Just In
- 3 hrs ago
இன்றைய ராசிப்பலன் (18.01.2021): இன்னைக்கு இந்த ராசிக்காரங்க வாயை திறக்காம இருக்குறது நல்லது…
- 1 day ago
வார ராசிபலன் (17.01.2021 முதல் 23.01.2021 வரை) – இந்த ராசிக்காரர்களுக்கு லாபம் நிறைந்த வாரமிது…
- 1 day ago
இன்றைய ராசிப்பலன் (17.01.2021): இன்று இந்த ராசிக்காரர்கள் வீண் செலவுகளைத் தவிர்ப்பது நல்லது…
- 1 day ago
பெண்களை கலவியில் திருப்திப்படுத்துவதற்கு இத மட்டும் கரெக்ட்டா பண்ணுனா போதுமாம்... சரியா பண்ணுங்க...!
Don't Miss
- News
கேஸ் சிலிண்டர் புக்கிங் செய்ய போறீங்களா.. பிப்ரவரி 1ம் தேதி முதல் சூப்பர் மாற்றம் நடைமுறை!
- Sports
பிரேக் கொடுத்த தமிழக வீரர்.. மாயம் நிகழ்த்திய சிராஜ்.. திணறும் ஆஸி. பேட்ஸ்மேன்கள்.. டிவிஸ்ட்!
- Movies
நம்புங்க நானும் நல்லவன்தான்.. ஏவியை பார்த்து ஃபீல் பண்ணிய பாலா.. கடைசியா பேசியது இதுதான்!
- Finance
48% அதிகரிப்பாம்.. பெட்ரோல், டீசல் மீதான வரியால் தூள் கிளப்பிய வரி வசூல்.. !
- Automobiles
20-இன்ச் அலாய் சக்கரங்களுடன் கியா சொனெட் காரை பார்த்திருக்கீங்களா?! இங்க பாத்துக்கோங்க
- Education
ரூ.62 ஆயிரம் ஊதியத்தில் தமிழக அரசு நிறுவனத்தில் கொட்டிக்கிடக்கும் வேலை வாய்ப்புகள்!
- Technology
ஒன்பிளஸ் நோர்ட் முன்பதிவு செய்து அமேசான் வழியாக கூடுதல் நன்மையைப் பெறுவது எப்படி?
- Travel
வோக்கா சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது
கோடீஸ்வர யோகம் தரும் சூரியன், செவ்வாய், புதன், சுக்கிரன் சனி - யாருக்கு யோகம் வரும்
மனிதர்களாக பிறந்த எல்லோராலும் கோடீஸ்வரர் ஆக முடியாது. கோடீஸ்வரர் ஆக பாக்கியம் வேண்டும். கோடீஸ்வர யோகம் பெற பாக்ய ஸ்தானாதிபதி நன்றாக இருக்க வேண்டும். ஜாதகத்தில் லக்னத்திற்கு ஒன்பதாம் இடம் பாக்ய ஸ்தானம். பிறப்பால் கோடீஸ்வரர் ஆவதும், கோடீஸ்வரராக பிறந்து கடைசி வரை கோடீஸ்வரர் ஆக வாழ்வதும் அவரவர் ஜாதகத்தில் சஞ்சரிக்கும் கிரகங்களின் கூட்டணி தீர்மானிக்கிறது. கோடீஸ்வர குடும்பத்தில் வாரிசாகப் பிறந்து கடைசி வரை கோடீஸ்வரராக வாழும் யோகம் வெகு சிலருக்கே அமையும். ஒருவரின் ஜாதகத்தில் நான்காம் அதிபதி, செவ்வாய், ஒன்பது, பத்தாம் அதிபதிகள் பலம் பெற்ற ஜாதகரின் முன்னோர்கள் செல்வமும் செல்வாக்கும் மிக்கவர்களாக இருப்பதால் அவரும் கோடீஸ்வர வாழ்க்கையே வாழ்வார்.
பாக்ய ஸ்தான அதிபதியுடன் சுபகிரகங்கள் இணைந்து லக்னாதிபதி பலம் பெற்றால், தந்தை முன்னேற்றம் பெற்று, அவர் மூலம் பணம், புகழ் பெறுவர். 9ம் அதிபதி ஆட்சி, உச்சம் பெற்று கேந்திரத்தில் இருப்பது பலவித பாக்கியங்களைத் தரும். 2, 9, 11ம் அதிபதிகள் ஒன்றுக்கொன்று தொடர்பு கொண்டிருந்தால், குடும்பத்தினரால் பாக்கியம் அனைத்தும் கிடைக்கப்பெற்று, பெரும் செல்வந்தராக வாழ்க்கை நடத்துவர். லக்னாதிபதி மற்றும் 4ம் அதிபதிகள் பலம்பெற்று இணைந்து தசை நடந்தால் பல வாகனங்களுக்கு அதிபராகவும், பிறப்பு முதல் இறப்பு வரை பெரும் செல்வந்தராகவும் வாழ்வார்.
குருவும் 9ம் அதிபதியும் இணைந்து கேந்திர, திரிகோணத்தில் இருந்தால், பிறப்பால் கோடீஸ்வரர். நம்பர் 1 கோடீஸ்வரர் முகேஷ் அம்பானி ஜாதகத்தில் சுக ஸ்தான அதிபதி சனி லக்னத்தில் பலமாக அமைந்திருக்க, சந்திரன் இரண்டாம் வீட்டிலும் 10ஆம் அதிபதி உச்சம் பெற்றும் அமைந்து குரு பார்வையோடு கோடீஸ்வர யோகத்தை கொடுத்துள்ளது. எந்த லக்னகாரர்களுக்கு எந்த கிரகங்கள் கோடீஸ்வர யோகத்தை தரும் என்று பார்க்கலாம்.

