Latest Updates
-
தாபா ஸ்டைல் ராஜ்மா மசாலா ரெசிபி - இந்த மாதிரி சைடிஷ் செஞ்சு பாருங்க - சப்பாத்தி, பூரிக்கு அருமையா இருக்கும் -
1 கப் கடலைப்பருப்பு இருந்தா.. சப்பாத்திக்கு இப்படி சைடு டிஷ் பண்ணுங்க.. டக்கரா இருக்கும்.. -
இந்த 4 ராசிகாரங்க அவங்க நண்பர்களுக்கு ரொம்ப விசுவாசமா இருப்பார்களாம் - உங்க ராசி இதுல இருக்கா? -
பார்லர் செல்லாமல் முகப்பொலிவை அதிகரிக்கணுமா? அப்ப ரோஸ் வாட்டரை இப்படி யூஸ் பண்ணுங்க... -
5 லட்ச ரூபாய்க்கு விற்கப்படும் உலகின் காஸ்ட்லியான ஐஸ்கிரீம் - அப்படி இதுல என்னதான் ஸ்பெஷல் தெரியுமா? -
1 கப் பச்சரிசி இருந்தா.. ஈவ்னிங் டைம்-ல இந்த ஸ்நாக்ஸை செய்யுங்க.. பசங்க கேட்டு விரும்பி சாப்பிடுவாங்க.. -
World Heart Day 2026: 1 சிகரெட் அடிச்சா 20 நிமிஷத்துல இதயத்துல என்னென்ன நடக்கும்? - விளக்கும் இதய நிபுணர்! -
4 பிரெட் இருந்தா இந்த மாதிரி சுவையான புலாவ் செஞ்சு பாருங்க - வீட்ல எல்லோரும் விரும்பி சாப்பிடுவாங்க -
சூரியனின் நட்சத்திர பெயர்ச்சி: அக்டோபர் 11 வரை இந்த 5 ராசிக்கு பணமும், வெற்றியும் குவியும்! -
லாயருக்கும், அட்வகேட்டுக்கும் உள்ள வித்தியாசம் என்ன தெரியுமா? அப்ப ரெண்டும் ஒன்னு இல்லையா? ஷாக் ஆகாதீங்க
கும்பத்தில் உருவாகும் லட்சுமி நாராயண யோகத்தால் பிப்ரவரியில் இந்த 3 ராசிகளின் அதிர்ஷ்டம் பிரகாசிக்க போகுது...
யோகங்களில் லட்சுமி நாராயண யோகம் மிகவும் மங்களகரமான யோகமாகும். இந்த யோகம் நற்பலனை வாரி வழங்கும். இந்நிலையில் 2023 பிப்ரவரியில் உருவாகும் லட்சுமி நாராயண யோகத்தால் 3 ராசிக்காரர்களுக்கு அதிர்ஷ்டமானதாக இருக்கப் போகிறது.
கிரகங்கள் மனித வாழ்க்கையில் பெரிய தாக்கத்தை ஏற்படுத்துகின்றன. ஜோதிட சாஸ்திரத்தின் படி, கிரகங்கள் ராசியை மாற்றும் போது சில சமயங்களில் ஒரே ராசியில் இரண்டு அல்லது அதற்கும் மேற்பட்ட கிரகங்கள் ஒன்றாக பயணிக்கும். அப்படி கிரகங்கள் சேர்ந்து பயணிக்கும் போது யோகங்கள் உருவாகும். அந்த யோகங்களும் அனைத்து ராசிகளிலும் தாக்கத்தை ஏற்படுத்தும். ஆனால் அந்த தாக்கம் நல்லதாகவோ, கெட்டதாகவோ இருக்கலாம். அந்த வகையில் 2023 பிப்ரவரி மாதத்தின் தொடக்கத்தில் புதனும், சுக்கிரனும் கும்ப ராசியில் ஒன்றாக பயணிக்கவுள்ளன. அப்படி பயணிக்கும் போது லட்சுமி நாராயண யோகம் உருவாகவுள்ளது.

