெசிபி - ட்ரை பண்ணி பாருங்க, அட்டகாசமாக இருக்கும் -
சனிபகவான் மீன ராசியில் உதயமாவதால் சகல நன்மைகளையும் பெறப்போகும் 4 ராசிகள் இவங்கதான் -
பாபா வங்காவின் கணிப்பு படி 2026-ல் இந்த நாட்டில் பேரழிவை ஏற்படுத்தும் சுனாமி வரப்போகுதாம்
Lucky Zodiac Signs In January 2023: ஜனவரி மாதம் இந்த 5 ராசிகளுக்கு அதிர்ஷ்டமானதா இருக்கப் போகுது..
2023 ஆம் ஆண்டின் முதல் மாதமான ஜனவரி மாத கிரக நிலைகளால் சில ராசிக்காரர்களுக்கு பிரமாதமாகவும், அதிர்ஷ்டமானதாகவும் இருக்கப் போகிறது.
Lucky Zodiac Signs In January 2023 In Tamil: 2023 ஆம் ஆண்டில் நுழைந்துவிட்டோம். பலருக்கும் புத்தாண்டு ஒரு நல்ல ஆண்டாக இருக்க வேண்டுமென்ற ஒரு ஆசையும், எதிர்பார்ப்பும் இருக்கும். என்ன தான் நாம் கடினமாக உழைத்தாலும், அதிர்ஷ்டத்தின் ஆதரவு இருந்தால் தான் வெற்றியையும், முன்னேற்றத்தையும் காண முடியும்.

அந்த வகையில் 2023 ஆம் ஆண்டின் முதல் மாதமான ஜனவரி மாத கிரக நிலைகளால் சில ராசிக்காரர்களுக்கு பிரமாதமாகவும், அதிர்ஷ்டமானதாகவும் இருக்கப் போகிறது. அதுவும் இந்த மாதத்தில் நல்ல வேலை கிடைக்கும், திருமணத்திற்காக காத்துக் கொண்டிருப்பவர்கள் நற்செய்தியைப் பெறுவார்கள், நல்ல நிதி ஆதாயம் கிடைக்கும். மொத்தத்தில் நல்ல முன்னேற்றத்தைத் தரும் மாதமாக இருக்கும். இப்போது 2023 ஜனவரி மாதம் எந்த ராசிக்காரர்களுக்கு அதிர்ஷ்டமானதாக இருக்கப் போகிறது என்பதைக் காண்போம்.

ரிஷபம்
ரிஷப ராசிக்காரர்களுக்கு 2023 ஆம் ஆண்டின் முதல் மாதமான ஜனவரி சிறப்பாக இருக்கும். குறிப்பாக திருமணம் செய்ய விரும்புபவர்களுக்கு நல்ல வரன் அமையும். திருமணமானவர்கள் தங்கள் திருமண வாழ்க்கையில் நல்ல மகிழ்ச்சியை அனுபவிப்பார்கள். இருவரும் ஒன்றாக நேரத்தை செலவிடும் வகையில் பயணத்தை மேற்கொள்ளவும் வாய்ப்புள்ளது. பணிபுரிபவர்களுக்கு இந்த மாதம் சிறப்பாக இருக்கும் என்றாலும், அலுவலக அரசியலில் இருந்து விலகி இருக்க அறிவுறுத்தப்படுகிறது.

கன்னி
2023 ஆம் ஆண்டின் ஜனவரி மாதம் கன்னி ராசிக்காரர்களுக்கும் அதிர்ஷ்டமானதாக இருக்கும். குறிப்பாக இந்த ராசிக்காரர்கள் இம்மாதத்தில் நல்ல பண பலன்களைப் பெறுவார்கள். சிக்கிய பணமும் இம்மாதத்தில் கைக்கு வந்து சேரும். தொழிலில் புதிய யோசனைகளால் நல்ல லாபத்தைப் பெறுவார்கள். பணியிடத்தில் வேலைச்சுமை குறைவதால், சற்று ரிலாக்ஸாக இருக்க முடியும். பழைய நண்பர்களை சந்திக்கக்கூடும். திருமணமாகாதவர்களுக்கு திருமணம் முடிவாகும். குடும்பத்துடன் நல்ல நேரத்தை செலவிட வாய்ப்புக்கள் கிடைக்கும்.