எந்த லக்னத்திற்கு என்ன தசை யோகம்
மேஷம் முதல் மீனம் வரை 12 லக்னங்களில் பிறந்தவர்களுக்கு சில தசைகள் சாதகமாகவும் சில தசைகள் பாதகமாகவும் அமையும். மேஷம் விருச்சிகத்துக்கு செவ்வாய் தசை, ரிஷபம் துலாமுக்கு சுக்கிர தசை, மிதுனம் கன்னிக்கு புதன் தசை, மீனம் தனுசுக்கு குரு தசை, மகரம் கும்பத்துக்கு சனி தசை, சிம்மத்துக்கு சூரிய தசை, கடகத்துக்கு சந்திர தசை என லக்னாதிபதி, ராசி அதிபதிகளின் தசை நடக்கும்போது மிகப்பெரிய மாற்றங்கள் ஏற்படும். திடீர் வளர்ச்சி, பணம், புகழ், செல்வாக்கு ஏற்படும். அதேபோல், 2, 10, 11ம் அதிபதிகளின் தசை சுப பலம் பெற்று நடைபெற்றால், செல்வச் சேர்க்கை, தொழிலால் லாபம், குடும்ப முன்னேற்றம் போன்றவை உண்டாகும்.
MOST READ: சனிதசை யாருக்கு நன்மை செய்யும்... பாதிப்பு யாருக்கு

மேஷம் - விருச்சிகம்
மேஷம் லக்னத்தில் பிறந்தவர்களுக்கு குரு ஜாதகத்தில் வலுவாக இருக்க வேண்டும். சூரியன் செவ்வாய் ஒரு ராசியில் இணைந்திருப்பது சிறப்பு.
விருச்சிக லக்னத்தில் பிறந்தவர்களுக்கு ராசி நாதன் செவ்வாய் சூரியன் சந்திரன் வலுவான நிலையில் இணைவது பிரகாசமான யோகத்தை தரும் கோடீஸ்வரர் ஆகும் வாய்ப்பை ஏற்படுத்தும். இந்த கிரகங்களை குரு பார்ப்பதும் கோடீஸ்வர யோகத்தை தரும்.

சுகம் தரும் சுக்கிரன்
ரிஷப லக்னகாரர்களுக்கு கோடீஸ்வர யோகம் தரும் அமைப்பு சனி மற்றும் புதன் கூட்டணியால் கிடைக்கிறது. இந்த கிரகங்கள் நட்பு ராசியில் இணைந்து சுப கிரகங்களின் பார்வை பெறுவது கோடீஸ்வர யோகத்தை தரும். துலாம் லக்கினத்தில் பிறந்தவர்களுக்கு சனியும் சுக்கிரனும் ஒரு ராசியில் இணைந்திருந்து பலம் பெற்றிருந்தால் கோடீஸ்வர யோகத்தை தரும்.