யோகங்களில் லட்சுமி நாராயண யோகம் மிகவும் மங்களகரமான யோகமாகும். இந்த யோகம் நற்பலனை வாரி வழங்கும். இந்நிலையில் 2023 பிப்ரவரியில் உருவாகும் லட்சுமி நாராயண யோகத்தால் 3 ராசிக்காரர்களுக்கு அதிர்ஷ்டமானதாக இருக்கப் போகிறது. தொழிலில் நல்ல லாபம் கிடைக்கப் போகிறது. இப்போது பிப்ரவரியில் உருவாகும் லட்சுமி நாராயண யோகத்தால் எந்த 3 ராசிக்காரர்களின் அதிர்ஷ்டம் பிரகாசிக்கப் போகிறது என்பதைக் காண்போம்.

மிதுனம்
மிதுன ராசியின் 9 ஆவது வீட்டில் லட்சுமி நாராயண யோகம் உருவாகவுள்ளது. இது அதிர்ஷ்டம் மற்றும் வெளிநாட்டின் வீடாகும். இதனால் வேலை செய்பவர்களுக்கு இக்காலம் மிகவும் சிறப்பாக இருக்கும். வேலை செய்பவர்களுக்கு புதிய வேலை வாய்ப்புகள் கிடைக்கும். நிலுவையில் உள்ள வேலைகள் இக்காலத்தில் வெற்றிகரமாக முடிக்கப்படும். பணிபுரிபவர்கள் தங்களின் வேலையில் வெற்றியைக் காண்பார்கள். அரசு வேலைக்கு முயற்சித்துக் கொண்டிருப்பவர்களுக்கு இக்காலம் அற்புதமாக இருக்கும் மற்றும் எதிர்பார்த்த வெற்றி கிடைக்கும்.

சிம்மம்
சிம்ம ராசிக்காரர்களுக்கு லட்சுமி நாராயண யோகமானது நல்ல பலனைத் தரும். ஏனென்றால் இந்த யோகமானது சிம்ம ராசியின் 7 ஆவது வீட்டில் உருவாகவுள்ளது. இதனால் இக்காலத்தில் திருமண வாழ்க்கை இனிமையாக இருக்கும். கூட்டு தொழில் செய்து வருபவர்களுக்கு நல்ல லாபம் கிடைக்கும். வேலையில் இருப்பவர்கள் பதவி உயர்வு அல்லது சம்பள உயர்வைப் பெறுவார்கள். வணிகர்களுக்கு இக்காலம் மிகவும் பயனுள்ளதாக இருக்கும். திருமணமாகாமல் இருப்பவர்களுக்கு திருமணம் கைகூடும் வாய்ப்புள்ளது.

விருச்சிகம்
விருச்சிக ராசியின் 4 ஆவது வீட்டில் லட்சுமி நாராயண யோகம் உருவாகவுள்ளது. இது மகிழ்ச்சி மற்றும் தாயின் வீடாக கருதப்படுகிறது. இதனால் இந்த யோக காலமானது மங்களரமானதாக நல்ல பலனை அளிக்கக்கூடியதாக இருக்கும். உடல் ஆரோக்கியம் நன்றாக இருக்கும். சொத்து அல்லது வாகனம் வாங்கும் எண்ணம் இருந்தால், இக்காலத்தில் அதற்கான வாய்ப்புக்கள் அமையும். ரியல் எஸ்டேட் வியாபாரம் செய்பவர்களுக்கு இக்காலம் மிகவும் சாதகமாக இருக்கும். முக்கியமாக இக்காலத்தில் உங்கள் தாயாரின் ஆதரவு முழுமையாக கிடைக்கும்.
(பொறுப்புத் துறப்பு: மேலே கொடுக்கப்பட்டுள்ள தகவல் இணையத்தில் கிடைக்கும் அனுமானங்கள் மற்றும் தகவல்களின் அடிப்படையில் கொடுக்கப்பட்டுள்ளன மற்றும் நம்பகத்தன்மைக்கு உத்தரவாதம் இல்லை. தமிழ் போல்ட்ஸ்கை கட்டுரை தொடர்பான தகவலை உறுதிப்படுத்தவில்லை. மேலும் எங்கள் ஒரே நோக்கம் தகவலை வழங்குவது மட்டுமே. அதை வெறும் தகவலாக மட்டும் எடுத்துக் கொள்ள வேண்டும். எந்தவொரு தகவலையும் அனுமானத்தையும் பயிற்சி செய்வதற்கு அல்லது செயல்படுத்துவதற்கு முன், தயவுசெய்து சம்பந்தப்பட்ட நிபுணரை அணுகவும்.)



Click it and Unblock the Notifications