துலாம்
துலாம் ராசிக்காரர்களுக்கு 2023 ஜனவரி மாதம் அருமையான மாதமாக இருக்கும். இம்மாதத்தில் உங்கள் வீட்டின் சூழல் இனிமையாகவும், மகிழ்ச்சி நிறைந்தும் இருக்கும். வேலை தேடிக் கொண்டிருப்பவர்களுக்கு இம்மாதத்தில் நல்ல வேலை கிடைக்கும் வாய்ப்புள்ளது. நிதி நிலை வலுவாக இருக்கும். திருமணமாகாதவர்களுக்கு திருமணம் செய்வதற்கான வலுவான வாய்ப்புக்கள் உள்ளன. வியாபாரத்தில் முன்னேற்றம் ஏற்படும். குடும்பத்தினருடன் சுற்றுலா செல்ல வாய்ப்புக்கள் கிடைக்கும்.

தனுசு
2023 ஜனவரி மாதம் தனுசு ராசிக்காரர்களுக்கு சிறப்பாக இருக்கும். எதிர்பார்த்த வேலைகள் வெற்றிகரமாக நடக்கும். வாழ்க்கைத் துணையிடம் இருந்து சில ஆச்சரியங்களைப் பெற வாய்ப்புள்ளது. குடும்ப உறுப்பினர்களுக்கு இடையே அன்பு அதிகரிக்கும். அலுவலகத்தில் உங்களின் இமேஜ் நன்றாக இருக்கும். பணிபுரிபவர்களுக்கு அலுவலக சூழல் சிறப்பாக இருக்கும். இருப்பினும் பணிச்சுமை சற்று அதிகமாகவே இருக்கும்.

மகரம்
மகர ராசிக்காரர்களுக்கும் ஜனவரி மாதம் மகிழ்ச்சி நிறைந்த மாதமாக இருக்கும். குடும்ப உறுப்பினர்களிடம் இருந்து இம்மாதத்தில் ஒரு நற்செய்தியைப் பெற வாய்ப்புள்ளது. ஆனால் உங்கள் வாழ்க்கைத் துணையின் ஆரோக்கியத்தில் சற்று கவனமாக இருக்க அறிவுறுத்தப்படுகிறது. திருமணமான புது தம்பதிகளுக்கு குழந்தை பாக்கியம் கிடைக்கக்கூடும். வியாபாரிகளுக்கு இம்மாதத்தில் தங்கள் வியாபாரத்தில் நல்ல லாபம் கிடைக்கும்.
(பொறுப்புத் துறப்பு: மேலே கொடுக்கப்பட்டுள்ள தகவல் இணையத்தில் கிடைக்கும் அனுமானங்கள் மற்றும் தகவல்களின் அடிப்படையில் கொடுக்கப்பட்டுள்ளன மற்றும் நம்பகத்தன்மைக்கு உத்தரவாதம் இல்லை. தமிழ் போல்ட்ஸ்கை கட்டுரை தொடர்பான தகவலை உறுதிப்படுத்தவில்லை. மேலும் எங்கள் ஒரே நோக்கம் தகவலை வழங்குவது மட்டுமே. அதை வெறும் தகவலாக மட்டும் எடுத்துக் கொள்ள வேண்டும். எந்தவொரு தகவலையும் அனுமானத்தையும் பயிற்சி செய்வதற்கு அல்லது செயல்படுத்துவதற்கு முன், தயவுசெய்து சம்பந்தப்பட்ட நிபுணரை அணுகவும்.)



Click it and Unblock the Notifications