மிதுனம் - கன்னி
மிதுனம் கன்னி லக்னங்களில் பிறந்தவர்களுக்கு புதன், சுக்கிரன் கிரகங்கள் நன்மையை தரும். புதனும் சுக்கிரனும் பலமான முறையில் ஆட்சி உச்சம் பெற்றோ, நட்பு ராசியில் இணைந்திருந்தால் அது கோடீஸ்வர யோகத்தை தரும். கன்னி ராசியில் புதன் ஆட்சி உச்சமடையும் நேரத்தில் சுக்கிரன் இணையும் போது நீசபங்க ராஜயோக அமைப்பை பெறுகிறார். கன்னி லக்னத்தில் பிறந்தவர்களுக்கு புதன் உச்சம் பெற்று சுக்கிரனின் தொடர்பு ஏற்படுவது பலமான கோடீஸ்வர யோகத்தை கொடுக்கிறது.
MOST READ: சைனஸ் அழற்சியில மீள முடியலையா? இதோ நம்ம தாத்தா காலத்துல என்ன பண்ணாங்கனு பாருங்க...

கடகம் சிம்மம்
கடக ராசியில் செவ்வாய் நீசமடைய குரு உச்சமடைகிறார். அதேபோல மகரம் ராசியில் செவ்வாய் உச்சமடைய குரு நீசமடைகிறார். குருவும் செவ்வாயும் ஒரு ராசியில் இணைந்து குரு மங்கள யோக அமைப்பை பெறுவது கோடீஸ்வர யோகத்தை தரும். கடக லக்னகாரர்களுக்கு தனது லக்னத்தில் குரு, செவ்வாய் இணைவதும் யோகம்தான். சிம்மம் லக்னத்தில் பிறந்தவர்களுக்கு சூரியன்,புதன் இணைந்து புத ஆதிபத்ய யோகம் அமைப்பை பெறுவதும் செவ்வாய் சுக்கிரன் பலமாக அமைந்து பாக்ய ஸ்தானத்தில் அமையப்பெற்றிருந்தால் அது கோடீஸ்வர யோகத்தை கொடுக்கும்.

மகரம் - கும்பம்
மகர லக்னத்தில் பிறந்தவர்களுக்கு சனி, புதன், சுக்கிரன் ஒரு ராசியில் இணைவது பலம். நீசம் பெறாமல் பலமாக இணைந்து சுப கிரகத்தில் பார்வை கிடைப்பது கோடீஸ்வர யோகத்தை தரும். அதே போல கும்ப லக்னத்தில் பிறந்தவர்களுக்கு சனி, சுக்கிரன், செவ்வாய் ஒரு ராசியில் இணைந்து பலம் பெற்றிருந்தால் கோடீஸ்வர யோகத்தை கொடுக்கிறது.

தனுசு மீனம்
தனுசு லக்னத்தில் பிறந்தவர்களுக்கு குடும்ப ஸ்தானம், சுக ஸ்தானம், தொழில் ஸ்தானம், லாப ஸ்தானம் ஆகிய இடங்களில் குரு பார்வை இருக்க வேண்டும். சூரியனும், புதனும் இணைந்து பலமான இடத்தில் அமைந்து அதை குரு பார்ப்பது கோடீஸ்வர யோகத்தை கொடுக்கும். மீன லக்னத்தில் பிறந்தவர்களுக்கு குருவும் செவ்வாயும் இணைந்து குரு மங்கள யோகத்துடன் பலமாக அமைந்து நல்ல வீடுகளை பார்வையிடுவது அவசியம். அப்படி அமைந்து விட்டார் செவ்வாய் தசையிலோ, குரு தசையிலோ கோடீஸ்வர யோகத்தை கொடுக்கும்.
MOST READ: ஒரே ராத்திரியில் வைரலான இந்தியர்கள் யார் யார்னு தெரியுமா?... இதோ இவங்க அது...

விபரீத ராஜயோகம்
கெட்டவன் கெட்டிடில் கிட்டிடும் ராஜயோகம் என்று சொல்வார்கள். அதேபோல விபரீத ராஜயோகத்தால் சிலர் கோடீஸ்வரராகிவிடுவர். 3, 6, 8, 12ம் இடங்கள் மறைவு ஸ்தானம். 3ம் அதிபதி 6, 8, 12ம் இடத்திலோ, 6ம் அதிபதி 3, 8, 12ம் இடத்திலோ, 8ம் அதிபதி 3, 6, 12ம் இடத்திலோ, 12ம் அதிபதி 3, 6, 8ல் மாறி நின்றாலோ, 3, 6, 8, 12ம் அதிபதிகள் பாவ கிரகங்களான சூரியன், செவ்வாய், சனியாக இருந்து மறைந்தால் புகழுடன் கோடீஸ்வரராக வாழும் அமைப்பு கிடைக்கும். பாதகாதிபதி நீசம், வக்ரம் போன்று வலுவிழந்து தசை நடந்தாலும், ஜாதகரை கோடீஸ்வரராக மாற்றிவிடும்.