Latest Updates
-
மே மாதத்தில் நடக்கும் கிரக பெயர்ச்சிகளால் கோடிகளை குவிக்கப்போகும் 3 ராசிகள் என்னென்ன தெரியுமா? -
வெயில் கொடுமை! திருமணத்தை மாற்ற முடியாமல் தவிக்கிறீர்களா? இந்த 5 டிப்ஸ் உங்கள் விழாவை காப்பாற்றும்! -
1/4 கப் தனியா இருந்தா இந்த வித்தியாசமான சட்னியை அரைங்க - இட்லி, தோசைக்கு அட்டகாசமாக இருக்கும் -
வட இந்தியத் திருமணங்கள்: சுட்டெரிக்கும் வெயிலில் சிக்கித் தவிக்கும் கொண்டாட்டங்கள் - இதோ சில அதிரடி மாற்றங்கள்! -
இந்த 5 உணவுகள் உங்கள் உடலில் துர்நாற்றத்தை ஏற்படுத்தி சங்கடமாக உணர வைக்குமாம் - பார்த்து சாப்பிடுங்க -
வாஸ்து செடிகள்: கோடை வெயிலில் வீட்டை குளிர்ச்சியாக வைத்து அதிர்ஷ்டத்தை அள்ளுவது எப்படி? -
சிக்கன் பிரியாணியை விட சூப்பரா இருக்கும் ஆம்பூர் ஸ்டைல் சோயா பிரியாணி ரெசிபி - ட்ரை பண்ணி பாருங்க -
சனிபகவானின் வக்ர பெயர்ச்சியால் 138 நாட்களுக்கு ஜெயிக்கிற குதிரையா மாறப்போகும் 3 ராசிகள் இவங்கதான் -
சீதா நவமி: உங்கள் வீட்டில் இந்த மாற்றங்களைச் செய்தா பணமழை கொட்டுமா? அதிர்ஷ்டம் தரும் வாஸ்து ரகசியம்! -
கோடையில் இந்த கஞ்சியை தினமும் 1 கப் குடிங்க.. உடல் எடையும் குறையும், உடல் சூடும் தணியும்..
ஏழரை சனி காலத்தில் கூட சனி பகவான் இந்த 5 ராசிகளுக்கு கஷ்டத்தை கொடுக்கமாட்டாராம்..
சனி பகவான் மகரம் மற்றும் கும்ப ராசிகளின் அதிபதியாவார். எனவே இந்த இரண்டு ராசிகளுமே சனி பகவானுக்கு பிடித்த ராசிகளாகும். ஆனால் சனி பகவானுக்கு இவ்விரு ராசிகளைத் தவிர வேறு சில ராசிகளும் பிடிக்கும்.
சனி பகவான் ஒருவரது செயல்களுக்கு ஏற்ப பலன்களை அளிப்பவர். எனவே தான் சனி பகவானின் பெயரைக் கேட்டாலே மக்கள் அச்சம் கொள்கிறார்கள். ஜோதிடத்தின் படி, கிரகங்களில் சனி பகவான் மிகவும் மெதுவாக நகரக்கூடியவர் என்பதால் சனி பகவானின் தாக்கம் ஒருவரது வாழ்வில் நீண்ட நாட்கள் இருக்கும்.

சனி பகவான் மகரம் மற்றும் கும்ப ராசிகளின் அதிபதியாவார். எனவே இந்த இரண்டு ராசிகளுமே சனி பகவானுக்கு பிடித்த ராசிகளாகும். ஆனால் சனி பகவானுக்கு இவ்விரு ராசிகளைத் தவிர வேறு சில ராசிகளும் பிடிக்கும். இந்த ராசிகளுக்கு ஏழரை சனி, அஷ்டம மற்றும் அர்த்தாஷ்டம சனி காலத்தில் கூட அதிக கஷ்டத்தை சனி பகவான் கொடுக்கமாட்டாராம். இப்போது அந்த ராசிக்காரர்கள் யார்யார் என்பதைக் காண்போம்.

ரிஷபம்
ரிஷபம் சுக்கிரன் ஆளும் ராசி. இந்த ராசிக்காரர்களுக்கு சனி பகவானின் சிறப்பு அருள் எப்போதுமே இருக்கும். சுக்கிரனுடன் சனியின் சேர்க்கை நிகழ்ந்தாலும், ரிஷப ராசிக்காரர்களுக்கு நல்லதாக கருதப்படுகிறது. ஒருவேளை சனி பெயர்ச்சி ரிஷப ராசியில் நிகழ்ந்தாலும், சனி பகவான் ரிஷப ராசிக்காரர்களுக்கு அசுப பலன்களைத் தரமாட்டார். மற்ற கிரகங்களால் ரிஷப ராசிக்காரர்கள் சிரமப்படுவார்களே தவிர, சனி பகவான் இந்த ராசிக்காரர்களுக்கு அதிக சிரமத்தை எப்போதும் கொடுக்கமாட்டார்.

துலாம்
துலாம் ராசியும் சுக்கிரனின் ராசியாகும். எனவே துலாம் ராசிக்காரர்களையும் சனி பகவானுக்கு பிடிக்கும். தற்போது சனி துலாம் ராசியில் உச்சம் பெற்றுள்ளார். இருப்பினும் மற்ற கிரகங்கள் இந்த ராசிக்கு சாதகமாக இருக்கும் வரை இந்த ராசிக்காரர்கள் சனி பகவானால் கஷ்டப்படமாட்டார்கள். சொல்லப்போனால் சனி பகவான் இந்த ராசிக்காரர்களின் முன்னேற்றத்திற்கு தான் உதவுவார்.

தனுசு
குரு ஆளும் தனுசு ராசியும் சனி பகவானுக்கு பிடித்த ராசியாகும். இந்த ராசிக்காரர்களுக்கு சனி பகவான் எப்போதும் அதிக தொந்தரவு செய்யமாட்டார். ஏனெனில் சனி பகவானுக்கும், குரு பகவானுக்கும் நல்லுறவு உள்ளது. எனவே ஏழரை சனி காலத்தில் கூட சனி பகவான் தனுசு ராசிக்காரர்களை அதிகம் கஷ்டப்படுத்தமாட்டார். முக்கியமாக ஏழரை சனி காலத்தில் கூட சனியின் அருளால் மரியாதையும், பணமும் அதிகம் கிடைக்கும்.

மகரம்
மகர ராசியின் அதிபதி சனி. எனவே தான் சனி பகவானுக்கு பிடித்த ராசிகளுள் மகர ராசியும் ஒன்று. அதுவும் மகர ராசிக்காரர்களுக்கு ஏழரை சனி நடந்தாலும், எவ்வித பரிகாரமும் செய்யாவிட்டாலும், இந்த ராசிக்காரர்களுக்கு சனி அதிக கஷ்டத்தை கொடுக்கமாட்டார்.

கும்பம்
கும்ப ராசியில் எப்போதுமே ஏழரை சனியின் தாக்கம் குறைவாகவே இருக்கும். ஏனெனில் கும்பம் சனி பகவான் ஆளும் ராசி. ஆகவே இந்த ராசிக்காரர்கள் பிறவியிலேயே சனி பகவானின் ஆசியைப் பெற்றவர்கள். சனி பகவானின் அருளால் இந்த ராசிக்காரர்களுக்கு எப்போதுமே பணம் தொடர்பான பிரச்சனைகள் வராது. ஒருவேளை ஏழரை சனி நடந்தாலும், சனியின் தாக்கம் இந்த ராசிக்காரர்களுக்கு குறுகிய காலமே இருக்கும்.
(பொறுப்புத் துறப்பு: மேலே கொடுக்கப்பட்டுள்ள தகவல் இணையத்தில் கிடைக்கும் அனுமானங்கள் மற்றும் தகவல்களின் அடிப்படையில் கொடுக்கப்பட்டுள்ளன மற்றும் நம்பகத்தன்மைக்கு உத்தரவாதம் இல்லை. தமிழ் போல்ட்ஸ்கை கட்டுரை தொடர்பான தகவலை உறுதிப்படுத்தவில்லை. மேலும் எங்கள் ஒரே நோக்கம் தகவலை வழங்குவது மட்டுமே. அதை வெறும் தகவலாக மட்டும் எடுத்துக் கொள்ள வேண்டும். எந்தவொரு தகவலையும் அனுமானத்தையும் பயிற்சி செய்வதற்கு அல்லது செயல்படுத்துவதற்கு முன், தயவுசெய்து சம்பந்தப்பட்ட நிபுணரை அணுகவும்.)



Click it and Unblock the Notifications